https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 317 * சுயக்கட்டுப்பாடு *


ஶ்ரீ:



பதிவு : 317 / 484 / தேதி :- 22 ஏப்ரல்  2018

* சுயக்கட்டுப்பாடு *



நெருக்கத்தின் விழைவு ” - 12
விபரீதக் கூட்டு -04





எங்கள் மூவருக்கும் உள்ள ஸ்தானம் , அனுகுமுறை , நோக்கம் மற்றும் செயல்பாடுகளுமே வெவ்வறானவை . நானும் வால்ராஜும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் , இருந்தும் அவரது அரசியல் கணக்குகள், விழுமியங்கள் குறித்து எனக்கு உடன்பாடு இருந்ததில்லை . அதை முந்தைய பல பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். வல்சராஜ் தனது அரசியல் யுக்தியால் கட்சியின் சார்பாக மாஹே சட்டமன்ற தொகுதியில் போட்டிட்டு வென்று சட்டமன்றம் சென்றவர் , அவருக்கு தொகுதி , கட்சி போன்ற பல சார்பு நிலைகளின் பேதத்தால் , தனி அரசியல் கணக்குகள் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது

வைத்நியநாதன் அரசு அதிகாரியாக பனியாற்றி அதிலிருந்து தனது அரசியலை கண்டடைந்தவர், அவர் தன்னை அரசியல் தலைமைக்கு ஒருநாளும் முன்னிறுத்த முடியாது. மேலும் வைத்தியநாதனை பொருத்த வரை அரசியலும்  அதன் விழைவும் அழகியல் என்பதெல்லாம் காலாவதியான கருத்தியல்கள். இன்றைய அரசியல்  லாப, நஷ்டங்களுடன் பார்க்க வேண்டியவைகள் என்கிற கருத்துடையவர் . எனவே அவை கணக்குகளால் மட்டுமே அங்கு திகழ்வது

நான் அரசியலை அழகியலோடு செயல்படுத்த முயறசிப்பவன். ஒரு குழுவாகவே நான் எனது களத்தை இப்போது வென்றெடுத்தாக வேண்டும் . என் அமைப்பின்  முன்பாக, என்னுடைய விழுமியங்கள் அனைவரின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்தது அக்கரையுள்ளது என்கிற எண்ணத்தை எனது அமைப்பிற்கு பிசிறில்லாது சொல்லியாக வேண்டும் . அது நான் யாருடைய அழுத்தமும் இன்றி கூட்டு நம்பிக்கையால்  செயல்படும் தலைமை . எந்த சந்தரப்பத்திலும் பிறர் நம்மை இயக்க அனுமதிக்க இயலாத என்கிற கருத்தியல் கொண்டதாக இயக்கம் எப்போதும் வளர்ந்து வந்திருக்கிறது . அந்த இவகையில் எங்கள்  மூவரின் பாதையும் வெவ்வேறானவைகள். ஒன்றுக்கொன்று ப சமயங்களில் உதவக்கூடும். ஆனால் ஒருபோதும்  இணைய முடியாது.

மனதால் ஆற்றுப்படுத்தப்பட்டு , நான் செய்தது அனைத்து வழிகளிலும் சரியே என்கிற முடிவை எட்டும்போது  புதுவை எல்லையை அடைந்துவிட்டிருந்தேன். ஆனந்த பாஸ்கரை அதிகாலை தொடர்பு கொண்டு உதவும்படி கேட்டுக்கொண்டேன் , அவரது உதவிகள் கடன் , திருப்பி கொடுக்கப்பட்டு விடும் என நான் சொல்லாமலேயே அவர் புரிந்திருப்பார். என்ன நிகழ்ந்தது என கேட்டவரிடம் முழுவதையும் சொன்னேன் , தன்னை வில்லியனூரில் வந்து சந்திக்க சொன்னார் . நான் வில்லியனூர் சென்றடையும்போது காலை 6:30 மணியாகி இருந்தது . ஆனந்த பாஸ்கரன் அதிகாலை கருக்கிருட்டில் எழுந்திருக்கும் பழக்கமுள்ளவர் . நேரில் சென்று சந்தித்தபோது தனது பாணி வெடி சிரிப்புடன் என்னை வரவேற்றார் . “வில்லங்கத்தை நம்பி எவன் உருப்பட முடியும் , என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்