https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 304 * அனுபவப் பாடம் *

ஶ்ரீ:





பதிவு : 304 / 470 / தேதி :- 08 ஏப்ரல்  2018



* அனுபவப்  பாடம்  *


நெருக்கத்தின் விழைவு ” - 03
விபரீதக் கூட்டு -04








வரலாற்றிலும் சமூகச் செயல்பாடுகளிலும் இறுதித்தீர்வு என்ற ஒன்று இல்லை என்ற புரிதல் காந்திய வழிகளின் அடிப்படை தரிசனமாகும். இறுதியான வழி ஒன்றை கண்டடைந்து விட்டேன்அதைத்தவிர வேறெதையுமே ஒத்துக்கொள்ள மாட்டேன் என்ற நிலை ஒரு அபத்தமான அகங்காரமே அன்றி சமூகத்தையோ வரலாற்றையோ புரிந்து கொண்ட ஒன்றல்ல. காந்தி முரணியக்கத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர். எந்த விசைக்கும் இணையான எதிர்விசை உண்டு. அந்த எதிர்விசையுடனான முரண்பாடும் சமரசமும் அடங்கியதே போராட்டம். எந்தப்போராட்டமும் எப்போதும் எதிர்தரப்புடனான பேச்சுவார்த்தைக்குத் தயராக இருந்தாக வேண்டும்.

காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஆங்கில அரசை வேருடன்வேரடி மண்ணுடன் ஒழித்துக்கட்டுவதற்கான ஒன்றாக இருக்கவில்லை. அது பிரிட்டிஷ் ஆதிக்கத்துடனான ஒரு நீண்ட உரையாடலாகவே இருந்தது என்பது இன்று வியப்பளிக்கிறது. எப்போதும் அவர் பிரிட்டிஷாருடன் பேச தயாராக இருந்தார். தன் தரப்பை அவர்களுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தார். அடைந்தார்அடைந்தவற்றை தக்கவைத்துக் கொண்டு மேலும் பேசினார். பிரிட்டிஷார் தன் எதிரிகள் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களை அசுரர்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிக்கவில்லை. அவர்களுக்காகவும் சேர்த்தே தான் போராடுவதாக அவர் சொன்னார்.

அதனால்தான் பிரிட்டிஷாரை இந்திய அதிகாரத்திலிருந்து அகற்ற அவரால் முடிந்தபோதும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையும் பிரிட்டிஷ் நீதிநிர்வாகத்தையும் பிரிட்டிஷ் இதழியலையும் அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது. இன்றும் இந்திய நாகரீகத்தின் செல்வங்களாக அவை நீடிக்கின்றன. யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார். என்கிறது ஜெயமோகனின்இன்றைய காந்தி” 
அரசியல், அதிகாரத்தை நோக்கியதாக அல்லாமல், ஒரு வாழ்வியல் அனுபவமாக , அறிதலின் பேரார்வமாக ஒரு வளரும் அரசியல்வாதிக்கு இருக்குமானால் , அவருக்கு காந்தியை தவிர பிறிதொரு தலைவர் இருக்கவியலாது . தலைமைபண்பியலின் மொத்த உருவாகி வளர்ந்து உலகமெங்கும் கிளைத்தவராக எனக்கு அறிமுகம் செய்து வைத்துஇன்றைய காந்தி”.  ஜெயமோகன் சொல்லும்யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார்என்கிற சொல்லாட்சி நெகிழவைப்பது .

எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவை ஒட்டிய நகர்வுகள், சூழ்தலாக இல்லாமல் , உரையாடல்களாக முன்னெடுக்கையில், எதிர்நிலையாளர்கள் தங்களின் திறமையால் அதை ஊடுபாவுகிற போது, அடுத்தடுத்து நிகழ இருப்பதை அவர்களாலும் யூகித்து விட இயலும் . எதிலும் எதிர்நிலைபாடு ஜனநாயக அரசியலில் அங்கீகரிக்கப்பட்டதுஒவ்வொருவருக்கும் தங்களை முதன்மை படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் , வழிமுறைகளை அவர்களுக்கு அது அளிக்கிறது . ஆனால் அவர்களின் நோக்க  குறைபாடுகளோ , சுயநலம் சார்ந்த உள்லூழல் என்கிற  அடைப்புக்குள் கொண்டு வந்துவிடுகிறபோது , அவர்களை நிராகரிப்பதும், எதிர்ப்பது ஒரு அரசியல் யுக்தியாகிறது , அவசியமாகிறது .

எந்த ஒரு அரசியல் முன்னெடுப்புகளும் எதிர் நிலையாளர்களின் முரண் செயல்களை விட  , கருத்து புரியாமையால் அணுக்கர்களின் ஒத்துழைப்பு மறுப்பே முதல் நிலை தோல்வியாகக் கருதப்படுகிறது, அதைஅனுக்கர்களின் எதிர்மறை இயங்குதல்” (click) என்கிறார் காந்தி . ஒரு இயகத்தின் உள்ள குறுங்குழு அதன் விழுமியத்திற்கு எதிராக செயல்படுவதைகிளிக்எனகிறார்கள். ஒரு ஜனநாயக இயக்கத்தில் இது தவிர்க்க இயலாதது , இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது . இந்த முரணியக்கத்தால் எந்த முயற்சியும் தொடக்கத்தில் தோல்வியை தருவதாகவே தோன்றினாலும் அதன் பலன் சில காலம் கடந்தே உணரப்பட்டு கருத்தொற்றுமையாக அது எழுந்துவிடும். அதை தொடர்ந்து நாம் நினைத்து அரசியல் வாய்ப்பு தானாக எழுவதை ,நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அதற்கு காத்திருப்பு அவசியமாகிறது .

கட்சி அதிகார அமைப்பில் இளந் தலைமைகளை கொண்டுவருவதனூடாக அரசியல் போக்கில் மாற்றங்களை விழைந்தேன் . அது எனது வழிமுறையாக எப்போதும் இருந்திருக்கிறது . ஒரு ஆர்வமிக்க இளைஞனாக  , அனைத்திலும் நுழையும் தன்மையும் , மிக எளிய மனிதர்களுடன் இணந்து செயல்படும் வாய்ப்பும் , அரசியல் நிலைசக்திகளை எதிர்க விழையும் விளிம்பு சமூகத்தையும் நான் களத்தில் சந்திக்க நேர்ந்தது . அவர்களை முன்னிறுத்துவது பெரும் அரசியல் அறைகூவல் என்பதை புரிந்திருந்தேன் . பாலன் தலைமையில் இயங்கிய இளைஞர் காங்கிரஸில் நான் இருந்தபோது அவற்றை கற்றிருக்க வேண்டும் .

அவை என்னை முற்றாக உள்கட்டமைப்பு உருவாக்கும் சிந்தனையும் ,செயல்பாடும் உள்ளவனாக உருவாக்கி இருக்க வேண்டும் . எதையும் முதலிலிருந்து துவங்க முயற்சிக்கையில்  ஆரோக்கியமான மனநிலையை கொடுத்து விடுகிறது . அரசியல் என்பது பரபரப்பான செய்திகளால் ஆனது என நினைப்பவர்கள் , ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிறிதொன்றின்  கட்டுமானத்திலிருந்து தங்களை வளர்த்தெடுக்க தொடங்குவதால் , பலத்தரப்பை அது உஷணப்படுத்தி விடுகிறது . பின் அவர்கள் விழையும் பரபரப்பிற்கும் , எதிர் செயல்பாடுகளுக்கும் , அதனால் கிடைக்கும் விளம்பரத்திறகும் பஞ்சமிருக்காது

அரசியலென்பதே பலரின் கவனத்தைக் கவருவது என பிழைப் புரிதலுள்ள அணுக்கர்களுக்கு மத்தியில் அடிப்படை கட்டுமான முயற்சிகள் ஆயாசமளிப்பதாக , நேர வீணடிப்பாக , கருத்தியல் தோல்வியாக , திறமையற்ற தலைமை என்கிற உருவகத்தை அளித்துவிடுகிறது . அதுவே ஒருவரின் அடையாளமாக இறுதிவரை கூட இருந்துவிடுவதும் உண்டு  . ஆனால் அரசியல் எப்போதும் அவர்களை சார்ந்தே இருந்திருக்கிறது . ஒருபோதும் களத்திலிருந்து அவர்களை வெளியேற்ற முடியாது. தலைவர் சண்முகத்தை இதற்கான சிறந்த உதாரணமாக சொல்லுவேன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்