https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

* தொடங்காத பயணம் *


ஶ்ரீ:

பதிவு : 604 / தேதி 05 பிப்ரவரி 2019

அஞ்சலி - 5

* தொடங்காத பயணம் *


ஒரு துறையில் ஈடுபட்டு வெற்றி பெற்று அதன் நீள, அகல , ஆழங்களில் அவற்றின்  யதார்த்தத்தை  புரிந்த ஒருவன்,  பின் எக்காரணம் கொண்டும்  அதை பிறிதொருவருக்கு பரிந்துரைப்பதில்லை . காரணம் வெற்றிக்கு பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொள்வது சமரசங்களால் மட்டுமே இயல்வது. சமன்பாடும் அடையாளத்தை அழிப்பது . தன்னைப்பற்றி மதிப்பு கொள்ள அது ஒருபோதும் அவனை அனுமதிப்பதில்லை. அந்நிலையில்  இருந்து பெறும் கசப்பான அனுபவத்தை வார்த்தைகளில் வார்ப்பது எளிதில் இயலாதது

மேலும் அது இரண்டை அடிப்படையாக கொண்டு நிகழ்வதை பார்த்திருக்கிறேன்  . எந்தத் துறையும் ஒருகட்டத்தில் சலிப்புற்று கசந்து போவது தவிர்க்க இயலாதது . அது புடவிப் பெரு வதிகளில் தலையானது . இரண்டு தன்னைப்  பற்றிய மதிப்பும் , தன்னளவு பிறரால் அவற்றை சிறப்புற கையள இயலாது என்கிற என்கிற கணக்கும் கூட அப்படி நினைக்கத் தூண்டுவதே .

உலகியல் எதார்த்தத்தை எனக்கு அரசியலைப் போல சொல்லிக் கொடுத்தது பிறிதொன்றில்லை . வாழ்வின் நிலையாமையையும் , அதை தொடர்ந்து சமூகம் அதை எப்படி அணுகும் என்பதெல்லாம்  மின்சார தொடுகை போல விதிர்க்கச் செய்வது . எனது அணுகுமுறையை இவற்றை ஒட்டியே அமைத்துக்கொண்டேன் . எனது நிலைப்பாட்டை வீண் பிடிவாதம் என்றே பலரும் நினைத்தனர், அதனால் அனைவராலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டேன். அவர்களிடம் எனக்குள் நிகழ்வதை சொல்லி புரியவைக்க முடியவில்லை. நம்பியிடம் அது பற்றி மிக ஆழமாக உரையாடியிருக்கிறேன் . தனது கூரிய சிந்தனையால் என்னை முற்றாக புரிந்திருந்தான் . எங்களுக்குள் நிகழ்ந்த  உரையாடல்கள் என்னை வடிவமைத்ததை உணரத் துவங்கிய போது , அந்த உரையாடல்கள் பல அலகுகளை சென்று தொடக்கூடியதாக இருந்தது . புரிதல்களின் தொடர்ச்சியாக, புதிய முணைகளை தொட நேர்ந்தது. அந்த உரையாடல்களின் ஊடாக என்னை முழுவதுமாக திரட்டிக் கொள்ள முயன்றேன்.

சுழன்று அடிக்கும் அரசியலில் என்னால் நிலை பெற இயலாது என்பதே நம்பியின்  எண்ணமாக இருந்ததிருக்கலாம் . அல்லது அது என் இயல்பிற்கு பொருந்தாது என நினைத்திருந்தாலும் அதில் தவறில்லை . நான் அரசியலில் ஈடுபட்டது சில நுண்ணிய புரிதல்களை அடையும் பொருட்டே, என்னவிட எனது ஆழ் மனதிற்கு அது தெரிந்திருந்தது . நான் அதை பல காலம் கழித்தே உணர்ந்து கொள்ள முடிந்தது .

ஆரம்பம் முதலே ஆழ்மனம் எனக்கு தெளிவாக வழிகாட்டியது என்பதை ஆச்சர்யத்துடன் இப்போது நினைத்துப் பார்கிறேன். அரசியலில் நான் பயணித்த பாதையில் எது என் இயல்பிற்கு பொருந்தி வரவில்லையோ அதை மாற்ற முயற்சித்தேன் . அமைப்பை முற்றாக மாற்ற முனைவதை போன்ற அறிவீனம் பிறிதொன்றில்லை . இருந்தும் அதை மிகச் சரியான அனுகுமுறை , தொடர் உரையாடல்களின் வழியாக அடைய முடியும் என இப்போதும் நினைக்கிறேன்  . அதை செய்ய முனையும் ஒருவர் சென்று சேரும் இடத்திற்கு , நானும சென்று சேர்ந்தேன் . அதுபற்றிய புரிதல் இருந்ததால் நான் கசப்படையவில்லை

நம்பியின் கணிப்பை மீறி நான் அரசியலில் அடைந்த இலக்குகள் எனக்கு வாழ்வியல் புரிதலையம், மனித மனங்களின் செயல்படு விசைகளை அனுமானிக்கும் பார்வையை கொடுத்திருந்தது. பிறிதெந்த துறையிலும் அதற்கு வாய்ப்பில்லை என நினைக்கிறேன் . ஒருவேலை திரைப்படத்துறை இதைவிட மனித மனதின் நுட்பங்களை விரித்துக் கொடுக்க கொள்ள கூடியதாக இருக்கலாம்

எனது அரசியல் செயல்பாடுகளை அவதானித்த பிறகு நம்பி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு என்னை ஆதரித்தான் . அதன் பிறகு எனது அரசியல் நடவடிக்கைகளை நம்பியிடம் சொல்வதில் எனக்கு தடைகள் இருந்தததில்லை .அரசியலில் நான் சந்தித்த ஏற்றமிறக்கம் அனைத்திலும் என்னுடன் தோள்நின்றான் .

நம்பி ஒரு அரசியலாளனாகவே தனது வாழக்கையை முடிவு செய்திருந்தான் . அரசியலுக்கு மிக பொருத்தமானவன். தனது இளமை காலத்தில் அரசியலை அறிந்தது கண்ணனுடன் அவனுக்கிருந்த தொடர்பின் மூலமாகத்தான் . பல்வேறு குடும்ப சூழலிலின் பொருட்டு அவன் விரும்பிய துறையில் ஈடுபட இயலாது போனது . பொருளியல் நிர்பந்தத்தால் அரசு வேலையில் சென்று சேர்ந்தான்  . 

அரசு அலுவல் அவனுக்கான பாதையை திறந்து கொடுக்கும் என நினைத்தது நடைபெறவில்லை . நம்பியின் அண்ணன் இன்பசேகரன் கண்ணனிடம் முரண்பட்டு விலகியது . அதன. பின்னர் அவரது துர்மரணம் நம்பியிடம் ஒரு நிலைகுலைவை உருவாக்கியது , மிக சிறிய இடைவெளியில் இரண்டாவது அண்ணனின் எதிரபாராது மரணம் அவனை முற்றாக முடக்கியது. கற்பனை வரண்டு போனது . வாழ்வியல் நிதர்சணங்கள் பேருரு கொண்டு எழுந்தது . பின்னர் தன்னை பற்றிய எண்ணங்களை விட்டு விலகி . தன்னை சாமான்ய ஒருவனாக நிலைநிறுத்திக் கொண்டான் . ஆனால் அடியாழத்தில் கணவுகள் மக்காது உயிர்ப்புடன் இருந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மறைக்க இயலாத காதல்

மறைக்க இயலாத காதல் பெண்களின் கண்களில் இருந்து காதலர்கள் தப்பிப்பதல்லை . என் மனைவி என்னிடம் கேட்டார் “ அது தான் அஜி திருமணம் செ...