https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 17 ஜனவரி, 2023

மணிவிழா - 52

  



ஶ்ரீ:



17.01.2023








தேசிகர் சபை தலைவர் ராமாநுஜம் அவரை வீட்டில் வந்து சந்திக்க முடியுமா என கேட்டிருந்தார். விழா குழுவல் அவர் இடம்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டபோது இரண்டு நாள் அவகாசத்திற்கு பின் தங்கள் நிலைப்பாட்டை சொல்லுவதாக கூறியிருந்தார். அவரை வீட்டில் சென்று சந்தித்த போது அவருடன் வேறு சிலரும் இருந்தனர். அவர்களை ராமாநுஜம் அழைத்திருக்க வேண்டும். அதை புரிந்து கொள்ள முடிந்ததுஆனால் அவர்களுடன் என்னை அழைத்திருக்க வேண்டியதில்லை. ராமாநுஜம் வேளுக்குடி வருகை பற்றி பேசிக் கொண்டிருக்க. அசந்தர்ப்பமாக அவர்களும் அதில் கலந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் என்னிடம் நேரடியாக உரையாடத் துவங்கினர்அவரது சபை நிர்வகிகளினூடாக நிகழ்ந்த உரையாடல் விவாதம் நகர்ந்து நகர்ந்து தருகம் போல மேலும் வலுத்து வலுத்து கொதிநிலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது

தத்துவ விசாரம் என ஏதுமின்றி அவர்கள் சொல்லும் சழக்குகளுக்கு காரணம் அவர்கள் இடத்திற்கு நான் வந்திருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அவர்கள் நினைத்தார்கள் போலும். அவர்கள் எனது கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் அவர்களது ஆதாரவை நாடி வந்திருக்கிறேன் என்பது உண்மை ஆனால் அதை பெறுவதற்கு அவர்கள் முன்பு குறுகி நிற்பேன் என அவர்கள் நினைத்திருக்கலாம். அது நிகழாது. அமர்ந்து தர்கித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு புள்ளியில் எழுந்து நின்று பேச அது உச்ச நிலையை அடையாதவாறு அவர்களின் தலைவர் ராமாநுஜம் மட்டுறுத்தினார். அனைவரும் இணைந்து செல்ல வேண்டிய காலம் வந்துள்ளது என்றார். ஆனாலும் உஷ்ணம் தனியாத மனநிலையில் அவர்கள் இருந்தனர். நான் சட்டென என் இயல்பிற்கு திரும்பிவிட்டேன். அந்த இடைமறிப்பால் பாவம் அவர்கள் தான் நூலறுந்து போனவர்களாக உணர்வது தெரிந்தது


அவர்களிடம் அங்கு பேசி எதையும் அறுதி செய்து விட முடியாது. பல நூற்றாண்டுகள் தொடர் விவாதத்தில் இருந்து வரும் ஒரு தத்துவ சர்சையை எதையும் உள்வாங்காத காதுகளை கொண்டு இன்று வெறும் காழ்ப்பு என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அதை முடிவிற்கு கொண்டு வர ஒருபோதும் இயலாது. தாக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்களுடன் உரையாடுவது மடமை என அறிந்திருந்தேன். அவர்கள் துவங்கிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருந்தேன் என்பதால் என் தரப்பை அங்கு வைத்தேன். ஆனால் உரையாடலை இன்னும் நுட்பமாக எடுத்து செல்வது என்னை அவர்களிடம் இருந்து விலகி நிற்க வைப்பது என்கிற எண்ணத்திற்கு வந்த போதுதான் அவர்களின் தலைவர் அதை நிறுத்தினார். நான் எங்கு செல்ல முயல்கிறேன் என்பதை அவர் அறிந்திருக்க கூடும்


அவர்கள் விழாகுழுவில் இடம் பெறுவதை உறுதி செய்தனர். கறாராக துவக்கிய உரையாடலை அவர் ஏன் முதலில் தடுக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அது எனக்கான அழுத்தத்தை என் மீது போட்டுப் பார்த்து நான் அவர்களை எப்படி எதிர் கொள்கிறேன் என அவதானிக்க நினைத்திருக்கலாம். அழுத்தம் எனது எண்ணத்தை மாற்றலாம் அல்லது என்ன மாதிரியான நெருக்கடியில் அவர்கள் இருக்கிறார்கள் என எனக்கு காண்பிப்பது அவர்கள் எண்ணமாக இருந்திருக்கலாம்ஆனால் உரையாடலின் விசை மேலும் விரிவடைந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதுடன் அவர்கள் இணைய வேண்டும் என்கிற என் கருத்திற்கு என் குழுவிலும் அது போல பலத்த எதிர்பிருந்ததையும் அதை கடந்தே அவர்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்பதுடன் விழா துவக்கம் நாள் குறிக்கப்பட்டுவிட்டதால் இனி யார் இணையாது போனாலும் அது மேலதிகமாக நகர்ந்து கொண்டிருக்கப் போகிறது என்பதை உணர்ந்திருக்க வேண்டும். என் நோக்கம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பததாக இருந்ததால் அங்கு நிகழந்த நீண்ட வட தென்கலை சர்ச்சையை நான் இங்கு முழுமையாக வைக்க விரும்பவில்லை


விழா துவக்கம் அறிவித்து மேடையில் இருக்கும் ஆளுமைகளுக்கு சால்வை மாலை அணிவாக்க முதலில் 

திருக்கோவிலூர் ஜீயரை மறுத்தவர்களை கொண்டு அவருக்கு மரியாதை செய்ய அழைத்தேன். முதலில் திகைத்தாலும் என்னை நோக்கி மெல்லிய சிரிப்புடன்

அவர்கள் ஏடையேறி ஜீயரை விழுந்து நமஸ்கரித்து அவருக்கு சால்வை மற்றும் மாலையை அணிவித்தனர். அனைவரையும் கட்டுப்போட்டது கூடிய கூட்டம் செய்த மாயைஅதன் பிறகு நடந்த ஒவ்வொரு காரிய கமிட்டி கூட்டத்தில் அவர்கள் காட்டிய முனைப்பு ஆதரவு அதே சமயம் சில எதிர்ப்புகள் அமைப்பை இன்னும் இருக்கமாக்க பயன்பட்டது


மற்ற நிர்வாகிகள் வேளுக்குடிக்கு சால்வை மாலை மரியாதை செய்ய விழா துவங்குவதை ஜீயர் அறிவித்து தனது உரையை தொடங்கினார். “நல்ல நாள் என்று ஒன்று தனியாக இல்லை அனைத்தும் நல்ல நாளேஎன்று துவங்கிய அந்த உரையை உளம் விம்ம கேட்டுக் கொண்டிருந்தேன். விழா துவங்கி விட்டது இனி திட்டமிட்ட ஒவ்வொன்றையும் நிகழ்ததியாக வேண்டும். ஐந்து வருடம் மிக நீண்ட காலம் ஆனால் திட்டம் இன்னும் கருக் கொள்ளவில்லை. வெறும் எண்ணங்களாக தலைக்குள் பறந்து கொண்டிருக்கிறன. நிகழ்வு முடிந்த போது பார்த்தசாரதி என்னை தேடி வந்து சந்தித்து அவர் கொண்டுவந்திருந்த காசோலையை என்னிட் கொடுத்தார். முதலில் மறுத்து பரவாயில்லை இப்போது தேவை இல்லை விழாவிற்கான முழு செலவையும் பலர் ஏற்றுக் கொண்டார்கள். தேவை ஏற்படும் போது வாங்கிக் கொள்கிறேன் என்றேன். அவர் அதை ஏற்காமல் எனது சட்டை பாக்கெட்டில் உரிமையாக வைத்து ராமாநுஜம் ஐய்யங்கார் வீட்டில் நடந்ததை பெரிது படுத்த வேண்டாம். ஆனால் அவர்களை நீங்கள் கையாண்ட விதம் சிறப்பு என சொல்லி சிரித்தார். நான் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக