https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 4 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 300 . * இயற்கையின் விசை *

ஶ்ரீ:



பதிவு : 300 / 466 / தேதி :- 04 ஏப்ரல்  2018



* இயற்கையின் விசை *





ஆளுமையின் நிழல்   ” - 45
கருதுகோளின் கோட்டோவியம் -03







கட்சியில் வேகமாக செயல்பட களங்கள் ஏதுமில்லாத்தால் அனைவரும் செயலிழந்த நிலையில், என் பாதையை  மிக கவனமாக தேர்ந்திருந்தேன் . மாநில அரசியலில் எனக்கான களத்தை உருவாக்கி எடுத்தபின் , தில்லி தொடர்புகள் மிக அவசியமானவை , அதை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில்  இருந்த போது சென்னைக்கு முன்னாள் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்ரமேஷ் செனித்தலாவந்திருப்பதை  அறிந்ததும் அவரை சந்திக்க சென்னைக்கு கிளப்பினேன் . என்னைப் பற்றிய நினைவுகளை அவர் வைத்திருப்பார் என்பது தெரியும் . சில காரணங்களுக்காக நான் அவருக்கு மறக்க இயலாதவன். ஆனால்  அரசியலில் தொடர்புகள் அற்றுப்போகிற போது , மறதி ஒரு தவிற்க இயலாத வியாதி.

சென்னையில் அவர் தங்கி இருந்த விடுதியை தேடி அவரை சந்தித்தபோது , தில்லிக்கு கிளம்பிக்கொண்டிருந்தார் . சென்னைக்கு வந்த வேலை முடித்து அறையை காலி செய்துவிட்டு வெளிவர, அவரை வராண்டாவில் சந்தித்தேன் . என்னை கண்டதும் விரைந்து வந்து கட்டிக்கொண்டார் , என் மனம் நெகிழ்ந்து போனது . அவர் தன்னுடன் வந்த அனைவரையும் கீழே காரில் காத்திருக்க சொல்லிவிட்டு வராண்டாவில் போட்டிருந்த நாற்காலிகளில் சென்று அமர்ந்து கொண்டார் , பக்கத்தில் நானும் . என் பழைய நினைவுகளுமாக அமர்ந்து கொண்டோம் 

முதலில் பாலனைப்பற்றிய விசாரணை , பின்னர் புதுவை அரசியலை பற்றிய வருத்தம், சண்முகம் பற்றிய தனிப்பட்ட குறைகள் ,என சிலவற்றை சுறுக்கமாக சொல்லிச்சென்று தனக்கு தெரிந்த புதுவை அரசியலுக்கு தன்னை தொகுத்துக் கொள்ள சிறிது நேரம் பேசினார் . நான் அவர் சொல்லி ஓயும்வரை காத்திருந்தேன் . பிறகு என்னைப் பற்றிய பேச்சு திரும்பியதும் , நான் இப்போது சண்முகத்தின் அரவணைப்பில் இருப்பதை சொன்னபோது , முதலில் அதிர்ந்தவர் சிறிது நேர மௌனத்திற்கு பின்னர்அதுதான் மிகச்  சிறந்த முடிவுஎன்றார் .

பாலனால் கட்சிக்கு அடிப்படை நிலை சக்திகளை உருவாக்கி எடுக்க முடியாதபோது , அல்லது உருவானது தகர்ந்துபோன போது , உனக்கு இதைவிட சிறந்த வழி இருந்திருக்கப்போவதில்லைஎன்றார் . மெல்லிய வலி எழ, கசப்பினூடாக நான் சிரித்த போது , “வலி மிகுந்ததுதான் , ஆனால் இதைப்போல ஒன்று முடிவெடுக்க தயங்கி அல்லது அஞ்சி பலர் அரசியலில் அழிந்து போயிருக்கின்றனர் , அதை கடப்பது அவ்வளவு எளிதல்லஎன்றார் . நான் கடந்துவிட்டதை அறிந்து கொண்டார் என நினைக்கிறேன். சட்டென என்னிடம்  “ஏதாகிலும் உதவி வேண்டுனால் தயங்காமல் என்னை தொடர்புகொள்என்று சொன்னார். நான்தில்லியில் எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாதுஎன்றேன். மறுபடியும் இறுக்கமாக அனைத்து , விடைபெற்றுக் கொண்டார்

அவரை வழி அனுப்பி வைத்து அவர் கிளம்பிச்சென்ற பிறகு அங்கேயே சிறிது நேரம் இருந்து அடுத்தது என்ன ? என்று என்னை நடந்தவற்றிலிருந்து தொகுத்துக் கொள்ள முயன்றேன் . ரமேஷ் சென்னித்தலாவின் வெளிப்படையான ஆதரவு கிடைத்தது , ஒரு பெரிய பலம் , வழமையான தர்க்க புத்தி இது ஒரு உபச்சாரம் மட்டுமே என்றது , பிறிதொன்றி அந்த சூழலில் அதைவிட பெரிதாக வேறெதுவும் நானும் அவரும் பேசிவிட முடியாது என்றது  . கிடைத்த ஆதரவை நினைத்தபடி அங்கிருந்து நான் வெளியேறினேன் . அந்த சந்திப்பு உள நீதியாக  பல மாற்றங்களுக்கு வழிவகுத்திருந்ததை நான் அப்போது அறிந்திருக்கவில்லை

மாநில அரசியலில் நிலைக்க , அதற்கு தில்லியின் தொடர்பை வளர்த்துக்கொள்ள என்றெல்லாம் , முன்திட்டத்தோடு நான் தலைவர் சண்முகத்தை சந்திக்கவில்லை. அப்போது எனக்கு கனவுகளென ஏதுமில்லை . வெறுமை மட்டுமே எஞ்சியிருந்தது . என் திருமணத்தை ஒட்டி எழுந்த சிக்கல்களாலும் , தந்தை மற்றும் அக்கையின் எதிர்பாரத மரணம், போன்ற தனிப்பட்ட வாழ்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களால் உளமழிந்த நிலையில் இருந்து என்னை மீட்டுக் கொள்ளவே அரசியலில் நுழைந்தேன். ஆனால் காலம் நம்மை கடந்து போகும்போது புதுப்புதுக் கதவுகள் திறந்து கொடுப்பதும் , எண்ணியிராத பாதைகளாக கனவுகளாக அவை விரிகின்றன . பல சமயம் அது நம் இயல்பிற்கு மாறாக அல்லது சற்றும் திட்டமிடாத ஒன்றை ஆற்றுவதாக அமைந்து விடுவதுண்டு. அதுவரை அசியலில் நான் சந்தித்த சாவால்களிலிருந்து முற்றாக பிறிதொரு கோணத்தில் நண்பர்களின் வாயிலாக சந்திக்க இருக்கும் புதிய அத்தியாயம் ஒன்று உருவாகி வருவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

நட்புமிக சிறந்த சொற்களாக உச்சரிக்கப்படுவது, அற்புதமான உறவுகளாக எழுந்து வருவது , அனைத்து வித வலிகளில் இருந்து ஒருவனை மீள வைக்கும் ஒன்று என இப்போதும் நினைக்கிறேன் . சிறு வயதிலிருந்தே நான் தனியனாக இருந்ததில்லை , எனக்கென ஒரு குழு எப்போதும் என்னை சூழ்ந்திருந்தது . முதலில் பள்ளித் தோழர்கள் ,பிறகு வெளிவட்டார நண்பர்கள் ,பின்னர் கட்சித் தோழர்கள் . பாலனிடம் இருந்த வரை நண்பர்கள் மற்றும் கட்சித் தோழர்களுக்கு இடையே சிறு இடைவெளி ஒன்று எப்போதும் இருந்தது . அரசியலுக்காக என்னை சண்முகத்திற்கு முன்பாக நான் , முன்னாள் அமைச்சர் காந்திராஜால் கொண்டு  நிறுத்தப்பட்ட போது , தனித்துத்தான் சென்று சந்தித்தேன்உடன் வந்தவர்கள் என எவருமில்லை

அந்த இடத்திலிருந்து எனக்கான ஒன்றை வளர்த்தெடுப்பதை பற்றிய சிந்தனையும் எனக்கில்லை . பலர் சொன்ன அறிவுரை மட்டும் அவர் வீட்டு படியை கடக்கயில் தோன்றியது. "ஆலமாரத்திற்கு கீழே புல்லும் முளைப்பதில்லை" . சண்முகம் ஒரு பேராலமரம்  அதன் கீழே ஒருவர் முளைக்க முடியாது . முளைத்தாலும் வளர இயலாது. அன்று அந்த படிகளை கடந்து உள்ளே சென்றேன். எதிர்பார்பபும் திட்டமும் என ஏதும் இல்லாமல் . நான் ஒன்றில் நுழைவதும், அறிவதும் அனைத்தும் அங்கே அதன் பின்னேதான் நிகழ்கின்றன .வெற்றியும் , தோல்வியும் என . என் இயல்பில் அது  , எந்த தடுமாற்றமும் இன்றி நிகழ்வது . இயற்கையின் விசையை போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...