https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

மணிவிழா - 61 * சிதையும் உளக்கட்டமைப்பு *

 ஶ்ரீ:



29.01.2023


* சிதையும் உளக்கட்டமைப்பு  *






வேளுக்குடியுடன்இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் அவரைகடவுள் மனிதர்என்கிற இடத்தில் வைத்துப் பார்ப்பவர்கள். புரிதலுக்கும் செயல்படுத்துதலுக்கும் அப்பாற்பட்டு ஆன்மீக உரைகளை கேட்பது மாத்திரமே புண்ணியம் சேர்ப்பது என்கிற கருதுகோளை கொண்டவர்கள். இந்து ஞானமரபின் தொடர்ச்சி ஆயிரம் வருடங்களாக உருவாகி நிலைகொண்ட நம்பிக்கையின் நீட்சி. அவரின் தன்னார்வளர் போன்ற அடையாத்தை கொண்டவர்களுடன் சாதாரன எளிய மனிதர்களும் அவரின் நிர்வாகத்தில் ஏதாவதொரு வகையில் பங்கு பெறும் ஆர்வம் கொண்டவர்களாயினர் .


எனக்கும் அவருடன் பயணிக்கும் எண்ணமே இருந்தது, வேறு ஒரு விரிவான தளத்தில். அன்று எனது தேடலில் அதன் சிறு முணையே எனக்குள் தென்பட்டது .அது ஆரம்ப நிலை. பயணத்தில் அதை விரித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் என்னிடம் இருந்த கருவிகளை கொண்டு சம்பிரதாங்களை இன்று நவீன சமூகம் ஏற்க தடையாக இருப்பதும் அதற்கான மாற்றம் உருவாக இருப்பது எவ்வகையானது, எதை நோக்கியதாக இருக்கும் என்கிற விவாதம் துவங்கப்பட வேண்டும் என நினைத்தேன்.


2012 களில் உள்ள ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவக்கம் இந்த கருதுகோளை கொண்டதாக இருந்தது. அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஆன்மீக எத்தகைய சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது குறித்த ஒரு உரையாடல் துவங்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில்திறந்த அரங்கம்என்கிற அமைப்பு உருவாக்கப்பட திட்டமிட்டு இறுதிவரை நிகழவில்லை. அதன் திசை அறிய இயலாததாக இருந்தாலும் விளைவது பற்றிய புரிதல் தெளிவாக இருந்தது என்பதால் அது ஒரு குருட்டு பட்டிமன்றத்தை போல இருந்தாலும்சரிஎன்பதே அன்றைய தேர்வாக இருந்தது. இந்து ஞானமரபு தேடலை முதன்மையாக கொண்ட அலைதல் அடிப்படையானது என்பதால் அது ஆண்களுக்கானதாக புரிந்து கொள்ளப்பட்டது. பெண்கள் மிக அரிதாக அதில் தென்படுகிறார்கள். பக்தி வழி தத்துவத்தில் இருந்து மெல்ல விலகி விலகி ஆன்மீகம் இந்து ஞானமரபின் சிறு கூறுகளை கொண்டதாக வடிவெடுத்து இன்றளவும் சற்றேனும் கலாச்சார பண்பாட்டின் தொடர்ச்சி அறுபடாத நிற்கின்றது. தத்துவார்த்த தளத்தில் அது பெரும் வீழ்ச்சியாக நிகழ்ந்து பின் பக்தி மார்க்கம் என்பது ஆன்மீகமாக சடங்கு சம்பிரதாயம் என்கிற அளவில் குறுகியது. பிறகு அது பெண்களுக்கானது என்கிற நடைமுறை புரிதலின் பின்புலத்தில் நிலைகொண்டது


கடந்த அரை நூற்றாண்டுகளாக வேகமெடுத்த சமூக சீர்திருத்தங்கள் அவர்களின் மீட்சியாக துவங்கியது போது நுகர்வு கலாச்சாரம் மேலோங்கி பொருளியல் பற்றாகுறையாக உருவெடுத்தது .குடும்ப முடிவுகளில் பெண்களுக்கு சம பங்கு என்கிற அனைவரின் ஏற்பு அவர்கள் வேலைக்கு செல்ல துவங்கிய பிறகு உருவாகிவந்தது அதனால் குடும்ப உறவுகளில் அணுகுமுறையில் பெரிய மாற்றங்களை காணமுடிந்தது. உறவுகளால் அதுவரை அழுந்தி இருந்த பெண்களின் உலகம் சுதந்திரம் பெற்று பெரிய மாறுதல்களை அடையத் துவங்கியது . குடும்ப நிர்வாகத்தில் எதிர்காலம் குறித்த பதற்றம் உருவாகி அதில் கல்வி முதன்மை பெற்ற பிறகு அதன் உலகம் மதிப்பெண்களினால் ஆனது அன்றி பிற எதையும் கருத்தில் கொள்ளாதானது. கல்வி செலவேறியது என்பதால் குழந்தை பிறப்பு சதவீதம் குறைந்தது. கல்வி ஒரு சொத்து போல உருவெடுத்தும் அதில் வெல்ல அழுத்தம் மிகுந்த போது குழந்தைகள் அறிவார்ந்த தளத்தில் எதையும் அறிந்து கொள்ளாதவராயினர். பெற்றோரின் போதாமை அவர்களுக்கு வழிகாட்ட இயலவில்லை.  

இந்த தலைமுறை கடந்த முப்பதாண்டுகளில் உருவாகி பின் இன்றைய உலகம் அவர்கள் அன்றி பிறர் இல்லாமலாயினர். கணிப் பொறி துறையின் வெற்றி நடுத்தர வர்க்கத்தின் பொருளியல் எழுச்சிக்கு அடிப்படையாகி பெண்கள் குடும்ப விவகாரங்களில் நேரடியாக மற்றும் மறைமுகமாக முடிவெடுக்கும் செல்வாக்கு அதிகரித்தது. வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று வருபவர்கள் அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மையை எடுத்துக் கொண்டு அவை இங்கு நம் வாழ்வியலிலும் கலாச்சாரத்திலும் அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதற்குள் வந்தமராதவை அனைத்தும் 

நிராகரிக்கப்பட்டன . பொருளாதார வெற்றி தரும் உற்சாகம் அவர்களை நம்பிக்கையுடன் நவீன உலகில் நுழையும் துணிவை கொடுத்தது. ஆனால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சவால்களை எதிர்கொள்ள முடியாதபடி அவர்களின் மரபான நம்பிக்கை நீர்த்துக் கொண்டிருப்பதை மிக தாமதமாக உணர்ந்தார்கள் அல்லது உணரவில்லைஇந்தப் போக்கு அனைத்து விழுமியங்களையும் அசைக்கத் துவங்கியது. அதன் விளைவாக குடும்ப உறவுகளில் சிக்கல், மனச்சோர்வு , பிளவுண்ட் ஆளுமை போன்ற உளவியல் சிக்கல்கள் பெருகின


விழுமியங்கள் அறத்தின் பார்பட்டவை. அறம் ஆன்மிகத்தில் அமர்ந்திருக்கிறது. ஆன்மீகம் உதாசீன படுகிறகிற போது காலச்சார பண்பாட்டு மற்றும் மரபு அமர்ந்திருக்கும் ஆழ்மனத்துடனாக அதன் தொடர்புகளை இழக்கச் செய்கிறது. அதுவரை எதிர்காலம் குறித்த மரபான நம்பிக்கைகளுக்கு துணைத்த கருவிகள் செயலிழந்து போகச் செய்கின்றது . அன்றாடப் பதட்டம் தவிற்க இயலாததாகி பலவித உளவியல் சிக்கலில் கொண்டு விடுகிறது. அங்கிருந்து உருவாகும் எதிர்மறை அலைகளை அனைத்து நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க குடும்பங்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு அவை சமூகத்தில் நிரந்தரமாக பள்ளங்களாக உருவாக்கி விடுகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்