https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 316 * அழகியலுக்கு அப்பால் *


ஶ்ரீ:பதிவு : 316 / 482 / தேதி :- 20 ஏப்ரல்  2018

* அழகியலுக்கு அப்பால்  *நெருக்கத்தின் விழைவு ” - 12
விபரீதக் கூட்டு -04
தில்லியில் ஆகும் செலவிற்கான பணத்தை  நான் முன்னமே ஏற்பாடு செய்திருக்க வேண்டும் . ரயில் புறப்பட்டு சென்னை ஸ்டேஷனை தாண்டுவதற்குள்ளாக நான் ஓடும் ரயிலிலிருந்து குதிக்க வேண்டியதாகிப்போனது . அதை விட பைத்தியக்காரத்தனம் பிறிதொன்றில்லை . நான் கீழே குதிக்கும் போது பின்னல் கேட்ட அந்த சப்தத்தை நான் வாழ்நாளில் மறக்க முடியாதது . நல்ல வேளையாக அடிபடவில்லை . வல்சராஜ் கூப்பிட்டபோதே விமானத்தில் சென்றிக்கலாம் இந்த அர்த்தநாரியை நம்பியது என் குற்றம் . அனைத்தும் பாழானது . பலவித மனநிலையில் , புதுவைக்கு திரும்பிக் கொண்டிருந்த எனது காரை அழைக்க முடியாது போய் , பிறிதொரு வாடகை காரில் புதுவையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன் .

அந்த இரவு பயணத்தை எளிதில் மறக்க முடியாது . வழி முழுவதுமாக எனக்குள் நான் இரண்டாக பிளந்து தனக்குள் தானாக  மிக ஆழ்ந்து மனம் தர்கித்து கொண்டிருந்ததுஎனது முயற்சி இல்லாமல் அது ஒருவித கழிவிரக்கத்தை நோக்கி நகர்ந்து செல்வது தானாக நிகழ்ந்துகொண்டே இருந்தது . நான் எனது சக்தி முழுவதும் திரட்டி அதை நிறுத்துவதற்குத்தான் முயன்று கொண்டிருந்தேன் . சற்று நேரம் மட்டுப்படும் சிந்தனை , சில வினாடிகளில் நான் ஏற்படுத்திய கட்டுக்களை உடைத்துக்கொண்டு மீளவும் தனது நோக்கத்தை நிகழ்த்திக்கொண்டே இருந்தது

வைத்யநாதனை நோக்கி  செல்லாதது எனது ஆணவம் என்றது ஒன்று . இல்லை என்றது பிறிதொன்று , அவைஇரண்டிற்கும்மத்தியில் நான் என்னை தொகுத்துக் கொள்வதன் பொருட்டு அவற்றை கூர்ந்த படி இருந்தேன் . அவருக்கு என்னிடம் சொல்ல ஏதோ இருந்தது , அதை சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனத்தினாலேயே இந்த நிலைக்கு வந்து சேர்ந்தார் . நான் சண்முகத்தை நாடி அரசியலுக்கு வந்தவன் . அவருக்கு உதவுவதன் வழியாக எனது அரசியல் நிலை பெறுகிறது  . அவரும் சண்முகத்தை ஒட்டியே தனது அரசியலை நிகழ்த்துகிறார் . இதில் தனித்து எனக்கென சொல்ல அவரிடம் என்ன இருக்க முடியும்

அறிவுரைகள் இலவசமானது. யாரும் யாருக்கும் எதையும் சொல்ல விழைபவர்களே . சண்முகம் தாண்டி நான் வல்சராஜைசார்ந்தது எனது தனிப்பட்ட விழைவுகளுக்கான அரசியல் இருந்தது . வைத்தியநாதன் ஊடுபாவா நினைப்பது இங்குதான் . அது எனது களம் இங்கு அவர் ஊடுபாவுவதை நான் எப்படி அனுமதிக்க முடியும் . நானும் வால்ராஜுமே நல்ல நண்பர்களை போல இருக்கிறோம் . வைத்நியநாதனும் அதே அடிப்படையில்தான் இங்கு பழகுகிறார் . அங்கு வெளிப்படையாக என்னிடம் சொல்ல தயங்கும் அரசியல், வேறு இடங்களில் நிலை கொள்வதாக இருக்கும் . அதற்கு பொது நோக்கு என ஒன்று இருக்க வாய்ப்பில்லை . எனது அரசியல் விழைவும் அழகியலுமானது . அவருடையதோ கணக்குகளால் மட்டுமே திகழ்வது. அதனால் அங்கு சென்று நிற்க வேண்டிய தேவை எனக்கு இல்லை . மனதால் ஆற்றுப்படுத்தப்பட்ட பிறகு ஒருவாறு சமாதானமடைந்தேன் . நான் செய்தது அனைத்து வழிகளிலும் சரியே . புதுவை எல்லையை அடைந்துவிட்டிருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...