https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 27 பிப்ரவரி, 2017

முளைவிடும் காஞ்சீர மரங்கள்

ஸ்ரீ :









தம் நிஷ்ப்ரபமிவாதித்யம் முக்ததோயமிவாம்புதம் ।
உக்தவாக்யம் ஹரிஸ்ரேஷ்டம் உபஸாந்தமிவாநலம் ।
தர்மார்தகுணஸம்பந்நம் ஹரீஸ்வரமநுத்தமம் ।
அதிக்ஷிப்தஸ்ததா ராம: பஸ்சாத்வாலிநமப்ரவீத் ॥

- ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் -

தன்னை வீழ்த்திய ஶ்ரீராமனைக் குற்றம் சொல்லும் வாலியின் வாதத்தை மறுக்கும் முன் சொல்ல விழையும் கருத்தை ஶ்ரீராமர் தன் மனசாட்சியிடம் ஒருமுறை கேட்டுக்கொள்ளுவதாக அதன் பின் வரும் ஸ்லோகம்

ஶ்ரீஶ்ரீ.கிருஷ்ணப்பிரேமி -


ஊன உடற் சிறை நீத்து ஒண்கமலை கேள்வன் அடி
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய் - தானே
பழுத்தால் வீழும் கணிபோல் பற்றற்று வீழும்
விழுக்காடே தானரும் வீடு

அருளாளப் பெருமான் எம்பெருமானார்
- ஞான சாரம் -

முளைவிடும் காஞ்சீர மரங்கள்

இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம் என்கிறான் சாக்ரடீஸ். சொல்ல வாய்பில்லா துயரங்களை எழுத்தில் கொண்டு வந்து அதை கடந்து செல்லும்  இன்பம் அதைவிடவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதைவிடவும் முழுமையான இன்பம் தன்னைச்சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள்.

 - ஆம் இதுவே என் இடம் -

இது நான் மிக விரும்பும் ஒரு இடம்,ஆனால் மிக தற்செயலாகத்தான் இங்கு வந்து சேர்ந்தேன்.என்னுடைய ஊழ் மிகப் புதிரானது . நான் புழங்கிய பிரமாண்டமான இடங்களான தொழில்,அரசியல்,ஆன்மீகம் மற்றும் குடும்பம் இவற்றில் தொடர்ந்து அந்நியனாகவே இருந்து கொண்டிருக்கிறேன் . எனக்கு வெற்றி என்கிற ஒன்றை தொட்ட பிறகு அங்கு நிலைத்திருத்தல் கைவராது என்றபின் நான் இலக்கியம், தமிழ் என இதில் உள்நுழைந்தது எங்கனம்?

மிகத் தூய்மையானவர்களும் – அவர்கள் பெருங்கடவுள்களாக இருந்தாலும் சரி, எட்டியிருந்து வரம் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி, தரையில் இறங்கி வந்தால் கறைப்பட்டுப் போவார்கள். வாழ்க்கையின் சேறுகளிலிருந்து அவர்களால் தப்பவே முடியாது.

இதில் நான் எம்மாத்திரம்.

வெற்றியும் வீழ்ச்சியும் ஒரு சமன்புள்ளி குலைவதில் இருந்து தொடங்குகிறது. பல முறை தண்ணீர் இறைத்தாலும் செடிகள் உயிரை கையில்  பிடித்துக்கொண்டு ஒரு மழைக்காகத்தான் ஏங்கி காத்திருக்கின்றன . அவற்றை இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை!

ஆனால் உறவுகளால் வஞ்சிக்பட்டவனுக்கு ,பழிவாங்கவேண்டும் என்றால்  அவனுக்கு  சொந்த தேகமும், வயிறும் ,ஆன்மாவும் மட்டுமே மிச்சமாக இருக்கிறது . காடுகளில் தீப்பிடித்தால் சில குச்சிகள் எரியாமல் கருகி கிடக்கும். அவற்றை தேடி கொண்டுவந்து வயலில் ஊன்றி பல வகையாக பயன்படுத்துவார்கள்.அவை வைரம்பாய்ந்தவை என்ன செய்தாலும் ஒடியாது, வளையாது.

உறவுகளும் அப்படி பட்டவை . பலவகையான கேள்விப்படுதல்கள்  வழியாக சொல்பவர்களின் விழிகளின் ஊடாக பார்த்து அவர்கள் கொள்ளும் அனுமானம் , வெறுப்புத் தீயின் பற்றி எரியாமல் காஞ்சிர மரமாக கசப்பையே வைரமென பற்றி வளரும். அதை அடுத்த  தலைமுறையில் பொதிந்து வைக்கிறார்கள் அவையும் ஒடியாது வளையாது பல வகையில்  பயன்பாட்டிற்கு வருகிறது . ஆனால் எதிர்மறையாக.

காஞ்சீரமரச் சாறுக்கினையான கசப்பில்லை என சொல்வதுண்டு சில வியாதிக்கு அதையே கட்டிலாக செய்து அதில் படுப்பதே ஒரு சிகிச்சை முறை . அதில் படுத்தாலே அதன் கசப்பு உடம்பில் ஏறி மறுநாள் பொழுதில் நாக்கில் தெரியும். வேட்டுவேளா என்று ஒரு குளவி ,அது எந்த சாதாரணப் புழுவையும் கொண்டுபோய் கொட்டி கொட்டி வேட்டுவேளா புழுவாக்கி விடும் என ஆழ்வார் பாசுரங்களில் வரும் .இலக்கியத்தில் சொல்லப்படுவது நிஜம்தானா ? தெரியாது. ஆனால் பேசிப் பேசியே ஒரு தலைமுறையை உருவாக்கி விட முடியும்

மனிதன் சிந்தித்து சிந்தித்தே எதுவாக நினைக்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான். காலத்தை மதுரமாக நிலைபெறச் செய்ய மீண்டும் மீண்டும் நிலைப்படுத்தி கொள்ளுதல் அவசியமாகின்றது. நினைவை மீட்டி அபசுரங்களை நீக்கி நீவி விட்டு மீண்டும் மென்மையானதாக வைத்திருப்பது வாழ்கையில் அழகியலை பேணுவதில்  அவசியமாகிறது.

ஒரு உளவியல் தத்துவம் சொல்கறது,இறப்பின் தருணத்தை அடைந்து மீண்டவர் ஒருபோதும் முந்தைய மனிதராக இருப்பதில்லை. பெருங்கொடுங்கோலர்கள் கருணை மிக்கவர்களாகி இருக்கிறார்கள். அச்சம் நிறைந்தவர்கள் பெருவீரர்களாகியிருக்கிறார்கள். மறுவழியிலும் நிகழும் போலும். அவ்வெல்லையில் கண்டதென்ன, பெற்றதென்ன என்று நாமறியோம். இந்த மேடையில் இந்த நாடகம் இவ்வண்ணம் நடிக்கப்பட வேண்டுமென்பது ஊழாக இருக்கலாம்.சில சமயம் இடுகாட்டி இழிதெய்வம் அதை முடிவு செய்வதாகவும் இருக்கலாம் என்று.


நான் என் வரையில் அவநம்பிக்கை, கசப்பு நோக்கிச் சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறேன். அவநம்பிக்கை, கசப்பு கொள்ளும் சூழல் இங்குள்ளது என்பதை நானும் அறிவேன்,ஆனால் நம்பிக்கையின் பொறிகளை எப்போதும் கண்டடைகிறேன். முடிந்தவரை அதில் மூழ்கி என் தளத்தில் என்னால் இயல்வதைச் செய்துகொண்டும் இருக்கிறேன்.

நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் ,நீ கோபமுற்று இருக்கிறாயா ? வெறுப்பும் சலிப்புமாக இருக்கிறாயா? அல்லது அவ்வாறில்லாதது போல நடிக்கின்றாயா?

இல்லை . நிச்சயமாக இல்லை. நான் நடிகனல்ல . ஏனெனில் அது என் விழுமியங்களை நாசாமாக்கக் கூடியது , அதனூடாக சொல்லி சொல்லி கழற்றி கழற்றி எறிந்ததனிடமே என்னை கொண்டு சேர்த்து விடும் ஆபத்திருக்கிறது.

சிந்திக்கும் போது ,எழுதும் போது என்னால் என் ஆன்மாவோடு தொடர்பில் இருக்க முடிகிறது . எண்ணங்களை அது சுத்தமானதாக நிர்வகிக்கிறது அதனூடாக தடுமாற்றத்தை தவிர்க்க இயலுகிறது.

வருத்தமாக இருக்கிறாயா? ம்.........இதற்கு ஆம் என்றும் , இல்லை என்றும் இரண்டையும் சொல்வேன் .

ஆம் .......ஏனெனில் இழவுகள் நிகழவிடாமல் தடுக்கும் முயற்சிகள் அதற்கான மெனக்கெடல்கள் , மனப்போராட்டங்கள் , காயங்கள் நிலைதடுமாற்றங்கள் , மரியாதை இழப்புகள் , எள்ளல்கள்.....இப்படி பலவற்றை விலையாக கொடுத்து கொள்முதல் செய்தது காஞ்சீர சாறின் கசப்பன்றி வேறில்லை.

இல்லை.........ஏனெனில் இது நான் தேர்ந்த பாதையல்ல. அப்பா எனக்கென தொடங்கி வைத்த பயணம் . ஊழ் எனக்களித்த சாலை. அதில் நான் செய்யக்கூடுவது வலி மறப்பது ,விலைகொடுப்பது , அடைவது ஒன்றுமில்லை .

ஏனெனில் இது எனக்கே மட்டுமேயான பாதையல்ல.இவ்வுலகின் சரித்திர வெற்றியாலர்கள், தோல்வியை தழுவியவர்கள் என அவ் இருவியல்பினர்கள் தாங்கள் பெற்றதையும், இழந்ததையும் இங்கே வழிநெடூக வீசிவிட்டு வெறுங்கையர்களாக சென்றிருக்கிறார்கள்.

வென்றவர் கொண்டதை வீசினார் , சரி. இழந்தவர் வீச என்ன கைப்பொருள் வைத்திருக்கிறார். அவரிடம் கைபொருள் இல்லை ஆனால் சொல்லாத சொற்கள் , சொல்லி புரியாத வாக்கியங்கள் , மாறி இருக்கவேண்டிய தருணங்கள் , அதுநாள் வரை பிணைத்திருந்த தளைகள் ,மாறாத ஊழின் மிச்சங்கள் என....

அனைவருக்குமே முரண் ஒரு புள்ளி எனத்தொடங்கியது . மற்றவர்களின் தொடக் எவ்விதம் நிகழ்ந்தது எனத்தெரியாது ஆனால் அனுமானிக்கிறது அகம் , அதை பிறகு பார்க்கலாம்.

என் முரண் "அம்மா " தொடங்கியது ஒரு திகைப்பில் . அது பேச்சில் கடலூரில் தொடங்கியது . பெரும் மனவழுத்தத்துடன் வீடு திரும்பினான் .இது நாள் வரை நிகழ்ந்தது  என்ன என நான் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை.

அம்மாவாக அவர் மற்றவர்கள் தன் பால் கணிவு கொள்ள செய்யும்  ஒரு ஊடகம் "குறை " எனப்படுவது. அதில் கசப்பும் வெறுப்பும் மிகுகையில் அது எதனையும் உடைக்கும் திறன் கொண்டது. அது என்னிடம் விலையாக கேட்டது குடும்ப ஒற்றுமை எனப்படும் சிறு குருவிக்கூட்டின் தாங்கு கிளையை .

அன்றாடம் வீட்டில்  நிகழாத நிகழ்வு , செய்தி என வெளிப் புறப்பட்டு அது பிறரின் எள்ளலுக்கு, வெறுப்பிற்கு,கொந்தளிப்பிற்கு என எழந்து கிளம்பியது , அனைத்து உறவின் இல்லங்களில் இது பாராயண பொருளாகி திரிபடைந்து பன்முறை என எழுந்து என் இல்லத்து கூடங்களில் நான் நடந்து செல்கையில் திரும்ப திரும்ப செவியில் விழுந்துகொண்டேயிருந்தது. இது இப்படியே தொடருமானால் உறவை சிதைத்து மீண்டும் முளைகொள்ளாது என ஏன் இவர்கள் உணராது போயினர் .

ஒருகால் எவரிடமும் சில காலம் பேசாது இருந்தால் . பாவம் இவன் வருத்ப்படுகிறான் என அதை நிறுத்துவர் என நினைத்து சில காலம் பேசாதே கழிந்தது . பிள்ளைகளின் வருகை நின்று போனது.

தன்னிலை விளக்கம் இதை சரி செய்யலாம் என பேசத் தொடங்குகையில் , புதிய எள்ளலுக்கு ஆளாகியதும். எனக்கான மரியாதை இழந்து பல காலம் ஆகிவிட்டது புரிந்து போயிற்று

சில முயற்சிகளின் வழியே அவர்களுக்கு என்னுடைய  எதிர் காலத்தேவையை உணர்தினால் ஒரு கால் சரிவருமோ என புரிய விடுக்கும் எச்சரிக்கைகளின் விளைவுகளை அவர்கள் முன்பே புரிந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் குடியில் நன்கு வேரூன்றியது எனக்குத் தெரிந்தது. பின் விளைவுகளை அவர்கள் தெரிந்தே இருந்தனர்.

குடும்ப பூசல் வீட்டு மாப்பிள்ளைகளுக்கு தெரிந்தால் , பின் எக்காலத்திற்கும் சரி செய்ய இயலாத பிழையாகிப் போகும். ஒருகால் நான் செய்ய வேண்டிய பிற்காலத்தைய கடமையை நெறியை ஆற்ற இயலாது போகலாம் . என அச்சம் எழுந்து வந்தது.

உள்நோக்கி சிந்தித்துப் பார்த்தால் அதையும் அவர்கள் உள்ளுணர்ந்தே  இருந்தனர் .

இது ஒரு தருணம் என வாய்த்தது அவர்களில் நான் பேச விழையும் சிலரை அழைத்து என் மனக்குமுறுலை காட்டினேன் . அது பயனற்றவை ஆயின , ஒருவர் தான் முயன்று பார்த்திராத உலகியல் தத்துவம் பேசி நோகடித்தார். இளையவர் அம்மாவிற்கு புரிதலை ஏற்படுத்துவதில்  தன் இயலாமையை சொன்னார்.

எனக்கும் அது புரிந்தே இருந்தது. என் உயிர் காயத்திற்கு மருந்திட அந்த சிலர்களால்  இயலவில்லை அல்லது விரும்பவில்லை அல்லது தங்கள் வன்மத்தால் அது அப்படியே இருக்க விரும்பினர்.

இது ஊழின் கணம் . மரணத்தை விட கொடுமை எனப்படுவது. அது எனக்கு தெளிவாக சொன்னது .

விலகு விலகு என்று

சிறுவயது தொடக்கமாக யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்டதில்லை . சிக்கல் எழுகையில் எனக்குள்ள அது தர்க்கமாக தொடங்கிவிடும் . அதன் அடிப்படையில் என் முடிவுகள் அமையும்.

இந்த விஷயத்தில் என் தர்க்க புத்தி ஒத்துழைக்கவில்லை. இதுவரையிலான அனைத்து முடிவுகளையும் அதன் அனுமதியின்றி ஏதும் செய்ததில்லை , எனவே அதுனுடனான தர்க்க நிகழ்த்த தொடங்கினேன். அவற்றை இப்படியாக தொகுத்துக் கொண்டேன்.


 இதுவரை நீ சந்தித்த வலிமிகுந்த கணங்களில் , இவர்கள் உதவினார்களா?

நான் இதுவரை சந்தித்த வலி மிகுந்தது என் குழந்தை பிறப்பிற்கு முன் நிகழ்ந்தது.தொடர் சிக்கலில் நான் கையறு நிலையில் எவரும் கை நீட்டவில்லை. ஆனால் அது அம்மா மீதான பயம் காரணம் என அதை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன்.

அப்படியானால் அம்மாவின் குற்ற சுமத்தலுக்கு அறம் என்ற ஒன்றைப்பற்றிய பிரக்ஞை யாருக்கும் வேண்டாமா?

இல்லை எனச் சொல்லவில்லை , ஆனால் அது அம்மா பாதித்த போது புயலென எழுந்தது அது முரண்நகை அது தாய் மகள் உறவிற்கு மத்தியில் மகனுக்கானது ஒன்றுமில்லை எனக் காட்டியது.

உன்னைப்பற்றிய நல்ல எண்ணம் சிதைந்து விட்டதா

நான் இரண்டாவது பகுதியில் அச்சமுற்றது இது பற்றி. ஆனால் நெடுநாட்களுக்கு பின்னரே அதை உணர்ந்தேன் . ஆம் ,சிதைந்து விட்டது.

அவர்களின் வாழ்வில் நீ ஒரு பொருட்டில்லையா

இதற்கு அப்பட்டமான பதிலை சொல்லுவது உசிதமல்ல. தங்கள் வாழ்வின் கணங்களை மீறி , அறம் சீர்தூக்கிப் பார்க்க இயலவில்லை . அதன் அடிப்படையில் நான் ஒரு பொருட்டென ஆகாது போயிருக்கலாம் .

அம்மா உன்மீது சுமத்துவதை உணமை என்றே உணர்கிறார்களா அதற்கு உன்தரப்பு விளக்கம் அவசியமன்று என நினைக்கிறார்களா?

இது இன்றுவரை புதிர். தொடக்கம் முதல் நேரடியான குற்றம் சுமத்துதலில் ஈடுபட்டனர்.அனைவரும் ஏறக்குறைய ஒரே நாளில் ஒரே மாதிரியாக. முன்பே பேசிவைத்துக் கொண்டது போல.

முன்பே பேசிவைத்தது போல என்றால் , ஏன் எதற்காக

அது இன்று வரை புரியவில்லை , அனைவருக்குமான ஒரு பொது பாதிப்பு இருந்திருக்கலாம். காழ்பைப் போல

இது என் தொழில் வீழ்ச்சிக்கு பின்னரே விஸ்வரூபம் எடுத்தது . அது ஒரு காரணியாக இருக்கலாம்.

இது மாமியார் மருமகள் பிரச்சனை அல்ல அம்மா பிள்ளைக்கு இடையேயான முரண் என்பதை உணர்ந்தார்களா?

இல்லை என நினைக்கிறேன் . அந்த கோணத்தில் அதை புரிந்து கொள்வது ஆயாசத்தையும் மிகுந்த புரிதலையும் எதிர்நோக்கியது . அதற்கு அவர்கள் தயாராக இல்லை.

அவர்களின் ஆழ்மனம் ஏதோவொரு காரணத்திற்காக இதை விரும்புகிறதா .

உளவியல் சிக்கல் இருந்திருக்க வாய்ப்புள்ளது

மேல் சொன்னவை அனைத்தையும் உன்னால் மறுக்க இயலுமா. அனைவரும் உன்னை சிறுமை செய்தால் உன் நிலை என்ன

இல்லை இதை மறுத்தால் இதைவிட சிக்கலை நோக்க கூடிய கேள்விகள் நிறைய எழுகின்றது. துரதிர்ஷ்டவசமாக அதன் பதில்கள் ரசனையற்றதாகவும் மலினமாகவும் உள்ளன. அதை பற்றி பேசுவது தேவையற்றது . அதை கடந்து செல்வதே என் சிந்தனை ஆரோக்கியத்திற்கு உகந்தது .

அந்த கோணத்தில் கேள்விகேட்டு பதில் அளிக்க முயல்வது ஆத்மாவை களங்கப்படுத்திக் கொள்வதில் முடியும் . அது என் பாணிய்யல்ல.  

இதை அவர்களின் ஒட்டுமொத்தமான வெறுப்பாக பார்கின்றாயா.

ஆம் என்பதுதான் வெளிப்படைத்தன்மை

ஆம் எனில் நீ செய்யக்கூடியவை என்ன

இதில் ஒருவரைத் தவிர அனைவரின் செயல்பாடுகள் ஒரே வட்டத்திற்குள் வருகிறது.

அந்த ஒருவரும் மிகத்திறமையாக வெளிப்படாது செயல் படுவதாக உள்மனம் சொல்லுகிறது . அவரையும் வெளிக்கொணரவும் இயலும் . அது தானக வெளிப்படும் வரை காத்திருப்பது என முடிவு செய்தேன்

அவர் ஒருவர் சரி என்றால் பொருட்டு உன் எதிர்வினையை நிறுத்துவாயா ?

ஆம் . நிச்சயமாக . ஒரே சிக்கலுக்கு இரண்டு வித அனுகுமுறை சரியானதாக இருக்காது

மேலும் ஒருமுறை வெளிபட்டால் திரும்ப முடியாத சாலை

உன்னை நீ புரிந்து கொண்டிருக்கிறாயா? எப்படிபட்ட சிந்தனை உள்ளவனாக நீ இருக்கிறாய்

ஆம் நான் என்னை மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன் அதனாலேயே அஞ்சுகிறேன்.

என் சிந்தனை ஓட்டம் , வாழ்கையை சிக்கலில்லாது உருவாக்கிக்கொள்வது . சிக்கலை ஏற்படுத்துவது சிந்தனை. சிந்தனை என்னை ஓயாது குறை சொல்வது . அது இறுதியில் கழிவிரக்கத்தில் கொண்டு விடுவது . அது மரணத்திலும் கொடியது

எனவே என் செயல்பாடுகளை எண்ணங்களில் அளவிலேயே தொகுத்துக் கொள்வது. நம் முடிவுகள் சில நம்மாலும் பல மற்றவர்களால் ,காலத்தால் சூழ்நிலையால் எடுக்கப்படுகிறது . ஆனால் அதற்கான விலையை நாம் தான் கொடுத்தேயாக வேண்டும் . விரும்பாவிட்டாலும் கூட.

ஒவ்வொரு நிகழ்வுகளின் போது அதன் காரணிகளை ஒப்பிட்டு அதே சூழ்நிலை காலம் எனும் நம்மால் பார்க்க,அறிய இயலாததின் விளைவுகளை தன் அளவில் உடன்பட்டு எதிர்வினையற்று உடன்பட்டு விடுதல்.

எதிர்வினையாற்றும் காலம் சக்தி இருப்பினும் பின் விளைவுகளை கணக்கில் கொண்டே செய்யப்பட வேண்டும் . வன்மம் இல்லாதும் வேறு வழியற்றும் இருப்பின் செய்தல் பிற்கால மனசாட்சியின் பழித்தலுக்கு இடமில்லாது போகும்.

உன்னுண்டய பங்களிப்பு இல்லாத உனக்கெதிரான அனைவரின் சூழ்கை நிகழ்ந்ததா .


ஆம் நிகழ்ந்தது . அது ஒரு ஊழின் முகூர்தம் போல பெருவலியென வந்தது .விபரீதமாக அனைவரும் ஒரே இடத்தில் கூடியதும்,எதிர்கால விழுதுகளின் கண்களில் சிறு பொறியென கசப்பை பார்த்தும். அதுதான் அந்த நாள்தான் , எல்லாவற்றையும் முடிவெடுக்க வைத்தது.


 உன் மனம் சொன்னதென்ன?.

அதை இப்படித் தொகுக்க தொடங்கினேன். பாரம்பரியமான குடும்பத்தில் இது போன்ற பிரச்சினைகள் முன்னரும் ஓரளவு இருந்தன. ஆனால் அன்றைய மனம் அதற்கு மரபுசார்ந்த பதில்களால் நிறைவடைந்தது. இன்றைய கல்விகற்ற, நவீன மனம் எளிய நம்பிக்கைசார்ந்த வழிகளை ஏற்பதில்லை. மரபு அளிக்கும் வாழ்க்கை முறையும் இன்றில்லை. குடும்பம், உறவுகள் அனைத்துமே மறுவரையறை நோக்கிச் செல்லும் காலகட்டம் இது.

நவீனக் கல்விகற்ற, நவீனவாழ்க்கையின் இடர்களில் இருந்து அடிப்படைக் கேள்விகளைச் சென்றடைந்தன ஆனால் அதற்கு சென்றகாலகட்டத்தின் எளிய மதநம்பிக்கை அல்லது குடும்ப பெருமை  அளிக்கும் விளக்கங்களால் நிறைவடையாத ஒரு வட்டத்திற்குள் வந்து சேர்வது தவிற்க இயலாதது.

அந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கும் விளக்கம் நவீன உளவியல், சமூகவியல், தத்துவம் ஆகியவற்றிலிருந்து சாத்தியமான தர்க்கங்களை எடுத்துக்கொள்கிறது. அவற்றை பொதுவான சிந்தனைத்தள அறிமுகம் மட்டுமே கொண்டவர்கள் புரிந்துகொள்ளும்படி எளிதாக்கி முன்வைக்க முடிவதில்லை.

நவீன சிந்தனை சார்ந்த குடும்பத்திற்கு ஒரு வலுவானதேவை உருவாகியது. வரலாற்றுரீதியான மரபான ஒரு பதில் அதற்கு இருக்கிறது. ஆனால் இவை இரண்டும் சந்தித்து உரையாடல் நிகழ்த்த வேண்டிய சந்தரபம் உருவாகி வர வேண்டிய சூழல் இன்று இல்லாது போனது

எந்த தோற்றமென்றாலும் அது ஒருவகை அறிவிப்பு மட்டுமே. எல்லா தோற்றங்களும் குறியீடுகளே. நான் அறிவுறுத்த விரும்புவதற்கான தோற்றம் அது. திருமண் இந்தியாவின் மார்க்க மரபுடன் இணைக்கின்றன கூடவே நான் பழைமையானவன் அல்ல, நவீன யுகத்தைச்சேர்ந்தவன் என்பதை வெளியிடுகிறேன் உளவியலாளர்கள் போன்று அகவயமான விஷயங்களை கையாள்பவர்கள் தங்களுக்குரிய தோற்றங்களை அமைத்துக்கொள்வது இங்கே இயல்பாக நிகழ்வதுதான்.

இந்த சூழலில் நான் அனைத்திலிருந்தும் விலகுவது என முடிவு செய்தேன் . எனக்கு ஏற்பில்லாத ஓரிடத்திலிருந்து விலகல் பல முறை நிகழ்ந்துள்ளது . இந்த நிலையிலேயே என் காலத்தை முடித்துக்கொள்ள முடியும்.அந்த உறுதி ஏற்பட்ட பிறகு பிறந்ததே

"அனைத்து சகோதரிகளுக்குமான என் விலகள கடிதம் "

துரதிர்ஷ்டமாக அந்த கடிதத்தில் நான் சொல்ல வந்ததென்ன என எவரும் புரிந்து கொள்ள முயலவில்லை . மாறாக வெறுப்புடன் கசப்புடன் அதை அனுகியதும் அவரவர் நெஞ்சம் அதில் தெரியத்
தொடங்கி இறுதியில் அதுதான் நான் சொல்ல வந்தது என ஆயிற்று.

இந்த விலகல் ஒரு செடியை வெட்டுவதைப் போல . இரண்டு வித வெட்டு உண்டு . ஒன்று மறுபடி கணுவிலிருந்து வளர்ந்து தழைக்க மற்றொன்று மறுமுறை தளிர்காதிருக்க. நான் வெட்டியது மறுபடி துளிர்குமுகமாக.

அவை முளைவிடும் காஞ்சீர மரங்கள் இல்லாதிருக்க அப்பெருவளியை அரசை வேண்டுகிறேன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...