https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 4 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 299 . * களத்தை நோக்கி *

ஶ்ரீ:




பதிவு : 299 / 465 / தேதி :- 03 ஏப்ரல்  2018



* களத்தை நோக்கி *





ஆளுமையின் நிழல்   ” - 44
கருதுகோளின் கோட்டோவியம் -03






தேர்தல் தோல்வி கட்சியின் செயல்பாட்டில் ஒரு வெற்றிடத்தையும் தேக்கநிலையையும் உருவாக்கிவிட்டதால், இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தின் உட்கட்சி எதிர்மறை செயலிகள் குழு இருக்குமிடம் தெரியாது அழுந்தி , அவர்களின் செயல்பாடுகளின் தீவிரம் முற்றாக ஒடுங்கியது . இரண்டாவதாக இயக்கத்தின் முக்கிய மாநில நிர்வாகிகள் சிலர் தங்கள் பொறுப்புகளை உதறி கட்சியை விட்டு வெளியேறி கண்ணனுடன் கைகோர்த்தது , வல்சராஜை சோர்வுடைய செய்திருக்க வேண்டும் . இனி அவர் எதற்காகவும் , யாருக்காவும் தன் நாடகீய நிகர்நிலை பேண வேண்டிய சூழல்அவசியமில்லை  அந்த வெளிநாட்டு பயணம் அவருக்கும் எனக்குமாக ஒரு அணுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது . அவரது அரசியல் ஆளுமை எப்படிப்பட்டது என நான் அறிந்திருக்கிறேன் என்பதை அவரும் புரிந்து கொள்ளும் சமயங்கள் வாய்த்தன என்பதுடன்என்னைப்பற்றிய புரிதலையும் அவர் அடைந்திருக்க வேண்டும்

வாழ்கை முழுவதும் தற்செயல்களினால் ஆன நிகழ்வுகளால் ஆளப்படுவது . அவற்றில் பெருந்திட்டம் ஒன்று எப்போதும் கரந்திருக்கும் . தற்செயல் நிகழ்வுகளிலிருந்தே எனக்கான புரிதலையும்  , என்னை நிறுவிக்கொள்ளும் வாய்ப்புகள் எழுவதுவும்  அங்கிருந்துதான் . அவை எப்போதும் கிடைத்தபடி இருந்தன அதனால்   சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை , சில முறைமைகளை நான் மீறியதாக சொல்லெழும் போதெல்லாம், அவர்கள் அனைவரையும் தலைவர் சண்முகம் அழைத்து சமாதானம் செய்வது வழமையாகிப்போனது . ஆனால் ஒருமுறை கூட என்னை அழைத்து அறிவுறுத்தியோ , வழிகாட்டியோ ஏதும் அவர் சொன்னதில்லை . நான் அவற்றை எனக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகரத்துவங்கினேன்

இந்த முறை என்னை நிறுவிக்கொள்ள வாய்ப்புகளுக்கு காத்திருந்தபோதுதான் , எனது தொழில்முறை சார்ந்த சிலரை சந்திக்க நெய்வேலி சென்றிருந்த எனக்கு , தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட மெய்யப்பனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . நல்ல நட்பாக நீடித்தது . தமிழக அரசியல் நிலைகளில் நான் கவனம் செலுத்த துவங்கியது இங்கிருந்துதான் . அதன் பிறகு என் தொடர்புகளை மேலும் விரித்துக் கொண்டேன். அதன் வழியாக தமிழகத்திற்கு தில்லியிலிருந்து தலைவர்கள் வரும்போதெல்லாம் எனக்கும் தகவல் தெரிய துவங்கியது . புதுவை எல்லையை கடந்த அரசியலை நோக்கி திரும்பினேன்

அன்று காலை கேரளாவிலிருந்து தில்லி செல்லும் வழியில் சென்னைக்கு ரமேஷ் சென்னித்தலா வந்திருப்பதை அறிந்ததும் அவரை சென்று சந்திக்க விரும்பினேன் . ரமேஷ் சென்னித்தலா கேரளா இளைஞர் காங்கிரஸின் முக்கிய தலைவராக உருவெடுத்திருந்த நேரமது , எங்கும் உள கோஷ்டி ,அங்கும் நிலவியது  , அதை எங்கும் தவிர்க்க இயலாது . ஒரு கட்டத்தில் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பது அந்த குறுங்குழு மனப்பான்மைதான் .அவர் முன்னாள் கருணாகரனின் ஆதரவாளர் , அங்கிருந்து கிளைத்து கேரளாவில் தனக்கென ஒரு வலுவான அமைப்பை உருவாக்கிக் கொண்டார் . தனித்து ஆட்சியை அமைத்து வந்த காங்கிரஸ் பின்னளில் பலம் குன்றி கூட்டணி மூலமாக ஆட்சிக்கு வரும் அளவிற்கு பலமிழந்துபோனது

பாலன் புதுவை இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருத்தபோது , அகில இந்திய தலைமைப்பொறுப்பில் இருந்தவர் ரமேஷ் சென்னித்தலா , ராஜிவ் காந்தியின் நேரடி தொடர்பில் நியமிக்கப்பட்டு இருந்தவர் . மிக எழுச்சி மிக்க இளைஞராக ராஜீவ்காந்தியின் பார்வையில் பட்டது அவர் கேரளாவில் நிகழ்த்திய மிகப்பெரிய பேரணியும் ,மாநாட்டின் போதுதான் . அகில இந்திய காங்கிரஸ் பெருந்தலைகளை திரும்பிப்பார்க்க வைத்த நிகழ்வு அது . அப்போது ரமேஷ் சென்னித்தலா கேரளா இளைஞர் காங்கிரஸின் தலைமை பொறுப்பில் இருந்தார்

அதுவரை வடஇந்திய தலைவர்கள் அமைந்திருந்த பதவி . முதல் முறையாக தென்னிந்திய முகமாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் . ராஜிவ் காந்திக்கு அது மிக சிக்கலான ஒரு காலகட்டம் . இந்திரா காந்தியின் மறைவு , அதை அடுத்து நிகழ்ந்த பாராளுமன்ற தேர்தலில் அதுவரை கட்சி கண்டிராத மிருக பலம் கொண்டு பாராளுமன்றத்தில் நுழைந்தது . தனது நண்பர்களை முன்னிறுத்தி , அரசியலில் புதிய படிப்பினைகளை அவர் அடைத்த நேரம் . ஆனால் அதை தொடர்ந்து நிகழ்ந்த அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்து தனது இடத்திற்கான சிக்கலை சந்திக்க வேண்டிய நிபந்தத்தில் இருந்தார்.

இந்திராகாந்தியின் துர்மரண சூழலில் தலைமைக்கு திணிக்கப்பட்டு வந்து சேர்ந்த ராஜிவ் காந்தி ,வயதும் இந்திய முழுவதும் உள்ள அறிமுகமும் கட்சிக்கு பலமாக இருந்தாலும் அவரது செயப்பாடுகள் முடங்கியது கட்சியில் உள்ள நிர்வாகிகளின் நீண்ட அனுபவங்களை தனது எண்ண ஓட்டத்திறகு ஒரு தடையாக பிழை புரிந்தலுக்கு பிறகு . தனக்கு அனுகுணமான சில நண்பர்களை உதவியாக காட்சியிலும் ஆட்சியிலும் அமைத்துக்கொண்டார் .அவை சில நல்ல மற்றும் பல எதிர்மறை பலன்களையும் கொடுத்தது , சாம்பிட்ரோடா வழிமுறை. நல்ல பலனை வழங்கினாலும் vp சிங் , அருண் சிங் போன்றவர்கள் அவரை தவறாகவே வழிநடத்தி ஒரு கட்டத்தில் அவரை கைவிட்டனர் 

பாலனின் சீட்டு விஷயமாக நான் ரமேஷ் சென்னிதலாவை பலமுறை சந்தித்துள்ளேன் . ஒரு நல்ல நட்பைப்போல அது அப்போது வளர்ந்திருந்தது . நான் பலனை விட்டு விலகிய பிறகு தில்லிக்கு எனக்குமான தொடர்பு முற்றாக அறுந்துபோனது .அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் எனக்கு அப்போது தோன்றியதில்லை . ஆனால் இம்முறை மாநில அரசயலில் , எனக்கான களத்தை உருவாக்கி எடுத்தபின் , தில்லி தொடர்புகள் அவசியத்தை உணர்ந்து அவற்றை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட துவங்கினேன் . சென்னைக்கு செனித்தலா வந்திருப்பதை நண்பர்களின் வழிய அறிந்து கொண்டதும் நீண்ட நாட்களுக்கு பின் அவரை சந்திக்க சென்னைக்கு கிளப்பினேன் . இடையில் ஒன்பது வருடம் ஓடிப்போய் இருந்தது . என்னை நினைவு வைத்திருப்பார் என உறுதியாக எண்ணினேன் . சில காரணங்களுக்காக நான் அவருக்கு மறக்க இயலாதவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்