https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 11 நவம்பர், 2022

மணிவிழா. 22. வழித்துணை

  


ஶ்ரீ:


மணிவிழா - 22


11.11.2022



* வழித்துணை *



விழா குழு அமைப்பதன் முதற் கட்டத்தில் மரபான சம்பிரதாயத்தில் செயல்பாட்டில் இருந்த யாரையும் தெரிவு செய்யாமல் கவனமாக தவிர்திருந்தேன். அது எங்கும் நிலவும் ஒருவித அரசியலை தவிர்க அதை செய்ய வேண்டியிருந்தது. தீவிர நிலைப்பாட்டில் இருந்து ஓய்வு பெற்ற அல்லது விலகிய யாரை சென்று தொட்டாலும் அவர்களின் மூளையில் உள்ள எலக்ட்ரான் உயிர் கொண்டு பலவித எண்ணங்களை கற்பனைகளை அவருக்கு உருவாக்கிவிடுகிறது. அது அவர்களின் அனுபவத்தின் படிநிலைகளக பொருத்து கற்பனைக்கும் யதார்த்தத்திற்குமான ஊடாட்டம். சிலர் தங்களின் தேவையை உலகம்உணர்ந்துவிட்டதுபோன்ற பாவனையை அவர்களுக்கு உருவாக்கிவிட்ட அதன்பின் அவர் நீங்கள் சந்திக்க சென்றவரில்லை அவரிடமிருந்து புதிய ஒருவர் எழுந்துவருகிறார். அவர் தன்னை பிறர் பயன்படுத்த நினைப்பதாக எண்ணிக் கொள்வார். அதனால் எதற்கும் உடன்பட மாட்டார். எல்லாவற்றையும் மறுப்பார். தேடிவந்தார்கள் தன்னிடம் உதவி நாடி நிற்பதாக நினைக்கிறார் . அவரை வைத்து பிறர் வளர நினைக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் உடன்படக் கூடாது என. “நான் அவர்களை நிராகரித்தேன்என்கிற தருக்களை வெளிப்படுத்த அதை அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருப்பார். தானும் பிறரையும் எதையும் புதிதாக முயற்சிக்காத தடைகளை உருவாக்குவார்கள்





அவர்கள் இரண்டு வகையானவர்கள் . ஒன்று ஆச்சாரத்தை அனுஷ்டானத்தை வலியுறுத்தியும், இரண்டு புதிய முயற்சிகளை மரபிற்கு எதிரானது என பேசிப் பேசியே அழிப்பார்கள். அவர்கள் மிகச் சிலர்தான் என்றாலும் அவர்கள் உருவாக்கும் சர்ச்சையை பிடித்து கொண்டு புதிதாக உருவாகி வரும் மொத்த அமைப்பையும் சிதைக்க வேறு சிலரும் இணைந்து கொள்வார்கள் . அதன்பின் அவர்கள் உருவாக்கும் வம்பு  வளர்ந்து கொண்டே இருந்தால் சமூக அந்தஸ்த்தில் உள்ளவர்கள் அந்த அமைப்பில் இணையமாட்டார்கள் அல்லது விலகிவிடுவார்கள்


விழா குழுவின் ஆரம்ப கால செயல்பாட்டிற்கு பெரும் பொருளியல் பலமும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் நல்ல பெயரும் தேவை. நிர்வகிக்க ஊர் பிரமுகர்கள் உள்வர வேண்டும் இந்த இரண்டும் வெற்றிகரமாக நிகழ்ந்த பிறகு விழா குழுவின் பல உள்ளமைப்புகளுக்கு மரபான சம்பிரதாயத்தில் நம்பிக்கையுள்ளவர்களை தலைமை தாங்க செய்யலாம் என திட்டமிட்டிருந்தேன். அதன் இரண்டாம் கட்டமாக தலைமை செயற்குழுவில் பெருமாள் ராமாநுஜம் போன்றவர்கள் உள்வர வேண்டும் என்பது கணக்கு

பெருமாள் ராமாநுஜம் யாருக்கும் அடங்காதவர் பிறர் அஞ்சும் ஆளுமை. அவர் போன்றவரை உள்ளே நிர்வாகத்திற்கு கொண்டு வருவது பிற செயல்பாட்டாளர்களை திகைக்கச் செய்யும். ஆச்சார அனுஷ்டானங்களை சொல்லி என்னை தாக்குபவர்களை அவர் எதிர் கொள்வார். அவர் ஏற்படுத்தும் பாதுகாப்பை நான் ஆக்கபூரவமான வேலைகள் செய்ய பயன்படுத்தினேன். இதில் ஆச்சர்யம் வெறும் கூச்சலிடுபவரகள் மத்தியில் எதையாவது செய்ய முயற்சித்தவர் பெருமாள் ராமாநுஜம் என்பதால் நான் உருவாக்கிய அமைப்பில் இணைந்துள்ளவர்களை பற்றி சொன்ன போது அவர் திகைப்பதை பார்த்தேன். காரணம் அதை போன்ற ஒன்றை துவங்கவே முடியாமலனவருக்கு அவற்றின் சிக்கலையும் அறிந்திருக்க வேண்டும். அந்த தடையை நான் எப்படி கடந்தேன் என அறிய விரும்பினார். எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் இங்கிருந்து துவங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக