எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல் மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியில் நடைபெறுகின்றது. கடந்த 7 ஆண்டுகளாக புதுவை வெண்முரசு கூடுகை என்னும் வாசகர்கள் குழுவால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. கலந்துரையாடல் மட்டுமல்லாது எழுத்தாளர்கள் சந்திப்பு புதிய வாசகர்களுக்காக பயிற்சி முதலிய இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை புதுவை வெண்முரசு கூடுகை ஒருங்கிணைக்கின்றது. எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் புதுவையை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவரை கௌரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் மாத கூடுகையில் புதுவையை சேந்த எழுத்தாளர் அரிசங்கர் படைப்புகள் குறித்து உரையாடல் நிகழ்ந்தது.
அரிசங்கர் பாரீஸ். உண்மைகள் பொய்கள் கற்பனைகள், மாகே கஃபே ஆகிய நாவல்களும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் பக்கார்டி என்னும் குறுநாவலும் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதை தொகுப்புகள் உடல், பதிலடி. ஏமாளி, சப்தங்கள் ஆகியவை தற்போது அரிசங்கர் சிறுகதைகள் என்ற தொகுப்பாகவும் கிடைக்கின்றன. தொடர்ந்து புதுச்சேரியை தனது எழுத்தில் முன்வைப்பதாகவும் எளிய மனிதர்களின் உலகத்தை அதன் அனைத்து நிஜங்களுடன் கதைகளில் காட்டும்படியாகவும் இவரது கதையுலகம் வழங்குகிறது . அரி நண்பர்களுடன் இணைந்து நவீன இலக்கியத்திற்காக பனை என்ற வாசகர் வட்டம் ஒன்றையும் புதுவையில் நடத்தி வருகிறார்.
அரிசங்கரது சமீபத்திய நாவலான மாகே கஃபே குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. அரிசங்கருக்கான பரிசை வெண்முரசு கூடுகை வாசகர் திருமதி அமிர்தவல்லி அவர்கள் வழங்கினார், மூத்த வாசகர் திரு விஜயன் பொன்னாடை போர்த்தினார். அரிசங்கர் தனது ஏற்புரையில் புதுவையில் நவீன இலக்கியம் சார்ந்த தேவைகள் குறித்து பேசினார். இந்நிகழ்வுக்கு பிறகு மாதாந்திர கூடுகை துவங்கியது வெண்முரசு காண்டீபம் நாவலின் ஐந்து முகத்தழல் பகுதி குறித்து நண்பர் சிவராமன் பேசினார், அதன்பிறகு கூடுகை நண்பர்கள் அனைவரும் அப்பகுதி மீதான தங்கள் பார்வையை முன்வைத்து உரையாடினர்.
L.S.THAMARAI KANNAN.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக