https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 313 * எல்லைகோடுகளின் நிஜமின்மை *

ஶ்ரீ:




பதிவு : 313 / 479 / தேதி :- 17 ஏப்ரல்  2018


* எல்லைகோடுகளின் நிஜமின்மை *



நெருக்கத்தின் விழைவு ” - 09
விபரீதக் கூட்டு -04




பிறிதொருவரை சார்ந்து இருப்தை தவிர அரசியலில் வேறு யுக்தியற்றவர்கள் மிக நுண்மையான அவதானிப்புகளை கொண்டவர்களாக இருப்பதில் வியப்பில்லை . மைய அரசியல் இருப்பவர்களை  விடவும் அவர்கள் ஆழம்கொண்டவராக இருப்பார்கள் . நம்மை விட அவர்களின் பார்வையின் தொலைவுமகள் மிக நீண்டவைகள் . வைத்யநாதனின் நுண் அவதானிப்புகள் அவருக்கு இயல்பில் அமைந்திருந்தது , அதன் கணிப்புகளை ஒட்டி ,தன்னை பற்றியும் தன்னை சார்பாவர்களின் எதிர்காலம்  பற்றியும் அவருக்கு தெளிவா கணக்குகள் இருந்திருக்க வேண்டும் .

அந்த வகையில என்னைவிடவும் , எனக்கான எதிர்காலம் குறித்து , அவருக்கு தெளிவான பார்வை இருந்தது என்பதை பலகாலம் கழித்தே நான் அறிந்து கொள்ள முடிந்தது , அவர் என்னிடம் நடந்து கொண்ட முறையில் இருந்த வண்முறை, என்னை தன் கட்டுக்குள் கொண்டுவரும் அவருக்கான அவசரம் என்பதை நான் கணிக்கத் தவறினேன் . எனக்கான பாதைகள் இன்னும் உருவாகி வரவில்லை என்பதே  என்னுடைய புரிதலாக அபோது இருந்தது , எந்த எதிர்பார்பும் இல்லாத செயல்பாடுகளுக்கு ஒரு விளைவு இருந்ததை என்னை விட வைத்தியநாதன் சரியாக புரிந்திருந்தார் , என் விஷயத்தில் அவர் செய்த பிழை என்னை தனித்து கணக்கில் எடுக்க தவறியது . பிறிதெவரையும் போல அவரின் நிர்ப்பந்தம் என்னை அவருக்கு பனியசெய்து விடும்என்கிற தவறான கோட்பாட்டின்படியே அவரது விளையாட்டுக்கள் என்னை சுற்றி இருந்தன , அதற்கு என்னிடமிருந்து எந்த எதிர்விளைவும் எழாதபோது , அவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் . ஆனால் ஊழ் அவர் என் மேல் மேலும் அழுத்தம் கொடுக்க போக அது முற்றாக உடைந்து போனது .ஒரு கட்டத்தில் நான் வைத்தியநாதனால் கடுமையாக  சீண்டப்பட்டபோது , அவர் எல்லோருக்கும் செய்வதை போல ஒன்றை அவருக்கே நிகழ்த்தி காட்டினேன். என்னை அதன் பிறகே மிக சரியாக புரிந்து கொண்டார் 

1999 நடந்த பாராளுமன்ற தேர்தலில் சண்முகத்திற்கும் மரைகாயருக்குமான சீட்டு விஷயத்தில் எனது செயல்பாடுகளில் நான் அறியாது அவர் எனது கட்சி தோழர்களை வைத்து செய்த திரிபு நாராயணசாமியை எனக்கு முற்றும் எதிர்நிலையில் கொண்டு நிறுத்தியது. அதற்கு நான், கொடுத்த விலை அதிகம்நிகழ் அரசியலில் உண்மையின் வேரை எவரும் எளிதில் கண்டுவிட முடியாது. வைத்தியநாதன் , தனது செயல்பாடுகள் வழியாக தான் எவராலும் எளிதில் கடக்க முடியதவராக வெளிப்படுத்திக் கொண்டார் .அது உண்மைதான் என்கிற தோற்றத்தை உருவாக்கி எடுத்தார் . மாநில முதல்வரும் அஞ்சும் ஆளுமையென அவர் அப்போது பேசப்பட்டதை நான் அறிவேன் , அது ஒரு கோணத்தில் உண்மையாக கூட இருக்கலாம் .

புதுவை  அரசியலில் அவரது பாதிப்பு இன்றுவரை கூட நீடிக்கிறது என்கிற பிரம்மையை  அவரும் விடாது கட்டமைத்து வருகிறார் . என்னுடனான அவரது எல்லையை நான் மிக கவனமாக தீர்மானித்தேன். எனக்கென அரசியல் எதிர்பார்ப்பு ஏதுமில்லை என்பதால் அவரது அரசியல் பாசாங்குகளுக்கு நான் இரையாவதில்லை என்கிற முனைப்போடு இருந்தேன். எவ்வளவு ஜாக்கிரதை உணர்வு மேலோங்கினாலும் தொழில் முறை அரசியல்வாதிகளின் கணக்கில் , ஏமாற்றப்படுவிதிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பிவிட முடியாது என்கிற பாடத்தைத்தான் நான் சென்னை ரயிலநிலையித்தில் அடைந்தேன். அவர் எதிர்பார்த்தது நான் அவரின் கருணைக்கு இரைச்சி நிற்பேன் என. நான் யாரிடமும் கெஞ்சி நின்றதில்லை . அதன் விலையாக ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்தேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்