https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 297 . * அவதானிப்பில் *

ஶ்ரீ:


பதிவு : 297 / 463 / தேதி :- 01 ஏப்ரல்  2018



* அவதானிப்பில்  *





ஆளுமையின் நிழல்   ” - 43
கருதுகோளின் கோட்டோவியம் -03











1998 காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தலைவர் சண்முகம் நிறுத்தப்பட்டார் . கூட்டணி ஏதுமின்றி தனித்து போட்டியிட நேர்ந்தது . தான் நிற்பதற்கு அவருக்கான காரணம் என்கிற ஒன்றை சொன்னார் . தேர்தல் முடிந்து , ஒட்டு எண்ணிக்கையும் முடிவடைகிற தருணத்திற்கு மிக அருகாமையில் இருந்தோம் . செய்தி தெரிந்து விட்டது . நாங்கள் தோற்றுவிட்டோம் என . அறிவிப்பிற்கான காத்திருப்பு . மரணத்திற்கு எதிர்நோக்குவதற்கு ஒப்பு .ஒட்டு மொத்த  பாராளுமன்ற தொகுதி பார்வையாளர்கள் சுமார் என்பத்தைந்து பேர் இரவு நெடுநேரமாகியும் முடிவு தெரியாததால் வாக்கு என்னுமிடத்திலேயே இருக்க வேண்டியதாகியது .

சில எதிர்நோக்காத நடைமுறை சிக்கலால் , எங்கள் தரப்பை சேர்ந்த ஒட்டு மொத்த  பாராளுமன்ற தொகுதி பார்வையாளர்கள் சுமார் என்பத்தைந்து பேர்இரவு நெடுநேரமாகியும் தேர்தல் முடிவு தெரியாததால் வாக்கு என்னுமிடத்திலேயே இருக்க வேண்டியதாகியது . இரவு எவ்வளவு நேரமாகும் தெரியாது என்றும் , ஒருவேலை நாளை காலை வரைக்கும் கூட நீடிக்கலாம் என்கிற அதிகாரபூர்வமற்ற செய்தி வெளியாகி அனைவருக்கும் கிலியை ஏற்படுத்தியிருந்தது .

இந்த சூழலில் நாராயணசாமி திடீரென வாக்கு எண்ணும்  இடத்திற்கு வந்தார் . நான் அவருடன் இணைந்து அனைத்து பூத்துகளுக்கும் சென்றுவந்தேன் . தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த போது , வெளியே பேசப்படுபவைகளை சொல்லி , இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என கேட்டேன். அவர் இரவு 12:00 மணிக்குள் அனைத்தும் முடிவாகி வடும் என்றார் . அப்போது மணி இரவு 8:00 , நடுநிசி வரை  காலதாமதமாகும் என கணக்கிடாததால்  உள்ளே இருப்பவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை . என்ன செய்வது என நான் நாராயணசாமியிடம் கேட்டபோது அவர்தலைவரிடம் கேளுங்கள்என சொல்லி கிளம்பி சென்றுவிட்டார்  . 

நான் இதை எப்படி தலைவரிடம் கேட்பது? என்கிற குழப்பத்தில் இருக்கும்போது தலைவரின் வண்டி உள்நுழைந்து . மாறன் அந்த வண்டியில் வந்திறங்கினான். எங்கள் அனைவரின்  தேவைக்கு அதிகமான இரவு உணவு அந்த வண்டியில் இருந்தது . மாறன் என்னிடம் வந்தபோது என்னை சூழ்ந்திருந்தவர்கள் ,அனைவரும் களைத்து போயிருந்தனர். நான் மாற்றனிடம் நாராயணசாமி வந்து சென்றதை சொன்னேன் . அவன் அவரை ஒருமையில் திட்டித்தீர்தான்.

அந்த தேர்தலில் தலைவர் தோல்வியுற்றது , எனது திட்டமிட்ட முன்னெடுப்பை ஒரு வகையில் தடை செய்தாலும், நான் தேர்ந்தெடுத்த புது அமைப்பை நிலை நிறுத்திக்கொள்ள எதையாவது செய்யதாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தேன் . பதவிக்கான உழைப்பை அவர்களிடம் அதற்கான காலத்திற்குள் கேட்டு பெறாமல் காலம் தாழ்த்தினால் அனைவரும் திசை மாறிப்போகும் வாய்ப்பு அதிகம்

அரசியலில் துரோகம் அடிப்படை நியதிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது , பொது தளத்தில் அதற்கான அர்த்தம் வேறாக இருக்கிறது . ஒரு வார்தைக்காக மொழி இலக்கணம், செயல்படும், தளத்திற்கு தளம் மாறுபட்ட விளக்கத்தைதான் தரும்.தலைவருக்கும் நாராயணசாமிக்குமான பனிப்போர் வெளித்தெரியத்துவங்கிய காலம் அதுநாராயணசாமியை சார்ந்தவர்கள் தலைவருக்கு எதிராக கச்சை கட்டுவது தெரிந்தும் எதிர்வினையற்று அமைதியை இருப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை

அந்த சந்தர்ப்பத்தில்தான் இந்தியன் ஏர்லைனிலிருந்து ஒரு கவர் எனது சரியான விலாசத்துடன் வந்தது . முதலில் அதில் வந்த தகவலின் சாராம்சம் எனக்கு புரியவில்லை . சற்று நிதானித்து படித்தபோதுதான் புரிந்தது அது ஒரு அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியின் முடிவு . கல்கத்தா அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு விமானத்தில் சென்று திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பை அனைவரும் பார்த்த்தோம் . அது ஒரு அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்கும் குலுக்களுக்கான அழைப்பு .பயணிகள் தங்கள் பயணித்த இந்தியன் ஏர்லைன் விமான போர்டிங் பாஸில் தங்களின் விலாசமெழுதி அருகில் வைக்கப்பட்ட போட்டியில் போடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டது . அதன்படி அனைவரும் போட்டனர்

விமான நிலையத்திலிருந்து நான் வெளியேவரும் போதுதான் வல்சராஜ் அதை எனக்கு நியாகபப்படுத்தினார் . நான் மீளவும் விமான நிலையம் உள்ளே ஓடி அந்த பெட்டியில்  போட்டுவிட்டு வெளியேவந்தேன். நாங்கள் ஒரு ஆறு ஏழு பேர் சென்றிந்தோம் . திரும்ப வந்த என்னிடம் எங்கு போட்டாய் என்றதும், நான் ஏர் இந்திய சின்னமான மகாராஜா சிலையில்லுள்ள துவாரத்தில் போட்டதை சொன்னேன். அனைவரும் போட்டது அந்த அறிவிப்பு அருகிலிருந்த பெட்டி என்றனர் . சென்னை விமனஇளையத்திலிருந் புதுவை திரும்பி வந்து சேரும் வரை அவர்களின் கேலிக்கு இலக்காகி நொந்தேன் . இப்போது தெரிகிறது நான் போட்ட பெட்டி தான் சரியானதென , அதற்குத்தான் எனக்கு இலவச விமான டிக்கெட் அனுப்புவதை பற்றிய கடிதம் அது என்று

அந்தக் கடிதத்தில் இந்தியன் ஏர்லைன் மற்றும் ஏர் இந்திய விமானம் செல்லும் உள்நாடு அல்லது நாடுகளுக்குள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து செல்லும் வாய்ப்பை கொடுத்திருந்தது. உடன் வேறொருவரையும் அழைத்து செல்ல அதில் வசதியிருந்தது. எனக்கு உள்நாட்டில் பயணப்பட விருப்பமில்லை .ஏர் இந்திய விமானங்கள் செல்ல கூடிய நாடுகளில் அப்போது மிகவும் பிரபலமான வெளிநாடுகள் சிங்கப்பூர் மற்றும் துபாய்

நான் முதலில் எனது மனைவியை அழைத்து செல்ல திட்டமிட்டேன் . அதில் சிக்கல் ஏர் இந்திய நிறூவனம் சென்று வருவதற்கான பயண சீட்டை மட்டும்தான் தருகிறது . அங்கு தங்குவதற்கு மற்றும் இதர செலவுகளை நாம் பார்த்துக்கொள்ள வேண்டியடியதுதான் . எனக்கு முதலில் என்னை வெறுப்பேற்றிய வல்சராஜ் குழுவை இந்த கடிதத்தோடு சென்று சந்தித்து வெறுப்பேற்ற வேண்டும் என்கிற எண்ணம்தான் முதலில்  தோன்றியது . நான் சென்று வல்சராஜை பார்த்து சொல்லிய போது அவரால் அதை நம்பமுடியவில்லை . பலவித யோசனைக்கு பிறகு நானும் வல்சராஜும் துபாய்க்கு செல்வது என் தீர்மானமானது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்