https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 3 ஜனவரி, 2023

அடையாளமாதல் * சிறகும் சிறையும் *

  

ஶ்ரீ:



பதிவு : 656  / 846 / தேதி 03 ஜனவரி  2023



சிறகும் சிறையும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 51 .





சண்முகத்தின் தலைமைக்கு எதிராகமுதியவர்கள் பதவி விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்என்கிற தனது கலகக் குரலை நாராயணசாமி வெளிப்படுத்தினார். கட்சி உள்ளரங்கில் அதை சொல்லும் வாய்ப்பு அவருக்கு இருந்த போதும் அதை அங்கு சொல்லாமல் தனது ஆதரவாளன் பாண்டியனும் அவனின் சில நண்பர்களும் துவங்கி பல ஆண்டுகள் உறைநிலையில் இருந்தவெண்புற சேனைஎன்கிற அமைப்பில் கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். அந்த அறிவிப்பால் தலைமைக்கு எதிரான அறைகூவலாக அதை வைக்காமல் அவரை எச்சரிக்கும் தொணிதான் அதில் வெளிப்பட்டது. அது அவரிடம் தனது பேரம் தொடர்பாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். காரணம்அதன் பின் அவரின் எந்த செயல்பாடும் அதை நோக்கி செல்லவில்லை. பாண்டியன் போன்ற சிலர் அந்த அறிவிப்பால் அமைப்பு மீண்டும் உயிர் பெறும் என நம்பினார்கள். அப்படி எதுவும் பின்னர் நிகழவில்லை


ஹோட்டல் மாஸில்நடைபெற்றவெண்புறா சேணைகூட்டத்தில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் சிலர் அழைக்கப்பட்டனர் . காங்கிரஸில் பல்வேறு உப அமைப்புகள் இருக்கையில் புதிய அமைப்புகள் ஏன் உருவாக்கபட வேண்டும் என்கிற கேள்விக்கு நாராயணசாமி பதிலளிக்காமல். கட்சியில் முதியவர்கள் ஓய்வு பெற்று பதவி விலவேண்டும். தலைமை இளைஞர்கள் கைகளில் கொடுக்கப்பட வேண்டும் என்கிற கலகக் கருத்தை முன்வைத்தார். கட்சிக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினார். அதை கட்சி அலுவலகத்தில் வெளிப்படுத்தியிருந்தால் அதற்கு எதிர்விணைகள் எழுந்திருக்கும். அவருக்கு முற்றிலும் எதிராக கூட அது சென்றிருக்கலாம். ஆனால் அந்த பேச்சு தேர்ந்த அரசுசூழ்தல் அது புதிய முரண்பாட்டை துவக்கியது பல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. மாநில இளைஞர் காங்கிரஸை அவர் அங்கீகரிக்கவில்லை அல்லது அதன் மீது தனது செல்வாக்கு இல்லை என காட்ட நினைத்திருக்கலாம் . அது எனது முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது அடிப்படைக் காரணம். இளைஞர் காங்கிரஸ் அமைப்பு ரீதியில் பலமிக்கதாக உருவாகிக் கொண்டிருக்கிறது என அறிவார். ஆனால் மேல் கீழ அடுக்குகள் இல்லாமல் இருப்பது அதன் பலவீணம் என்றும் அறிந்திருந்தார். பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு அதற்கு சாதகமில்லாத சூழலை எதிர்க்கும் என ஊகித்திருக்க வேண்டும். மிக தெளிவான காய் நகர்த்தல். பின்னர் தில்லியில் பாராளுமன்றத் வேட்பாளர் போட்டியில் தானும் இருப்பதை கட்சி மேலிடத்திற்கு தெரியபடுத்தினார். இவை எதுவும் புதுவை கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் தவிர பிறர் அறியவில்லை. நாங்கள் மரைக்காயரை மட்டும் கணக்கில் எடுத்து எங்கள் செயல்பாடுகளை ஒருங்கியிருந்தோம். தில்லியில் நாராயணசாமி தலைவருக்கு எதிராக செய்த சில விஷயங்களை எதிர் கொள்ள அந்த அனைத்து அமைப்பு தீர்மானம் தேவையாய் இருந்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் தலைவர் அதை தவிற்திருக்கலாம்


நாராயணசாமியிம் மரைக்காயரும் தில்லியில் இருந்தார்கள். நீண்ட இழுபறி நாராயணசாமிக்கும் மரைக்காயருக்கும் நிகழ்ந்தருக்க வேண்டும். சண்முகம் அந்த ஆட்டத்தின முதல் நிலையிலேயே வெட்டுபட்டிருக்க வேண்டும். அமைப்பு விரும்புகிறது தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது போன்றவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.காரணம் உப அமைப்புகள் தலைமைக்கு கட்டுப்பட்டவைகள் அவற்றின் கருத்து தலைவர் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என எடுத்துக் கொள்ளப்பட்டது. அகில இந்திய கட்சி அமைப்பு தனது வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதை நூறு சதம் உறுதியானவருக்கு வழங்க விரும்பியது. கடந்த தேர்தலில் சண்முகம் தோற்றது அவருக்கு எதிராக திரும்பியது. மிச்சமுள்ள இருவரில் மரைக்காயர் அதுவரை தோல்வியடையாதவர் என்கிற நிலை அவருக்கு சாதகமாக திரும்பியது. நாராயணசாமியும் சண்முகமும் ஒரே அணியாக இருந்திருந்திருந்தால் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக அன்று பேசியது இந்த பேரத்திற்கு. ஆனால் சண்முகம் அதற்கு உடனபடவில்லை. தில்லியின் அன்றைய போக்கை அவர் சரியாக கணித்திருக்கவில்லை என்பது அவரின் இறுதுகட்ட ஆட்டத்தில் இடமிழந்தது அவரது ஒட்டு மொத்த அரசியலுக்கும் பெரிய சறுக்கலை துவங்கி வைத்தது


நண்பர்களுடன் சண்முகம் வீட்டில் அதிகாலை போராட்ட வடிவு குறித்த ஆலோசணையின் போது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட மரைக்காயர் மரியாதை நிமித்தமாக சண்முகத்தை அன்று காலை சந்திக்க வருகிறார் என்கிற செய்தி கிடைத்தது அன்னறை போராட்டத்திற்கு ஒரு வடிவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது . மரைக்காயரை சண்மகத்தை சந்திக்க விடக்கூடாது என்பது மட்டுமல்ல யாரையும் சந்திக்க விடுவதில்லை அதை மீறி சந்திக்க விரும்புபவர்கள் மரைக்காயார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது அதன் ஒற்றை திட்டம். பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அனைத்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி தோல்வியுற்றறவர்கள் கூட இணைந்து செய்யவேண்டியது. வாக்கு வங்கி என்பது நீண்ட காலம் அவர்கள் உருவாக்கி வைத்திருப்பது. அவர்களின் ஆதரவால் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. வேட்பாளரின் ஆளுமை மற்றும் கூட்டணி அந்த வெற்றியை எளிதாக்கினாலும் இன்றைய நாங்கள் திட்டமிட்ட எதிர்ப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு அது ஒரு தடையை உருவக்கும். மரைக்காயர் தானக விலக  அது வழி கொடுக்கும் என்பது தாண்டி அதனால் தில்லியில் என்ன நிகழும் என்பது பற்றிய எந்த விவாத்த்திற்கும் நான் தயாராக இல்லை. போராட்டம் கிளர்ந்து விரிந்து கொண்டே இருந்தது. நாராயணசாமியும் அன்று புதுவையில் இருப்பது எனக்குத் தெரியாது.துவக்கத்தில் மரைகாயருக்கான எதிர்ப்பை விட நாராயணசாமி எதிர்ப்பு கொழுந்து எரிந்தது


நாடகீய அதன் உச்ச கட்டத்தில் நாராயணசாமி சண்முகம் வீட்டிற்கு வந்திறங்கினார். வில்லங்கம் அதை முதலிலேயே அறிந்திருக்க வேண்டும். அவர் எனது நண்பர்களை நாராயணசாமிக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளை சொல்லியிருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இது பற்றி என்னிடம் பேசிய போது நான் அதை உறுதியாக மறுத்துவிட்டேன. தலைவர் விருப்பம் என என்னிடம் சொன்னதை நான் நிராகரித்து அது போல ஒன்று நிகழ வேண்டும் என தலைவர் விரும்பினால் அதை என்னிடம் நேரடியாக சொல்லட்டும் என கூறிவிட்ட பின்னர் நான் அறியாது என் நண்பர்களை அழைத்து பேசியிருக்க வேண்டும்.வில்லங்கம் நேரடியாக அழைத்து அன்றி காலையில் சொன்னதால் அவை எனக்கு உடன்பாடானவை என அவர்கள் பிழையாக புரிந்து கொண்டனர். கட்சி அரசியலில் வன்முறைக்கான இடம் இல்லை. அது எதிர்மறையான பலன்களை உருவாக்கும் என்பதால் அதன் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை என்பதுடன் எனது இருபத்தி ஐந்தாண்டு கால அரசியலில் அது எனது வழிமறையாக ஒரு போதும் இருந்ததில்லை. போராட்டத்தில் வில்ங்கத்தால் தூண்டிவிடப்பட்டு கொந்தளித்துக் கொண்டிருந்த bsnl தொழ்சங்கத்தை சேர்ந்த தாயகராஜனை நான் அவதானிக்க தவறினேன். அவனது உணர்வுநிலை சூழலால் உருவானது என பிழையாக புரிந்து கொண்டேன். நாராயணசாமி தலைவர் வீட்டிற்கு வந்து இறங்கும் போது மதியம் 12:00 மணிநை நெருங்கிக் கொண்டிருந்தது. அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் முழுமையாக கூடிவிட்டனர். எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி போய்கொண்டிருந்தது நடவில் என் நண்பர்கள் ஒரு வளையம் போல காலை 9:00 மணிமுதல் நுழைவாயிலை பூட்டி பாதுகாத்தபடி கோஷம் போடுவதும் எறி ஏறி வந்தது. ஒவ்வொரு முறையும் தலைவரை சந்திக்க வரும் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரது வீட்டிற்குள் நுழைவை தடுக்கும் போது உருவாகும் வாக்கு வாதம் தலைவர் இரும்பு கிராதி கேட்டிற்கு உள்ளே நின்று கொண்டு அங்கு கூடியிருந்தவர்களை கண்டிக்கும் போது சாம்பல் பூத்த கோஷம் விசிறி விடப்பட்டு புதுக் கொழுந்து எழுந்து நின்று ஆடிக் கொண்டிருந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக