https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 11 பிப்ரவரி, 2019

அடையாளமாதல் - 435 *காலப் புணைவு *

ஶ்ரீ:





பதிவு : 435 / 607 / தேதி 11 பிப்ரவரி  2019

*காலப் புணைவு 


எழுச்சியின் விலை ” - 36
முரண்களின் தொகை -03 .



தொடர்ந்து இப்பதிவுகளை எழுத குறைந்தது மூன்று காரணம் இருக்கிறது . ஒன்று நான் எனது ஆழ்மனத்தடன் நிகழ்த்த முயலும் உரையாடல், அது எனக்கான மெய்மையைக் குறித்து . எனக்கு போதிய காலம் இல்லை என்கிற ஒரு சொல் எப்போதும் மனதில் எழுந்த படி இருப்பது அதற்கு காரணம் . இரண்டு புதுவையின் அரசியல் மற்றும் அதை வளர்த்தெடுத்த தலைவர் சண்முகம் பற்றிய வரலாற்று பதிவு போன்றது . புதுவை அரசியல் பற்றிய சிறிய குறிப்பு இது மட்டுமேயாக இருக்கக்கூடும் . இது ஒரு சிறிய முயற்சி மட்டுமே . இதில் நிஜ  நிகழ்வுகளை அதன் போக்கில் சொல்ல முயற்சிக்கிறேன்

நிகழ்ந்தவற்றை மிகையாக அல்லது கற்பனையாக சொல்ல விழையவில்லை . நான் எனது தனிப்பட்ட பார்வைவிமர்சனத்தை தவிர்க்க முயன்றிருக்கிறேன். ஆரம்ப பதிவுகளில் எனது பார்வையாக கொடுக்கப்பட்டிருந்தாலும் , பின்னர் அவற்றை விலக்கி  முற்றாக குறைத்திருக்கிறேன் . இந்த பதிவுகளுக்கு அவையும் ஒரு காரணம் என அமைந்துள்ளது. ஒவ்வொரு பதிவிலும் நடை அல்லது கூறுமுறை போன்றவற்றை மாற்றி அமைத்தபடி இருக்கிறேன் . அது மொழியை கைவரப் பெற செய்யும் முயற்சிகள் .

அரசியல் தனது முரணியகத்தின் வழியாக தனக்கான பாதையை கண்டடைகிறது . ஒவ்வொரு பத்தாண்டுகளில் யாரும் எண்ண இயலாத சில தலைகீழ் மாற்றத்தை உருவாக்கி , அதை ஒருவரின் வெற்றி , பிறிதொருவரின் வீழ்ச்சி என ஆரம்ப காலத்தில் எனக்கு வருத்தம் தருவதாக தோன்றவைத்தது , மாற்றம் என்பது எதிர்காலத் காலத்தை கருத்தில் கொண்டது , அதை நிகழ்காலத்துடன் பொருத்தி புரிந்து கொள்ள முடியாது என்பதும் அதில் யாருக்கும் வெற்றி என்றோ தோல்வி என்றோ ஒன்று நிகழ்வதேயில்லை . எல்லா கணிப்புகளையும் காலம் தனது விந்தையான நகைச்சுவை உணர்வுடன் புறந்தள்ளி சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது .

அது தனது சிக்கலான முடிவுகளை தன வழியாகவே வெளிப்பட இருப்பது , வளர்ச்சிதை மாற்றம் என்கிற கருத்தாக்கத்துடன் அது எழுவது . அதில் நிகழ்வதை புரிந்துகொளவ்தும் வாய்ப்பிருந்தால் அதில் நுழைந்து செய்ய வேண்டியதை முயற்சிப்பதுமாக காலம் என்னை கடந்து போனதை நினைவு படுத்திக்கொள்கிறேன் . இங்கு யாரும் பெருமையுடன்  வாழ்ந்து மறைந்துவிட முடியாது . வாழும் நாளில் தங்களது பெருமை கரைந்து போவதை பார்க்காது போகிறவர்கள். விண்ணகத்து கொடையைப் பெற்றவர்கள் 

சுதந்திர கால கட்ட இந்தியவில் நிகழ்ந்ததை கூரிய பார்வையுடன் அலசும் ஜெயமோகனின் கட்டுரைகளை இங்கு நினைத்துப் பார்க்கிறேன் . இலட்சியவாதம் அரசியலின் பிரதான கருத்தியலாக இருந்தது. அதன்  வழியாக அடையப்போகும் ஒரு பொன்னுலகை மக்கள் முன் காட்டியாகவேண்டிய அவசியம் இருந்தது. காங்கிரஸும் கம்யூனிஸ்டுக் கட்சியும் அந்த பொன்னுலகை எதிர்காலத்தில் சுட்டிக்காட்டின. திராவிட இயக்கம் அதை இறந்தகாலத்தில் சுட்டிக்காட்டியது. இழந்துவிட்ட ஒரு மகத்தான காலகட்டத்தை அலங்காரமும் உணர்ச்சிகரமும் கொண்ட சொற்கள் வழியாக அது மக்கள் மனத்தில் நிறுவியது. ஏற்கனவே தமிழகத்தில் வலுவாக நிகழ்ந்திருந்த தமிழியக்கத்தில் இருந்து அந்தக்கனவை அது கடன்வாங்கியது எனகிறார் திரு,ஜெயமோகன்.

தமிழக அரசியலை பொருத்தவரை மிக முக்கியமான பார்வையாக இதைக்  கருதுகிறேன். காங்கிரஸ் இயக்க தலைவர்கள் . சுதந்திரத்திற்கு பின் மக்களின் போக்கை கணிக்க தவறினார்கள் .திராவிட இயக்கங்களின் எழுச்சி  பரப்பியம்” என்கிற  பிரச்சார யுக்த்தியை கையிலெடுத்த போது , அதற்கு ஈடு கொடுக்க இயலாமல் , பகத்தவச்சலம் , காமராஜர்  போன்றவர்கள் திணறிக் கொண்டிருந்த சூழலில், திரவிட இயக்கங்களை கையாளுவதில் வெற்றி பெற்றிருந்தார் சண்முகம் .

புதுவையை பொருத்தவரை , அவர் வலது கம்யூனிஸ்ட்களை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது   அதுவே அவரின் அரசியலை வடிவமைத்ததிருக்க வேண்டும் .கம்யூனிஸ்ட்கள் லட்சியவாதம் ஓங்கியிருந்த காலம் .கொள்கை அடிப்படையில் செயல்பட்டவர்களை எதிர்கொள்ள சிரமம் இருப்பதில்லை . அது இல்லாத பிற பிரப்பியக்கங்களை கையாலவதுதான் சத்தியமல்லாதது

புதுவை கம்யூனிஸ்ட் பெரும் தலைவராக அறியப்பட்ட .சுப்பையா ரஷ்ய தலைவர்களுடன் நேரடித் தொடர்பிலிருந்தார் . காந்தியை புதுவைக்கு முதலில் அழைத்து வந்தவர் அவர்தான் என்றாலும் , பின்னர் அரசியல் நிலைபாட்டால் , மாற்று இயக்கம் நோக்கி நகர்ந்தார்., தேசியவாதியாக தன் அரசியலை துவக்கிய சுப்பையா எதிர்கொண்ட சிக்கல்கள் புதுவை மாநிலத்திற்கென பிரத்யேகமானவை , அதுவே அவரை காந்திய வழிகளில் இருந்து வெளியேறச் செய்தது . அவர்கள் நீண்ட கால காத்திருப்பிற்கு தயாரில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...