https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 10 அக்டோபர், 2022

அடையாளமாதல் * வெறுப்பின் இந்தனம் *

   



ஶ்ரீ:



பதிவு : 644  / 834 / தேதி 10 அக்டோபர்  2022



* வெறுப்பின் இந்தனம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 40 .






1998 பாரளுமன்றத் தேர்தலில் சண்முகம் தோல்வியுற்றதன் தாக்கம் ஒய்வதற்கு முன்னர் 1999 இறுதியில் திமுக தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சி மாற்றத்தினால் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்தது . சண்முகம் தேர்தலை சந்தித்து ஆட்சியமைக்கலாம் என நினைத்தார். பிற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றத்தை விழைந்தனர். சண்முகம் தேர்தலை விழைவதற்கு காரணம் ஆளும் திமுக முதல்வர் ஜானகிராமன் அவரது ஜாதியை சார்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என கட்சிக்குள் பல வகையில் குற்றம்சாட்டப்பட்டார். ஒரு மாதிரி அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ள அந்த ஆட்சி மாற்றம் அவர் எண்ணியிராத கணத்தில் நிகழ்ந்து முடிந்தது. அதற்கு பின்னால் வல்சராஜ் மற்றும் கண்ணன் இருந்தார்கள் அவர்களுக்கு நாராயணசாமியின் ஆதரவிருந்தது


அந்த ஆட்சிக்கு யாரும் எதிர்பாராமல் முதல்வராக சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் அனந்த பாஸ்கரன், வில்லங்கம், மற்றும் நான் சென்னை சென்று மூப்பனாரை சந்தித்து புதுவை அரசியல் நிலவரத்தை விவரித்தோம். அதில் சண்முகம் முதல்வராக விரும்புவதை மற்றும் நாராயணசாமி அவருக்கும் இடையேயான உறவு கசந்திருப்பதை சொன்னோம். இரண்டும் அன்று அவருக்கு புதிய செய்தி. கண்ணன் என்ன நினைக்கிறார் என்றதற்கு அவருக்கு சண்முகம் முதல்வராக வருவதில் எதிர்ப்பில்லை என்றோம். சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்புதுவை பொறுப்பாளர் கேரளத்தில் இருப்பதால் என்னால் அவரை தொடர்பு கொள்ள இயலாது ,அவர் என்னை தொடர்பு கொண்டால் என் கருத்தை சொல்லுகிறேன் இல்லை என்றால் என்னை வையாதீர்கள்என தஞ்சாவூர் பாணியில் சொன்னார். மூப்பனார் சண்முகத்தை ஆதரித்தால் பிறர் பற்றி கவலையில்லை ஆனால் குலாம்நபி ஆசாத் புதுவை முதல்வர் தேர்தலுக்கு நேரம் குறிக்கப்பட்ட மதியம் பண்ணிரண்டு மணிக்கு முன் மூப்பனாரிடம் பேசியாக வேண்டும். என்ன செய்யலாம் என்றார் வில்லங்கம். நான் தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள குலாம்நபி ஆசாத்தின் உதவியாளரை அழைத்தபோது அவர் புதுவை நிலவரங்களை கேட்டார் இறுதியில்  “சென்னையில் மூப்பனாருக்கு உடல்நலக்குறைவுஎன சொன்னேன். “அனந்தபாஸ்கரான் ஏன் இப்படி சொன்னாய்என்றார் இந்த செய்தி இன்னும் அரை மணிநேரத்திற்குள் குலாம்நபி ஆசாத்திற்கு தெரிவிக்கப்பட்டுவிடும், வந்த வேலை முடிந்தது என்றேன்.அதன் பிறகு புதுவை திரும்பிய பிறகே சண்முகம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அறிந்தோம். நாங்கள் மூப்பனாரை சந்தித்ததன் விளைவா அது என அப்போது நினைக்கவில்லை. ஆனால் சண்முகம் முதல்வராக பொறுப்பேற்ற அன்று மாலை அவரது அறையில் பேசிக் கொண்டிருந்த போது தன் உதவியாளரிடம் ஒரு சால்வை எடுத்துவரச் சொல்லி அதை எனக்கு அணிவித்தார் நான் அது எதற்கு என கேட்க ஒரு சொல்லும் சொல்லவில்லை. நான் அதை மூப்பனாரை சந்தித்தது குறித்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.


ஆட்சி நிர்வாகம் பற்றிய பேச்சு எழுந்த போது அந்த ஆழ்ந்த மௌனத்தை மிகத்தாமதமாக உணர்ந்தேன் . முதல்வரின் தனிச் செயலாளராகவில்லங்கத்தைகொண்டிவருவதில் பெரிய முரண்பாடு உருவாகி அது சண்முகத்தின் குடும்ப உறுப்பினர்களிடையே விவாதப் பொருளாகியிருந்தது . மாறனுக்கும் வில்லங்கத்திற்கும் தனிப்பட்ட உரசல்கள் பல முணைகளில் அப்போது நடந்து கொண்டிருந்தது மிக எளிதாக வில்லங்கத்திற்கு எதிரான அணியை திரட்டிய போது அவன் பலமாக காலூன்றிவிட்டான் என்பதை அறிவித்தது . மாறன் அங்கு தங்குவதை ஆரம்பம் முதலே வைத்தியநாதன் எதிர்த்து வந்தார். மாறன் தொழிலை விட்ட பிறகு அவன் அங்கி தங்கியிருப்பது குறித்துவில்லங்கம்மீண்டும் பேசத் துவங்க , அவர் சொன்னதாலேயே அந்த பேச்சு சண்முகத்திடம் எடுபடாமல் போனது. அரசியலின் தொடர் அதிரடி ஆட்சி மாற்றம் மாறனை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. அந்த காலகட்டத்தில் தவிற்க முடியாத நபராக உருவெடுத்திருந்தான்.


முதல்வரின் செயலாளர் நியமனத்தில் முதல்வராக பெறுப்பேற்க இருந்த சமயத்தில் சண்முகத்திற்கு வில்லங்கத்தின் மீது பல காலம் இருந்த வருத்தம் கசப்பாகிவிட்டிருந்தது .வைத்திலிங்கம் தலைமையில் 1997 களில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு உதவியவர்களில் வில்லங்கமும் ஒருவர். அது தன்னை பொருட்படாதாத செயல் என சண்முகம் நினைத்தார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பிறகு அதன் பின்னணியில் உள்ள அனைவரும் ஆளும் திமுக அரசின் பதிலடிக்கு ஆளானார்கள். வைத்திலிங்கம் மீது மத்திய புலனாய்வு வழக்கு பதியப்பட்டு கைது அளவிற்கு சென்று திரும்பினார். அரசு ஊழியரான வில்லங்கம் மஹே பொறுப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டு அங்கு அனுப்பப்பட்டது பழிவாங்கள் போல நிகழ்ந்தது. அதற்குள் அவரை பற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளும் அடுக்கப்பட்டு துறை ரீதியில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு வேலையில் இருந்து நீக்கப்படவிருக்கும் செய்தி கசிந்தது. ஓய்வு பெற இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கும் நிலையில் அவரது ஓய்வூதியம் போன்றவற்றை முடக்க திட்டமிடப்பட்பட்டதை அறிந்து மஹே சென்று வேலையில் சேர்ந்த கையோடு விருப்ப ஓய்வு பெற விண்ணப்மம் செய்தார். அந்த விண்ணப்பமே சில மாதங்களுக்கு இழுக்கடிக்ப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப் பட்டது ஒரு நீண்ட கதை. அது இன்று அவரை முதல்வரின் செயலாளராக கொண்டுவருவதற்கு தடையாக இருப்பதாக காரணம் சொல்லி அவரை வெறுப்பேற்றினார்கள். அரசியல் நியமனங்களில் இதற்கெல்லாம் பெரிய அர்த்தமில்லை. ஆனால் அவரது நியமனம் சண்முகத்தால் பரிசீலிக்கபடவேயில்லை


மாறன் அதை மிகச்சரியாக ஊகித்திருக்க வேண்டும். காரைக்கால் முருகையன் அல்லது மாறன் அதை நேரடியாக சண்முகத்திடம் சொல்லும் வாய்ப்பிருந்ததாக நான் நினைக்கவில்லை, சொல்லிருந்தால் ஒருவேலை அவர்களுக்கு எதிராக சண்முகம் முடிந்திருக்கலாம் ஆனால் அவர்களை எண்ணத்தை கரூர் பாஸ்கரன் வழியாக செய்திருக்க வேண்டும். தலைவரிடம் அழுத்தமாக பேசக்கூடிய சூரியநாராயணன் போன்றவர்கள் வில்லங்கத்தை மேல் இருந்த மன விலக்கத்தினால் அதில் எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை இவை அனைத்துமே வில்லங்கத்திற்கு எதிரானது. ஒரு வகையில் அவருக்கு ஆதரவாக நான் மற்றும் முன்னாள் அமைச்சர் அனந்த பாஸ்கரன் அதை விரும்பாது போனாலும் வலுவாக அதை மறுக்கக்கூடிய குரலை எழுப்ப இயலவில்லை. சண்முகத்திற்கு வில்லங்கத்தின் மீதான கோபம் பற்றி நாங்கள் அறிந்திருந்தது அதற்கான காரணம். தலைவரின் காதுகளுக்கு அதைக் கொண்டு செல்ல தயங்கினோம். நிகழ்வது எனக்கு  எவ்வகையிலும் நல்ல செய்தியல்ல என நினைத்தேன். மாறனிடம் இதுபற்றி எனது கருத்தை சொன்னபோது இருவரும் பெரிய அளவில் முரண்படுவது அறிந்து கொள்ள முடிந்தது. அதுவரை நட்பார்ந்த விவாதம் சர்சையை நோக்கி நகர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்