https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 11 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 307 * அலகுகள் *

ஶ்ரீ:



பதிவு : 307 / 473 / தேதி :- 11 ஏப்ரல்  2018



* அலகுகள்   *




நெருக்கத்தின் விழைவு ” - 04
விபரீதக் கூட்டு -04






எல்லாவித அரசியல் முன்னெடுபுகளுக்கும் எதிர்ப்புஉட்கட்சியிலும், எதிர்கட்சியிலுமாக நிலை கொண்டாலும்இரண்டின் அடிப்படைகள்  வெவ்வேறானவை . இரண்டையும் கணக்கில் கொண்டே ஒரு திட்டம் பல அலகுகளை நோக்கியவைகளாக அவை பிரிக்கப்பட்டு கணித்து முடிவெடுக்கப்பட்டிருக்கும் . தலைமை தனது அணுக்கர்களுடன் தனித்தனியிக அதை விவாதிக்கும் . விவாதத்தில்தான் திட்டம் கூர்கொள்கிறது . ஒவ்வொரு அலுகும் ஒன்றுடன் ஒன்று ஊடுபாவுகிறபோது , திட்டம் மாறுபாடுகளை அடைந்தபடி இருக்கும் . தலைமை யாருடன் விவாதிக்கிறதோ, அவர்தான்  அந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதை , அவர் அறிய முடியாது . நண்பர்கள் அரசியலில்நுழைவதால் விளையும் முதல் அநர்த்தம் இங்கிருந்துதான் துவங்குகிறது . நண்பர்களுக்கு அவர்களுடன் ஒரு இணைவு இருக்குமானால் . தலைமை நினைக்கும் அடிப்படை உட்கூறுகளை , அவர்கள் அறிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் , அவர்கள் அதன் பின்விளைவுகளை அறியாது அவற்றை  வெளியிடும் போது ,அது தனது ரகசியத்தனமையை  இழந்துவிடுகிறது .

தலைமையின் விவாதங்கள் அனைத்தும், தனிப்பட்ட உரையாடல்களின் வழியாகவே கூர்மை கொள்ளுகின்றபோது . ஒவ்வொரு உரையாடலின் இறுதியிலும் , அது ஊஞ்சலைப்போலே முன்னும் பின்னுமாய் நாகர்ந்தபடி இருக்கும் . ஒருவருடன் விவாதித்த பிறகு அதன் அடிப்படையில் முன்பிலிருந்து மாறுபட்டிருப்பதை சற்றுமுன்னர் வந்து சென்றவர்  அறிய இயலாது . நாள் கணக்கில் அல்ல , சில நிமிடங்களுக்கு உள்ளாகவேஅந்த மாற்றம் நிகழ்ந்து விடும்  . அதனால் முடிவெடுப்பவர் , முடிவெடுக்கும் அந்த கணம்வரை அமைதியாக இருப்பதை பார்த்திருக்கிறேன் .

ஒரு அரசியல் முடிவை பற்றி ஊர் பெரும் அலராக இருக்கும் போதுகூட , தலைமை அதில் முடிவெடுக்காததைப் போல ஒரு தோற்றம் அனைவராலும் உணரப்படும் . தலைமையின் அணுக்கரும் ஒரு அரசியாளர் என்பதால் , அவர் தனது அணுக்கருடன் , தலைமை தன்னிடம் விவாதித்தை இரண்டு காரணங்கள்களுக்காக பகிர்ந்து கொள்ள முயல்வார் . 1. அவருக்கு அதில் மேலதிகமாக சில தகவல்களை தேவைப்படுவதால். 2. அரசியலில் தனது இருப்பை சொல்லி தருக்கிக் கொள்ள அவர்களுக்கு அது வாய்பாகிறது . அவர் அதை சொல்லும் அந்த தருணம் முதல்,  பிறிதொரு அரசியல் எழுந்துவிடும். செய்தியின் சாரம் வெளியாகி அதன் முரணியக்கத்தால் தலைமை சொல்லப்பட்ட தகவல்கள் திரிபடைந்து மெல்ல தலைமையிடமே வந்து சேரும் . தகவல்களில் நிகழ்ந்த திரிபை வைத்து அது யாரிடமிருந்து தொடங்கியது என்பது தலைமைக்கு புரிந்துவிடும். இது ஒருநிலை

இரண்டாவதாக , தலமை அதில் உள்ள அத்தனை அலகுகளையும் ஒருவரிடமே விவாதிக்காது , அவரவர்களுக்கான புரிதலுடன் மட்டும் அந்த உரையாடல் நிகழ்வதால், தான் விதைத்தது எப்படி உருமாற்றமடைந்து மீளவும் தன்னிடம் வருகிறது என்பதை அவதானிப்பதில் இருந்து புதிய பரிமணாங்களும் , சாத்தியக்கூறுகளும் கண்ணுக்கு தெரியத்துவங்கும் . அதன் அடிப்படையில் ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்து உரையாடலும் நின்று போய் , ஆழ்மனம் உணரும் முடிவே இறுதியானதாக இருந்துவிடும்

அரசியல் தோழகர்ளிடம் , நமது விவாதம் ஒரு எல்லைக்கு மேல் விரிவதில்லை . அவர்களுக்கும் ஒரு கட்டத்திற்கு மேலாக சில உட்கூறுகளை கேட்க கூடாது என இயல்பில் தெரிந்திருக்கும்  , ஆனால் நண்பர்களுக்கு அந்த தடைகள் இருப்பதில்லை . அவர்கள் அதில் ஆர்வமாகி கேட்கையில், அதில் உள்ள நுட்பங்களை , நாம் நம்முள் பெருங்கிக்கொள்ளும்  பொருட்டு மிக விரிவாக சொல்ல துவங்கிவிடும் சூழல் எழும் . அந்த அளவில் அதை ஒரு குற்றமா சொல்ல முடியாது , ஆனால் கட்சி தோழர்களுடன் அவர்கள் இதை விவரிக்க துவங்கினால்தான் அது பேருரு கொண்டு எழுந்து விடுகிறது . இது நம்மை காட்டிக்கொடுப்பபதற்கு நிகரானது.

நம்மை கடந்து அவர்களுக்கு , நமது அரசியல் தோழர்களுடன் நெருக்கம் கூடுகிறபோது , அது உள்நோக்கமுடையதாகிறது . எந்நிலையிலும் , அதில் ஒரு லாப நோக்கம் வந்துவிடும். அரசியல் சாரதா நண்பர்கள் என்பதால் அவர்களது லாபநோக்கு எவ்வகையிலும் அரசியலில் பிரிதிபளிக்காத தனிப்பட்ட லாபநோக்காவே இருக்கும் . முக்கிய அரசியல் முடிவுகளை அரசியல் சார்ந்த அணுக்கத் தோழர்களுடன் விவாதிக்கும் போது , அவர்கள் அறியவிரும்பும் மேலதிக தகவல்கள் , நண்பர்களின் வழியாக அடைந்து விடுவார்கள்

தலைமை தனது உரையாடலை தேவையற்று ஒருவருடன் நிகழ்த்தாது , அதற்கு பல நோக்கமிருக்கும் 1. திட்டத்தை கூர் கொள்ளச்செய்யும் திறன் ஒருவருக்கு இருப்பதாக கருதினால் , 2. திட்டத்தை நிகழ்த்துவதற்கு அவரது பங்களிப்பு தேவை எனக்கருதினால்.3. உட்கட்சியில் தன்னை எதிர்க்கும் முக்கிய நிர்வாகியுடன் , அவரும் அதில் கலந்தாலோசிக்கப்பட்டார் என்கிற வெளிக் கணக்கிற்காக . 4. வாய்கட்டுமானம் இல்லாமல் தருக்கிக்கொள்பவர் , அதில் செய்தியின் மறைமுக தன்மை விவாதிக்கபடாது , அது அவர்களுக்கான நுனிப்புள் செய்தி , ஊர் அலருருவதற்காக அவரிடம் விவாதிக்கும் 5. பல கட்சி முக்கிய தலைவர்களுடன் ரகசிய உறவு உள்ள ஒற்று சொல்லுபவர்களுடன் , எதிர் கட்சியினரை திசைதிருப்ப , தவறான செய்திகள் அவர்களுக்கு சொல்லப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்