https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 302 * காந்தியின் உரையாடல் *

ஶ்ரீ:




பதிவு : 302 / 468 / தேதி :- 06 ஏப்ரல்  2018




* காந்தியின் உரையாடல்  *




நெருக்கத்தின் விழைவு ” - 01
விபரீதக் கூட்டு -04







அரசியல் - அது நுண்மையான உணர்வுகளால் ஆனது , அது குடிமை சமூகத்தின் ஆழ்மன உரையாடல்கள் வழியாக எழுந்து வருவது . இந்திய குடிமை சமூகத்திற்கு அதை பழக்கியவர்காந்தி”  என்கிற பேருரு என்பது ஆச்சர்யமான விஷயம் . அதனால்தான் அவர்மகாத்மாஎன்கிற அடைமொழியால் அறியப்படுகிறார் . காந்தியை பற்றிய எனது புரிதலுக்கு முற்றாக பிறிதொரு பரிமாணாம் கொடுத்தது ஜெயமோகனின்  “ இன்றைய காந்திவாசிப்பனுபவம் . அந்த வாசிப்பிற்கு ஊடாக வெண்முரசின் மூன்றாவது நூல் வண்ணக்கடலும் இணைந்து வாசித்துக் கொண்டிருந்த சூழலில் , அது எனக்கு பெரும் மன அலைக்கழைப்பை கொடுத்தது . எனக்குள் நிகழ்ந்த மாற்றத்தின் தொடக்கம் அது என இப்போது உணரமுடிகிறது. பலவித கருத்து மோதல்களால் அதுநாள்வரை கொண்டிருந்து உள்மனம் மறுக் கட்டுமானத்தை அடைந்திருந்தது . அப்போது அடைந்த புரிதல்களை தொகுக்க முயற்சித்த போதுதான் முன்பே தொடங்கப்பட்டு செயலிழந்திருந்த இந்த வலைப்பூதளதிற்கு உயிரூட்டி, என் அவதானிப்புகளை இதில் பதியத் துவங்கினேன்.

காந்தியை , தன்னுழைப்பால் குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவந்து ,பழம்நினைவுகளுடன் ,மாறிவருகிற சூழலுக்கு ஒவ்வாது பழமையில் நின்று முரண்டுபிடிக்கும் வயோதிக கிழவர்களில் ஒருவராகவே  என்மனம் அவரை ஒப்புமை கொண்டிருந்தது . ஆனால்இன்றைய காந்திவாசிப்பு எனக்கு அவரை மிக அனுக்கமாக அறிமுகம் செய்து வைத்தது . சுதந்திர போரட்ட காலத்தில் அவரது போராட்ட வகைமைகள் பலவித அடுக்குகளை கொண்டதாக இருப்பதையும் . அதன் நுண்மையும் , பிரம்மாண்டமும் ,அதன் பல முனைகள், சமூகங்கள் விழுமியங்கள் அரசியல் தெளிவும் நிர்பந்தமுமான அதை, எளிய மக்களுக்கு கையளித்த ஒன்றுக்கு ஈடாக , இந்த உலகில் வேறெதையும் சொல்ல இயலாது . அதை தனது சலியாத உரையாடல் என்கிற ஒன்றால் மட்டுமே சாத்தியப் படுத்தியிருக்கிறார் .

அவரது மரபு சார்ந்த , நவீன மனமும்  , பிற இந்திய தலைவர்கள் எவருக்கும் இல்லாத தீர்க்க தரிசனமும் , அதில் அவர் கொண்டிருந்த உறுதியும் , நம்பிக்கயையும் பிரமிக்க வைப்பவை . சுதந்திர போராட்ட வரலாற்றின் நுண்மையான தகவல்களை இந்தளவு அனுகி அறிந்து கொள்ள முடியும் என நினைக்கவில்லை . ஜெயமோகன்  சொல்லியதிலிருந்து , அவர் சொல்லாததும் புரிந்தது. அதனால் தாக்குண்டது போலானேன். அவை நுண்மைச்சொல்போலே , பல அடுக்குகளை எனக்கு திறந்து கொடுத்தது .

இந்தியா என்கிற ஒரு நாட்டினை இரு முனையென குறுக்கும் நெடுக்குமாக  எனக்கு தொட்டு புரியவைத்ததுஇன்றைய காந்தியும் , வெண்முரசு வண்ணக்கடலும்” . அதை  ஜெயமோகனின் எழுத்திலிருந்து எழுந்த நிலக்காட்சிகளிலிருந்தும் , சொல்லாட்சியிலிருந்தும் நான் பெற்றுக்கொண்டேன் . அதிலிருந்த  எனது அரசியல் சார்ந்த அனுபவம் கொடுத்த புரிதல்களின் விவரிப்பு வார்த்தைகளுக்குள் அடங்காதவை , அளப்பரியவை . உலகம் இதுவையிலும் கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் தலைவனாக காந்தியை  எனக்கு அறிமுகம் செய்து வைத்தது அந்த வாசிப்பு

இரு  வார்த்தைகளுக்கு மத்தியில் கரந்திருந்த விசை என் ஆழத்தை தொட்டு உலுக்கியவைகள் . ஒரு தலவனின் புரிதலும் அதிலிருந்து எழும் கனவுகளும் , அதன் நிதர்சணமான உண்மைகளும் , அதனால் சீண்டப்படும் பிற தலைவர்களும் , பெயரே இல்லாத ஒரு திரளும், அதற்கு ஜனநாயக பயிற்சியும் , இத்தனைக்கும் மத்தியில் நிகழ்ந்ததுசுதந்திரம்என்கிற ஒன்று . அது நிகழவேண்டும் என்கிற ஊழின் கணத்தை உணரச்செய்ததும் , அதில் ஒரு இடத்தில் ஒன்றே ஒன்று பிறழ்ந்து போயிருந்தால் என்ன மாதிரியான இழப்பை அடைந்திருப்போம் என எண்ணி திகைத்திருக்கிறேன் . நிச்சயமாக நான் இன்று பார்க்கும் இந்தியாவாக அது இருந்திருக்காது.

எனக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவங்களை எனது போதாமையால் கவனியாது விட்ட புரிதல்களை மீட்டெடுக்கவும் , அவற்றை மீட்டெடுக்க ஆழ்மனதுடன் உரையாடும் பயிற்சியாக இதை எழுத துவங்கினேன். அவற்றில் கிடைத்த  நுண் செய்திகளை தொகுக்க வேண்டும் என்கிற விழைவை கொடுத்தது அந்த வாசிப்புதான் . இதில் எனது அரசியல் அனுபவமாக சொல்லப்படுவது என் புரிதலை இன்னும் வளர்த்து எடுத்துக் கொள்வதற்கு . ஜெயமோகன் என்னில் நிகழ்த்திய அற்புதத்தை சொல்ல வந்தது இந்த வலைபூத்தளம் . ஒரு வகையில் . “இன்றைய காந்தியைபற்றிய எனது வாசிப்பு அனுபவமாக , விமர்சனமாக , நெகிழ்தலாக , மனவிம்மலாக , கண்ணீராக  அவை இருக்கலாம் .

ஒவ்வொரு நிகழ்வும் காந்தியின் மனநிலையையும் அப்போது அங்கு நிலவிய சூழலும் , தடைகளும் அவரது சலியாத உரையாடல்களுக்கு மத்தியில்  நான் ஒரு நிழல் பார்வையாளனைப் போல அங்கே இருந்து கொண்டிருந்தேன். அங்கிருந்து பெறப்பட்டவைகளை எனக்கு கிடைத்த அனுபவத்துடன் பொருத்தி புதிய புரதில்களையும் நுட்பங்களையும் அங்கிருந்து அடையும் முயற்சியாக இந்தப்பதிவுகளில் முயல்கிறேன் . ஆம் இது ஒரு முயற்சி மட்டுமே

உரையாடல் மீது ஆர்வமும் அதீத நம்பிக்கையுள்ள எனக்கு , ஒரு புள்ளியில் அதன் மீதமிருந்த நம்பிக்கை முற்றாக சிதைந்து போனது . உரையாடல் என்பதே காலத்தால் ஆனது , பேசுவதும் , புரிவதும் திறமையால் அல்ல ஊழின் கணத்தில் , என சோர்ந்து போனேன் . ஜெயமோகனின் பார்வையில் வெறுப்புடன்  உரையாடும் காந்தி  என்னை மீட்டுக் கொடுத்தார் . ஜெயமோகனின்  காந்திக்கு என் நெகிழ்வான வணக்கங்கள் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக