ஶ்ரீ:
பதிவு : 318 / 485 / தேதி :- 23 ஏப்ரல் 2018
* யானை *
“ நெருக்கத்தின் விழைவு ” - 13
விபரீதக் கூட்டு -04
முன்னாள் அமைச்சர் ஆனந்த பாஸ்கர் - எனது அரசியல் களத்தில் ஒரு முக்கிய ஆளுமை . சண்முகம் அணியில், நான் தவிற்க முடியாத இடத்தை அடைய எனக்கு பெரிதும் உதவியவர் . எனது பல அரசியல் நிலைபாட்டிற்கும், நான் என்னை எங்கும் நானாக நிறுவிக்கொள்ளும் வாய்பை அது எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது , அதற்கு அவர் என்மீது கொண்டிருந்த ஆழமான நட்பு முக்கியமாக அமைந்தது . அந்த நட்பினால் அனைவரும் என்னை தனித்து பார்க்க மறந்து , எப்போதும் அவருடன் இணைத்தே பார்த்தனர் , பொருள் கொண்டனர் . அது எனக்கு அப்படிப்பட்டதொரு அடையாளத்தை ஏற்படுத்தி நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்திருந்தது. அரசியலில் உள்ள பலருக்கு பலவிதமான முகங்கள் உண்டு . ஆனந்தபாஸ்கருக்கும் அப்படித்தான். அவரது தடாலடியாக பேசும் குணமும் , யாருக்கும் கட்டுப்படாத செயல் சுதந்திரமும் உள்ளவராக அறியப்பட்டார் .அனைவரும் என்ன காரணத்தினாலோ அவரை அஞ்சினர் .
புதுவையில் பெரும் பொருளியல் பலமும் , தொழில் பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்ததால் . அரசியலால் அவருக்கு அப்போது ஆகவேண்டியது ஒன்றில்லை . இலக்கில்லாத பயணம் . அதை ஒரு விளையாட்டைப் போலவே எப்போதும் ஆடினார் . ஆறடி உயரமும் , பருமனும் , கட்டில்லாத பாணியில் எங்கும் நுழையக்கூடியவராக , பலருக்கு அவர் சிம்ம சொப்பணமாக, எளிதில் யாரும் நொருங்க முடியாத ஆளுமையாக அறியப்பட்டவர், என்ன காரணத்தினாலோ என்மீது பெரும் மதிப்பை வைத்திருந்தார் . அதற்கு என்ன காரணம் என எனக்கு தெரியாது.
அவரை நான் எனது இரண்டாவது அரசியல் நுழைவிற்கு சண்முகம் வீட்டிற்கு வந்திருந்த புதிதில் அறிமுகம் செய்துகொண்டேன் , முதலில் நெருங்க அனைவருக்குமான தயக்கம் எனக்குமிருந்தது , அவர்தான் அதை கடந்து என்னிடம் வந்தார் . எல்லோரும் அடையும் தயக்கம் எங்கு எப்படி உடைந்து போனது என்பது எனக்கு நினைவில்லை . சந்தித்த முதல் கணத்திலிருந்து எந்த தயக்கமும் இன்றி அவர் மிக இயல்பாக என்னிடம் உரையாடியது ,எனக்கு சட்டென அவருடன் ஒரு நெருக்கத்தை கொடுத்துவிட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக