https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 30 செப்டம்பர், 2017

அன்பிற்கினிய திரு சுனீல் அவர்களுக்கு

ஸ்ரீ :

பதிவு :279 \ தேதி 30 செப்டம்பர் 2017








அன்பிற்கினிய திரு சுனீல் அவர்களுக்கு . 


வணக்கம் , ஜெ தளத்தின் மூலமாகத்தான் நீங்கள் எனக்கு அறிமுகமாகியிருந்தீர்கள் . அதன் வழியாகவே நான் காந்தி டுடே தளத்திற்கு சிலசமயம் மேய்வதற்கு வந்திருக்கிறேன் . ஜெ யின் “இன்றைய காந்தி” கொடுத்த அளப்பறிய புரிதல்களின் உந்துதலால் முழு மனதுடன் படிக்க வேண்டுமென நான் புக்மார்க் வைத்திருக்கும் தளத்தினுள் அதுவும் ஒன்று . உங்களை புதுவை கூடுகையில் நேரில் சந்தித்தது ஒரு இனிய நினைவாக இருந்து கொண்டிருக்கிறது . 

தங்களின் சமீபத்திய பதிவு திரு எஸ்ரா பற்றியது . செறிவான பதிவாக மருத்துவம்சார்ந்து இருந்தாலும் அது அவரின் ஆளுமையை பற்றி சொல்வாதாகவும் அவர் மீது உங்களின் மதிப்பு முழுமையாக வெளிப்பட்டிருந்தது .நானும் அவரை புதுவையில் ஒரு கூடுகையின்போது பார்த்தேன் . அவரது ஆக்கங்கள் ஏதும் வாசித்திருக்கவில்லை எனவே அறிமுகம் செய்து கொள்ளவில்லை . எஸ்ரா எனக்கு அறிமுகமானது ஒத்திசைவு தளத்தில்தான் . உங்களைபோன்றே ஜெ வும் எஸ்ரா பற்றி அதே அபிப்ராயம் கொண்டிருக்கிறார் .அவரை மட்டுமல்லாது ஒத்திசைவை பற்றியும் உயர்ந்த எண்ணமே எனக்கு காணக்கிடைக்கிறது . இலக்கிய உலகிற்கு தற்செயலாகதான் ஜெ தளம் மூலமாக உள்நுழைந்தேன் . 

பொதுவாகவே எல்லோரையும் கழுவேற்றுபவர் ஒத்திசைவு . விதி விலக்கு ஜெ . நான் எனது எழுத்து மொழியை கூர்கொள்ள சில தளத்திற்கு செல்வது வழமை ( சமீபமாக ஒத்திசைவு தளம் செல்வதை நிறுத்திக்கொண்டேன். ஏதோ ஜாஸ்தியானதாக உணர்வு ) ஒத்திசைவு பற்றி ஜெ வைத்திருக்கும் எண்ணமே அவரை பார்க்கவைத்தது . ஆனால் எஸ்ராவை ஏன் இப்படி கழுவுகிறார்.

புரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் . சமயம் கிடைக்கும்போது விளக்கினால் நன்று.

கிருபாநிதி அரிகிருஷ்ணன்
27 செப்டம்பர் 2017




அடையாளமாதல் - 200 * குடிமைச்சமூகத்தின் வல்லமை *


ஶ்ரீ:





பதிவு : 200 / 278 / தேதி :- 29 செப்டம்பர்   2017


* குடிமைச்சமூகத்தின் வல்லமை  *



தனியாளுமைகள் - 26 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-07


வல்சராஜ் அப்படி பட்ட ஒரு ஆளுமையாக எனக்கு தோன்றியது .எதிலும் அவசரமின்றி நிகழ்வுகள் தங்களுக்கு முற்றிலுமாக எதிரென திரும்பும் அந்த கணம் வரை காத்திருப்பர் . அதை மன வொருக்கத்தினாலோ ,பரந்துபட்ட பலருடைய தொடர்பினாலோ அந்த தன்னம்பிக்கையை அடைந்துவிட்டிருப்பவர்கள் . அந்த தருணம் வாய்க்கையில் எவரும் எதிர்பார்க்காத விளைவுகளை செய்யும் இடத்திற்கு சகலத்தையும் கடந்து செல்வார்கள். தங்களுக்கு தேவையானதை மிகத் துல்லியமாக வண்டு தேனெடுப்பதைப்போல , பிறரிடம் தன் தேவைகளை கொய்து எடுத்துக்கொள்வார்கள் . அவர்களின் வளர்ச்சிக்கு எவையும் தடையாக இருப்பதில்லை. ஏன்? , சில நேரங்களில் இயற்கை நெறிகளும் , ...........................…..சில காலத்திற்குமட்டுமாகிலும்..................................................





“அண்டோனியோ கிராம்ஷியை வாசித்து இந்த அறிதலுக்கான கோட்பாட்டு அடிப்படைகளை கற்றுக்கொண்டேன். அதிகாரம் என்பது அதைக் கையாளும் சிலரிடம் இல்லை. அதற்கு அடியில் தீர்மானிக்கும் வல்லமையாக உள்ளது குடிமைச்சமூகம். அவர்களின் அகத்தில் உறையும் கருத்தியலே அதிகாரமாக ஆகிறது. அந்தக் கருத்தியல் நோக்கியே எல்லாவகையான அறிவுச்செயல்பாடுகளும் செய்யப்படுகின்றன” என்கிறார் திரு.ஜெயமோகன் அவரது “சாட்சிமொழி” கட்டுரைத் தொகுப்பில். 

அரசியல் களத்தில் ஒரு நிகழ்வினால் தாக்குதலுக்கு உள்ளாகும் போது எவரும் சொல்வது அதன் எதார்த்த பின்விளைவுகளை பற்றி தங்களின் அச்சத்தின் வெளிப்பாடுகளை. அது தங்களுக்கு நேரவிருக்கும் சிக்கலை தவிர்க்கும் புத்திகோச்சரமான யுக்தி மட்டுமே . அத்தகையவர்களிடம் தன்னம்பிக்கை இருப்பதில்லை . எந்த சிக்கலுக்கும் அரசியலில் ரீதியில் தீர்வுகள் உண்டு . அவற்ற நெறி, நேரம், காத்திருப்பது ஆகியவை சாதிக்கும் வல்லமை கொண்டவை என் உறுதியாக எண்ணுகிறேன் . ஒரு புள்ளியிலிருந்து மற்றோரு புள்ளிக்கு நகர்வது மனபதிவுகளின் வழிகாட்டலால் மட்டுமே. அப்போது நம்மையும் நம்மை நம்பி சுற்றி உள்ளவர்களையும் நிகர்நிலையில் வைத்திருப்பது போன்றவையே இதில் சவாலானவை. 

திரு.ஜெயமோகன் சொன்னது போல அரசியலில் தீர்மானிக்கும் வல்லமை குடிமைச்சமுதாயத்திடம் உள்ளது, என்பதற்கு சிறந்த உதாரணம்  சமீபத்திய ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் . அது தன்னெழுச்சி . தன் மீட்சி .அது அனைத்து அரசியல்வாதிகளின் தூக்கத்தை கெடுத்தது . ஆளுமைகளாக தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருந்த பலரை ஒன்றுமில்லாததாக ஆக்கியது . இது பிறிதொரு முறை நிகழலாகாது என்கிற உறுதி சர்வகட்சிகளின் எண்ணமாக கொடுங்கனவாக இருக்கிறது . அந்த போராட்ட விஷயங்களில் சிந்தனையாளரகளுக்கு பல மாற்று காருத்து இருக்கிறது . சில பொது வெளிக்கு வந்ததவை . பல வெளிபடவேயில்லை. அரசியல் ஆளுமைகள் அந்த இடத்திற்கு குடிமைச்சமூகத்தை வரவிடாது செய்வதே அல்லது அறிந்து கொள்ளும் இடத்தை அடையாமல் தடுப்பதை தங்களின் அரசியலாக பார்கத்துவங்கியதே ,அது அரசியல் வரலாற்றை எதிர்பாராத திசைகளிலெல்லாம் திருப்பியபடி இருக்கிறது.

தில்லியில் உள்ள புதுவை அரசினர் விடுதியில் எங்களுக்கு அறை ஒருங்கி இருந்தது . நிகழ்ந்து கொண்டிருந்த நட்பின் காரணமாக , நான் தனியாக தங்கவேண்டுமென்கிற எண்ணமெழாததால் , நான் அவருடன் தங்கினேன் . மறுநாள் காலை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று ,தலைமைக்கு முறைமை செய்ய வந்திருப்பதை சொன்னதும் ,சிறிது நேர காத்திருப்பிற்குப்பின் நாங்கள் அழைக்கப்பட்டோம் . அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலமையுடன் , எனக்கு இது நீண்ட நாட்களுக்கு பின்னர் நிகழும் சந்திப்பு. ஆகவே , பிட்டா என்னை நினைவுகூர இயலவில்லை.

நான் இதை எதிர்பார்த்திருந்தேன் . என்னை அவருக்கு நினைவு கூர பல இனிய நிகழ்வுகள் இருந்தாலும் . அவற்றை கூறி  அவருக்கு நினைவுத்துவதி என்னை நிருவிக்கொள்ள அது அசந்தர்ப்பமாக தோன்றியதால் அதை தவிர்த்துவிட்டேன் . வல்சராஜுக்கு அங்கு வரவேற்ப்பில்லை என்பதால் நான் என்னை முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பது தேவையற்ற மனக்கசப்பை விளைக்கலாம் . இதுவரையில் வல்சராஜுடனான பல வருட பழக்கம்,  நட்பு ,செறிவான இடம்நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது . இங்கு வலசராஜைத் தாண்டி ஒரு தொடர்பை  வளர்த்துக்கொள்வதில் எனக்கு ஆர்வமில்லை . மேலும் அங்கு நான் செய்வதற்கு ஒன்றில்லை. 

சில நிமிடங்களில் தனக்கு உரிய மரியாதையில்லை என்பதை புரிந்து கொண்ட வல்சராஜ் அதை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு ,தான் அவரை தலைவர் என்கிற முறையில் சந்திக்க வந்ததாக சொல்லி எழுந்துகொண்டார் . நானும் அவருடன் வெளியேறினேன் . அவர் மனதில் இதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதை நான் அறியவில்லை . ஆனால் அதன் பாதிப்புகள் அவரிடம் இல்லை என்பதை நான் கவனித்தபடி இருந்தேன் . எங்களுக்கு கொடுக்கப்படவேண்டிய மாநாட்டு கடவு சீட்டுக்களை பொது செயலரிடமிருந்து பெற்றுக்கொள்ள அறியுறுத்தினார்கள் . 

வழமையாக அதை தலைமைதான் கொடுக்க வேண்டும் . நாங்கள் செயலர் அறைக்கு வந்தபோது தலைமையிடம் காணப்பட்ட அதே வரவேற்பின்மையுடன் சிறிது குரோதத்தையும் செய்லர் பாண்டேவிடமும் நான் பார்க்கநேர்ந்தது . என்னை மிகச் சரியாக அடையாளம் கண்டுகொண்டார் பாண்டே. புதுவையில்  நிகழ்ந்த மாநாட்டு ஒருங்கிணைப்பிற்கு நாங்களிருவரும் பொறுப்பென்பதால் , நாங்கள் இணைந்தே அனைத்தையும் செய்திருந்தோம் . அவர் என்னை வல்சராஜுடன் இணைந்து எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது திகைப்பிலிருந்து தெரிந்து கொண்டேன் . ஒரு சிறிய புண்ணகையுடன் எங்கள் நட்பை பேணிக்கொண்டோம் . 

எங்களுக்கு கொடுக்கவேண்டிய கடவு சீட்டுக்கள் முழுவதும் கிருஷ்ணமூர்த்தி கோஷ்டிவாசம் ஒப்படைக்கப்பட்டகாக பாண்டே வல்சராஜிடம் சொன்னவுடன் . நான் தலைமை நியமிக்கப்பட்டபோது அனாமதேயங்களுக்கு எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என்றேன் , நாங்கள்  அவற்றை மத்திய தலைமையிடம் முறையிட்டு பெற்றுக்கொள்கிறோம் என எழுந்துகொண்டவுடன் மறுபேச்சில்லாது எங்களுக்கான மாற்று கடவு சீட்டுகள் கொடுக்கப்பட்டன . அந்த இரண்டுநாள் மாநாடு முழுவது இந்தியில் பேசினார்கள் . ஒன்றும் புரியாது இருந்தது . ஒருவழியாக முடித்து அங்கிருந்து புறப்பட்டோம் . மேலும் ஒருநாள் அங்கு தங்கி . நிர்வாகிகள் நியமனம்பற்றி பேசி பின் புதுவைக்கு புறப்பட்டோம்.



வெள்ளி, 29 செப்டம்பர், 2017

ஆழமற்ற நதி சிறு கதை (ஒரு விள்ளண்ணம்)

ஶ்ரீ:

பதிவு: 277  / தேதி 28. செப்டம்பர் 2017





ஜெயமோகனின்
ஆழமற்ற நதி .
சிறுகதை .  

ஒரு விள்ளண்ணம்





ஒரு குறியீடு போல இருக்கும் நதியை, ஜஸ்டிஸ் காசிநாதனை படிக்கட்டின் தொடக்கத்தில் நின்று முகத்தைஅலட்சியமாக தன்னை பார்க்கவைக்கிறது . வேர்விட்டு வளர்ந்திருக்க வேண்டிய குடும்ப உறவுகள் மேட்டிமையின் உள்படிப்புகளில் சிக்கி மரத்துபோன இதயங்களை கொண்டவரகளாக , தங்களை பற்றி மட்டுமில்லாது குடும்பத்தில் எவருடனும் புரிதலற்ற ஆழமற்ற உறவுகளை பேணுவதை சொல்லவருகிறது.அதற்குறிய தண்டனையை அந்த ஆழமற்ற நதியின் நீர்ப்பரப்பு தீட்டப்பட்ட கத்தியின் பட்டைபோல கரியநிறமான ஒளி கொண்டு காத்திருக்கிறது.

அவரும் பாக்கத்தான் பெரியவராக தெரிந்தாலும் ஆழமே இல்லாத. பேப்பர் ரிவர்னு  என்று அவருக்கு  உதவ வந்த கதை சொல்லியான வக்கீல்குமாஸ்தாலசுந்தரேசன் சொல்லுகிறார் .ஆழமற்றவர் எல்லாவற்றிலும் அப்படி என்பதாக ,காசிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய எல்லாரையும்போலத்தான் அவரும் என்றாலும் கண்டபடி அலைந்து கைநீட்டமாட்டார் என சுருக்கமாக அவரது தன்னறத்தை முடித்து வைக்கிறார் . 

எதனுடனும்  கலக்கும் நதிக்கு மாறுபட்டு எதிலும் கலக்காதே பிறரை கையாள நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அவரை பேச்சுக்கு இழுக்கவே முடியவில்லை..என அங்கலாய்கிறார் கதை சொல்லி.அது அவரது சுபாவம் என்பதை செல்பேசி வண்டு போல அடிக்கடி அதிர்ந்தபடியே இருந்ததை கவனிக்கிறார்.

தன்மீதுள்ள கழிவிரக்கதால் பிறர்மேல் வண்மம் கொண்டு காசிநாதன் முகம் எரிவதுபோல செவ்வொளி கொள்ள கண்ணாடிச்சில்லுகள் சுடர்ந்து அணைந்தன.. தன்னைமட்டுமின்றி எல்லோரையும் அதே மனோபாவம் கொண்டவர்களாக  உருவாக்கியிருக்கிறார். அவரது மனைவியை பற்றி சொல்லும்போது அவள் முனகல் போன்ற குரலில் “இங்கதானா?” என்றாள். “ஆமாம்மா . இதான் பல ஆண்டுகளாகப் பேசிப்பழகியவள். சலிப்பு போன்ற முகம் ஒன்றைத்தான் என்னைப்போன்றவர்களுக்கு அவர்கள் அளிப்பார்கள் என்கிறார் கதைசொல்லி.காசிநாதனின் மகன் ஆறுமுகம் எரிச்சல் தெரிந்த முகத்துடன்எல்லாம் ரெடியா? விடியறதுக்குள்ள முடிஞ்சாகணும்கூட்டம்கூடிரப்பிடாதுஎன்றார். தூக்கமில்லாமையால் கண்களில் வளையங்கள் தொங்கின. குடியால் நீர் மீன்னும் கண்கள்.
-
அவரது மனைவி, இஸ் த வாட்டர் டர்ட்டி?” என்றாள். ஆறுமுகம் முகம்திருப்பிக்கொண்டதிலிருந்து அவள் அவர் மனைவி எனப்புரிந்து கொள்கிறார் , பின்னர் சுவாரஸ்யம் ஏற்பட்டு சிலந்தி வலைகட்டுவதுபோல அந்த உறவுகளை பின்னி விரிவாக்கிக்கொள்கிறார். காசிநாதனுக்கு இரண்டு மகன்கள், ஒருமகள். மூத்தமகன்தான் இறந்தவர். அவருக்காகத்தான் சடங்கு. இளையமகன் ஆறுமுகமும் அவருடைய மகனும் மகளும் வந்திருக்கிறார்கள். இறந்தவனின் மகன் மட்டுமே வந்திருக்கிறான்.

“பொதுவா பித்ரு தர்ப்பணம் பண்ணுவாங்க… சாதாரணமா சமஸ்தாபராதபூஜை எல்லாரும் பண்றதில்லை. இந்தமாதிரி வீட்டிலே யாருக்காவது கெட்டசாவு வந்தா…” என்றவுடன் அவள் சிவந்தமுகத்துடன் திரும்பியாருக்கு கெட்ட சாவு?” என்கிறாள் .“இல்ல, நாம பண்ணின தப்பால…” என்கிறார் . “என்ன தப்பு? யார் பண்ணினது?” என்று அவள் உரக்க கேட்கிறாள் .“இல்லம்மாஎன அவர் தடுமாறுகிறார் .

பிழையோ பாபமோ செய்தவங்கதான் பிராயச்சித்தம் செய்யணும்” என அதே கேள்வியை நம்பூதிரி  எழுப்புகிறார் அவர்களுக்குள் ஏற்படும் குற்றவுணர்வை கலைய அவரு யாருண்ணு தெரியக்கூடாதுன்னா எல்லாரும் சேந்தே பண்ணலாம் என உபாயமும் சொல்கிறார்.இவன்தான்… பிராயச்சித்தபூஜை செய்யவேண்டியது இவன் மட்டும்தான். என்கிறார்  காசிநாதன். துனுக்குறும் நம்பூதிரி அவனை கூர்ந்து நோக்கியபின் “இவரா பாபம் செய்தார்?” மனசறிஞ்சு செய்தாத்தான் பாபமும் புண்ணியமும்,பிராயச்சித்தமும் மனசறிஞ்சு செய்யணும்என்று தனது தொழில்முறை தர்மத்தால் அதை கடக்கிறார் 

காசிநாதன் “இவன்தான் செய்யணும்” என்கிறார் உறுதியாக நம்பூதிரி அவர்களை மாறிமாறி நோக்கிவிட்டு “சரி, இந்த ஜென்மத்திலே இப்டி ஒண்ணையும் முடிச்சிட்டுப்போகணும்னு அவருக்கு பிராப்தம் இருக்குன்னு தோணுது… செஞ்சிருவோம்” என்கிறார்

பிராயசித்தம் செய்யும் மகன் தந்தையைப்பற்றி டிரைவர் கசப்பாக செத்துப்போனவர் இதை கையால தொட்டதில்லை 
“அது வாசல் ஜன்னல் ஒண்ணுமே இல்லாம ஆறுபக்கமும் மூடின வீடு மாதிரி சார். வெளியே இருந்து ஒண்ணுமே உள்ள போகாது” என்றார் சண்முகம் எப்டியோ உள்ள ஏதாவது போச்சுன்னாக்க வெளியே எடுக்கவும் முடியாதே” என்கிறார் கதைசொல்லி அதன் உட்பொருள் அறியாமல் 

எல்லாம் முடியும் தருணத்தில் ஒரு விசும்பலோசையைக் கேட்கிறார் . கதிரின் உதடுகள் இழுபட தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தான். கண்ணீர் வழிந்து மடியில் சொட்டிக்கொண்டிருக்கிறது .காசிநாதனை முகம் உச்சகட்ட அச்சத்தில் இருப்பதுபோல கோணலாகியிருந்தது. கைகால்கள் உதற படிகளில் மேலேறி மூச்சிரைக்க விரைந்து அகல்கிறார்.அவர்கள் அனைவருமே கதிரை ஒருகணம் நோக்கிவிட்டு படிகளில் ஓடி மேலெறிச்சென்றனர்.

ஆறுவழியும் முடப்பட்ட ஒன்றில் என்ன நுழைந்தது என்கிற அச்சம் காரணமாக , கால்கள் நடுங்கிக்கொண்டிருந்த கதை சொல்லியும். கதிரின் அழுகையை மீண்டுமொருமுறை நோக்கிவிட்டு பின்காலெடுத்து வைத்து படிகளில் ஏறி. மூச்சிரைக்க மேலே வந்து நின்றுகொண்டேன். பின்னர் கீழே பார்க்கவேயில்லை.என்கிறார் . ஆழமற்ற நதியில் காசிநாதன் குப்புற விழுந்து மூழ்கி முவதுமாக நனையாது எழுகிறார் . அது ஆழமற்றதால் யாரையும் முழுமையாக கழுவிக்கொள்ள விடுவதில்லை..


புதன், 27 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 199 * தடையறு வளர்ச்சி *

ஶ்ரீ:




பதிவு : 199 / 276 /  தேதி :- 27 செப்டம்பர்   2017


*  தடையறு வளர்ச்சி  *



தனியாளுமைகள் - 25 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-06

வல்சராஜின் எளிமைக்கு அருகில் எப்போதும் ஒரு தேர்ந்த உயர்தர ஒழுங்கு இருப்பதையும் . தனது ரசனைவழியாக அது ஒரு வாசனையை போல எங்கும் பரவியிருப்பதை உணரமுடியும். இவை அனைத்தும் அவரை புரிந்து கொள்வதில் எவருக்கும் சிக்கலை உண்டு பண்னுபவை. யார் எது குறித்து பேச வந்தாலும் , தங்களின் மனதிலிலுள்ளதை விரித்து சொன்ன பிறகு அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாததை  அறியாது முழு திருப்தியுடன் எழுந்து செல்வதை வியப்பாக பார்த்தபடி இருந்திருக்கிறேன.





“கருத்துகளை முறைமையுடன் முன்வைப்பது எனக்குரிய இயல்பல்ல என உணர்கிறேன். நான் முன்வைப்பவை மனப்பதிவுகள். ஆகவே இரு வெவ்வேறு தளங்களைச் சார்ந்த நோக்குகள் இங்கு ஒன்றையொன்று பரிசீலிக்கின்றன என்று கொள்வதே சரியாகும். நூல்களையோ கொள்கைகளையோ சுட்டும்போதுகூட அவை சார்ந்த என் மனப்பதிவையே சொல்லமுடியும்.”

அவனது ஆய்வு உபகரணங்களும் இலக்கியம் சார்ந்தவையே. அதாவது தகவல் திரட்டுதல், தொகுத்தும் பகுத்தும் முடிவுகளுக்கு வருதல், தருக்க முறைமை சார்ந்து அவற்றை முன்வைத்தல் ஆகிய அறிவியக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட முறைகளை அவன் கையாளமுடியாது. அது அவன் மன இயக்கத்துக்கே அன்னியமானது. அவன் கருத்துகளை மனப்படிமங்களாகவும் ஆழ்மனப்படிமங்களாகவும் தான் உள்வாங்கி முன்வைக்கிறான்” என்கிறார் திரு.ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில்.

நான் என்னை கூர்ந்து அவதானிக்க துவங்கியது ஜெயமோகனை வாசிக்க ஆரம்பித்தபோது . எவ்வித  முறைமை சாராது வெறும் மனப்பதிவுகளை கொண்டு , ஆனால் என்னுடனான தருக்க வழியாகவே நான் என்னை தொகுத்து கொண்டு இதுவரை பயணித்து வந்திருக்கின்றேன். அவரின் சொல்லாட்சிகள் என்னை எப்போதும் அன்றைய நிகழ்வுகளை கொண்டுவந்து தன்னுடன் இணைத்து நான் முயங்கிய முறைகள் , சரியான தருக்க வழிமுறைகளில்தான் என்பது என்னை மேலும் தன்னம்பிக்கை கொள்ளவைப்பதுடன் , என்னை, என் ஆழ்மனத்தின் போக்கை , மேலும் அணுகி புரிந்து கொள்ளும் முயற்சிக்கு ஒரு காரணிகளாக இருப்பதை அறிகிறேன்.

அரசியலில் எனது செயல்திட்டங்கள் சூழியல் அவதானிப்புகள் கூர்ந்து அறியும் ஆழ்மன வெளிப்பாடுகள் விளைந்தவைகள. என இப்பொது கருதுகிறேன்.அவற்றை செயல்முறைபடுத்து மிடத்து உடன்நிற்பவருக்கு சொற்களால் விவரிக்க இயலாது திகைத்திருக்கிறேன். அதை தருக்க ரீதியாக முன்வைத்த ஒவ்வொரு சந்தரப்பத்திலும் எனது பிரயத்தனங்கள் வ்யர்த்தமாகி பிறரின் மறைமுக எள்ளுக்கு உள்ளாகியிருக்கின்றன . பின்னாளில் அவற்றை காலம்  சரியென நிரூபித்திருப்பதை இப்போது நினைக்கிறேன் .

வல்சராஜ் தில்லி பயணத்திற்கு  நிர்வாகிகள் வரவேண்டுமென்றும் , அனைவருக்கும் தலைவர் ரயிலில்  முன்பதிவு செய்திருப்பதை பற்றியும் சூர்யநாராயணனன் அதை பார்த்துக்கொள்வதாகவும் என்னிடம் சொன்னார் . நான் அவற்றை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதை பற்றி சொன்னேன் . நிர்வாகிகள் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னர் தான் கிளம்ப இருப்பதை  சொன்னார். நான் “சரி” என்றேன் . என்னை அவருடன் வருமாறு சொன்னார், எனக்கு பெரிய  தயக்கமிருந்தது. நான் என்நண்பர்களுடன் செல்வது பற்றிய திட்டத்திலிருந்தேன் . எனக்கு அது எப்போதும் உவகையளிப்பது. மேலும் அதிகாரத்திலுள்ளவர்களுடன் செல்லும்போது அவர்களின் அணுக்கம் விலகி ஒரு மேட்டிமையும் அதனடியில்  அடிமைத்தனத்தை எதிர்பார்க்கும்  போக்கு எழ வாய்ப்புள்ளது . நான் யாருக்கும் அடங்குபவனில்லை.

எனது நண்பர்கள் சிலருடன் நான் செல்வதாக முன்னரே திட்டமிட்டதை அவரிடம் பலமுறை வலியுறுத்திச் சொல்லியும் அவர் விடுவதாக இல்லை . நானும் வேறுவழி இல்லாது அவருடன் செல்ல சம்மதித்தேன் . வருத்தம்தான் . நண்பர்களுடன் பயணிப்பது எனக்கு அளவில்லாத சுதந்திரத்தை கொடுப்பது . அதை நான் இம்முறை இழக்க வேண்டிவரும் . இருப்பினும் வல்சராஜனுடன் எனது பயணம் , அவரை பற்றி நான் இன்னும் அணுக்கமாக தெரிந்துக்கொள்ளுவதற்கு உபயோகப்படும் . சராசரி அரசியல்வாதிகளில்லிருத்து  வல்சராஜ் மிகவும் மாறுப்பட்டிருப்பதை நான் புரிந்துகொள்ள அந்த பயனம் எனக்கு பெரிதும் உதவியது .

எங்களுக்கு அதிகாலை சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது . அதனால் முதல்நாள் இரவே சென்னைக்கு சென்று . அங்கு KK நகரில் ஒருங்கியிருந்த புதுவை அரசினர் மாளிகையில் இரவு தங்கினோம் . எனக்கு பல வருடங்களுக்கு முன்பே அறிமுகமாயிருந்த வல்சராஜின் குணம் ,எனக்கு புதுவையிலிருந்து சென்னைக்கு கிளம்பும் போதே தெரிந்தது . மிக சகஜமான  உடல்மொழியும் , நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படும் பேச்சும் எங்களை சடுதியில் சிறந்த நட்பு வளையத்திற்குள் கொண்டுவந்தது . மிகையில்லாத சொல்லும் ,பிரிவில்லாத பழக்கங்களும் , ஒரு அனுசரணையான நட்பிற்கு தில்லி சென்று சேருவதற்குள் நாங்கள் சென்று சேர்ந்துவிட்டிருந்தோம் . 

அரசியல் ஆளுமைகளில் சிலர் மட்டுமே சராசரி அரசியல்வாதிகளிலிருந்து வேறுபடுத்தும் தனித்த குணாதசியமுள்ளவர்கள்  அவரகளே இந்த இடத்திற்கு வந்து சேருகிறார்கள் . எளிமையும் சிக்கலும் கொண்டது மனித மனம் . மிக சிலர் மட்டுமே அதை மிக திறம்பட கையாள மற்றும்  வெளிப்படுத்துவதில் கூர்கொண்டிருப்பார்கள். தாங்கள் மட்டுமே புழங்கும் ஒரு வட்டத்தை அனுபவமில்லாதவர்கள் மிக பெரிதாக வளரவிட்டிருப்பார்கள் . அதனாலேயே எவருடனும் இயல்பிலே பழகினாலும் கசப்படைந்து வெகு விரைவில் முரண்பட்டுவிடுவார்கள் . அவர்களின் உணர்வுக்கொம்புகள் பல தேவையற்ற  இடத்திலும் பரவிஇருப்பது ஒரு காரணம் . வெகு சிலரே அவற்றை மிக நேர்த்தியாக , தாங்கள் சீண்டப்படும் முக்கிய இடத்திலோ ,தருணத்திலோ ,வெளிப்படும் இடத்தில் அவற்றை வளர்த்திருப்பார்கள். அந்த எல்லைவரையில் அவர்களும் பிறிதெவரும் வருவதை தடுக்காது எளிதில் பழக்கூடியவர்களாகவே இருப்பர் .

வல்சராஜ் அப்படி பட்ட ஒரு ஆளுமையாக எனக்கு தோன்றியது .எதிலும் அவசரமின்றி நிகழ்வுகள் தங்களுக்கு முற்றிலுமாக எதிரென திரும்பும் அந்த கணம் வரை காத்திருப்பர் . அதை மன வொருக்கத்தினாலோ ,பரந்துபட்ட பலருடைய தொடர்பினாலோ அந்த தன்னம்பிக்கையை அடைந்துவிட்டிருப்பவர்கள் . அந்த தருணம் வாய்க்கையில் எவரும் எதிர்பார்க்காத விளைவுகளை செய்யும் இடத்திற்கு சகலத்தையும் கடந்து செல்வார்கள். தங்களுக்கு தேவையானதை மிகத் துல்லியமாக வண்டு தேனெடுப்பதைப்போல , பிறரிடம் தன் தேவைகளை கொய்து எடுத்துக்கொள்வார்கள் . அவர்களின் வளர்ச்சிக்கு எவையும் தடையாக இருப்பதில்லை. ஏன்? , சில நேரங்களில் இயற்கை நெறிகளும் , ...........................…..சில காலத்திற்குமட்டுமாகிலும்..................................................



அடையாளமாதல் - 198 * விழைவின் புரியாமை பொருள் *

ஶ்ரீ:




பதிவு : 198 /  275 /  தேதி :- 26 செப்டம்பர்   2017


* விழைவின் புரியாமை பொருள்  *



தனியாளுமைகள் - 24 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-06


இளைஞர் காங்கிரஸ் அவருக்கு ஒரு பெரிய அடையாளம் ஆனால் அதை ஒருகாலமும் புதுவையில் அவர் வெளிப்படுத்தியதில்லை அவர் களத்தில் அதனால் என்ன பயனடைந்தனர் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . அரசியல் லாபங்களை வெற்று  அலம்பலாக அலராக வெளிப்படுத்தும் அரதியல்வாதிகளுக்கு மத்தியில் . வலசராஜ் யாருடைய கவனத்தையும் கவராத  அரசியல்வாதியாக தனது பலத்தை செல்வாக்கை குவிமையமாக  நிழலாகவே தன் அருகில் வைத்திருப்பவர் .






“ஒரு இலக்கியவாதியாக என் எழுத்துமூலம் நான் கண்டடைகிறேன். அத்தத்துவத்தை நானறிந்து உணர்ந்த வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது அறிபவை இவை” என்கிறார் திரு. ஜெயமோகன் ….. ……இலக்கியவாதிகள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் அனுபவங்களை கருத்துக்களாக மாற்றிக்கொள்வதன் வழியாக அவற்றை தத்துவமாக வாழ்வியலில் ஒப்பிட்டு சமூகம் மற்றும் மனிதர்கள் மீது நமக்கான புரிதலை அடையும் போது அது நம்மை வேறொரு தளத்திற்கு நகர்துகின்றது . நாம் நம் அகத்தை ,நம் வாழ்கையின் பெருக்கை இன்னும் நொருங்கி அறிந்து கொள்ள இயலுகிறது .

வல்சராஜிடம் நான் பார்த்தது ஒருவகையான நிழல் அரசியலிலும் அதன் உட்பிரிவுகளிலிலும் ஒரு தேர்ந்த ஓருங்கமைவு காணப்பட்டது . சண்முகத்திற்கு அடுத்த ஆளுமையாக நான் யாரையாவது கணக்கில் கொள்ளவேண்டுமென்றால் அது வல்சராஜைத்தான் . அப்படித்தான்  எண்ணுகிறேன்  . அவரதுபாணி அரசியலில்  நான் புக விரும்பவில்லை .அது அரசியலை இன்னும் மிக நுண்மையாக அதிரும் புள்ளிகளில் தொடும் மேல்நிலை அரசியல் சூழ்தல். தனித்த தளம் அது . நான் வேறு தளத்தை சேர்ந்தவன் என்பதால் , அவற்றை அறியும் பொருட்டு அது எனக்கு ஒரு புரிதலின் ஈர்ப்பை கொடுத்தாலும் நான் அவற்றை புரிந்து கொள்வதோடு நிறுத்துக் கொண்டேன் அதனுள் கடைசீவரை நுழையவேயில்லை . அதன் படிகள் அரசாங்கத்திற்குள் கொண்டு செல்பவை . அது எனக்கான பாதையல்ல . காரணம் ,நான் என்னை அரசு பொறுப்பில் முன்னிறுத்திக் கொள்ள விழைந்ததில்லை , கட்சி அமைப்பில் நான் இரண்டாம் நிலை தலைமை பொறுப்பில் நிற்கவே விரும்பினேன் . காரணம் முதல் நிலை என்பது சமரசத்தை அடைப்படை கொண்டது . பேரம் லாபம் இரண்டையும் கொண்ட ஊடுபாவாக அமைந்தது , பெரும் நிழலானது . நிழலானவைகளை எனக்கு எதிராக நான் பார்க்கிறேன்  . எனக்குள் ஒன்று எப்போதும் அடங்க மறுப்பது. என்னை எப்போதும் தொல்லைகளுக்கு ஆட்படுத்துவது . சூழியல் நிர்பந்தத்திற்கோ, பிறிதொருவரால் நிர்பந்திக்கப்படுதலுக்கு ஆளாகும் போதோ , எப்போதும்  நான்  என்னையும் அறியாது அதற்கு எதிர்நிலையைத்தான் எடுத்திருக்கிறேன் . 
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பின் மதியம் ,வல்சராஜ் தனது அறையில் தனித்து யாருக்கோ கடிதமெழுதிக் கொண்டிருந்தார் . நான் உள்நுழைந்ததும் என்னை நோக்கிய புன்னகையுடன் தலை அசைத்து அமர சொன்னார், நான் அவருக்கு பக்கத்திலிருந்த நாற்காலியில் அமைந்தேன் . டீ மேஜையில் சில கடிதங்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருந்தன , ஆங்கிலத்திலும் சில மலையாளத்திலும் . அனைத்து மிக நெருக்கமானவர்களுக்கு என நினைத்தேன் . வேலைமெனக்கட்டு கடிதம் எழுதும் அந்தப்போக்கு மிக எனக்கு விசித்திரமாக பட்டது. அலைபேசி முழுவதுமாக செயல்படத்துவங்கிய நேரம் . இதை அதன் வழியாகவே சொல்லி விடலாம் , ஒருவேலை அந்தக் கடிதங்கள் வெளிநாட்டு தொடர்ப்புக்கு என நினைத்தேன். இல்லை அவை எல்லாம் உள்நாட்டிற்குள் செல்வது , அவரிடம் “என்ன கடிதம்” என்றதும் அவர், தான் மாதத்திற்கு பாதிநாட்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள புதுவை வந்துவிடும்போதெல்லாம், தொகுதியில் தவறவிடும் நல்லது கெட்டத்துக்களுக்கு , கடிதம் மூலம் நிகழ்வுக்கு தான் வர இயலாமையை பேசி , பின் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு வாழ்த்தும் வருத்தமும் சொல்லுபவை என்றார் 

மாஹி கேரளா எல்லையை ஒட்டிய பிரதேசம் ,முழு கல்வி அறிவு பெற்ற பகுதியாக இருந்தது. புதுவையும் ஏறக்குறைய  அப்படித்தான் . காரணங்களை தொலைபேசியில் சொன்னால் புரிந்துகொள்ள போகிறார்கள் . மேலும் புதுவையை போல இல்லாமல் கம்யூனிச செயல்பாடுகளின் பாதிப்பால் அந்தப் பகுதிகள் நல்ல அரசியல் விழிப்புணர்வு உள்ளவை, சிறு சிக்கலுக்கும் நான்கே பேர்  வேட்டியை தூக்கிப்பிடித்தபடி அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்துவிடக்கூடியவர்கள். வல்சராஜ் சொன்னது பலமுறை தொலைபேசியில் பேசுவதை விட ஒரு கடிதம் அவர்களுக்கு இன்னும் தன்னை மிக அணுக்கமாக காட்டும் என்றார் . ஆம் அது நிஜம் . ஞாயிற்றுகிழமை ஓய்வாய் இருக்க விரும்பாது செயலில் செயல்பாடுகளில்  ஓய்வாக உணருதல்  ஒருவகை முறைமை .  எடுத்த காரியத்தில் உள்ள ஊற்றம் சிறந்த தலமைக்கானது . இதை சணமுகத்திடம் பார்த்திருக்கிறேன். தான் அனுப்பவேண்டிய ஆயிரக்கணக்கான  பொங்கள் , தீபாவளி வாழ்த்து அட்டைகளில் கூட  மெனக்கெட்டு கையெழுத்திட்டுக் கொண்டிருப்பார். 

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டு பற்றிய பேச்சு வந்ததும் அது பற்றி நிறைய பேசியபடி இருந்தார் . பொதுவாக எதிலும் ஆர்வமற்று இருப்பதாக ஒரு தோரணை அவர் பேச்சில் எப்போதும் இருக்கும் . எந்தப்பதவிகளிலும் தம்மை பிணைத்துக்கொள்ளாத ஒரு தன்மை தங்களுக்கு இருப்பதை மெனக்கட்டு நமக்கு புரியவைப்பார்கள் . ஆனால் அதிலடையும் லாபங்களை வேறு தளத்தில் தயக்கமின்றி பயன்படுத்திக்கொள்வார்கள் . இந்த கடிதம் எழுதும் அதே மெனக்கெடலில் உள்ள ஒரு அர்த்தம் அவரது அணைத்து  விஷயங்களிலும் பொதிந்ததாக இருந்தது . தொகுதி முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைப்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு , தங்களின் மீள் வெற்றிக்கு தேவையாகிறது .அவர்களது எல்லா மெனக்கெடலுக்கும் பின் தன்னை அனைவரின் கவனத்திற்குள் நிலைநிறுத்தும் விழைவே பிரதானமாக இருக்கும். தங்களை எளிதில் யூகிக்க இயலாத தன்மையை ஒவ்வொன்றிலும் பெருக்கியபடி இருப்பார்கள். தலைவரிடமுள்ள எளிமையை அவர் தன்மீது வலிந்து திணித்துக்கொண்டது போலன்றி இயல்பாக இருக்கும்

வல்சராஜின் எளிமைக்கு அருகில் எப்போதும் ஒரு தேர்ந்த உயர்தர ஒழுங்கு இருப்பதையும் . தனது ரசனைவழியாக அது ஒரு வாசனையை போல எங்கும் பரவியிருப்பதை உணரமுடியும். இவை அனைத்தும் அவரை புரிந்து கொள்வதில் எவருக்கும் சிக்கலை உண்டு பண்னுபவை. யார் எது குறித்து பேச வந்தாலும் , தங்களின் மனதிலிலுள்ளதை விரித்து சொன்ன பிறகு அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாததை  அறியாது முழு திருப்தியுடன் எழுந்து செல்வதை வியப்பாக பார்த்தபடி இருந்திருக்கிறேன.


புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்