https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 18 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 314 * முதல் விதை *


ஶ்ரீ:



பதிவு : 314 / 480 / தேதி :- 18 ஏப்ரல்  2018


* முதல் விதை *


நெருக்கத்தின் விழைவு ” - 10
விபரீதக் கூட்டு -04






நான் வைத்தியநாதனை நம்பி இருக்கக்கூடாது . அவருடான எனது உறவை ஒரு எல்லைக்குள்ளாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற , எனது அடிப்படை தீர்மானத்தை எந்த புள்ளியில் மறந்தேன் என எனக்கே தெரியவில்லை . அரசியல் என்பதுசர்வ நேரமும் புலன்கள் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதிகளில் ஒன்று . ஒரு கட்டத்தில் நான் விழிப்பற்று இருந்தது ,இத்தகைய ஆபத்தை நான் வலிந்து ஏறிட்டுக்கொண்டதானது .  

வல்சராஜ் அரையில் தில்லி செல்லுவது குறித்த , எனது உரையாடல் நிகழ்ந்தபோது அங்கு வைத்தியநாதன் இருந்தார் . பெரும்பாலும் அவர் வல்சராஜுடன் அவரது அறையில் இருப்பவர்தான் , அன்றும் இருந்ததால் அது  எனக்கு வித்தியாசமாக படவில்லை . நான் என்ன செய்யப்போகிறேன்  என்பது குறித்து அவருடன் விரிவாக பேசினேன்அதில் பல உட்கட்சி அரசியல் நிலைகளை பற்றியும் எனது வரிவான அவதானிப்புகளும் இருந்தன .அனைவருக்கும் தில்லிக்கான டிக்கெட்டை தலைவர் எடுப்பதாக இருந்தது, மற்றைய செலவுகளுக்கு பற்றி வல்சராஜ்உடன் பேசிக்கொண்டிருந்த போதுதான் ,தான் அதை செய்வதாக வைத்தியநாதன் சொன்னார்

முன்னாள் அமைச்சர் ஆனந்த பாஸ்கரனும் அப்போது உடன் இருந்தார் , அன்று நிகழ்ந்தது எனக்கும் வைத்யநாதனுக்குமான தனிப்பட்ட உரையாடல் அல்ல என்பதால் , அவர் தாமாக முன்வந்து உதவுவதாக சொன்னதும்  , வல்சாராஜ் மௌனமாக இருந்ததும்  அதற்கான அங்கீகாரமானது . நான் விருப்பாத போதும் என்னால் அதை மறுக்க முடியவில்லை . அதை அங்கு என்னால் மறைக்கவும் முடியாது . மேலும் அனைவரையும் வைத்துக்கொண்டு அவர் சொன்னதால் , அதை எனக்கானதாக பார்க்கவில்லை

அவரிடம் நான் கேட்டதாகாதும், வல்சராஜ் முன்பாக  அதை அவர் சொன்னதால் , அவரிடம் வல்சராஜ் முன்னமே பேசியிருக்கலாம் என்கிற புரிதலுக்குத்தான் நான் வந்தேன்ஆனால் அவர் தனது வழமையான அரசியல் சித்து விளையாட்டை அவர் என்னிடமும்  தொடங்கிவிட்டார் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை . அங்கு எனக்கும் அவருக்கமான  நெருக்கம் இருப்பதாக ஒரு தோற்றம் வால்ராஜிடம் காண்பிக்கப்பட்டு இருக்கலாம்  . இது அதன் பிறிதொரு கோணம் என நான் அப்போதே புரிந்திருந்தாலும் , அதில் எனக்கு அக்கறை இல்லை . அது அவருக்கும் வல்சராசுக்குமானது , எனக்கு சம்பந்தமில்லாதது, என எண்ணினேன் .

இது சம்பந்தமாக அவரை  நான்  தனிப்பட்ட முறையில் வந்து சந்திப்பேன் என அவர் எதிர்பார்த்திருக்கலாம் . அதுதான் அவருக்கான சந்தர்ப்பம், என்னுடன் அவர் நிகழ்த்த விரும்பிய உரையாடலை அல்லது பேரத்தை பற்றிய திட்டம் அவருக்கு இருந்திருக்கலாம்  . பொருளியல் உதவியை ஒருவரிடம் எதிர்நோக்கும் நேரத்தில் நமக்கு கொடுக்கப்படும் அழுத்தம் வலுவானது . எந்த காரணம் கொண்டும் அவர்கள் சொல்லுவதற்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தம் இயற்கையில் எழுவதை யாரும் தவிர்க்க இயலாது . அவர் எனக்காக காத்திருந்தார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...