ஶ்ரீ:
பதிவு : 312 / 478 / தேதி :- 16 ஏப்ரல் 2018
* சார்பை மீறல் *
“ நெருக்கத்தின் விழைவு ” - 09
விபரீதக் கூட்டு -04
களத்தில் வெகுஜன வசீகரமும்,செல்வாக்கும் , அதிகாரமும் உள்ளவர்களையும் அண்டி நிற்கும் சிலர் அவர்களை தாண்டி அச்சுறுத்தும் எதிர்மறை சக்திகளுக்கு பெரும் மதிப்பிருப்பது ஒரு சாபக்பேடு . அமைச்சர் ரேணுகா அப்பாதுரைக்கு உதவியாளராக வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட போதுதான், அவரது நேரடியான அரசியல் சகாப்தம் துவங்கியது . அரசாங்கத்தை ஒற்று பார்ப்பதற்காகவும், அரசாங்கத்தை பின்னிருந்து இயக்குவதற்கும் சண்முகத்தால் அவர் நியமிக்கப்பட்டவர் என்றும் , திமுக கூட்டணி மந்திரிசபையை மறைமுகமாக சண்முகம் இயக்குகிறார் என்கிற அலர் அரசியலில் இருந்த காலம் .
அவரது செயல்கள் அனைத்தின் பின்னாலும் சண்முகம் இருப்பதாக உளட்கட்சியிலும் பேசப்பட்டது. அதானால் வெருண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் சணமுகத்திடம் நேரடியாக அதுபற்றி கேட்டபோது “முழுவதுமாக உண்மைக்கு புறம்பானது” என மறுக்கப்ப்பட்டது . அரசியலில் இதற்கெல்லாம் பெரிய மதிப்பிருப்பதில்லை . அது சான்றளிக்கப்படாததாகவே அர்த்தம் கொள்ளப்பட்டது .
வைத்தியநாதன் பற்றிய முரண்பாட்டை நான் சண்முகத்திடம் விவாதித்துண்டு. மிக வித்தியாசமான ஒரு உரையாடல் அது “அரசியலில் ஏமாற்றுபவர் ஏமாறுபவர் என யாரும் கிடையாது. அவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் . அதில் வென்றவர், தோல்வியுற்றவர் என்கிற இரண்டுக்குள்ளாக அனைத்தும் அடங்கிவிடும் . அரசியலில் எதுவும் கருப்பு , வெள்ளையாக இருப்பதில்லை அவரவர் புரிதலுக்கு எது உகக்குமோ, என்ன தேவையோ அதுவே பேருரு கொண்டு எழும் . தனது தேவைக்கு விழையும் ஒருவர் அதை பிறருக்கு தெரியாமல் அல்லது பிறருக்கு கிடைக்காமல், தான் செல்லும் வழியை அடைத்தபடியேதான் செல்கிறார்கள் ,அதன்பொருட்டே ஒவ்வொரு அரசியளாலரும் தனக்கான தனிப் பாதையில் பயணப்படுகிறார்கள் , காரணம் அரசியல் ஆழ்மனப் புரிதல்களால் இயக்கப்படுவது . நிஜம் அல்லது நிழல் என ஒன்று இல்லாதது” அது உருவிலி , என்றார்.
“வைத்தியநாதனைப் பற்றி புகார் சொல்லுபவர்கள் யாரும் ஏமாளிகள் அல்ல , அவர்கள் கோரும் உதவிகளை குறித்தோ அல்லது அதை வைத்யநாதனிடம் தாம் கோரியதையைப் பற்றியோ , என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாதவர்கள். காரணம் அவர்களின் நோக்கம் தன்விழைவு , அல்லது பிறரை வீழ்த்த நினைக்கும் பின்புலம் கொண்டது . சில நேரங்களில் அவை எனக்கு முரணபட்ட அரசியல் நகர்வாகவும் இருக்கும் , அதனால் எனக்கு அது தெரியக்கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருப்பவர்கள் , தங்களின் விழைவு பலிக்காத போது மட்டுமே என்னை நாடுவார்கள் , பொது கருத்து என்கிற ஒன்றின் உள்ளே அவர்களது எண்ணமே கரைந்திருக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வேலைகளுக்கு அவரை பயன்படுவார்கள் . அதிலிருந்து தனது அரசியலை வைத்தியநாதன் கண்டடைகிறார். அதை முடித்து கொடுத்த பின்னர் , அதன் விளைவுகளுக்கு வைத்தியநாதறை மட்டுமே பின் எக்காலத்துக்குமாக அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்து விடுகிறது . எனவே அது எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்வதற்கு அதில் ஒன்றில்லை . அது அவரவர் குண விசேஷம் , யாரும் யாரையும் கட்டுப்படுத்திவிட முடியாது” என்றார்.
“ஒரு கட்டத்தில் வைதியநாதனை பற்றி என்னிடம் குறை சொல்ல வருபவர்கள் , நான் அவருக்கு தரும் இடத்தால்தான் அப்படியெல்லம் நிகழ்கிறது என்கிறார்கள் . என்வரையில் அவரை எங்கு வைத்து இயக்க கூடுமோ அங்கேயே வைத்திருக்கிறேன் அது வைத்யநாதனுக்கும் தெரியும் . ஏன் உனக்குத் தெரியாதா ?.நீ அவருடன் என்னமாதிரியான உறவை வைத்திருக்கிறாய் என்பதும், பிறிதொருவர் அவருடன் வைத்துள்ளதும் ஒன்றல்ல என புரிந்தால் நானும் அவரும் எங்கிருக்கிறோம் என்பது எல்லோருக்கும் புரியுமென்றார் .
ஆம் , அவர் சொன்னது முற்றாக சரி . அது ஒருவிதமான மனநிலை , அன்று அதை புரிந்துகொள்ள முயற்சித்தேன் . அப்போது அதை செயல்படுத்துவது என் அனுபவத்திற்கும் , வயதிற்கு சாத்தியமில்லை என நினைத்ததுண்டு , ஆனால் நான் வைத்தியநாதனால் சீண்டப்பட்டபோது , அவர் செய்வதை போல ஒன்றை அவருக்கே நிகழ்த்தி காட்டினேன்.
இப்போது அதை மிக நெருக்கமாக உணரமுடிகிறது. அரசியல் அவரவர் பேச்சிலிருந்து முளைத்து கிளை பரப்பி நிற்பது . அந்த உண்மையின் ஆழம் எங்கிருக்கிறது? என யாராலும் அவதானித்து விட முடியாது . நிகழ் அரசியல் இதைப்போன்ற வதந்திகளாலும் , அச்சத்தாலும் இயக்கப்படுவது . அதுவே “அரசியல் செல்வாக்கு” என்கிற திரிபை அடைகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக