https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 311 * அன்பின் அரவணைப்பு *

ஶ்ரீ:பதிவு : 311 / 477 / தேதி :- 15 ஏப்ரல்  2018* அன்பின் அரவணைப்பு *
நெருக்கத்தின் விழைவு ” - 08
விபரீதக் கூட்டு -04


வைத்தியநாதன் , முன்னாள் பத்திரிக்கையாளர் பின்னர் தாசில்தார் , தலைவர் சண்முகத்தை சந்தித்த பிறகு அரசியல்வாதியாகி, அனைவராலும் அஞ்சப்படும் எதிர்மறை மனிதராக உருவாகி வந்தார் . அரசு நிர்வாக சட்டம் குறித்த நுண்ணறிவும் கொண்ட ஒருவருக்கு அரசியலும்  இணையும்  போது விபரீதமான பலத்தை அது கொடுத்து விடுவதை பார்க்க முடிந்தது. ஒரு அரசு அதிகாரி அரசியல் அதிகாரத்திற்கு மிக அணுக்கமாகும் போது , ஆபத்தான அரசியல்வாதியாகி விடுகிறார்கள், அந்த மாதிரியான  அரசு அதிகாரிகள் எங்கு சென்று அடையக்கூடும், என்ன மாதிரியான சூழலை உருவாக்கி விடுக்கூடும்  என்பதற்கு வைத்தியநாதன்  உதாரணம் . அவர் தலைவருக்கு பல அரசியல்  சாகசங்களை நிகழ்ந்த உதவியிருக்கலாம் , அல்லது அதைபோன்ற ஒரு தோற்றத்தை அவர் விழைந்து உருவாக்கிக் கொண்டிருக்கலாம்  . அதன் விளைவாக தலைவருக்கு மிஞ்சிய அதிகாரம் உள்ளவராக , அனைவராலும் உணரப்பட்டார்

பலவித சலுகைகளையும் பலன்களையும்   உடனே எதிர்பார்க்கும் பொறுமையற்ற மனிதர்களுக்கு , அளப்பறிய பலன்களை வாரி வழங்கும் ஆற்றலுள்ள ஆழுலக தெய்வங்கள் , கொடுத்த  பலன்களுக்கான விலையை கேட்கும்போது , கேடக்கப்பட்டவரிடம் கொடுக்க உயிரைத்தவிர ஏதும் மிச்சமிருப்பதில்லைஅதுவே அரசிடமிருந்து சலுகைகளை எதிர்பார்த்து  அவரின் உதவியை நாடி பெற்ற பலருக்கு நிகழ்ந்தது .அவர்களிடம்  தனது உரையாடல்கள் மூலம் தனது அதிகாரம் அசைக்க முடியாததாக மாற்றிக்கொண்டார்.  

1980 களில் புதுவை அரசியல் களத்தில் அவர் தவிற்க இயலாத சக்தியாக உருவெடுத்த பிறகு சிந்தனை நெகிழ்தன்மை இல்லாதவராக எதையும் ஒருவருக்கு இழைத்துவிட்டு , பிறகு  ஒன்றும் நடவாதது போல அவருடனே இருப்பதிலும் சமர்த்தராக இருந்தார் . தனது வெளிப்படையான , மற்றும் தடாலடி செயல்பாடுகள் மூலம் தன்னை அரசு பணியிலும் அரசியலிலும் நிலைபெருத்திய பிறகு, 1980 களில் திமுக கூட்டணி அரசாங்கத்தில் காங்கிரஸ் அமைச்சருக்கு தனி உதவியாளராக பதவி பெற்றார் . அது அவரது அரசியலில் ஒரு திருப்புமுனையானது . தனது திறனால், அரசு நிர்வாக சட்டம் மற்றும் நடைமுறைகளில் உள்ள இடைவெளிகளை மிக சாமர்த்தியமாக பயனபடுத்தி பிறரை பணியவைக்க அல்லது மிரட்டி வளைக்கும் சாமர்த்தியம் அவரை  சட்டமன்றத்தில் நிலைசக்தியாக உருவெடுக்க வைத்தது . சண்முகத்தை தாண்டிய ஆளுமையாக அவர் அறியப்பட்டார். அவர் குறித்த கேள்விகளுக்கு சண்முகத்தின் அர்த்தம் பொதிந்த மௌனம் அது உண்மை என்கிற அடையாளத்தை அவருக்கு அளித்தது
தனது வழமையான பாணியில் அரசியளாருக்கு உதவுபவராக என்னிடம் தானகவே அறிமுகமானார் . அவரை பல வருடங்களாக , பல வித நிகழ்வின் வழியாக நன்கு அறிந்திருந்ததால் , அந்த உறவு ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள்ளாக என்னனால் இயக்கப்பட்டது. முதல்முறையாக அதிகாலை நான் தலவர் சணமுகத்தை சந்தித்த போது வைத்தியநாதன் அங்கு இல்லை. அது தலைவருடன் அவர் இருக்கும் நேரம் . அவரது காலை நடைபயிற்சிக்கு பிறகு தலைவருடனான தனிப்பட்ட உரையாடலுக்கு அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்வார். நான் சென்ற அன்று ஏனோ அவர் அங்கில்லை.

பாலனை விட்டு விலகிய சூழலில் நான் சண்முகத்தை சென்று சந்தித்தது , என் உளவியல் சிக்கலிலிருந்து வெளிவருவதற்காக மட்டுமே என்பதால் அரசியல் எதிர்காலம் குறித்து அப்போது எனக்கு எந்த திட்டமும் இல்லை . மறுநாள் மாலை நான் தலைவரை சந்தித்து விட்டு வெளிவந்தபோது , உள்நுழைந்த வைத்தியநாதன் மிக இயல்பாக என்னிடம் கைகுலுக்கி வாழ்த்துக்கள் என்றார் . தனது பாணியில் அவரது உரையாடல் துவங்கியது 

என்னை பல ஆண்டுகளாக நன்கு அறிந்திருந்தார் என்பது அந்த சந்தர்ப்பத்தில் அவர் சொல்லிய பிறகே நான் அறிய நேர்ந்தது . என்னை பல வருடத்திற்கு முன்பாக தான் சண்முகத்திடம், கொண்டு சேர்ப்பதற்கும் முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாத்துரை மூலம் முயற்சித்து அது தோல்வியடைந்ததை பற்றி சொன்ன போதுதான் . ஒரு திடுக்கிடலை உணர்ந்தேன் . என்னை பற்றிய சில தகவல்களை அவர் சொன்னது அவரது வழமையான அரசியல் தொடு முயற்சி என அதை பெரிதுபடுத்தாது போது . இந்த மேலதிகமான தகவல் தொடர்புடைய அந்த நிகழ்வு சட்டென என் நினைவிற்கு வந்தது.. 

அரசியல் களத்தில் அனைவரும் அஞ்சும் பெரும் எதிர்மறை சக்தியாக வைத்தியநாதன்  வெளிப்பட்டது , ரேணுகா அப்பாதுரை கல்வி அமைச்சரான பிறகு , அவருக்கு தனி உதவியாளராக அவர் நியமிக்கப்பட்ட போதுதான்அமைச்சக நிர்வாக வசதிகளுக்காக நிதி துறை சார்ந்த அதிகாரிகள் அமைச்சர்களுக்கு செயலாளராக, உதவியாளராக நியமிக்கப்படுவது வழமை ,அதன் அடிப்படியில் அவர் நியமிக்கப்பட்டவர் , அரசாங்கத்தை ஒற்று பார்ப்பதற்காகவும், அரசாங்கத்தை பின்னிருந்து இயக்குவதற்கும் அவர் சண்முகத்தால் நியமிக்கப்பட்டவர் என்றும் , அவரை கொண்டே திமுக ராமசந்திரனின்  மந்திரிசபையை மறைமுகமாக சண்முகம் இயக்குகிறார் என்கிற அலர் அரசியலில் இருந்த காலம் .பலர் அவரை கண்டதும்நரி வலம் இடம் போனால் என்ன? நம்மீது பாயாதவரை எல்லாம் சரி” , என்கிற கோட்பாட்டிற்கு வந்தவர்கள்  . அவரது செயல்கள் அனைத்தின் சண்முகம் சொல்லித்தான் செய்யப்படுகிறதா? என அவரது செயல்பாடுகளால் வெருண்ட சிலர் சணமுகத்திடம் நேரடியாக கேட்டபோது அது உண்மையா? இல்லையா ? என சண்முகத்தால் அது சான்றளிக்கப்படவே இல்லை.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...