https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 309 * கசங்கிய சிந்தனை *

ஶ்ரீ:




பதிவு : 309 / 475 / தேதி :- 13 ஏப்ரல்  2018



* கசங்கிய சிந்தனை  *




நெருக்கத்தின் விழைவு ” - 06
விபரீதக் கூட்டு -04








இந்தப் புடவியின் நெறி மிக விந்தையானதும் , பகடியைப் போன்ற ஒரு வஞ்சகம் நிறைந்ததாக இருப்பதைப் பார்க்கிறேன் , பலமுள்ள மனிதன் கால் இடறி விழுகையில் அடிபடுவதும் , உயரமான கொடியில்  கம்பு நெகிழ்ந்து விழும் கோமளமான மலர் சிரித்தபடி அடிபடாமல் , மண்ணை அடைகிறது . “நினைவுஎன்கிற ஒற்றை விதையிலிருந்தே முழு மானுட உலகம் தன்னை வளர்த்தெடுத்துப் பெருக்கிக் கொண்டது . அந்த ஒற்றை பலத்தை கொடுத்த விண்ணகத்து தெய்வங்கள் பிறிதெந்த உயிரினத்தை விடவும் மனிதனை பலஹீனனாக ஆக்கியிருக்கிறது . தனது எடையை சுமக்க இயலாதவன் மனிதன் , அற்ப எறும்பு தனது எடையில்  ஐம்பது மடங்கு எடையை தூக்குகிறது என்கிறார்கள் ஆராச்சியாளர்கள். ஜெயமோகனிடம்  ஒருமுறை  பேசுகையில்  சொன்னார்பாசம் , கருணை , கோபம் ,காமம் ,போல அறம் மனிதனின் இயல்பில் இல்லை , ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இத்தனை கோடி புத்தகங்கள் மனிதனுக்கு அறத்தை வலியுத்திக் கொண்டே இருப்பதற்கு அதுதான் காரணம்”என்று 

மானுடனின் அறம் எப்போதும் நழுவக் காத்திருப்பது , அது நழுவிப் போவதில் உள்ளாழத்தில் எங்கோ அவன் பெரும் உவகையை அடைகிறான் போலும் ? , அதை மறுக்கவே பல விதமான காரணங்களை தேடிக் கண்டடைந்து , அதை அள்ளி அள்ளி தன்மீது போட்டுக்கொண்டு மறைந்து போக முயலுகிறான் . அனைவரும்  எளிய மனிதர்களே. அவர்களில்  யாரும் தன் சுயநெறிகளில் புழங்கவோ . தன்னை மாமனிதன் என தருக்கி நிற்கும் அவர்களின்  பாதையில் வெற்றியை அடைய அது விடுவதில்லை . அவர்கள் வேறேதற்கோ படைக்கபட்டவர்கள் போலும் .

எளிய சிலரின் வீழ்ச்சி பலபேர் அறிய நிகழ்ந்து பிறிதெல்லாராலும் அது கடந்து போகப் படுகிறது . ஆனால் அனேக வெற்றியாளர்களின் வீழ்ச்சியை அவர்களது துணைகள் கூட அறியாது நிகழ்ந்து விடுகிறது . அது அவர்கள் மட்டுமே அறிவதை போல ஒரு வதை பிறிதில்லை. ஆற்றாமை , சொல்லி அழ துணையற்ற அனாதைகள் மட்டுமே. வாழ்கை என்பது நிறைவின்மையை நோக்கி நகர்வது . அவர்கள் யாராக இருந்தாலும் , எத்தகைய உயர்நிலைகளில் நிலைபெற்றிருந்தாலும் நியதி ஒன்றே.வாழ்வியலின் போக்கை அவதானிப்பவன் மெல்ல அதிலிருந்து வெளியேறி நிறைவடைவதை நோக்கி முயல்கிறான் . சிலர் மனம் நிறைந்த வாழ்க்கைக்கு பின்னரே மண்மறைகிறார்கள் . அவர்கள் பாக்கியவான்கள்.

அரசியலில் கண்ணனின் அசுர வளர்ச்சி கண்டு , பாலனின் விழுமியங்கள் பின்னகர்ந்தது , தேவையும் , விழைவும் முன்நிலை பெற்றது ,அரசியல் சூழ்தலே தனக்கான பாதை என்கிற பிறழ்வு அமைப்பை நாசமாக்கியது . அவரை நம்பி தோள் கொடுத்தவர்கள் அரசியலிலிருந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள் . அனாதைகளாக , நடைபினமாக . பலரின் மரணம் கொடுமையானது . யார் இவற்றிற்கு பொறுப்பேற்க போகிறார்கள்? . இதை இழைத்தவரின் குற்றத்திற்கு என்னதான் தண்டனை ?. வெதும்பி இருக்கிறேன் . சிறிது காலம் கழித்து அந்த தொண்டர்களுக்கு நிகழ்ந்தது கண்ணனுக்கும் நடந்தது . காலம் யாரையும் விடுவதில்லை .

வாழ்வியலுக்கு மனிதன் பொருளியல் தேவை பெருக்க நினைக்கிறான் . அதற்கானதல்ல அரசியல் . அரசியலினால் பொருளியல் நீதியில் வென்றவர்கள் , பிற துறைகளில் ஈடுபட்டு  வெற்றியடைந்தவர்கள்  எண்ணிக்கை  பல மடங்கு . பொருளை பெற்றுக்கொடுத்த அரசியல் , ஒரு கட்டத்தில் அவர்கள் முனைந்து தேடிய அது மட்டும் அவர்களிடத்தில் தேங்கி நிற்க ,பிற அனத்து அரசியல் நிலைகளும் அவர்களிடமிருந்து  விலகி விடுவதை பார்த்திருக்கிறேன். தனது இறுதி காலம்வரை அனைத்து இடத்திலும் அவமானத்தைத் தவிர அவர்கள் சந்திப்பது பிறிதொன்றில்லை. சிலருக்கு உடனே , சிலருக்கு சில காலம் கழித்து . அடுத்த ஜென்மம் அவரை அது காத்திப்பதில்லை போலும்.

அரசியல் அதன் அதிகாரத்தை நோக்கியது . அதிகாரம் மானுட நேயத்திற்கானது . இதில் நெறி தவறியவர்களை , காலம் ஒவ்வொரு நிமிடமும் வதைத்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன் .அரசியலில் நெறி சார்ந்த , விழுமியங்களை முன்னெடுக்கும் அமைப்பிற்கு என்றும் மதிப்பிருக்கிறது என உறுதியாக நம்புகிறேன் . அது செயல்பாட்டிற்கு வரும்  காலம்வரை , காத்திருப்பு ஒரு முக்கிய காரணமென்பதால் . அதை செய்ய அரசியளாலருக்கு விருப்பமில்லை , அவர் அதைக் கடக்க பொருளியல் அனுகுமுறையை நோக்கியேநகர்கிறார்கள் . ஊழிலின் ஊற்றுக்கண் அது. அதில் நுழைந்த ஒருவர் பின் எக்காலத்திற்கும் விழுமியம் சார்ந்த அரசியலுக்குத் திரும்பவே இயலாது.

விழுமியம் சார்ந்த அரசிலை வளர்த்தெடுப்பது தொடர் உரையாடல் மட்டுமே என்பதில் இன்றும் எனக்கு என்றும் மாற்றுக் கருத்தில்லை . அரசியல் சூழ்தலுக்கு முக்கியத்தும் இன்றி அனைவரையும் ஒன்றுதிரட்டி , பொதுவில் பலனளிக்கக்கூடிய திட்டத்திற்கு முன்னுறிமை கொடுக்கப்பட்டே ஆரோக்கியமான அரசியல் முன்னகர்ந்திருக்கிறது . எனது அரசியலை உரையாடல்கள் மூலமாகவே வளர்த்தெடுப்பதில் விருப்பமுள்ளவன் , அதில் பெரிய வெற்றியும் அடைய முடிந்தது . என்னை சூழ்ந்திருந்த அமைப்பும் அதன் உறுப்பினர்களும்  அனைத்து இலக்கையும்  குறித்து பேசுவதன் மூலமாகவே புரிந்து கொள்ள முயல்பவர்கள்

அந்த உரையாடலகள் , எனது திட்டங்களில் உள்ள நடைமுறை சிடுக்குகளையும் , பிழை புரிதல்களையும் கலைந்து கொள்ள பயன்பட்டது . நான் அரசியல் ரீதியாக அடையாளப்பட்டுப் போனதால் , முன்னறிவிப்பின்றி சென்றால் அது ஒரு சிக்கலாக உருவெடுக்கத் துவங்கியது . அதனால் ஆரம்ப நிலைகளில் சிறு சிறு கூடுகைகளில் தனித்தனியாக சந்திப்பதை போல ஒரு கட்டத்திற்கு  பிறகு செய்ய இயலாமல் ஆனது . இந்த சூழலில் எனது முன்னெடுப்புகளுக்கு தோள்கொடுக்கும் சிலரையாவது ஒன்று கூட்டி வைத்து சில விஷயங்களை எதிர்கால அரசியல் குறித்து உரையாட  விழைந்தேன் . அது வேகமாக வளர்ந்து வந்த அமைப்புடன் மேலும் நெருக்கம் கொள்ளும் வாய்பைதருவது.

ஆரம்ப நிலைகளில் சந்தித்ததைப் போல பிறகு வாய்ப்பு இல்லாமையால் ஒரு இடைவெளியை உணர்ந்தேன் , பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டதாக அமைப்பு மாறிய பிறகு , புதிதாக இணைந்தவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை , அவர்களுடனான உறவு மேம்பட ஒரு சந்தர்பத்திற்காக காத்திருந்தேன். அந்த சூழலில்தான் வருடாந்திர அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு தில்லி தாள்கட்டூரா அரங்கில் ஒருங்கி இருப்பதாக தகவல் வந்தது .அந்த பயணத்தை இதற்கு பயனபடுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்தேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...