ஶ்ரீ:
அடையாளமாதல் - 84
* தொடுகையின் நுட்பம் *
இயக்க பின்புலம் - 11
அரசியல் களம் - 25
அரசியல் உண்மைகள் பத்திரிகைகளில் செய்திகளாவதில்லை , பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் உண்மையாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை . நிஜம் இவற்றின் மத்தியில் இருக்கிறது . அச்சங்களும் , நம்பிக்கையின்மைகளும் கடைசீ நேர அரசுசூழ்தலுமே ஒவ்வொரு நிழவுகளின் முடிவுகளை ஆள்கின்றன . எனக்கு மற்ற அணியினருடன் நல்ல தொடர்பிருந்தது . அதை நட்பாக பேனியிருக்கிறேன் . அவர்களை நான் ஒருபோதும் பாலனுக்கான தகவல்களை அறிந்துகொள்ள பயன்படுத்தியதில்லை. அதனால் என்மேல் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையிருந்தது.
அவர்களுடனான என் தொடர்புகளை வரிவுபடுத்திக் கொள்வதற்கு முன்பாக நான் செய்யக்கூடுவதென்ன என்பதைப்பற்றியும் முடிவெடுத்தாக வேண்டும். சண்முகம் என்னிடம் பிற்காலத்தில் சொன்ன ஒரு முக்கிய அனுகுமுறை இயல்பென என் எண்ணத்தில் இருத்திருப்பதை உணர்ந்ததுண்டு. ஜனசமூகத்தின் உளவியல் எப்போதும் கொந்தளிப்பது . அது ஒற்றைத் திரளென தொகுத்துக்கொள்ளும் பின் தன் எண்ணங்களை வருத்தமாகவும் வெறுப்பாகவும் மட்டுமே அதனால் பிறிதொருவருடன் தொடர்புபட்டுக்கொள்ள முயலும் . அது தனக்கு வேண்டுவதை பிறரின் தேவைகளாக , தன் வருத்தத்தை பிறரின் சீற்றமாக மட்டுமே சொல்ல இயலும்
அந்த திரளிருந்து நம்முடன் தொடர்பு கொள்வோர் , பிறிதொருவரை பற்றிய குறைகளை முன்வைப்பர் . அதில் உள்ள எதார்த்தம் அடையாளம் கண்டடையப்பட்டு, முடிந்தால் கலையப்படலாம் ஆனால் , அதை பற்றி ஒருநாளும் வெளியில் பேசுவது கூடாது. நான் என்னிடம் யார்சொன்ன எந்த ஒரு விஷயதையும் , பிறிதொருவரிடம் பகிரிந்து கொள்வதில்லை . அது அனைவருக்கும் நம்மிடம் ஒரு நம்பிக்கையின்மையை தோற்றுவிக்கும் . இந்த விளையாட்டின் அடிப்படைக்கு விதி .
அன்று இரவு வைத்திலிங்கத்தை சந்திக்கலாம் என பாலன் சொன்னதுமே சரி என்றேன் . எனக்கும் அங்கு அவர்கள் தரப்பில் பேசப்படுவது முக்கியம் . நெட்டப்பாக்கம் தொகுதி வண்ணியர் பெரும்பான்மை கொண்டது . வெற்றி பெறுவதை காட்டிலும் அடையப்போகும் பதவிகளும் கிராமத்தில் கணிசிக்க கூடியது . சில சமயம் நகர் பகுதிகளை காட்டிலும் கிராமப்புற அரசியல் மிக அர்த்தம் பொதிந்ததாக இருக்கும் . எனக்கு அங்கு என் கணிப்பை ஒட்டிய தகவல்கள் ஏராளமாக கிடைத்தது.
அவர் வீட்டை அடையும் போது இரவு 8:00 மணியாகிவிட்டது . நான் உள்ளே செல்லாமல் அவருக்கு நெருக்கமான சிலருடன் பேசிப்படி இருந்தேன் . பல யூகங்களும் கணக்குகளுமாக எங்களுக்குள் பேசியபடி இருந்தோம் , என்னுடன் சுப்பாராயனும் தாமோதரனும் இருந்தார்கள் . ஒருகட்டத்தில் எங்கோ பொறிதட்ட சுப்பராயனுக்கு வாய் நமநமத்தது ,அப்போது அவருக்கு டீயும் பீடியும் வேண்டும். என்னை குடைய ஆரம்பித்துவிட்டார் . நான் மெல்ல அவர்களிடத்திருந்து விலகி அற்பசங்கைக்கு ஒதுங்குவது போல டீ கடைக்கு வந்தோம் . தெரு திருப்பத்தில் உள்ள கடையின் கடாயில் பால் கொதித்தபடி இருந்தது .இரண்டு டீ சொல்லிவிட்டு சுப்பராயனை பார்த்த போது அவர் என்னிடம் நிறைய மாற்றமிருப்பதாக கூறி சிரித்தார் .
அவர் வீட்டை அடையும் போது இரவு 8:00 மணியாகிவிட்டது . நான் உள்ளே செல்லாமல் அவருக்கு நெருக்கமான சிலருடன் பேசிப்படி இருந்தேன் . பல யூகங்களும் கணக்குகளுமாக எங்களுக்குள் பேசியபடி இருந்தோம் , என்னுடன் சுப்பாராயனும் தாமோதரனும் இருந்தார்கள் . ஒருகட்டத்தில் எங்கோ பொறிதட்ட சுப்பராயனுக்கு வாய் நமநமத்தது ,அப்போது அவருக்கு டீயும் பீடியும் வேண்டும். என்னை குடைய ஆரம்பித்துவிட்டார் . நான் மெல்ல அவர்களிடத்திருந்து விலகி அற்பசங்கைக்கு ஒதுங்குவது போல டீ கடைக்கு வந்தோம் . தெரு திருப்பத்தில் உள்ள கடையின் கடாயில் பால் கொதித்தபடி இருந்தது .இரண்டு டீ சொல்லிவிட்டு சுப்பராயனை பார்த்த போது அவர் என்னிடம் நிறைய மாற்றமிருப்பதாக கூறி சிரித்தார் .
நானும் மையமாக சிரித்தேன் . "என்ன உன் கணக்கு" என்றார் , நான் சொல்லத் தொடங்கினேன் . "சண்முகத்தின் தோல்வி நிகழ்ந்தால் , முதல்வர் தேர்தல் நடப்பது தடுக்கமுடியாதது . மரைக்காரால் நீண்ட காலம் மாநில அரசியலில் இருந்து விலகியிருக்க இயலாது . தில்லி ஒரு தந்த்ரா பூமி அங்கு அவர் தனக்கான இடத்தை கன்னடடையும் வரையிலாவது அவர் இங்கு ஒரு பலவீனமான அரசு அமையவே விரும்புவார் . மேலும் அவருக்கு மத்திய மந்திரி பதவி உறுதியளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் ".
"கண்ணன் ஒரு சரியான தலைமையை கொடுக்க கூடியவராக தெரிகிறார் , அவரது பாத யாத்திரை மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது . அவரால் இதுவரை இருந்த காங்கிரஸ் அரசுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசை கொடுக்கமுடியும் என்கிற நம்பிக்கை மக்களிடம் எடுபட்டு விட்டது , அதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிவிடமுடியாது . அவர் ஒருமுறை உட்கர்ந்து விட்டால் மறுபடி அதிலிருந்து கிளப்புவதென்பது நடவாது இது மற்றெல்லாரைவிடவும் மரைகாருக்கு நன்றாகவே தெரியும் . ஆகவே அவர் முதவராவதற்கு ஒருபோதும் மரைக்கார் அனுமதிக்க மாட்டார்" . என்றேன்
சுப்பாராயன் "இன்று கண்ணன் வேட்புமனு தாக்கல் பிறகு நடந்ததை நானும் நீயும்தானே பார்த்தோம் "என்றார் . "இந்த சூழலில் கண்ணனை ஏற்றிவிட்டு பின் அதில் இருந்து மரைக்காரால் எளிதில் விலகிவிட முடியும் என்று நீ நினைக்கிறாயா" என்றார் . நான் அதை முழுவதுமாக ஒத்துக்கொண்டேன் மரைக்கருக்கு அது நெருப்பாற்றில் நீந்துவது போலத்தான் . ஆனால் அவருக்கும் வேறு வழியில்லை .
நானும் சுப்பாராயன் சொன்ன அந்த நிகழ்வை பார்த்தேன் , அது ஒரு நாடகீயத் தருணம் போல . கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளிய வந்ததும் அவர் ஆதரவாளர் கூட்டம் கொந்தளித்த படி இருந்தது அந்த களேபரத்தில் சிலர் கண்ணனை "அலேக்காக" !! தூக்க முற்சித்தனர் . அவர் எவர் கைகளுக்கும் சிக்காது சிரித்தபடி வெளியே ஓடிவந்தார் . சிலர் வாழ்க கோஷமிட்டபடி அவரை தெடர்ந்து ஓடிவந்தனர் . சிலர் "மக்கள் தலைவர் வாழ்க" என்று கோஷமிட்ட கூட்டம் குதித்து ஆர்பரித்தது . அப்போது மரைக்காரின் தம்பி இக்பால் வெகு வேகமாக கூட்டத்தை விலக்கி பிளந்தபடி அதன் மையத்திற்குள் நுழைந்தார் , தெருவோரமாக போடப்பட்டிருந்த வாய் அகலமான சிமெண்ட் குப்பைத்தொட்டி மீது ஏறிநின்று மிகவும் ஆவேசமாக கூடியிருந்த அனைவரையும் கைஅமர்த்திவிட்டு , ஒரு சாதாரனத் தொண்டனை போல "முதல்வர் கண்ணன் வாழ்க" என குரலெழுப்பினார் , கூட்டம் மந்திரத்தில் கட்டுண்டதுபோல ஒற்றை திரளாகியது.
இக்பால் மிக சரியாக கூட்டத்திற்கு வெறியேற்றி விட்டார் , "வருங்கால முதல்வாரென" அந்த சொல் ஆப்த வாக்கியம் போல நுண் சொலென அனைவருக்கும் ஒத்திசைவை கொடுத்தது . பிசிறில்லாத ஓசை இசையை போல கேட்பவரை மயக்கிய பின் ஒருபோதும் விலகாது பிடித்து வைக்கும் , குரலெழுப்புபவரை நெட்டித்தள்ளி இன்னும் இன்னும் என கேட்டபடி இருக்கும்