https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 7 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 303 * கிளிக் *

ஶ்ரீ:

பதிவு : 303 / 469 / தேதி :- 07 ஏப்ரல்  2018

* கிளிக் *
நெருக்கத்தின் விழைவு ” - 02
விபரீதக் கூட்டு -04
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்திய சமூகத்தின் அத்தனை உள்முரண்பாடுகளும் ஒரு பொது இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு மெல்ல மெல்ல சமரசப் படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தன்னுடைய ஆன்மபலத்தை முழுக்க காந்தி இந்த சமரசத்துக்கே செலவிட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் சமரசம் செய்திருக்கிறார். அவர் வரும்வரை உயர்மட்டம் சார்ந்து நடந்து வந்த போராட்டத்தை அடித்தளம் வரை கொண்டு சென்றிருக்கிறார். சமூகத்தின் அத்தனை தரப்புகளையும் போராட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்

பல வருடங்களுக்கு முன்பு மூத்த கம்யூனிஸ்டுத்தலைவரான சி.அச்சுதமேனன் என்னிடம் சொன்னார். சுதந்திரப் போராட்டம் வழியாக காந்தி இந்திய சமூகத்தை அரசியலுக்குக் கொண்டு வந்தார். இந்தியாவின் கோடானுகோடி அடித்தள மக்களுக்கு அரசியல் பங்கேற்பு என்னும் அதிகாரம் அவர்களுக்கிருப்பதை உணர்த்தினார். அந்த அடித்தளம் மீதுதான் இந்தியாவில் இடதுசாரி அமைப்புகள் உருவாக்கப்பட்டன என்று. இந்திய தலித் இயக்கமும் அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டதே. அதை அம்பேத்காரும் உணர்ந்திருந்தார் என்கிறது ஜெயமோகனின்இன்றைய காந்தி

*****

ஆழ்மனத்தை நோக்கிய மற்றும் நேரடியான உரையாடலின் அளவிட இயலாத சக்தியை இது சொல்லுகிறது . உரையாடலின் மகத்துவத்தை அப்போது அறிந்தவனல்ல , ஆனால் இயல்பில் நான் உரையாடல்கள் மூலமாகவே என்னை தொகுத்துக் கொண்டதுடன் , பலரை என்னுடன் இணைத்தும் கொண்டிருக்கிறேன்  . என்னை சுற்றி இருந்த சிலர் என்னுடன் மிக சிறப்பாக உரையாடக் கூடியவர்கள் . அரசியலை கருத்தியில் நிலைகளில்  முன்னிறுத்தி வளர்த்தெடுப்பதில் பெரும் விழைவில் அப்போது இருந்தேன். இதற்கு எதிர்வினைகளும் உண்டு , பலருக்கு இந்த ஓயாத உரையாடல் என்னைப்பற்றி ஒரு இளிவரளைப் போல தோன்றியது . அவர்கள் நேரே என்னிடம் அதை நிறுத்தச் சொல்லியும் இருக்கிறார்கள் . ஆனால் அவற்றை என்னால் நிறுத்த முடியாது , காரணம் அரசியலில் அதுவே பலத்தரப்பட்டவர்களை இணைக்கும் விசை என்பதை, பாவம் அவர்கள் அறியமாட்டார்கள் . சில நேரங்களில் அவர்கள் சொல்லுவதைப் போல அரசியலுக்கு அவை அவசியமற்றதாக இருக்குமோ என சஞ்சலப் பட்டிருக்கிறேன் , அவை முற்றாக நீங்கி நான் சரியான பாதையிலே பயணப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்கிறேன் 

கட்சி அரசியல் , உரையாடல்களினாலும் மற்றும் செயல்பாடுகளினால் ஆனது . செயல்படுவதில் ஆர்வமுள்ளவர்கள் , உரையாடலுக்குள் வருவதில்லை . அந்தச்சூழல் அவர்களை தனிமைபட்டு போவதாக உணரச்செய்திருக்கலாம். அதன் விளைவாக மாற்று வழிகளை தேடும்போது , அவரகளுக்கு என்னைவிட என் நண்பர்களை தொடுவது சுலபமாக இருந்திருக்க வேண்டும் . நண்பர்கள் என்னுடன் அரசியல் களத்தில் வெளிப்படாத வரை அது நிகழவில்லை

சென்னையில் நான் ரமேஷ் சென்னித்தலாவை சந்தித்த போது புதுவை மற்றும் தில்லி அரசியல் களத்தில் என்னுடைய தொடர்பும் , முக்கியத்துவமும் , என்னை பற்றி புரிதில் மாற்றமடைந்தும் நண்பர்கள் என்னிடத்தில் அதுவரையிலிருந்த இடம் , திரிபடைந்து அவர்களுக்கான விழைவாக அது உருமாறியிருக்கலாம் . இந்த சூழலில் எங்கோ அந்த இணைவு தற்செயலாகவோ அல்லது திட்டமிடபட்டோ நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லது எனது பிறழ்வும் அந்த கூட்டு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் நண்பர்களும் , கட்சி தோழர்களுக்குமான இணைவு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியது . நான் அதற்கு முற்றாக எதிர் நிற்பவன் . அது நான் எதிர்நோக்காது நிகழ்ந்தது

அரசியல்  திட்டமிடல்களுக்கும் , நகர்வுகளுக்கும்  பல நுண்கூறுகள் அடைப்படையாக இருப்பவை , அவை பல்வேறு தளத்தில் ஒருவருடன் ஒருவர் தொடர்பில்லாத மனிதர்களின் எண்ணங்களிலிருந்தும் , கூற்றிலிருந்தும் எழுவது . அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக , முரண்பட்டதாகவே எப்போதும் இருப்பவை , அவற்றின் உரையாடல்களுக்கு மத்தியில் ஒரு சமரச புள்ளி தென்படுமானால் , அதுவே அரசியல்  முடிவிற்கும்' நகர்விற்கும் அடிப்படையாக அமைந்து விடுபவை . அதை ஒட்டியே அனைத்து முன்னெடுப்புக்களும் பின்னப்பட்டிருக்கும்

ஒரு தலைமையை  பிறிதெவரிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டுவது அவர்களது அரசியல் முடிவுகள் . அரசியல் முடிவுகள் ஆழ்மனத்திலிருந்து எழுபவையாக , நம்பிக்கை சார்ந்த வெளிப்பாடாக இருப்பதால் , அவற்றிக்கு கருத்து வடிவத்தை எளிதில் கொடுக்க இயலாததால் , அவற்றை முன்கூட்டி விவாதிக்க முடியாது . அது ஒரு ஆழ்மன நம்பிக்கையை மட்டுமே அடிபடையாக கொண்டது . உரையாடல்களின் வழியாக தொகுக்கபட்ட அமைப்பின் முன்னணியில் உள்ள இளம் தலைவர்கள் , தங்களுடன் அவை விவாதிக்கப்படவில்லை என்கிற குறை எழுவது தடுக்க இயலாதது . பல முரண்பாடுகள் எழுவது இங்கிருந்தே .

எடுக்கப்பட்ட ஒரு முக்கிய அரசியல் நகர்வை தொடங்குகையில் அது  எங்காவது ஒரு புள்ளியில் உரையாடல்களாக மட்டுமே அவற்றை வெளிப்படுத்த இயலும் . நமது எதிர்நிலையாளர்கள் தங்களின் திறமையால் அதேபோன்ற உள்மனத்தினால் இயக்கபட்டு , அடுத்து நிகழ இருப்பதை யூகித்து விட இயலுமானால் , அவர்கள் அதை முடக்கும் மாற்று நகர்வை செயலுக்கு கொண்டுவருவார்கள் , ஆனால் அதை கடக்கும் சிந்தனையை உள்ளடக்கியே நமது உரையாடல்கள் தொடங்கியிருக்கும்

எதிர் நிலையாளர்களின் முரண் செயல்களினாலும் , கருத்து புரியாமையாலும்  நமது அணுக்கர்களின் பூரண ஒத்துழைப்பும் அதற்கு இல்லாமல் போகும் வாய்ப்பே அதிகம் , அதைஅனுக்கர்களின் எதிர்மறை இயங்குதல்” (click) . ஒரு ஜனநாயக இயக்கத்தில் இது தவிர்க்க இயலாதது . இந்த முரணியக்கத்தால் எந்த முயற்சியும் தொடக்கத்தில் தோல்வியை தருவதாகவே தோன்றினாலும் அதன் பலன் சில காலம் கடந்து தெரிய துவங்கியதும் ,அனைவரின் கருத்தொற்றுமையாக அது எழுந்துவிடும். அதை தொடர்ந்து நாம் நினைத்து வெற்றிபெரும் வாய்ப்பு தானாக எழுந்து வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...