ஶ்ரீ:
மணிவிழா - 43
02.01.2023
தென் தமிழக சைவ மரபில் கம்ப ராமாயணம் காவிய , பக்தி சுவைக்காக பிரதானமாக எடுத்தாளப்படுகிறது. பல இலக்கியம் ஆளுமைகளை உருவாக்கியும் அவர்கள் வழியாக தந்த இலக்கியங்கள் தமிழுக்கான ஆகப் பெரும் கொடை . கம்ப ராமாயணத்தை குரு மரபில் நின்று கற்கும் முறை அங்கு இன்றும் கூட நீடித்திருப்பது . அதில் ஈடுபட்டிருப்பவர்கள் மதம் கடந்தவர்கள். கம்ப ராமாயணத்தை மிக விரிவாக முன்னெடுத்தவர்களில் டி.கே.சி யின் “வட்டத் தொட்டி”யும் அதே காலகட்டத்தில் செட்டி நாட்டில் உருவான “கம்பன் கழகம்மும்”. பின்னர் தமிழகம் முழுவதும் பரந்து கம்ப ராமாயணத்தை விரித்தெடுத்தது. இதல் பெரும் பங்கு வகித்தவர்கள் சைவ பிள்ளைமார்கள் என சொல்லப்படுகிற சைவர்கள். திருநீறு அணிந்து சட்டை அணியாத கம்பனடி பொடி, கிருபானந்த வாரியார் , புலவர் கீரன் போன்றவர்கள் ராமனை எடுத்து பேசுவது வைணவர்களுக்கு சீண்டலாக இருந்திருக்கலாம். ஒப்பு நோக்க தென்னகங்களில் வைணவர்கள் மிக குறைவு என்பதால் அது எங்கோ ஒரு புள்ளியில் அதிகார அரசியலாகி இருக்க வேண்டும்.
வைணவ உரையாசிரியர்கள் காலத்தில் கம்ப ராமாணம் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை. மாணவாள மாமுனிகள் சில மேற்கோள் கொடுத்திருக்கிறார். கம்ப ராமாயணமும் வைணவ உரையாசிரியர்களின் எழுச்சியும் ஏறக்குறை பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவைகள். ஆனால் வைணவ உரையாசிரியர்கள் கம்ப ராமாயணத்தை எங்கும் தொட்டெழதவில்லை என எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் நினைக்கிறார்கள். தென் தமிழக கம்ப ராமாயணமும் அதனுடைய தாக்கம் அலை போல தமிழகம் முழுவதுமாக இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து கிருஷ்ணபிரேமி போன்றவர்கள் எடுத்து கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அதை பக்தியாக ஒரு தவமாக முன்னெடுத்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான மனநிலை கண்களுக்கு புலானாகாத அரசியலாக இன்றளவும் நீடித்திருக்கலாம்.
ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவில் முதல் நிலை நிர்வாகத்திற்கு புதுவையின் முக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைக்கப்பட்ட போது மரபான வைணவ செயல்பாட்டாளர்கள் அதில் தங்களுக்கான இடமில்லை என தவறாக புரிந்து கொண்டார்கள். அவர்கள் வழியாக விழாக்குழு வைணவ மரபிலிருந்து விலகிய அமைப்பு என வேளுக்குடி ஸ்வாமிக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். புதுவை வந்திறங்கிய போது என்னைக் கண்டதும் அவரது முகம் மலர்ந்திருந்தவர் தங்குவதற்கு ஒருங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்த போது முகம் மாற்றமடைந்து. வீட்டில் கூடியிருந்த கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து கொண்டு கண்மூடி உரத்த குரலில் ராம நாம ஜெபம் செய்து கொண்டிருந்த ஆடிட்டர் கணேசன் அவருக்கு ஒரு சாமான்யனாக தெரிந்திருக்க வேண்டும். அந்த ஜெபம் அவரை சீண்டியிருக்க வேண்டும். பொதுவாக ராம நாம ஜெபம் வைணவர்கள் ஏனோ செய்வதில்லை. என் தந்தை தீவிர ராம பக்தர் அவரும் கூட கம்ப ராமாயணம் வாசித்து நான் பார்த்ததில்லை.
ராமர் ஒரு வகையில் ஸ்மார்த்தர்களுக்கு உரிய தெய்வம் போல புரிந்து கொள்ளப்படிருந்தது. வால்மீகி ராமாயணத்தைப் போல கம்ப ராமாணத்தை பிரதானமாக வைணவர்கள் எடுத்தாளுவதில்லை. அதில் ராமன் சாமான்ய மனிதன் எதிர் கொள்ளும் இடர்களை எதிர் கொள்வதைப் போல பல இடங்களில் காட்டப்படுவதை ஏற்க இயலாததாக இருக்கலாம். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல அமைப்புகள் நாத்திக மனச்சாய்வு கொண்டவை. பட்டி மன்றம் போன்ற இடங்களில் நிகழும் விவாதத்திற்கு நீட்சி போல வைணவ பேச்சாளர்கள் விளக்கம் தர இயலாது. “ராமர் குற்றவாளியா?” போன்ற தலைப்புகள் வைணவர்களுக்கு நிலையழிவை தரக் கூடியவை.
விழாக குழுவின் நிர்வாகத்தினர் அணிவித்த சால்வையை ஒரு வித ஒவ்வாமையுடன் ஏற்றவர் நான் அவருக்கு அணிவிக்க முயன்ற போது அதை விலக்கி “எதற்காக இவ்வளவு பிரமாண்டமாக மேடை இடம் என்ன காரணம் என கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார். விழா குழு துவக்கத்திற்கு ஒருங்கி இருந்த பிரமாண்ட மேடை அமைப்பு அரசியல் மேடை போல பலர் அமரும் படி ஒருங்கி இருக்கும் என அவர் ஊகித்திருக்க வேண்டும். பிற சம்பிரதாயங்களை சேர்ந்த பிரமுகர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வதில் அவருக்கு தயக்கமிருந்திருக்கலாம் . அவர் எடுத்துக் கொள்ளும் பேசு பொருள் மட்டும் கேட்பவரின் கவனம் முழுமையாக தன்மீதிருக்க வேண்டும் என நினைப்பார். அவரது உபயன்யாசங்கள் ஒரு நாள் நிகழ்வாக நடப்பதில்லை. அதில் பெரிதாக எதையும் சொல்ல இயலாது என்பதால் எப்போதும் மூன்று நாள் நிகழ்வாக அவை ஒருங்கப்பட்டன.
இந்த விழாவில் கொண்டுவந்து அவருக்கு சங்கடத்தை உருவாக்கிவிடுவேன் என என்னை சந்தேகித்தார். அடுக்கடுக்கான கேள்விகள். அனைவரையும் ஒரே அமைப்பில் கொண்டு வழ முயல்வது தேவையற்ற சர்ச்சகளை உருவாக்கும் என்றார். அடிப்படையில் முரண்பாடுகளைக் கொண்ட அத்வைத மரபு “பரம்பதம்” என ஒன்று தனித்திருக்கிறது என்பதை ஏற்பார்களா என்றார். யாரோ அவரிடம் விழா குழு நோக்கம் பற்றிய இந்த விஷத்தை விதைத்திருக்கிறார்கள். என்னை புரட்சிக்காரனாக சிறுபிள்ளையாக தான்தோன்றியாக
சித்தரித்திருக்க வேண்டும்.
இந்த முயற்சியை பிற எவரையும் கலக்காது முன்னெடுப்பதாக சொல்லியிருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. எனது எண்ணங்களை விழுமியங்களை வார்தைகளாக சொல்ல முடியாது. செயல் வடிவில் அதை மிக செறிவாக அமைப்பேன் என என நம்பிய சிலருக்கு நான் உறுதியளித்திருந்தேன். ஆனால் அது எடுபடவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக