https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 12 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 308 * விழுமியக் கனவு *

ஶ்ரீ:




பதிவு : 308 / 474 / தேதி :- 12 ஏப்ரல்  2018




* விழுமியக் கனவு *





நெருக்கத்தின் விழைவு ” - 05
விபரீதக் கூட்டு -04








தலைமை தனது திட்டம் குறித்த உரையாடலை ஐந்து விதமான மனிதர்களுடன் நிகழ்த்தும்  1. திட்டத்தை கூர் செய்யும் திறனாளர்  2. திட்டச் செயல்பாட்டாளர்.  3. முக்கிய நிர்வாகிகள்  4. உளர்வாயர்கள் 5. ஒற்று சொல்லுபவர்கள். ஒரு வகையில் இந்த ஐந்து வகையினரிடமும் கூட தலைமை முழுத் தகவலையும் விவாதிக்கும் என சொல்லிவிட முடியாது  . இந்த ஐவரையும் தலைமைக்கு அணுக்கராகவே கட்சிக்கு உள்ளும் , புறமும் நம்பப்படுபவார்கள் . அரசியல் களம் நம்பிக்கை , சந்தேகம் என்கிற இரட்டைகளால் பிண்ணப்பட்டது , அதில் யாரும் நிரந்தர இடத்தை வகித்துவிட இயலாது . தலைமையுடனான நல்லுறவை பேணவேண்டியது எக்காலத்திற்கும் அணுக்கர்களின் கைகளில்தான் அது விடப்பட்டிருக்கும் . நேற்றின் தொடர்ச்சி என ஒன்றிருந்து இன்று அதை தொடர்ந்து எவரும் ஆற்றிடமுடியாது . அரசியலில் தன்னிருப்பை பங்குச்சந்தை போல இன்றைய மதிப்பு உடனுக்குடன் அறிய முடிவில்லை எனில் , அவரின் இருக்குமிடம் காணாமலாகும்

தலைமைக்கு அணுக்கம் என்பது ஓரிருவரைத்தவிர பிறிதெல்லாருக்கும் ஒரு நடிப்பு மட்டுமே , தலைமையும்  அதை அறிந்தே இருக்கும் . அணுக்மானவர்கள் , முதல் இரு நிலைகளில் இருப்பார்கள் . அவர்களால் திட்டம் மேலும் மேலும் கூர்மைகொள்ளவும் , அதை செயல்படுத்துவதிலும் உதவிபுரிவார்கள் . மற்ற மூன்று பிரிவினரின் செயல்பாடுகள் நேர்மறை மற்றும் எதிர்மறையாக முடிவெடுக்கப்பட்டு முன்னகர்கையில் பலகளங்கள் அது விரிவடையும்திட்டம் எதிலிருந்து துவக்கபட வேண்டும் என்பதை அதுதான் தெளிவுபடுத்தும். இந்த அனுகுமுறை எப்போதும் மிகச் சிறந்த பலன்களை கொடுக்கவல்லது . தலைமை தனது உரையாடலை அணுக்கர்களில் முதல் இருநிலைகளில் ஒரு இணையாமை தலைமையால் பேணப்படும் .ஆனால் அந்த இருநிலையில் உள்ளவர்களை நண்பர்களின்  தலையீடு தகர்த்து விடுகிறது .

தலைமை என்னத்தான் தனது திட்டத்தை உதிரிகளாக்கி , ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் பலரிடம் அதை பிரித்து பேசினாலும் நுண்மதியுள்ள அரசியலாளன் கிடைத்த துணுக்குத் தகவல்களை வைத்து முழு திட்டத்தையும் ஒருவாறு யூகித்து விட முடியும் . இரண்டாவது நண்பர்களின் மூலம் கிடைக்கும் மேலதிக தகவல்கள் முழுவதையும் திறந்து கொடுப்பது என்பதால் நண்பர்கள் மிக ஆபத்தை விளைவிக்க கூடியவர்களாக  அறியப்படுகிறார்கள் .

அரசியலின் உள்ளே நண்பர்களை கொண்டுவருவதைப் போல ஒரு மடமை பிறிதில்லை. சிறு வயதில் தந்தையின் அறிவுரையை கேட்காது , தொழிலையும் நண்பர்களையும் கலந்ததால் விளைந்த அநர்த்தத்தை அறிந்திருக்கிறேன். அதிலிருந்து கிடைத்த அனுபவம் , ஒரு வாழும் காலத்திற்கானது  . எனவே அந்தக்கலப்பை நான் எப்போதும் எதனுடனும் திட்டமிடுவது இல்லை . ஆனால் ஊழ் தனக்கான வழியை நம் கவனம் குவியாத ஒரு புள்ளியிலிருந்து தான் துவங்குகிறது.  

நான் தனியனாக எங்கும் செல்வதில்லை. உடன் யாராவது இருக்கவேண்டும். ரமேஷ் சென்னித்தலாவை சந்திக்கும் சென்னை பயணம் திடீரென ஒருங்கப்பட்டதால், அன்று நான் கிளம்பும் நேரத்திற்கு ,வீட்டிற்கு வந்திருந்த சில நண்பர்களை என் பேச்சுத்துணைக்கு கூப்பிட்டதும், அவர்களும்  என்னுடன் வண்டியில்  ஏறிக்கொண்டனர் . என் நண்பர்களுக்கு எனது அரசியல் குறித்து எந்த தகவலும் அவர்களிடம் நான் விவாதிப்பதில்லை . காரணம் அதை எப்படிச் சொன்னாலும், அது  ஒரு சுய தருக்கலை போல ஒலிக்கும் ஆபத்தே அதில் அதிகம்

நண்பர்கள் மத்தியில் எதுவும் ஒரு விளையாட்டும், இளிவரலையும் போல , பகடியாக பேசப்படுவதால் அரசியல் போன்ற சில நுண்மையான விஷயங்களை நான் அங்கு பொதுவில் வைத்ததில்லை . அரசியலில்  எனது இருப்பு குறித்து ,நான் எனது நட்பு  வட்டத்தில்   விவாதிக்காததால் அரசியலில் எனக்கான இடம் என்ன? என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை . ரமேஷ் சென்னித்தலாவுடன் எனது உரையாடல் , என்னுடன் வந்திருந்த சிலருடைய மனதில் ஒரு சாய்வை உருவாக்கி இருந்ததை, வெகுகாலம் கழித்தே தெரிந்துகொண்டேன் . அதன் பின்னர் நடந்த அரசியல் நிகழ்வுகளில் நான்  பங்கேற்கும்போது அவர்களில் சிலரும்  என்னுடன் பங்குபெறத் துவங்கி அட !! என ,  என்னை வியக்க வைத்தார்கள்ஆனால் அதன் பின்விளைவுகள் விபரீதமாக  விளைந்தது .

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அனைவரும் சற்று சோர்ந்துள்ள சூழ்லை ,நான் எனது செயல்பாட்டு தளமாக தேர்ந்தேன் . அரசியல் என்பது பெரும் பொருளியலை முன்வைத்து செய்யப்படுவது  என அனைத்து தளத்திலும் நம்பப்படுவது . நான் ஒரு கலாமும் அதை ஏற்றுக் கொள்வதில்லை . ஏனெனில் அது அது உண்மையில்லை  பொருளியல் சார்ந்த அரசியல் , அடிமை மனப்பான்மை கொண்ட , குற்றத்திற்கும் ஊழலுக்கும்  அஞ்சாத ஒரு கூட்டத்தையே நமக்கு கையளிக்கும் . பின் ஒருபோதும் விழுமியங்களை திட்டங்களை மையப்படுத்தும் அமைப்பை, அரசியலை உருவாக்க முடியாமல் , “கூலிக்கு ஆள்என்கிற அளவில் அது முடிந்து விடும்இன்று எல்லா காட்சிகளிலும்  லாரிகளில் ஆட்களை கொண்டு இறக்கும் சூழ்நிலையைத்தான் அது உருவாக்கி கொடுத்திருக்கிறது . அவர்களுக்கு நெறி சார்ந்த அரசியலும் விழுமியமும் இருப்பதாக உலகம் ஒருபோதும் ஒப்பாது.

நெறிசார்ந்த அரசியலில் விழைவுள்ளவர்களுக்கு , அப்படி கூட்டப்படும் கூட்டத்தின் வழியாக இயற்ற ஒன்றுமில்லை.கண்ணன் மற்றும் பாலன் தலைமையில் இயக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் இயக்கம் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஏராளம் . அங்கு தன்விழைவையும் , கூட்டு வளர்ச்சியையும் முன்வைக்கும் திட்டங்களினாலும் , செயல்பாட்டினாலும் உருவாகி எடுத்த அமைப்பு , புதுவையில் கண்ணனை பெரும் தலைமையாக உருவாக்கிக் கொடுத்தது.   பாலனுடன் இயங்கிய காலத்தில், கனவுகளை கண்களில் தேக்கிய கூட்டத்தை எங்களால் உருவாக்கி எடுக்க முடிந்தது . அந்த அனுகுமுறை பெரும் வெற்றியடைந்ததை நான் பார்த்திருக்கிறேன்

ஒரு கட்டத்தில் கண்ணனின் அசுர வளர்ச்சி , பாலனை நிலைகுலைய செய்தது . அவரது விழுமியங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு , சுயத் தேவையும் , தன்சார்ந்த விழைவும் முன்நிலை பெற்றதும் ,அரசியல் சூழ்தல் என்கிற ஒரு நிலையை அவர் கையிலெடுத்தார் . அமைப்பு சிதறிப்போனது. அதில் முன்னின்று செயல்பட்டவர்கள் அனைவரும் அரசியலிலிருந்து காணாமலாயினர். அவர்களில் விழுமிய கனவுகளுக்கு பழக்கப்பட்டவர்கள் , நடுத்தெருவிற்கு வந்தார்கள் . என் மனசாட்சியை உலுக்கிய நிகழ்வுகளை நான் கண்ட காலம் அது. தாடியும் அழுக்குமாக பலரின் வாசல்களை தட்டி ஓய்ந்தார்கள் . வரலாற்று பக்கங்களில் தோல்வியுற்றவர்களாக , அனாதைகளாக , இன்றளவும் நடைபினமாக இருப்பவர்களை பார்க்கிறேன் . பலரின் மரணம் அதனிலும் கொடுமையானது , வலிமிகுந்தது. யார் இவற்றிற்கு பொறுப்பேற்க போகிறார்கள்? . இதை இழைத்தவரின் குற்றத்திற்கு என்னதான் தண்டனை ?. வெதும்பி இருக்கிறேன் . சிறிது காலம் கழித்து அந்த தொண்டர்களுக்கு நிகழ்ந்தது கண்ணனுக்கும் நடந்தது . காலம் யாரையும் விடுவதில்லை போலும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...