https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 306 * ஆழ்மன வெளிப்பாடு *

ஶ்ரீ:






பதிவு : 306 / 472 / தேதி :- 10 ஏப்ரல்  2018





* ஆழ்மன வெளிப்பாடு *


நெருக்கத்தின் விழைவு ” - 03
விபரீதக் கூட்டு -04






தலைவர் சண்முகம் பேசிய சில தனிப்பட்ட  உரையாடல்களை , நினைத்துப்பார்கிறேன்  பல நிகழ்வுகளை அதன் முக்கிய தருணங்களில் எடுக்கப்படுகிற முடிவுகளுக்கு தனது ஆழ்மன வெளிப்பாடாக இருந்திருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது . ஆனால் அந்த முடிவுகளையும் , அதைப்பற்றிய விவாதங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதில்லை . அவை அவரது ஆழமனத்திலிருந்து எழுந்து வந்தவைகளாக இருப்பதால் அவரால் அதற்கு கருத்து வடிவம் கொடுக்க முடியாது போயிருக்கலாம் .ஆழ்மனப்படிமானம் என்கிற கருகோளின் நுண்ணிய செயல்பாடு பற்றி பின்னரதான் ஜெயமோகனிடமிருந்துதான் பெற்றுக் கொண்டேன்.   

பொதுவெளியில் எழும் கருத்தியலை சார்ந்து தலைவர்கள் முடிவெடுப்பது என்பது , சூழலை ஒட்டித்தான். பொதுக் கருத்தியலுக்கு மதிப்பளிப்பது , என்பது ஆழ்மன செயல்பாட்டின் வழியாகவே அது இருக்க முடியும் . அதுவே பின்னாளில் வரலாறாகிறது . என்பார் . “வரலாறு என்று சொல்வது மக்கள். கோடானுகோடி மக்கள். அவர்களின் ஒட்டுமொத்த ஆசைகளும் கனவுகளும் பலங்களும் பலவீனங்களும்தான் வரலாற்றை முன்னகரச்செய்கின்றன. அந்த மக்களை தொகுத்து முன்னெடுப்பவனே வரலாற்றை முன்னெடுக்கிறான். என்கிறார் ஜெயமோகன் தனதுஇன்றைய காந்தியில்

காந்தியின் உப்பு சத்தியாகிரகம் , அவரின் ஆழ்மனப் புரிதலில் இருந்து எழுந்தது. உப்பு மண்ணில் எங்குமிருக்கிறது. மண்ணின் ஆழத்தில் உப்பு நிறைந்திருக்கிறது. நாம் உப்பின் மீது நின்றுகொண்டிருக்கிறோம். உப்பை உண்கிறோம். நம் கண்ணீரும் ரத்தமும் உப்பு. நம் உடலே உப்பாலானது. நாம் மண்ணிலிருந்து உப்பை உண்டு மண்ணுக்கு அந்த உப்புகளை திரும்பக்கொடுக்கிறோம். நாம் மண்ணின் உப்பின் ஒரு துளி மட்டுமே. ஆனால் அந்த அர்த்தம் மட்டுமல்ல அதற்கு.

1700 களில் மத்தியில் சுங்கம் வசூலிக்க பிரிட்டிஷார் ஏற்படுத்திய வேலியை உப்புவேலி என்று ராய் மாக்ஸ்ஹாம் என்கிற பிரிடீஷ் ஆய்வாளரால் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு சிறப்பு நில அமைப்புண்டு. ஒரிசாவுக்கு கீழே தொடங்கி குஜராத் வரை வரக்கூடிய தென்மேற்குப்பகுதியில்தான் உப்பு கிடைக்கும். ஆனால் உப்பின் மிகபெரிய நுகர்வோர் வடகிழக்கு நிலப்பகுதியினர். அவர்களுக்கு கடற்கரை உப்பு தரைவழியாகச் சென்று சேர்ந்துகொண்டிருந்தது. வெப்பம் மிக்க இந்தியாவில் உப்பு மிக முக்கியமான உணவு. மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும். நீண்டதரைவழிப்பயணம் ஆகையால் உப்புக்கு விலை மதிப்பு அதிகம்

ஒரு வடகிழக்குநில மனிதர் வருடத்தில் தானியத்துக்குச் செலவிடும் அதே தொகையை உப்புக்கும் செலவிட்டார் . அந்த உப்புப்போக்குவரத்தை இந்தியாவுக்கு குறுக்காக ஒரு வேலிகட்டி தடுத்துவிட்டனர் பிரிட்டிஷார். ஒரிசாவில் ஆரம்பித்து காஷ்மீர் வரைச்சென்ற இந்த வேலி இந்தியாவின் மக்கள்தொகையின் கால்வாசிப்பேரை காவுகொண்டது. இந்தியாவின் வரலாற்றின் மிகப்பெரிய இரு பஞ்சங்கள், ஒருவேளை உலகவரலாற்றின் மிகப்பெரிய பஞ்சங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தன. அப்பஞ்சங்களை உருவாக்கிய முதல்பெரும் காரணி இந்த வேலிதான்.

அன்று மக்கள் கோடிக்கணக்கில் செத்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று உப்பு பற்றாக்குறை. உப்பு உணவைவிட பலமடங்கு விலை ஏறிவிட்டது. உணவே மிக அரிதாக கிடைத்தது. ஆகவே மக்கள் உப்பே சாப்பிடவில்லை. உப்பில்லாமல் ஏற்படும் நோய்தான் மக்களை , குறிப்பாக குழந்தைகளையும் முதியவர்களையும், கூட்டம் கூட்டமாக கொன்றழித்தது.

காந்தி இந்திய அரசியலில் வேரூன்றியபின்னர் இந்திய அளவில் ஓரு பெரும்போராட்டத்தை ஆரம்பித்தார். "உப்புசத்தியாக்கிரகம்” . உப்பை முன்வைத்து ஒரு போராட்டமா என்று இந்தியாவின் பிற தலைவர்களும் அறிவுஜீவிகளும் திகைத்தனர். அவர்கள் எவருக்கும் இந்தியாவில் உப்பின் வரலாறு தெரிந்திருக்கவில்லை. ‘நிலவரியை முன்வைத்து போராட்டம் செய்யலாமேஎன்றனர் மோதிலால் நேரு போன்றவர்கள். ‘நிலம் உள்ளவர்களுக்கான போராட்டமல்ல இதுஎன்றார் காந்தி.

உப்பு என்றால் உயிர் என்பதே இந்தியாவின் ஆழ்மனம் அறிந்த யதார்த்தம். அதன் வரலாறு காந்திக்குத் தெரிந்திருக்காது. அவர் ஆய்வாளர் அல்ல. ஆனால் இந்தியத்தலைவர்களில் அவரே இந்தியா முழுக்கப்பயணம் செய்தவர். அடித்தள மக்களை நேரில் அறிந்தவர். அவருக்கு உள்ளுணர்வு சொல்லியிருக்கலாம். ஆம், இந்தியாவின் உப்புடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அவர் இந்தியாவின் உப்பாக இருந்தார், என்கிறார் ஜெயமோகன் தனதுஉரையாடும் காந்திகட்டுரையில்
ராய் மாக்ஸ்ஹாமின் அந்த கட்டுரை வெளிவரும்வரை அந்த வேலியைப்பற்றி யாரும் அறிந்ததில்லை என்பது , கொடுமையானது . ஆழ்மனம் நம்மை வழிநடத்துவது என நான் உறுதியாக நம்பிக்கைக்கு ஒரு ஆதாரம் போல இதை நினைக்கிறேன் .

அரசியல் என்பது , எப்போது முன்னெடுக்கையில் அது சூழ்தலாகவே அமைவது . அது முதல் நிலையிலேயே, அதற்கு  எழும் எதிர்ப்பை கடக்கும் விசையை உள்பொதிந்ததே திட்டமிட்டப்படும். எதிர்பு உள்ளும் வெளியிலுமாக இருப்பது.இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை . ஒரு திட்டம் பல அலகுகளை கணித்து முடிவெடுக்கப்பட்டிருக்கும்ஒரு புரிதலுக்காக தலமை சிலருடன் அதை விவாதிப்பது இயல்பானது . விவாதத்தில்தான் திட்டம் மேலும் கூர்கொள்ளும் . ஒவ்வொரு அலுகும் ஒன்றுடன் ஒன்று ஊடுபாவுகிறபோது , திட்டம் மறுகட்டமைவு பெறும். தலைமை யாருடன் விவாதிக்கிறதோ, அவர்தான்  அந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பார் , ஆனால்  அவர் அதை அறியமுடியாது . நண்பர்கள் அரசியலில் நுழைந்தால் விளையும் முதல் அநர்த்தம் இங்கிருந்துதான் துவங்குகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்