மனத்திரிபு
கோவில் காண்டா மணி ஒலித்தபடியே இருந்தது , காலை நேரம் கூட்டம் அனேகமாக இல்லை , கோவில் பட்டர் பரிவார சன்னதிகளை திறப்பதும் திரைகளுக்கு உள்ள சாதிகளுக்கு காலை உணவை கண்டருளப் பண்ணினார் . அவர் கையிலிருந்த மணி ஓயாமல் அடித்துக்கொண்டு இருந்தது . சாம்பிராணி புகை மூட்டமாக வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தார் சித்திரைக்கு இன்னும் நாள் இருக்கிறது என்று சூரியபகவானுக்கு யாரும் சொல்லவில்லை போலும் புழுக்கம் தாங்கவில்ல காற்றாடவில்லை , வீசும் என்ற நம்பிக்கையும் இல்லை . உற்சவத்தை ஒட்டி பலிபீடம் அருகில் தற்காலிக தட்டார பந்தல் வெய்யில் மட்டுமல்ல காற்றையும் மறைத்தது .
பட்டர் பலிபீடத்தில் பலிசாதித்த சுத்தன்ன உருண்டைகள் துளசி வைத்துவிட்டுப் போனார் .
தாத்தா ரா.மா.கோவிந்தசாமிபிள்ளை ,புதுவை மாகாத்மா காந்தி வீதியில் உள்ள வரதராஜர் கோவில் ராமர் சன்னதியில் என் அப்பாவிற்கு காத்திருந்தார் . பாண்டுரங்கன் சன்னதியில் படியில் குடையை ஊன்றியபடி உட்காரந்திருந்தவர் அவர் கண்ணில் யார் பட்டாலும் வழக்கமான உரத்த குரலில் வசவுதான் , எல்லாம் கிராமத்து பாணி கெட்ட வசவுகள் . அவர் இருக்கும் இடம் நிழல்படாது திசைக்கொருவராக தெறித்துக்கொண்டிருந்தனர்
தாத்தாவிற்கு பின்னால் பெரியப்பா நின்று கொண்டிருந்தார் ஏறக்குறைய தாத்தாவின் இளவயது கார்பன் காப்பி போலத்தான் இருந்திருப்பார் . அதே நடையுடை திருமண் . தாத்தாவிற்கு பிறகு அவர்தான் எல்லா கோவில் வேலைகளை செய்யப் போகிறவர் என்று இருப்பார் . முன்கோபி சகஜமாக யாருடனும் பேசமாட்டார் . கோபம் என்று வந்தால் நாக்கு ஒரு மாதிரி நெருப்பு பிழம்பு , மறக்கமுடியாத சுடுசொல் வல்லார் அதற்கு இலக்க்கான எவராகிலும் தன் வாழ்நாளில் அதை நினைத்த உடல் பற்றியெறிவதை உணர்வர். எதையும் வெறுப்பின் மொழியிலேயே பேசுபவர் . மிக புராதன மனிதர் போல இருப்பார் எந்த மாறுதலையும் விரும்பாதவர் பழமைவாதி வெளிப்படையானவர் யாரிடமும் தாட்சணயம் கிடையாது , எப்போதும் கசப்பு எட்டிக்காய் போல.
வருஷோஸ்த்வமாக ராம நவமி உற்சவம் பத்து பண்ணிரண்டு நாள் நடைபெரும் நாளுக்கு ஒரு சாதியினர் முறை . பெரும்தணக்கரர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் தனியாக ஒருநாள் செலவை ஏற்றுக்கொள்வார்கள் அது அவர்களின் தனிப்பட்ட உற்சவமாக நடைபெறுவது வழக்கம். அன்று தாத்தாவின் முறை .
தாத்தா கம்பீரமான ஒரு ஆளுமை ஊரில் அவரைத் தெரியாத ஒருவருமில்லை . உயரம் நடுத்தரதிற்கு சற்று குறைச்சல் கணுக்கால் வரை ஏற்றிக்கட்டிய கதர் வேட்டி ,முழுக்கை முரட்டு ஆந்திரா கதர் சட்டைக்கும் ஜிப்பாவிற்கும் நடுவிலுள்ள வஸ்த்து அந்த காலத்து மாடல் கை புஜத்தில் ஒற்றை பிரில் , மொட்டைக் கழுத்து மார்பு வரை திறந்திருக்கும் பட்டன் கிடையாது . இருபக்கமும் காஜா எடுத்திருக்கும் அதில் தங்கச் சங்கிலியில் கோர்த்தது போல பின் புறம் பட்டையாக முன் புறம் சிறிய குண்டு வடிவில் இருக்கும் . சட்டை மாற்றிக் கொள்வதற்கு முன்னதாக அதைத்தான் முதிலில் பொருத்துவார் . முழுக்கை அதை மடித்தெல்லாம் விட முடியாது . முடிவில் இனைக்கும் பட்டன் ஒருமாதிரி இந்தகாலத்து கோர்ட் சட்டை கை பின் போல ஆனால் சுதேசி . வழுக்கைத் தலை அளவான தெண்கலைத் திருமண் காதில் பெரிய வெள்ளைகள் கடுக்கன் , பெரிய பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி . சிறு மடிப்பு பட்டு உத்திரியம் அதை கழுத்தை சுற்றிப் ஒரு முனை வலது மார்பிலும் மறுமுனை வலது பக்க முதுகிலுமாக நடுப்பகுதி மார்பில் தழையும்படி இருக்கும் , கையில் எப்பொழுதும் குடை வைத்திருப்பார் .
தாத்தா வியாபாரத்தில் தனக்கென இடத்தை பிடித்து செல்வாக்காக உலவத் துவங்கினார், பக்தியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் வியாபார விஷயமாக 1920 களில் பாம்பே சென்றபோது பூனா பக்கத்தில் உள்ள பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் மேல் சொல்லவியலாத பிரேமை . தன்முதல் பிள்ளைக்கு அந்த பெயரையே வைத்தார்
வைஷ்ணவராக இருந்தாலும் அவருக்கு சைவ வைணவ பேதமில்லை ராமநவமி உற்சவம் போலே ஆனித் திருமஞ்சணம் வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரமாதமாக ஏற்பாடு செய்து பண்டு கட்டி வைத்திலுந்தார் விடாமல் நடக்க வேண்டும் என்று மணக்குள விநாயாகர் உற்சவ மூர்த்தி தாத்தா செய்து வைத்தது . இன்று அந்த பண்டிலிருந்து வரும் வட்டிக்கு பூ கட்டுகிற இலையைக் கூட வாங்க முடியாது.
அவரது ஆன்மீக ஈடுபாடு மற்றும் செயல்பாட்டிற்கு நிச்சயம் குரு என்று ஒருவர் இருந்திருக்கலாம் அல்லது தொடர் வாசிப்பின் வழியாக இந்த இடத்திற்கு வந்திருக்கலாம் . தன் அலமாரியில் ஒரு வெள்ளி கூஜா பார்த்திருக்கிறேன் , அதில் அவர் எந்த கோவிலுக்கு போனாலும் கோபுர வாசல் அருகே குனிந்து சிறிது மன்னை எடுத்து சிறு காகிதத்தில் மடித்து எடுத்து வந்து அந்த கூஜாவில் சேர்பது வழக்கம் , தான் மரணித்தபிறகு அது தன் மீது தூவிய பிறகே சரமகாரியம் செய்யப்படவேண்டும் என தன் உயிலில் குறிப்பிட்டிருந்தார் . அசைவ உணவை கடைசீவரை விடவில்லை . மதிய உணவுடன் ஏதாவதொரு பச்சடி இருக்க வேண்டும் அம்மா சளைக்காது அனைத்து காயிலும் வெல்லம் போட்டு வைப்பார் கருணைகிழங்கு உட்பட . காலை உணவில் இட்லயை தயிர் கலந்து சாப்பிடுவது மட்டுமில்லாது கண்னாவி அதை அருகில் உள்ள எங்களுக்கும் ஒரு துண்டை நீட்டுவார் அதை பார்த்தாலே அனைவரும் சிட்டாக பறந்து விடுவோம்
கோவில் உற்சவத்தில் மிராசு போல் இருந்தாலும் நித்தியபடி கோவில் காரியங்களை தானே செயவது வழக்கம் . தினம் ஒரு தூக்கு எண்ணையும் கைவிளக்குமாக தார்பாய்ச்சிய வேட்டியுடன் இரண்டு கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் திரி போட்டு வளக்கேற்றுவார் , கிணற்றில் உள்ள மாடம் உள்பட . பட்சி பட்டாசாரியார் ஒருமுறை சொல்லும் போது ஏதோ ஒரு தமிழ் வருட பெயர் சொல்லி அன்றைக்கு அடித்த புயலில் தாத்தா பேய்மாதிரி விளக்கு போட்டுக் கொண்டிருந்தார் என்று. வாழ்கையின் புரிதல்களை தேடி பலமான வாசிப்பினால் அடைவது என இருந்தாலும் ஒரு சிலர் ஒரே புத்தகத்தை இடைவிடாத வாசிப்பினாலே அதை அடைந்து விடுகிறார்கள் போலும் . பண்டரிபுர நாயகனின் லீலைகளை பற்றிய ஒரு புத்தகம்தான் அவரது பொழுதுபோக்கு . அதில் ராமதாசர், பக்தமீரா போன்றவரகள் சரித்திரமாக இருக்கும் . தாத்தா தன் பேத்திகள் அனைவருக்கும் இந்த புத்தகத்தில் வரும் காதாபாத்திரத்தின் பெயரையே .
பக்த சரித்திர நூலை என் அக்கா அவருக்கு தினம் படித்துக் காண்பிப்பாள் , நெகிழ்வான இடங்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும் பக்தி பரவசத்தில் தலைக்கு மேல் கை குவித்துவிடுவார் . ஒரே புத்தகத்தில் திரும்ப திரும்ப படிப்பதில் என்ன சுவாரஸ்யம் வந்துவிடும் என அப்போது புரியவில்லை.அக்கா ஒரு சரித்திரத்தை படித்து முடித்தவுடன் அதைவாங்கி தலைமேல் வைத்து கொள்வார் , படித்தவருக்கு இருபது ஐந்து பைசா சம்பாவணை . அக்காவிடம் காசுகிடைத்தது பற்றி பேசினால் அவள்
தாத்தா அந்த காலத்தில் வலது கம்யூனிஸ்ட் அனுதாபி என்றும் சொல்லாலாம் . இந்தியாவில் ஆலைத் தொழிளாலர்களுக்கு எட்டு மணி நேர வேளை என்கிற உரிமையை பெற்றுத்தந்தவர் மக்கள் தலைவர் வ.சுப்பையாவிற்கு மிக நெருக்கமாக இருந்தார். காங்கிரஸில் காந்தி மிதவாதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவிர நிலை எடுத்தவர் சுப்பையா நேதாஜியின் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் .
இந்தியா முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக காங்கிரஸ் போராடிய போது புதுச்சேரி சுதந்திர போராட்டம் மிக வித்தியாசமானது இங்கு பிரிட்டிஷ்காரர்கள் இல்லை பிரன்சுகாரர்கள் ஆண்டனர் .
சுப்பையாதான் காந்தியை புதுவைக்கு முதலில் அழைத்து வந்தார் என்பார்கள் நீண்டநாள் எனக்கு ஏன் சுப்பைய்யா காங்கிரஸ் கட்சிக்காரர் இல்லை எனப் புரியவில்லை.
பெரியப்பாவிற்கு அப்பா நேர் எதிர் நல்ல ரசிகர் நவீனமயமாதலின் மத்திய காலகட்டம் அது. அனைத்து சிந்தனாவாதிகளுக்கும் ஏற்படும் விஞ்ஞான ரீதியில் எதையும் நிரூபிக்க இயலும் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் , திராவிட இயக்கம் காலூன்ற தொடங்கிய காலம் மேடைகளில் தமிழ் பேசப்பட்ட தாளகதிக்கு ஒரு பெரும் கூட்டமே மயங்கிக்கிடந்தது . அவர்களில் பலர் தங்கள் குடும்ப விழுமியங்களை போற்றும் பெரியவர்களை நமுட்டுச் சிரிப்புடன் எதிர்பவர்கள் ,ஆனால் அப்பா தாத்தாவின் மீது மரியாதை கொண்டவர் . நவீன சிந்தனை வட்டத்தில் நடைபெருவதை கூர்ந்து அவதானிப்பவராக இருப்பதால் , தன் அளவில் சிலவற்றை பரிட்சார்த்தமாக முயற்சிப்பவர் . தன் கொள்கையில் அழுத்தமான பிடிப்பு உண்டு அதை உரத்து பேசாத மென்போக்காளர் . அந்த சம்பவம் நடக்கும்வரை .
தந்தைக்கு அடங்கிய பிள்ளை வியாபாரமார்தமாக வெளியூருக்கு சென்றிருந்தார், தாத்தா அவரைத்தான் எதிர்பார்திருந்தார்.
காலை திருமஞ்சணம் பின்பு உள்புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெரும் . தாத்தாவிற்கு அந்த நாளுக்கு வேறு எந்த முக்கிய காரியமும் ஒரு பொருட்டல்ல . அப்பா சொல்லும் வியாபார காரணங்களை அவர் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை . அந்த காலத்திலேயே பம்பாய் சென்னை என்று பல ஊருக்கு சென்று வியாபாரம் பார்த்தவர் விஷயங்களை தெரிந்து கொண்டவர் . அரசியல் சமூகம் என எல்லாவற்றிலும் அறியப்படுபவர் .
திருமஞ்சணம் முடியும் தருவாயில் அப்பா வந்துவிட்டார் பார்வையிலே தாத்தாவால் கண்டிக்கபட்டார் முனுமுனுவென்றதோடு விட்டது அப்பாவை ஆசுவாசப்படுத்தியது .
தாத்தவிற்குத்தான் முதல் தீர்த சடாரி பிறகு குடும்பத்தாருக்கு பின் பொது ஜனத்திற்கு . தோலுக்கினியான் கொண்டுவரப்பட்டு ஶ்ரீபாதந்தாங்கிகள் தாத்தாவிற்கு பணிவாக வணங்கினர் அவர் அமைதியாக ஏற்றுக்கொண்டார் உற்சவமூர்திகளை தோலுக்கினியானில் ஏளப்பண்ண சிறிது நேரம் ஆகும் அதுவரை ஊர்பெரியவர்கள் முக்கியஸ்தர்களின் பேச்சி என்று எங்கும் ஒரே அலராயிற்று .
சுமார் ஒருமணி நேரம் கழித்து உள்புறப்பாட்டிற்கு தயாரனது யாரோ மேளம் எனக்குரல் கொடுக்க நாதஸ்வரம் எங்கோ வெளியே தம்மடிக்க போயிருப்பார் போல வெறும் மேளம் மட்டுமே ஒலிக்க சற்று நேரத்திற்கெல்லாம் நாதஸ்வரம் இயைந்து ஒலிக்கத்தொடங்கிது .
சன்னதியில் இருந்து தோலுக்கினியான் வெளிவந்து கிழக்கு முகமாக நின்றவுடன் இயல்பாக பிரபந்தமும் , வேதமும் சேவிக்கத் தொடங்கினர் . அது ஒரு மாதிரி இழுவையான ஸ்வரத்தில் சொல்லே புரியாமல் இருந்தாலும் கேட்க கேட்க இனிதாகியது . தூக்கியதாக யாரோ குறித்துக்கொள்வார் போல புறப்பாடு தொடங்கியதும் பெரியவர்கள் சிலர் வேகமாக வந்து அதை தூக்குவதற்கு முயற்சிப்பது போல் பாவனையால் சாமியை ஏமாற்றினார்கள் . அவர் குன்சாக எங்கோ பார்த்தபடி அச்சிட்ட புண்ணகையோடிருந்தார் . வழக்கபோல சிலர் முனபின் வர புறப்பாடு துவங்கியது .
முதல் திருப்பம் வருவதற்குள் புறப்பாடு கோஷ்டிக்கு மத்தியில் திடீர் கசமுசா இன்னதென்று புரியாத நிலையில் மேளமும் கோஷமும் நின்றுவிட்டது . என்ன நடக்கிறது என்று யாருக்கு எதுவும் புரியவில்லை . உற்சவருக்கு நெருக்கமாக நின்றிருந்த அனைவரும் ஒருவித பீதியோடு விலகத் தொடங்கினர் . எட்டிப்பார்தால் பெரியப்பாதான் ஒரேமாதிரியரி நாய்குந்தல் போல உட்கார்ந்திருந்தார் முகமும் செயல்களும் ஒருவித சேஷ்டை போல அங்குமிங்கும் பார்பது எல்லாம் குரங்கு செய்வது போலவே . முதலில் யாருடனோ சண்டை என நினைத்தேன் கூட்டத்தில் அவர் அப்படி தன்னை வெளிபடுத்திக் கொள்ளாதவர் எதையும் மிக நாசூக்காக செய்வார் கிள்ளுவதைக் கூட.
பட்டாசாரியார்கள் மிரட்சியுடன் அங்குமிங்கும் ஓடுவதுமாக இருந்தார்கள் கோவில் மணியக்காரர் சாவியுடன் ஓடி வந்து அனுமார் சன்னதியை திறக்க யாரோ திரைபிடிக்க உள்ளே இருந்த அனுமன் விக்ரகத்தை மார்போடு அனைத்த படி ஓட்டமும் நடையுமாக வந்த பட்டாசாரியார் விக்கரகத்தை லட்சுமணரின் விகரகத்திற்கு எதிரில் வைத்தார் , பின் ராமர் பாத த்தில் இருந்து துளசி தீர்த்தம் மாலை சடாரி என ஒவ்வொன்றாக அவருக்கு கொடுக்க முதலில் இடுக்கிய கண்களால் பார்த்தவர் பின் எழுந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டார் .தாத்தா பாட்டியிடம் ஏதோ சொல்ல பாட்டி பெரியப்பாவின் கையை பிடித்தபடி ஊஞ்சல் மண்டபத்தை நோக்கி சென்றார் .
நாதஸ்வரம் பிசிரடித்து மேளம் உரத்து அதிரத் தொடங்கியவுடன் உள்புறப்பாடு மறுபடி துவங்கியது யாரும் யாருடனும் பேசவில்லை தோலுக்கினியான் சன்னதி திரும்ப இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் ஆனால் அன்று என்னவோ அரைமணிக்குள்கவே திரும்பிவிட்டார் அர்சனை முடிந்து பிரசாத வினியோகம் . மண்டப இறுதியில் உட்காரந்து இருந்த பெரியவர் உடையார் அருகிலிருந்த ராதாகிருஷ்ணனிடம்
" என்ன இருந்தாலும் முறையை மாற்றலாமா? சிறிய திருவடி சப்ரத்தில் ஏளப்ன்ன மறந்ததும் பாண்டுரங்கத்திறகு சன்னதம் வந்தது அனைவருக்கும் மிரட்சியை கொடுத்துட்டுது" என்றார் .
வேறுயாருக்காவது வந்திருந்தால் வேஷம் என்றிருபார்கள் இப்போது யாரும் ஒன்றும் சொல்லமுடியாது என்றார்
பாண்டுக்கு தனக்கு என்ன நேர்ந்த்து என தெரியவில்லை, கிருபா தான் அதிர்ந்து போனார் , என்றார்
கிருபா நவீனவாதி பின்னொருநாள் இது பற்றி அவரிடம் பேசவேண்டும் என்ற பிறகு இருவரும் நமுட்டலாக சிரித்துக்கொண்டனர்.
அனைத்தையும் மௌனமாக கேட்டபடி தாத்தா பிரசாதம் சாப்பிடத் துவங்கினார். கடமை என்றும் புண்ணியம் என்றும் ஒரு காரியம் நம்பிக்கை அடிப்படையிலானது அது நிஜத்தின் அருகில் வருகிறபோது மனம் வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்குகிறது . விழைவின் அடிப்படையில் இன்பத்தை நோக்கி நகரும் அது ஏதாவதொரு சமன்பாடுகளைச் சொல்லி தன் அறமென இருப்பதில் மீறுகிறது . அந்த சிறு தனிமனித விழைவிற்கும் அந்த அறமீரல்களை தவறென நினைக்க மறுக்கிறது . இன்பம் குறிக்கோள் ஆயின் அது அனைத்தையும் வாழ்வில் ஒரு கணத்தில் நிகழ்ந்த முரண்பாடுகளை கருத்தில் கொண்டு மறுதலிக்கிறார்.
அப்பாவிற்கு இது புரிதலின் மற்றொரு அடுக்காயிருந்தது நிரூபணவாத அறிவியல் நோக்கில் ஆழமான சிந்தனையால். மரபான விஷயத்தையும் புறவயமாக நிரூபிக்க இயலும் என நம்பியவர . ஆகவே மரபுகள் உருவாக்கும் நம்பிக்கைகளை ஆசாரங்களை பொருத்துவதற்கு சரியான வாய்ப்பை இழந்திருக்கலாம் . அண்ணனுக்கு நிகழ்ந்தது இதில் எதிலும் விளக்கமுடியாததாக இருந்தது . குழப்பமான மனநிலையில் எழந்து சாப்பாட்ட இலையை போட்டவர் ஆஞ்சநேயர் சன்னதி வந்ததும் கைகள் தன்னிச்சையாக எழுந்து கூம்பின
பெரியப்பாவிடம் நிகழ்ந்ததை மெதுவாக சொன்ன ஒருவரை தன்னை கேலிசெய்வதாக கடுமையுடன் சொல்லிச்சென்றார்
தாத்தா தன் இருபிள்ளைகளின் நடத்தையை குடையை ஊன்றி மண்டபத்தில் அமர்ந்திருந்த பாரத்தவர் மனதுக்குள் சிரித்துக் கொன்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக