https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 7 பிப்ரவரி, 2019

ஊழின் பெருங்கருணை

ஶ்ரீ:

பதிவு : 605 / தேதி 07 பிப்ரவரி 2019

அஞ்சலி - 6

* ஊழின் பெருங்கருணை *




விழைவுகள் முளைக்காத விதையாக ஆழத்தில் உறங்கினாலும் , அது தனக்கான வாய்ப்பிற்கு காத்திருக்கிறது போலும் . அது ஆழ்மனம் வழியாக விண்ணோக்கி மன்றாடுகிறது. புடவியின. பெரு விதி அதற்கு மதிப்பளிக்கத்தான் செய்கிறது . மானிடர்கள் தங்களின் இருப்பை பிறர் மதிக்க , அங்கீகரிக்க , சார்ந்திருக்க விழைகிறார்கள். அரசியல் அதற்கான சிறந்த வெளியாக எல்லோராலும் பார்க்கப்பட , நம்பியும் அதையே தேர்ந்தெடுத்திருந்தான் . ஆனால் அதனினும் சிறந்த சில களங்கள் காலத்திடம் எப்போதும் இருக்கின்றன . அவனால் நினைத்துப் பார்க்க இயலாத இடத்திலிருந்து அது அவனுக்கென முளைத்து  வந்தது .

தன் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பிற்கு அனைவரும்  ஏங்குகிறார்கள்அதை அடையாமை பற்றியே  எல்லோரும் தங்களின் வாழ்நாளின் இறுதிகணம் வரை சொல்லில் ஓயாத வார்த்தைகளை தேடுகிறார்கள் , மனம் குமைகிறார்கள், கண்ணீர் பெருக்குகிறார்கள்  . பலர் விஷயத்தில் அது மிகை நம்பிக்கையாக இருப்பதையே பார்த்திருக்கிறேன் . உலகின் இயல்பிற்கு பொருந்தாது பலரும் தங்களைப்பற்றி மிகைமதிப்பீடு கொண்டிருப்பவர்களே . அத்தகையோர் புண்பட்டபடியே இருப்பார்கள், ஏனென்றால் அம்மதிப்பீட்டை உலகம் அவர்களுக்கு அளிப்பதில்லை. நம்பியுடையது இடையறாத நம்பிக்கை . ஓரே இலக்கை நோக்கிய சிந்தனை, ஒரு நாள் நடந்தே தீறும், இது நானும் நம்பியும் உரையாடலின் வழியாக புரிந்து கொண்ட கருதுகோள் .

அவனது வாழ்வியல் ஆதர்சங்கள் மாண்பு மிக்கவை, அதனாலேயே அவனது கனவும் நனவானது . அத்துடன் , ஒன்றிணைந்த வாழ்கைமுறையையே  அவன் தேர்ந்தெடுத்து, அதை வாழ்ந்தும் முடித்தான் . அதுவே அவனது விழைவை உகந்து அவனுக்கு கையளித்திருக்க வேண்டும் என்பது, அனைவருக்கும்  வாழ்வியலில் குறித்த நம்பிக்கையை கொடுப்பது

தன்னறம் பேணுதல்  உலகியல் பார்வையில் அர்த்தமற்றதாக தோன்றலாம், பிறரின் எள்ளளுக்கு இலக்காகலாம் .ஆனால் அது மட்டுமே மானுட வாழ்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவது . அதை கைக் கொண்டவன் அடையும் வாழ்கை தெளிவை , நிறைவை பிறிதொருவர் அடைவதில்லை. இதுவே காலத்தின்  அனைவருக்குமான செய்தி.

சிக்கலான  நிர்வாகத்தின் நிர்வாகியாக அவன் பெரிய வெற்றியடைந்திருந்தான் என்பதே நிஜம் . ஆறு வருட உழைப்பு அவன் விரும்பிய இடத்திற்கு அவனை கொண்டு சென்றது . மனம் நிறைந்து வாழ்ந்து மறைந்தான் என்றே சொல்லவேண்டும் . கடைசி இரண்டு வருடங்கள் அவனது நிர்வாக சிக்கல்கள் நாங்கள் சந்திப்பதை இயலாமலாக்கியது . ஆனால் எப்போதெல்லாம்  அவன் உளச் சோர்வு அடைகிறானோ  அப்போதெல்லாம்  நாங்கள்  சந்திப்பது தவறுவதில்லை

இப்போது நினைத்துப் பார்க்க விந்தையாக இருந்தாலும், எங்கள் உரையாடல் தடையுற்ற போது நான் வலைபூப் தளத்தின் எனது ஆழ்மனத்துடனான உரையாடலை தொடங்கியிருந்தேன் என்பது . காலம் அவரவரகளுக்கென பிரத்யேக வழிகளை திறந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதை நம்பி காத்திருபதன்றி மானுடர் ஆற்றுவதற்கொன்றில்லை .

வெறுமை வளைந்து அமைந்த வான்வெளிக்குக் கீழ் மண் ஒவ்வொரு பருத்துளியும் வஞ்சங்களால் விழிநீரால் ஆனதாக விரிந்திருக்கிறது. வஞ்சின ஈடேற்றத்திற்காக, வஞ்சினத்திலிருந்து தப்புவதற்காக நோன்பிருக்கிறார்கள். நோன்புகளை கேட்கும் தெய்வங்கள் அவ்விண்ணில் வாழ்கின்றன. இப்புவியில் வாழும் கோடானுகோடி மானுடர், பல்லாயிரம்கோடி உயிர்கள், அளவிறந்தகோடி சிற்றுயிர்கள் அனைவரும் கொள்ளும் வேண்டுதல்களை செவிகொள்வதற்கென்று எத்தனை கோடி தெய்வங்கள் விண்ணிலும் மண்ணின் ஆழத்திலும் இருக்கும்! என்கிறது வெண்முரசு 

தனது வாழ்நாள் முழுவதுமாக அவன் விழைந்தது அவனுக்கு கிடைத்ததை அவன் அறிந்திருந்தான் , அதனாலேயே அதில் நிறைவுற்றிருந்தான் . அவ்வகையில் அவனது வாழ்வு நிறைவடைந்ததே........

ஓம் சாந்தி..........

ஊழின் பெருங்கருணை 
நிறமற்றது , நிர்ணயமற்றது.
அதை உணர்ந்து கொள்ள அதன் வழி
வாழ்ந்து பார்ப்பது

அதன் நிறங்களும் நிர்ணயங்களும் 
ஒரு நாள் புலப்படும் .
காலம் அதை ஒருவேளை 
எனக்கும் அருகிலென 
கொண்டுவரலாம்


கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக