https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 9 நவம்பர், 2022

மணிவிழா. 20

 


ஶ்ரீ:



மணிவிழா - 20


09.11.2022




எனது தந்தை, பெருமாள் ராமாநுஜம், பாண்டுரங்கம் செல்வநம்பி, ராஜாராம் என ஒரு சிஷ்ய நிரைஏந்தூர் சடகோப ராமாநுஜகுருவிடம் அமர்ந்து வைணவ தத்துவக் கல்வி கற்றவர்கள். “பகவத் விஷயம்என சொல்லப்படும் திருவாய்மொழி பாட வகுப்புகள் என் வீட்டில் நடைபெற்றது . அதன் உயர் நிலை தத்துவப் புரிதல் கேட்பவருக்கு பிறரிடம் இருந்து வேறுபட்டவராக உணரச் செய்து ஒரு வித சுய தருக்களை கொடுத்துவிடும் போல. அவர்களில் சிலர் மதக் கல்வியாக கற்ற தர்க்கத்தை கொண்டு மாற்று சொன்ன பிறர் மீது கல்லெறிய துவங்கினர்.பின்னர் அவர்களுக்கு யாரும் பொருட்டல்ல என்றானது


ராமாநுஜர் . தானான திருமேனி



எனது தந்தையின் தமிழார்வம் மற்றும் கூரிய இலக்கிய வாசிப்பு அவருக்கு கற்பனை கலந்த உள்ளிணர்வால் அவரை வைணவ இலக்கியத்தின் பக்கம் கொண்டு வந்தது. அவரின் இந்த நிலைபாடு குறித்து நண்பர்களால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லா வித தர்க்கத்திற்கும் அப்பா வேறு வடிவிலான அர்த்தத்தை சொல்ல அது அவர்களை பிறித்து பின்னர் ஒரு புள்ளியில் வீட்டில் நடைபெற்றபகவத் விஷயதத்துவ கல்வி நின்று போனது. அன்றெல்லாம் எனது அறைக்கு வெளியில் உள்ள வரவேற்பறையில் வகுப்புகள் நடைபெறும். நான் அதில் ஒருநாளும் அமர்ந்து கேட்டதில்லை. மௌனமாக அவர்களை கடந்து என் அறைக்கு செல்வது அவர்களை சீண்டி இருக்க வேண்டும். அனைவரும் என்னை பார்க்கும் தோரனையில்இது உருப்படாதுஎன்கிற  இளிவரல் இருக்கும். நானும் அவர்கள் யாரையும் பொருட்படுத்தியதில்லை.


தந்தையின் மரணத்திற்கு பின் அவர்களுடனான தொடர்பு முற்றாக அறுந்து போனது. பல ஆண்டுகள் கழித்து திருகோவலூர் ஜீயர் ஸ்வாமி ஒருநாள் என்னை தேடி வீட்டிற்கு வர அனைத்தும் மீண்டு வேறொரு புள்ளியில் இருந்து துவங்கியது. ஏனென்று அறிய முடியாத காரணம் கொண்டு திருக்கோவிலூர் ஜீயர் என்னிடம் அன்பும் நட்பும் கொண்டு மிக அணுக்கமாக இருந்தார். அந்த நெருக்கம் துவக்கத்தில் அனைவரின் கண்களை உறுத்தினாலும் அவரை கடந்து என்னைப் பற்றி விமர்சிப்பது குறையத் துவங்கியது.


திருக்கோவலூர் மடம் ஐந்நூறு வருட பாரம்மரியமும் பழமையையும் கொண்டது. வைணவ மரபின் வேர் பழைமையான திவ்விய பிரபந்தந்தின் துவக்கம் அங்கு தான் நிகழ்ந்தது. போன்ற சிறப்புகள் இருந்தாலும் ஜீயர் தந்தை 24 வது பட்டம் கோவில் சேவைகளை மட்டும் செய்து கொண்டு மடத்திலேயே இருந்தது அதன் செயல்பாடுகளுக்கு தேவையான பொருளாதாரம், சமூக அடையாளம் மற்றும் அதற்கு கிடைக்க வேண்டிய இடம் போன்றவற்றை இழக்கத் துவங்கி இருந்தது. புதிதாக பொறுப்பிற்கு வந்த 25 பட்டம் ஜீயர்  மடத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலை குறித்து  மிகுந்த வருத்தமுற்று பலமுறை என்னிடம் பேசியிருக்கிறார். அதற்கு எந்த வகையாலாவது உதவ வேண்டும் என நினைத்து அதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை துவங்கினேன்


என்ன தான் ஆன்மீகம் சம்பிரதாயம் மடம் என பிறால் மதிக்கப்பட்டாலும் அதன் நிர்வாகத்திற்கு அதை தாண்டிய வசீகரமும் அதிகாரமும் அதற்கு தேவைப்பட்டது. அது ஒரு வகைஅரசியல்எனக்கு நன்கு பழகிய துறை. நான் எனது பாணியில் அதை செய்யத் துவங்கினேன். மடத்தின் அறுந்து போன தொடர்புகளை புதிப்பிப்பதன் வழியாக அதன் துவக்கம் நிகழ்ந்தது. அதில் முதன்மையானது மடத்திற்கு கிடைக்க வேண்டிய ஶ்ரீரங்கம், ஆழ்வார் நிருநகரி நவதிருப்பதி, திருகண்ணமங்கை போன்ற திவ்வியதேச கோவில் மரியாதை நின்று போயிருந்தது . தரவுகளைக் கொண்டு அது முதலில் தீர்க்கப்பட்டு ஒழுங்கிற்குள் வந்தது. ஜீயரின் ஶ்ரீரங்கம் மற்றும் திருகண்ணமங்கை திவ்விய தேச விஜயத்தின் போது அவருடன் இருந்தது பாரம்பரிய காலச்சார நியமங்களை ராமாநுஜர் ஏற்படுத்தி வைத்ததை அறிந்து கொள்ள முடிந்தது


எனக்கு அதை தாண்டிய பிறிதொன்று தேவை என தோன்றிய போதுதான் ராமாநுஜர் ஆயிரமாவது கொண்ட்டம் பற்றிய திட்டமெழுந்தது. அதன் விதை காஞ்சீபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் கோவிலுக்கு சென்ற போது விழுந்தது. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா பெரியதாக எங்கும் கொண்டாடப்படாது என ஊகித்திருந்தேன் .அதற்கு காரணமிருந்தது கூரத்தாழ்வானின் ஆயாரமாவது ஆண்டு ஒரு வருடத்திற்கு முன்பு காஞ்சீபுரம் அருகில் உள்ள அவர் பிறந்த ஊரான கூரம் விழாவாக நடந்தேறியது. எப்படி நிகழ்ந்தது என அறிந்து கொள்ள ஒரு நாள் கழித்து அவரது கோவிலுக்கு சென்ற போது அங்கு விழா நடந்ததற்கான எந்த தடையமும் இல்லை. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா எப்படி நிகழும் என்பதை அது சொல்லியது


எனக்கு அதை மிக பிரமாண்டமாக நிகழ்த்த வேண்டும் என்கிற எண்ணம் அங்கு தோன்றியது. அது நான் திட்டமிடும் அத்தனையையும் நிகழ்த்திக் கொடுக்கும் மேலும் அதை வெற்றிகரமாக தழிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தால் அது ஒரு ஒரு வாழ்நாள் சாதனை. கனவு வெற்றி பெறுமோ இல்லையோ அதற்கான முயற்சியே போதுமானது என நினைத்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்