ஶ்ரீ:
பதிவு : 659 / 849 / தேதி 15 ஜனவரி 2023
* உருவாகும் அமைப்பும் ஊடுபாவும் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 54 .
சற்றும் விட்டுக் கொடுக்காத விவாத போக்கின் இறுதியில் தலைவர் வெறுப்புடன் என் தொகுதி மற்றும் மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட அனுமதி தந்தார். வெளியிட்டுத் தொலை என்கிற மனோபாவத்தில். இதில் வேடிக்கை இளைஞர் காங்கிரஸ் தலைவரிடம் கலந்தாலோசித்தாயா எனக் என்னை அவர் ஏன் கேட்க்கவில்லை? என நினைத்துக் கொண்டேன் . அறிவிப்பு அன்று “மாலைமலரில்” வெளியாகும் படி ஏற்பாடு செய்யப்பட்டது.அதன் அடுத்த கட்டம் இதைவிட சவால் . “மாலைமலர்” தினசரியை குறிவைத்தே அனைத்து அரசியல் செய்திகளும் உருப்பெறும். காலை பத்திரிக்கையை போல அதற்கு இரவு என்கிற நீண்ட காத்திருப்பு இல்லை. செய்ததற்கான எதிர்வினை அன்று மாலை துவங்கி இரவிற்குள் உச்சம் கண்டுவிடும். நிஜமான சிக்கலென ஏதாவது எழுந்தால் அதை காலைக்குள் சரி செய்து விடலாம். அன்று “மாலைமலர்” தினசரியில் நான் அறிவித்த அனைத்து தொகுதி தலைவர்கள் பட்டியல் நான் நியமனம் செய்ததாக முழுமையாக வெளியானது. அதுவே ஒரு பெரிய செய்தி. “முழு அமைப்பும் எனது நியமனத்தில்” என்கிற செய்தி அனைவருக்கும் ஒன்றை தெளிவாக ஒரு செய்திதை சொல்லியது. நான் அதன் மையத்தில் முழு அதிகாரத்துடன் இருக்கிறேன் என்பது அந்த அறிவிப்பு. இனி என்னுடன் முரண்பட இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் முயற்சிக்க மாட்டார்கள். நீண்ட கால அவமதிப்பு மற்றும் எனக்கு கொடுக்க மறுத்த இடம் எல்லாம் நிகர் செய்யப்பட்டது ஒரு வித சொல்லில் வைக்க முடியாத விடுதலை உணர்வு.
அதுவரை காங்கிரஸ் மூத்தோர் அமைப்புத் தவிர பிற எந்த உப அமைப்புகளும் மாநிலத்தை பிரதிநிதிப் படுத்தும் முழுமையான பட்டியலை எக்காலத்திலும் வெளியிட்டதில்லை. முதல் முறையாக முழுமையான இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர்கள பட்டியல் வெளியானது. அதன் நிர்வாக அமைப்பு பற்றிய இறுதி வரைவு ஒரு வார காரத்தில் அதன் தலைவர்கள் வெளியிடுவார்கள் என சொல்லப்பட்டது. எதிர்பார்த்தது போல மாலை சிக்கல் துவங்கி நள்ளிரவு வரை தலைவரிடம் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தது. துவக்கி வைத்தவர் ஜோதி நாராயணசாமி. சண்முகத்தின் அணுக்கர் என்பதால் என்னை உடனடியாக தலைவர் வீட்டிற்கு வரச் சவன்னார். அதுவே ஆறுதல அளிப்பதாக இருந்தது. கட்சி அலுவலகம் எனக்கான இடமல்ல அங்கு சிக்கல்கள் பார்க்கபடும் கோணம் வேறாக இருக்கும். அது ஒரு பலிக்கள் போல அழைத்ததும் பிறர் பார்க்க தலைவர் வெட்ட தலை கொடுக்க வேண்டும். அங்கு எனக்கு சாதகமாக ஒருபோதும் அங்கு முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. பின்னர் தனிப்பட்ட முறையில் என்னை சமாதனப்படுத்தி ஏதாவது சொல்வார். இந்த முறை அப்படி நடக்கவில்லை.
ஜோதி நாராயணசாமி எனக்கும் வேண்டியவர் என்றாலும் தன்னை பற்றிய மிகை எண்ணம் அவரை யாருடனும் இணங்கி செல்ல வைப்பதில்லை. என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு . இது எனது தான்தோன்றி முடிவு என்பதாக. அவரை கலந்தாலோசிக்கவில்லை என்கிற ஆதங்கம். அனைத்தையும் விட அவர் நிரகரித்த சிலர் அந்த பட்டியலில் இருந்தது அவரை கொதிப்படையச் செய்தது. இது நடக்கும் என ஊகித்ததால்,
நான் தலைவரை சந்திக்க செல்லும் போதே நாராயணசாமியின் தொகுதியான காசுகடைக்கு புதிதாக தேர்ந்தெடுப்பட்ட தலைவர் அவருடன் அவர் உத்தேசிக்கும் நிர்வாகக்குழு என அனைவரையும் தலைவரை சென்று சந்தித்து வாழ்த்து பெறச் சொல்லியிருந்தேன். அதற்கு முன்னதாக நாராயணசாமியை மரியாதைக்கு சால்வை போடச் சொல்லியிருந்தேன். இரண்டும் நான் அங்கு வருவதற்கு முன்பாக நடந்து முடிந்திருக்க வேண்டும் என்பது திட்டம். நான் தலைவர் வீட்டிற்கு சென்ற போது நான் சொன்ன அனைத்து முறைமைகளை செய்து முடிக்கப்பட்டு சில நிமிடங்கள் ஆகி இருந்தது. தலைவர் அவர்களுக்கு வாழ்த்து சொன்னார். அப்போதே அவரிடம் கொண்டு வைக்கப்பட்ட சிக்கல் நீர்த்தருந்தது. நான் காசுகடை தொகுதி தலைவராக தெரிவு செய்திருந்தவர் நாராயணசாமியின் அணுக்கர். நான் அவரிடம் பல முறை அவரது சிபாரிசு குறித்த கேட்ட ஒவ்வொருசந்தர்பத்திலும் அதை ஒரு சிறு பிள்ளை விளையாட்டு போல கடந்து சென்றார் இது அந்த தொகுதி மட்டுமல்ல 80 சதவிகிதம் அப்படித்தான் நடந்தது. நான் பட்டியல் கேட்ட சிலர் நேரடியாக வல்சராஜை சென்று சந்தித்திருக்கிறார்கள். அவர் தனது வழக்கப்படி தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்பது போல பேசி நான் ஏதோ அரசியலில் குறுக்குசால் ஓட்டுகிறேன் என நினைத்துக் கொண்டனர். ஒவ்வொரு முறை நான் அவர்களை சென்று சந்தித்த போது பல விதங்களில் அவமானப்பட்டருக்கிறேன்.
பிற சில்லரை அரசியலுடன் என்னை தொடர்புபடுத்துவது போல இளிவரல் பிறிதில்லை . ஒவ்வொரு முறை அது நடக்கும் போது இது அப்படி பட்டதல்ல என காட்டவேண்டிய வெறி ஏறி வரும். தொகுதிக் குழு அமைப்பது அந்த வகையில் எனக்கு பல வகைகளில் மிக சவாலாக மாறி இருந்தது.இதற்காகவாவது அந்த பட்டியில் இவர்களின் அனுமதியோ ஒத்துழைப்போ இல்லாமல் வெளிவந்தேயாக வேண்டும் என தீர்மானித்திருந்தேன். தொகுதி நிர்வாகக் குழு வெளிவரவேண்டு பிறிதொரு முக்கிய காரணம் என்பதால் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் என அனைவரிடமும் பேசி பின்னரும் ஒன்றும் நிகவில்லை அது நிகழாது என தெரியும். தலைவரும் அதை அறிந்திருந்தார். ஆனால் நாளை இது போல அவர்களை கலந்தாலோசிக்கவில்லை என்கிற குற்றசாட்டை என்மீது வைக்க முடியாதபடி சூழலை அமைத்துக் கொண்டேன் மேலும் என் அணுக்கர்களை அந்த தலைமை பதவிக்கு நான் தெரிவு செய்யவில்லை. ஆரம்பம் முதலே இதில் மிக கவனமாக இருந்தேன். அந்தந்த தொகுதிகளில் முக்கியஸ்தர்களுக்கு அணுக்கமான அல்லது அரசியல் காரணங்களினால் அவர்களால் ஒரு போதும் பரிந்துரைக்க முடியாத ஆனால் தவிற்க இயலாதவர்களை தலைவர்களாக கொண்டு வந்திருந்தேன். அவர்களால் நேரடியாக என் மீது குற்றம் சுமத்த வழியின்மையால் பலரை கொதிக்கச் செய்யும். அரசியலின் அடிப்படைகளில் ஒன்று. என்னால் தலைவர்களாக கொண்டுவந்தவர்களை எதிர்க்கும் அனைவரையும் விட்டு விலகுவது அவர்களுக்கானது நான் உருவாக்க விரும்பும் அமைப்பு மேலும் பலம் பெற இது மிக முக்கியமானது. அரசியலின் எந்த முடிவும் பல ஊடுபாவுகளைக் கொண்டது. இதில் வெற்றி பெரும் போது நேரடி பாராட்டாக அது ஒரு போதும் நிகழ்வதில்லை. அங்கு உருவாகும் கடும் எதிர்ப்பினால் உருவாகி வரும் இடம் பிறர் மோதுவதற்கு அஞ்சத்ததக்கதாக இருந்து விடும். எதிர் தரப்பின் வீண் கேள்விகளை முற்றாகக கடந்து போகும் வாய்ப்பை கொடுக்கிறது .
அனைத்து தொகுதி தலைவர்களும் தேரடியாக என்கீழ் வந்துவிடுவார்கள் அது நிகழ வேண்டும் என்பதால் தொகுதி அமைப்பை உருவாக்க நினைத்தேன். அந்த அமைப்பு ஒரு வகையில் மாநில நி்ர்வாகிகளை நிராகரிக்கும். அதற்கா அதிகாரத்தை அவர்கள் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். இனி அவர்கள் தங்களது செயல்பாட்டிற்கு வரவேண்டி இருக்கும் அல்லது எப்போதைக்குமாக விலக நேரும். இது ஒரு அடிப்படை முரணாக அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் கட்சி அமைப்பிற்குள் செயல்படவேண்டிய பொறுப்பு இல்லாதவர்களாக உருவெடுக்க எனது இந்த பிழை நகர்வு அல்லது அணுகுமுறை காரணமாக இருந்திருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக