https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 2 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 298 . * உருவிலி *

ஶ்ரீ:



பதிவு : 298 / 464 / தேதி :- 02 ஏப்ரல்  2018


* உருவிலி *





ஆளுமையின் நிழல்   ” - 44
கருதுகோளின் கோட்டோவியம் -03









தலைவரின் தேர்தல் தோல்வி பெரும் மனசோர்வை தந்திருந்தது . அடுத்து நான் திட்டமிட்டிருந்தவைகளை உடனடியாக செயல்படுத்துவதற்கு தேவை எழாததால் அந்த சோர்வு என்னை சூழ்ந்து கொண்டது . மனம் உற்சாகப்படும் பிறிதொரு செயல்பாட்டின் வழியாகவே நான் என்னை எப்போதும் மீட்டுக்கொள்வேன் . அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பு , இலவச விமான டிக்கெட் . அதை ஐபயோகித்து சில நாட்கள் வெளிநாடு சென்று செலவிட முடிவு செய்தேன். முதலில் எனது மனைவியை அழைத்து செல்வது பற்றிய எண்ணமெழுந்தது  . அதில் சிக்கல் ஏர் இந்திய நிறுவனம் சென்று வருவதற்கான பயண சீட்டை மட்டும்தான் தருகிறது . அங்கு தங்குவதற்கு மற்றும் இதர செலவுகளை நாம் பார்த்துக்கொள்ள வேண்டியடியதுதான் . தனித்து ஒரு பயணத்தை நிகழ்த்த நான் விழையவில்லை . மனைவியுடன்  செல்வது அன்றிருந்த குடும்ப சூழல் சரியாக படவில்லை , மேலும் மனைவியின் உடல்நிலை, போன்றவை வெளிநாட்டு பயணத்திற்கான உற்சாகத்தை  கொடுக்கவில்லை . நானும் வல்சராஜும் செல்வது என்று முடிவானது

எங்கு செல்வது என்கிற கேள்வி எழுந்ததும் . வல்சராஜ் இரண்டு திட்டத்தை முன்வைத்தார் ஒன்று சிங்கப்பூர்அங்கு யாருக்கும் யாரெயும் தெரியாது . அனைத்து செலவுகளையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் , துபாய் செல்வதாக இருந்தால் அங்குள்ள அவரது நண்பர்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள் . “நீ சொல்  உன் முடிவை பொருத்ததுஎன்றார் .எனக்கு துபாய் செல்வது சரி எனப்பட்டது . இருவரும் துபாய்க்கு பயணப்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத்துவங்கினோம்

எனக்கு பாஸ்போர்ட் இல்லை . முதலில் அதை பெற வேண்டும் என துவங்கி மிக குறுகிய காலத்திலேயே அது ஏற்பாடு செய்யப்பட்டது . “கோழிக்கோடுவிமான நிலையத்திலிருந்து கிளம்பி  செல்வது என முடிவானது . புதுவையிலிருந்து கேரளாவிற்கு அருகிலுள்ள மாஹிக்கு நேரடி ரயில் இல்லாததால் , காரில் சேலம் சென்று பின் அங்கிருந்து விடியற்காலை  மாஹியை அடைந்தோம். சிறிது நேர ஓய்விற்கு பிறகு காலை வல்சராஜ் வீட்டு , கேரளா குழைப்புட்டு ,கடலை குழம்பு , பப்படம், வாழைப்பழம் கேரள பாணி  காலை உணவை முடித்து  “கோழிக்கோடுவிமான நிலையம் வழியாக துபாய்ககு பயணமானோம் .  

துபாய்கோழிக்கோடுவிமானநிலைத்திலிருந்து மூன்று மணி நேர பயணமாகஷார்ஜாவிமான நிலையம் அடைந்தத போது மாலை 4:00 மணியாகி இருந்தது . இரு நாட்டிற்குமான நேர வித்தியாசம் 2:30 மணி நேரம் துபாய் பின்னால் இருந்தது . ஐந்து நாடுகள் இணைந்து ஒரு  நாடான துபாய்க்கு பத்துநாள் பயணமாக ஒருங்கி இருந்தோம்  ,அந்தப் பயணத்தில் வல்சராஜைடனான எனது நட்பு ஆழமாகி வேர்விட்டது . அங்கிருந்த அந்த பத்து நாட்கள்அவரது நண்பர்களின் செய்த உபசரிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாதது . வல்சாரஜின் நண்பர்கள் வட்டம் அவரது ஒழுகும் முறையிலிருந்து எழுந்தது . முழுநேர அரசியல் களப்பனியில்அமைந்த தொடர்புகளை சிறந்த முறையில் உயிர்ப்புடன்  வைத்திருப்பதும் ஒன்று . அது அவருக்கு இயல்பில் இருந்தது .

நான் துபாய் பயணத்தை பற்றி இங்கு விவரிக்கப் போவதில்லை . இந்த பதிவு அதை சொல்ல வந்ததல்ல. மிக முக்கியமான நிகழ்வாக நான் கருதும் சில நிகழ்வுகளுக்கு மத்தியில் இது நிகழ்ந்ததால், இங்கிருந்து எழுந்த சில விஷயங்கள் பின்னாளில் அரசியல் சம்பந்தப்பட்டதாக மாற்றமடைந்ததால் , இதை பற்றியும் கொஞ்சம் விவரித்தேன் . அது எனது முதல் வெளிநாட்டு பயணம் . அந்த பத்துநாள் பயணத்தில் புதுவை அரசியலில் அடுத்து செய்யவேண்டியதும் பற்றி நான் தனிமையில் சிந்திக்க , சில நடைமுறை அரசியலை அறிந்து அந்த பயணம் பெரிதும் உதவியது  . 

வல்சராஜுடனான எனது திடீர்ப் பயணம் எதிர்ப்பாளர்களுக்கு திகைப்பையும் , அணுக்கர்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்திருந்தது . அரசியலின் பலவித வேடிக்கைகளில் அதுவும்  ஒன்று .  “செல்வாக்குஎன்பது பிறரின் அச்சத்தில் , விழைவில் ,எதிர்பார்ப்பில் இருந்து எழுவது . உருவமற்றது , ஆனால் உணர்வில் நிறைவது , அவரவர் புரிதல்களினால் ஆனது , சமயத்தில் நமக்கே , அதை அவர்கள்  அறிமுகம் செய்து வைப்பதும் நிகழக்கூடுவது  . அது நாம்மை பிரமாண்டமானவனாக உயரத்தில் நிறுத்துவது அல்லது அனாதையாக தெருவில் விடுவது. அது முழுவதும் பிறிதொருவரின் கற்பிதம் மட்டுமே . நமக்கும் அதற்குமாக எந்த சம்பந்தமுன்றி , அது தனித்து நிற்பது . நாம் தேவைப்பட்டால் அதை ஏற்று உபயோகிக்கலாம் . ஒரு நாள்  அதனாலேயே கிழித்தும் எறியவும் படலாம்.

வல்சராஜின் அரசியலை குறித்த பிறிதொரு முகத்தையும் , தொகுதி அரசியலின் மற்றொரு பரிமாணத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது. தொகுதி அரசியலில் எதிர்ப்பென்பது ஒருவித பாவனை மட்டுமே . அது ஒரு காலமும் யாருக்கும் நேரடியாக எதிர்நிற்ப்பதில்லை . வேட்பாளர் குறித்த நிலைப்பாடுகளே தொகுதி அரசியலையும் ,அதை முன்னெடுப்பவரின் திறனையும் வெளப்படுத்துபவை. அவை பலவித சமரசபுள்ளிகளில் இணைக்கப்பட்டவை . அரசியல் சரிநிலைகளால் ஆனவை  . விதிவசத்தால் பார்த்துவிடும் பொது மக்களை கடும் திடுக்கிடலுக்கு தள்ளக்கூடியது .


பத்துநாளுக்கு பிறகு துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு மீளவும்  “கோழிக்கோடுவழியாக சேலம் வந்து அங்கு முன்பே வரச்சொல்லியிருந்த எனது ஓட்டுநர் முனுசாமியுடன் சேலத்திலிருந்து புதுவை வந்து சேர்த்தேன் . இந்த பயணம் வல்சராஜை எனக்கு மிக அணுக்கமாக மாற்றியது. அவரது அரசியல் ஆளுமை எப்படிப்பட்டது என்பதுடன் , அவரால் எந்த ஆழத்திற்கு செல்ல முடியும் என்பதையும் , அவரது அரசியல் மேலாண்மை அனைத்தையும் நான் மிகத்தெளிவாக அறிந்துகொண்டது அப்போதுதான் . அவரை பற்றிய சித்திரத்தில் சிறிய மறுபாடுகளாக நான் நேரில் கண்டவை இருந்தது அடிப்படையில் நான் என்ன யூகித்திருந்தேனோ அதிலிருந்து பெரிய மாற்றமில்லை என்பதுதான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக