நண்பர்களுக்கு வணக்கம்
இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன். கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்றியது என நினைக்கிறேன். நண்பர்கள் எப்படி பார்க்கிறார்கள் என தெரியவில்லை
விபீஷணனின் வாத அடுக்கு முறை நுட்பம் வேறு வகைமை கொண்டாதாக பார்க்கிறேன். இராவணன் இன்றிருக்கும் இடம் சிக்கலுக்காட்படும் என்கிற வாதத்தை அவர் வைக்காமல் அவனக்கு கையில் கிடைக்க இருக்கும் இந்திரப் பதவி நழுவுவதை பேசுகிறார். வேறு காரணங்கள் அவனிட் எடுபடாது என நினைக்கிறார். எனவே இந்திரப் பதவி பராக்கிரமத்தால் மட்டும் அடைந்துவிடுவதல்ல அறம் மற்றும் விழுமியம் அதற்கு பலம் சேர்க்க வேண்டும் போல. இந்திரனை வெற்றி கொண்ட பிறகு சிலரை அடிமை கொண்டது தவிற இராவணன் இந்திரப் பதவியில் அமர்ந்ததாக எங்கும் இல்லை என நினைக்கிறேன். அமராத பதவிக்காக இராவணனின் வீண் போர் நிகழவில்லை என்பதால் கண்களுக்கு புலப்படாத “அறம்” இராவணனது விழுமியம் மூலமாக அடையப் பட வேண்டும் என அவனை காத்திருக்க வைத்திருக்கிறது போலும். இன்று அதற்கு ஆபத்து என விபீஷணன் சொல்ல வருகிறான்.
மேலும் மஹாபலி இந்திரனை வென்று ஆட்சியில் அமர்கிறான். அவனது பராக்கிரம் மட்டுமல்லாது அவனது விழுமியமும் அவனுக்கு துணைத்து அந்த பதவியை பெற்றுத் தந்திருப்பதால் இந்திரன் முறையிட பலத்தால் அவனை வெற்றி கொள்ளாமல் வாமண ரூபம் எடுத்து தானமாக பெற்றுத்தரும் செயல் அறம் என்கிற ஒன்று அனைத்தையும் அளக்கிறது போலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக