https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 19 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 315 * இருளில் பார்வை *

ஶ்ரீ:பதிவு : 315 / 481 / தேதி :- 19 ஏப்ரல்  2018

* இருளில் பார்வை *


நெருக்கத்தின் விழைவு ” - 11
விபரீதக் கூட்டு -04
வல்சராஜ் அறையில் நடந்த உரையாடலுக்கு பிறகு நான்  தனிப்பட்ட முறையில் வந்து சந்தித்து அந்த உதவியை கேட்டுப் பெறுவேன்  என வைத்தியநாதன்  எதிர்பார்த்திருக்கலாம் . அவர் நீண்ட நாட்களாக காத்திருந்த சந்தர்ப்பம் அது . அவருக்கு என்னிடம் சொல்ல வேண்டிய அறிவுரைகள் ஏராளமாக இருந்தது . முதலில் எனதுஅடங்காபிடாறித்தனம்அவர் வரையில் , அரசியலில் இலக்கில்லாமல் பயணிப்பவன் அதற்கு  லாயக்கற்றவன் . அதே சமயம் ஆபத்தானவன் , பொதுவெளியில் நிகழும் எந்த ஆட்டத்திற்கும் வரமாட்டான் . வளர விரும்பும் பலருக்கு தடையாக அவர்களின் பாதையில் நிற்பவன், எந்தவிதமான உடன்பாட்டிற்கும் வராதவன் , ஒவ்வொரு நகர்வையும் சிக்கலாக்குபவன் , இப்படி என்னைப்  பற்றி  அவருக்கென ஒரு நியாயம் இருக்கவேண்டும் . அனைத்து விதமான நகர்வுகளும், அதன் கருத்தியல்களும் அரசியலில் அங்கீகாரம் பெற்றதே, என்பதால் அவரவர்களுக்கு அவர்களது கருத்தியலுக்கும்  தனியான ஒரு பார்வை இருப்பதில் தவறில்லை. அநேகமாக இன்றைய அரசியலில் இத்தகைய கருதியால்தான் பெரும் வெற்றிகளை குவித்திருக்கிறது .  

வல்சராஜ் தலைமை பொறுப்பிற்கு வந்த நாள் முதலாக வைத்தியநான் கொண்டுவந்த  பல சமரச திட்டங்களை ஏற்காதது குறித்து அவருக்கு என்மீது கடும் அதிருப்தி  இருப்பதை நான் அறிவேன் . அரசியலில் அவரின் இருப்பு பற்றி எனக்கு வேறுவிதமான மதிப்பீடுகள் இருந்ததே அதற்கான காரணம்  , அதன் பொருட்டு நான் அவரை எனது அரசியலில் எங்கும் கணிசிக்கவில்லை . அது அவருக்கான எனது அறைகூவலாக அவர் பார்த்திருக்கலாம் . அவருடன் இணைந்து செயல்பட பொதுத் தளமென ஒன்றில்லை. மேலும் எனது வழிமுறைகள் அவரது பாதைக்கு நேர் எதிர்புறம் பயணிப்பது .

என்னைப்பற்றிய இவ்வளவு தீவிரமான எண்ணம் அவருக்கு இருக்கும் என நான் முதலில் அவதானிக்கவில்லை. காரணம் அரசியலில் நான் அவ்வளவு பெரிய சக்தியில்லை என்பது எனக்கே தெரியும். அரசு மற்றும் கட்சி ரீதியில் உயர்பதவிகளில் இருப்பவர்களின் தளத்தில் அரசியல் நகர்வுகளை செய்யும் ஒருவருக்கு , நான் பணிந்து போகாதது நிலையழிதலை கொடுக்கிறது , என அப்போது யாராவது என்னிடம் சொல்லியிருந்தால், நிச்சயமாக நான் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன் . ஆனால் அதுதான்  நிஜம். அதை வேறொரு சந்தர்ப்பத்தில் நானும் அவரும்  நேருக்கு நேர் தலைவர் எதிரில் மோதிக் கொண்டபோது எனக்கு தெளிவாக புரிந்து போனது

தில்லி பயணம் சம்பந்தமாக , அவரது பொருளியல் உதவியை நான் எதிர்பார்த்து அவரை சந்திக்க வந்தால் என்னிடம் சொல்லுவதற்கு ஒருகருத்தியல் அரசியல்   அவருக்கு இருந்திருக்கலாம்  . எனக்கு சரியான இடத்தில் அழுத்தம் கொடுக்க இது நல்ல சந்தரப்பமாக அவர் நினைத்திருக்கலாம் . அதை எதிர்பார்தது அவர் எனக்காக காத்திருந்தார் . நான் அவரை சந்திக்காதது , அவருக்கு  ஏமாற்றத்தையும் , கொந்தளிப்பையும் உருவாக்கி விட்டது. அதன் வெளிப்பாடே அவர் சென்னை ரயில் நிலைத்தில் என்னிடம் நடந்து கொண்டது. அதன் விளைவாக நான் ஓடும் ரயிலில் இருந்து குதிக்க வேண்டியதானது . அதன் தொடர்ச்சியாக பல அரசியல் நிலைபாடுகள் மாறிப்போனதறகும் அது மறைமுக காரணமாக இருந்திருக்கலாம் என இப்போது நினைக்கிறேன் .

நான் அதை வாசராஜுக்கான உதவி என் பார்த்ததால் , தனித்து இது சம்பந்தமாக அவரிடம் நான் பேச ஒன்றில்லை . என்கிற புரிதலில் இருந்தேன் . நான் அவரை நோக்கி வருவேன் என காத்திருந்திருக்க வேண்டும் . அது நிகழாததால் , நான் ஆணவம் கொண்டவனாக அவருக்கு ஒருபோதும் பணிய மறுப்பவனாக தோற்றத்தை அது உருவாக்கி இருக்கலாம் . அது என் மீது சினம் உருமாற்றமடைந்து , கடைசீ நிமிடத்தில் கழுத்தறுப்போதுபோல நடந்து கொண்டார் . இது எனக்கான அறைகூவல்  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...