https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

மணிவிழா - 4

 ஶ்ரீ


மணிவிழா -4

23.10.2022




"மற்றவர்களுடைய சுமையை இலகுவாக்கும் எவரும் இவ்வுலகில் பயனற்றவர் அல்ல."


-சார்லஸ் டிக்கெனஸ்.


மனதின் செயல்பாடுகள் சிக்கலானது, தன்னியல்பால் சென்று தொடும் இடம் எப்போதும் நினைக்க விரும்பாது மறக்க விரும்புகின்ற ஒன்று . அது இடை நில்லாது அங்கேயே சென்று தொடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மனதின் பிறிதொன்றை அது பதைக்கச் செய்கிறது. பதைப்பதை ஒன்று பார்த்துக் கொண்டும் இருக்கிறது . அது சென்று தொட்ட நொடி நிலையழியச் செய்கிறது. அதனுடனான எதிர்வினையால் சித்தம் தொடந்து சென்று முட்டியைபடியே இருக்கிறது. அதற்கான எதிர் வினையை மனதின் பிறிதொரு சரடால் இழுத்துக் கட்டப்பட்டாலும் நாணைப் போல முறுகிக் கொண்டு நின்று விடுகிறது . நான் மிக அஞ்சும் ஒருவர் உண்டென்றால் அது நான் தான் . ஒரு தறியைப் போல ஓடிக் கொண்டே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நரகத்தின் பக்கத்தில் கொண்டு நிறுத்திவிடும். என்னிடமிருந்து என்னை காப்பாற்றிக் கொள்ள நிறைய தர்க்கம் தேவையாகிறது. அதற்கு இணையாக சிறு சிறு இனிமைகளை சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. காலை மற்றும் மதிய உணவிற்கு பிறகு எடுத்துக் கொள்ளும் வெற்றிலை பாக்கு தாம்பூலம் அந்த வகை இனிமை சேர்பதில் ஒரு வகை. அது போல கணக்கில் அடங்காத சிறு சிறு இனிமை ஒரு நாளை மிக எளிதாக இனிமையாக கடக்க வைத்து விடுகிறது


பரபரப்பான வாழ்வில் இருந்து விலக முடிவெடுத்த போது எனது தொழில் சிக்கல்கள் அனைத்திலிருந்தும் வெளியேற முடிவு செய்தாலும் அதை நானாக முன்னெடுக்க வாய்பளிக்காமல் ஊழ் தன்வசம் எடுத்துக் கொண்டது. ஒவ்வொரு படியாக மிக நிதானமாக என்னை அனைத்தில் இருந்து வெட்டி விடுவித்தது. மிகவும் வலி மிகுந்து அதனால் உருவாகும் நிலையழிதலை முன்பே ஊகித்திருந்ததால் அதுவரை உருவாக்கி வைத்திருந்த மனக் கருவிகளைக் கொண்டு நானும் வெளியேற துவங்கினேன். காலம் வாழ்கையை வடிவமைக்கிறது. காலத்திற்கு உகந்த இன்ப துன்பங்களை பொதிந்து அது எப்போதும் முன்வைக்கப் படுகிறது. சிக்கல்களில் இருந்து தர்க்க முறையால் வெளிறே நேர்ந்தாலும் அது வைத்திருக்கும் பொறியில் இருந்து ஒருவர் எளிதில் வெளியேற முடிவதில்லை


வீட்டு பெண்கள் அனைவரும் திருமணம் முடித்து போன பிறகும் கூட அந்த குடும்பத்து ஆண் சுந்திரமானவன் இல்லை என்றார் தந்தை. அவனது பொறுப்புகள் உருவாகி அதன் பிறகே அதிகரிக்கின்றன. செய்முறைகள் ஒவ்வொரு வருடமும் பல்கிப் பெருகுபவைகள். அவை கடமைகள். அவற்றை பொருளியல் ரீதியில் யாரும் பார்ப்பதில்லை என தந்தையால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது எனது கடமையென்றானாதால் அது பற்றி மறு சிந்தனை இருந்ததில்லை. தாத்தாவின் பெரிய சொத்து பாக்குமுடையான் பட்டு நிலம் அவரின் சம்பாத்தியம் அனைத்து சொத்து பேரனுக்கே என்பதால் அதில் தந்தைக்கு எந்த உரிமையுமை இல்லை. தந்தை தனது இறுதி காலத்தில் அந்த நிலத்தில் இருந்து பெண்களுக்கு ஒரு பிளாட் அளவிற்காவது கொடுக்க ஆசைப்பட்டார். நான் பெரும் பொருளியல் நெருக்கடியில் இருந்த சூழல். அந்த சொத்து என்னை எனது சிக்கலில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றக் கூடியது. தந்தையின் விருப்பம் பற்றி எனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் தாயும் அதையே சொன்ன போது என்னால் மாற்றி சிந்திக்க முடியவில்லை


தந்தை தனது இறுதி காலத்தில் இருந்தார். அவர் இருக்கும் போதே அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்து அனைத்து சகோதரிகளுக்குமான பத்தரப் பதிவை வீட்டிலேயே நடத்தி முடித்தேன். ஆறு பேருக்கான பிளாட்டிற்கு தேவைப்பட்ட நிலத்தைவிட அது அமைந்த ரோட்டிற்கு மூன்று மடங்கானது. இதில் வினோதம் சகோதரிகளுக்கு இதில் என் பங்கென ஒன்றில்லலை எல்லாம்  அப்பா கொடுத்ததாக அவர்கள் என்னிடம் சொல்லுகிற போது மிக எளிமையாக அவற்றை கடந்து சென்றுவிடுகிறேன். அந்த மனநிலையை மிக சிறிய வயதில் இருந்து எனது இயல்பாக இருந்திருக்க வேண்டும். அதையே எனக்கான அறமாக உருவாக்கிக் கொண்டேன். எனது மொத்த உலகமும் இதன் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டிருப்பதாக நான் உணர்ந்தது என் நல்லூழ் என்பதில் சந்தேகமில்லை.  




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...