https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 22 ஏப்ரல், 2024

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன்

புதுவை 1

தேதி 21.04.2024


நண்பர்களுக்கு வணக்கம்


புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். வழமை போல அனைவரின் உரையாடல்களும் மெல்ல மெல்ல தொட்டு தொட்டு கூர் கொள்வதாக இருந்தது. இம்பர்வாரியால் கம்பனை கடந்த சில மாதங்களாக அனுபவத்து வருகிறேன். ஜெ பேராசியர் ஜேசுதாசனை முன்வைத்து கம்பனை சொன்ன போதுதான் நான் தவற விட்டது எத்தகையது என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன் . இரண்டு விஷயங்கள் வழியாக கம்பன் விரிக்கும் காட்சியின் அழகு சொல்லில் அடங்காது. ஒன்று மந்திர ஆலோசனை காட்சியை கவி கூற்றாக வைத்த இடம். பேச இருப்பது சீதை கவர்ந்து வந்ததால் எழுந்த எதிர்வினை பற்றியது என்பதால் சிறை பிடிக்கப்பட்டு ஏவல் செய்து கொண்டிருக்கும்  வேறு உலகை சேர்ந்தவர்கள் முதலிலும் அதை தொடர்ந்து வயது முத்திராதவர்கள், பெண்கள் என தொடங்கி அறம் பற்றி எடுத்துக்கூறுபவர்கள் என்றாலும் நெருங்கிய உறவினர் தவிர பிறரை வெளியேற்றி பின்னர் கதவுக்கு அடைக்கப்பட்டு மூடிய கதவுகளுக்கு பின்னால் நிறுத்தப்பட்ட சேனை மாற்று கருத்து கொண்டோர் உடலோடு வெளியே செல்ல முடியாது என்கிற சூழலை உருவாகிய பின்னர் சிறு ஜீவராசிகளும் அஞ்சும் அந்த காட்சி கொண்டு எந்த மாதிரியான மந்திராலோசனை நிகழ இருக்கிறது என சொல்லி விடுகிறார்.  





அனுமன் நுழைவால் உருவான அலரால் தனக்கும் தன் மீது மக்கள் கொண்ட அதிருப்தியை அறிந்து கொள்ள அதே சமயம் தனது முடிவில் மாற்றமில்லை என்பதை வெளிப்படுத்தவும் அவன்  கூடுகையை அழைக்கிறான். அதற்கு முன் பிரம்மன் மூலமாக மயனை கொண்டு தீக்கிரையான நகரை சீரமைக்கிறான். இது இன்றும் உலக சர்வாதிகாரிகள் காட்டும் ஜனநாயக பாவலா


இராவணின் வழமை படி கூடுகை ஒரு நாடகம் போல நிகழாத் துவங்குகிறது   இரண்டு. அதை துவங்குபவன் பற்றிய கவியின் சிறுசொல்சூழ்ச்சிநிறைந்தவன் என பிரகஸ்தன் அறிமுகமாகும் சூழல் . இங்கு சூழ்ச்சி என்றால் வஞ்சம் என தற்கால பொருளில் எடுக்க வேண்டாம் என நினைக்கிறேன் . இங்கு அரசு சூழ்த்தலை சொல்லுகிறார் . இது போன்ற கூடுகையின் பேசு பொருள் மற்றும் அதை வெளிப்படுத்தும் முறை அதை செய்யும் நபர் மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்படுவது அரசு சூழ்தல் . முன்பே நன்கு திட்டமிட்டது என்பதை சுட்டும் சொல்லாக பிரகஸ்தனை கம்பன் அறிமுகப் படுத்தும் அந்த சொல்


இராவணன் தனக்கு எதிராக நினைப்பவர்களின் கருத்தை அறிந்து கொள்ள தன்னை தாக்கும் துணிவை வரவழைக்க தனக்கு மிக நெருக்கமான பிரகஸ்தனை தன்னை எதிர்த்து பேச வைத்து சபையை ஊக்க அவனை முதலில் களம் இறக்குகிறான் . இராவணன் கொடுக்கும் இடத்தால் அவனை நேரடியாக தாக்கும் துணிவை கொள்கிறான் . மந்த்ராலோசனை அரசு சூழ்தல் முறை அதுவே . இன்றுவரை அது அணைத்து கூட்டத்திலும் நிகழ்வதை சற்று கூர்ந்து பார்த்தல் அறிந்து கொள்ளலாம். பிரகஸ்தன் இராவணன் வைத்த பொறி அதில் சிக்குபவர்கள் பின்னர் பலியாவார்கள் . சூழ்ச்சி அறிந்தோர் அந்த அலையால் கொண்டு செல்லப் படாதவர்களாக இருந்து விடுவார்கள்


சபையில் பேசும் யாரும் சீதையை குறித்து மிக கவனமாக தவிர்த்து விடுவதை பார்க்க முடிகிறது. இன்னும் வரும் நாட்களில் இந்த நாடகம் இன்னும் கூர் கொள்ளும்



நன்றி 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்