https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 9 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 305 * அணுக்கனின் அரசியல் *

ஶ்ரீ:




பதிவு : 305 / 471 / தேதி :- 09 ஏப்ரல்  2018



* அணுக்கனின் அரசியல்  *





நெருக்கத்தின் விழைவு ” - 03
விபரீதக் கூட்டு -04





காந்தி கண்டு கொண்ட வழிமுறை. வாழ்நாள் முழுக்க அவர் முன்வைத்த அரசியல் தரிசனம் அதுவே. வரலாற்றின் எந்த தரப்புக்கும் அதற்கான இருத்தல்நியாயம் ஒன்றிருக்கலாம். எல்லா தரப்பும் பிற தரப்புகளுடன் போராடித்தான் தன்னை நிறுவிக்கொண்டு முன்னகர முடியும். ஆனால் அந்தப்போராட்டத்தை வன்முறை இல்லாமல் வெறுப்பு இல்லாமல் நிகழ்த்தமுடியும். நீயும் நானும் வரலாற்றின் இரு தரப்புகள் மட்டுமே என்ற புரிதலுடன் அதை முன்னெடுக்கமுடியும்.

காந்தியின் அரசியல் அப்படித்தான் அமைந்திருந்தது. ஒற்றுமை மூலம் அறச்சார்பு மூலம் நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டு எதிர்தரப்பின் அறத்துடன் தீர்மானமான விடாப்பிடியான பேச்சுவார்த்தையை நிகழ்த்துவதையே அவர் போராட்டம் என்று சொன்னார். இருபதாம் நூற்றாண்டில் பேரழிவு இல்லாமல் வெற்றிகளை அடையக்கூடிய ஒரே போராட்ட வழி அதுவே என்று கற்பித்தார். அது தன் இறுதி விளைவாக வெறுப்பை உருவாக்குவதில்லைஎன்கிறது, ஜெயமோகனின்இன்றைய காந்தி

அரசியல் சவால்களில் முதன்மையானது , அணுக்கர்களின் அளப்பறைகள் , நம்மை குறை விளித்து ஓயாத பேசுவதும், அனைத்திலும் குற்றம் காணுதலுமாக , தொடர் விமர்சனம் காரணமாக அது விமர்சிகப்படுபவரின் அடையாளமாகவே இறுதிவரை கூட இருந்துவிடுவதுண்டு . ஆனால் அரசியல் எப்போதும் அவரை சார்ந்தே இருந்திருக்கிறது . ஒருபோதும் களத்திலிருந்து அவரை வெளியேற்ற முடியாது. தலைவர் சண்முகத்தை இதற்கான சிறந்த உதாரணமாக சொல்லுவேன்

அரசியலென்பதே அனைவரின்  கவனத்தையும் தன்னைனோக்கி கவருவது மட்டுமே ,என பிழையாகப் புரிந்து கொள்பவர்கள் , அதில் நம்மை ஈடுபடுத்த ஓயாது அறிவுறுத்தியபடி இருப்பர்கள். யதார்தத உலகை நியாயத்தை  காரணம் காண்பித்து , பரம லௌகீகன் பார்வையில் உலகை புரிந்து கொண்டு , வாழ்வியலை சமரசத்துடன் , எந்த அனுபவமும் இல்லாமல் எல்லா இடத்திலும் கூச்சமில்லாமல் அதைப் பயன்படுத்துவார்கள். அத்தகைய அணுக்கர்களுக்கு மத்தியில் நம்முடைய அரசியல் விழுமியங்களும் , அதற்கான அடிப்படை கட்டுமான முயற்சிகளும் நேர வீணடிப்பாக , கருத்தியல் தோல்வியாக , திறனற்ற தலைமையாக ஒரு உருவகத்தை நமக்கு அளித்து விடும் . அதற்கான நெருக்கடியை உருவாக்குவதன் மூலமாக தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்வார்கள் .

நம்மால் அவை மறுக்கப்படுகிறபோது , நம்மை விலக்கி அத்தகைய செயல்பாடுகளை உடைய பிற அரசியலாளர்களை தேடி சென்றடையாமல், இங்கேயே தொங்கிக்கொண்டு , அத்தகைய கருத்துக்களை தொடர்ந்து  நமக்கு எதிர்ப்பாக பயன்படுத்துவதனூடாக , தனக்கென ஒரு குறுங்குழுவையும் உருவாக்கி கொள்வார்கள். அறிவு ஜீவியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்  இவர்கள் அரசியளாலர்கள் அல்ல . எந்த உழைப்புமும் இன்றி இருத்தியலில் லாபநோக்கோடு செயல்படக்கூடியவர்கள் . வேறு சிலர் ஒரு கட்டத்தில் நம்முடன் முரண்பட்டு வெளியே சென்று , தான் நினைத்ததை ஆற்ற முடியாமல் , இருந்த அரசியல் அடையாளத்தையும் இழந்து போவதை நான் பார்த்திருக்கிறேன். முன்னவர்களை காட்டிலும் இவர்கள்நல்லவர்கள்!” . இவர்களுக்கு அரசியல் ரீதியாக சொல்லிக்கொள்ள ஒரு தரப்பாவது இருக்கிறது.

பரபரப்பாக , மிகை விளைவினால் தூண்டப்பட்டு அறிக்கைகளின் வழியாக செயல்படுபவர்களை சுற்றி ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டு இருப்பதும் , அவர்களை எப்போதும் வெற்றி அடைபவர்களாக அந்தக் கூட்டத்தால் கருதப்பட்டாலும் , அத்தகைய செயல்பாடுகளால் அவர்கள் சில கால லாபங்களை அடைந்தாலும் , அரசியலின் மையத்திலிருந்து நழுவி விழுபவர்களாக , அரசியலில்கருத்தியல்தோல்வியாளர்களாக வீழ்ச்சியை அடைகிறார்கள்  . அது விவரிக்க இயலாத கைவிடப்படல், அரசியல் மரணம் அது . கண்ணன் இதற்கு உதாரணம் என நினைக்கிறேன். கருத்தியலின் தோல்வியால் அத்தகையவர்கள், அவர்களின் அணுக்கர்கள் மத்தியில் அடையாளம் இழந்து அனாதைகளென , ஒரு பெரு மழைக்கு முன் வரும் ஈசல் போல பெரும் திரள்களுடன் தோன்றி மறைந்து போவார்கள் . அரசியலில் காத்திருப்பதை தவிர இதை கடக்க வேறு பாதைகள் இல்லை

மூப்பனார் மரணிக்கும் தருவாயில் அவரை சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் தலைவர் சணமுகத்துடன் சென்று சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது . முற்றிலும் பேச இயலாத சூழலில் , அன்று சணமுகத்திடம் அவர் விடுத்த வேண்டுகோள் , .. கலைக்கபட்டு  வாசன் காங்கிரஸுக்கு திரும்ப வேண்டும் என்பதாக இருந்தது , அதற்கான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு சொன்னார்.உடல் மற்றும் மனநிலைக் காரணமாக இதைச் சொல்லி முடிக்க திணறிப்போனார். அது மிக இறுக்கமான சூழல் , புதுவைக்கு திரும்புகையில் , அந்த காட்சி கண்முன் என்முன் நின்றிருந்தது

வண்டலூர் வரையில் சண்முகம்  ஏதும் பேசவில்லை . பின் மெல்ல பேசத்துவங்கிய பின்னர் சொன்னார் , அணுக்கர்கள், அனுதாபிகள் நிகழ்த்தும் அரசியல் அநர்த்தங்களை பற்றியதாக இருந்தது. நரசிம்ம ராவுடன் முரண்பட்டு மூப்பனார் தனிக்கட்சி கண்டது அவர் ஜெயலலிதாவுடன் ஏற்படுத்திக்கொண்ட தேர்தல் கூட்டணியால் . அப்போது அவரது அணுக்கர்களும் அனுதாபிகளும் அதை பெரும் வீரச்செயலாக, தன்மான வெளிப்பாடாக பேசினர் . ஒரு வருட அரசியல் மாற்றத்தினால் , மத்தியில் ஆட்சி கவிழ்ந்து , மறுத்தேர்தலை அது கொண்டு வந்த போது , மூப்பனாரின் அணுக்கர்களும் அனுதாபிகளும் மூப்பனாரை அதே ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு வற்புறுத்தியது, அவரை நிலைகுலைய செய்தது. இறுதியில் அதற்கு பணிய வேண்டிய நிர்பந்தந்திற்கு ஆளானார் . யாருக்கும் வளைந்து கொடுக்காதவராக அறியப்பட்டவரின் வீழ்ச்சியாக அது பின்னர் பேசப்பட்டது

அது குறித்து அவர் சண்முகம் பேசிய சில தனிப்பட்ட  உரையாடல்களை அறிவேன்பொதுவில் எழும் கருத்தியலை சார்ந்து தலைவர்கள் முடிவெடுப்பது என்பது , சூழலை ஒட்டித்தான். பொதுக் கருத்தியலுக்கு மதிப்பளிப்பது , என்பது ஆழ்மன செயல்பாட்டின் வழியாகவே அது இருக்க முடியும் . அதுவே பின்னாளில் வரலாறாகிறது . என்பார் . “வரலாறு என்று சொல்வது மக்கள். கோடானுகோடி மக்கள். அவர்களின் ஒட்டுமொத்த ஆசைகளும் கனவுகளும் பலங்களும் பலவீனங்களும்தான் வரலாற்றை முன்னகரச்செய்கின்றன. அந்த மக்களை தொகுத்து முன்னெடுப்பவனே வரலாற்றை முன்னெடுக்கிறான். என்கிறார் ஜெயமோகன் தனதுஇன்றைய காந்தியில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக