https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

மணிவிழா - 44

 


ஶ்ரீ:



மணிவிழா - 44


08.01.2023





சட்டென மாற்றமடைந்த அவரின் தோற்றம் கண்டு முக்கிய பிரமுகர்கள் கலக்கமடைந்தார்கள். எனக்கும் இக்கட்டான சூழல் உருவானது. நான் இதை எதிர்பார்க்கவில்லை என்பதால் தாக்குண்ட நிலை. ஆனால் மிக விரைவாக மீண்டிருந்தேன். மனம் எவ்வளவு விரைவாக சூழலை அனுமானிக்கிறது தகுந்த சொற்களை எடுத்து வைக்கிறது என்பது ஒரு அனுபவம். அது உருவாகி நிலைகொள்ள அதை பழகியிருக்க வேண்டும் போல. சற்று திகைத்திருந்தாலும் என்னை திரட்டிக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்ட போது மனம் அமைதியடைந்திருந்தது. அதற்கு சில நொடிப் பொழுதே தேவையாய் இருந்தது . இப்போது யாராக அவர் முன்பு நிற்கவேண்டும் என்ன பதில் சொல்லவேண்டும் என திர்மானித்திருந்தேன். எளிய தொண்டனை போலஸ்வாமி, சிஷ்யபாவனை இங்கு எடுபடாது. நான் உருவாகி வரும் ஒரு இயக்கத்தை வழி நடத்துபவன். இதோ என்னை நம்பி இணைந்தவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நான் எடுக்கும் சொற்கள் என்னை உருவகப்படுத்தும். இன்று தவறான புரிதல் ஒன்று அவர்களுக்கு உருவானால் அது எப்போதும் இருந்து கொண்டிருக்கும். பின் ஒருபோதும் திட்டங்கள் என எவர் முன் வைத்தாலும் அதில் சந்தேகம் கொள்வர். யாரை நம்பி இவ்வளவு பெரிய இயக்கம் தொடங்கப்பட்டதோ அவரின் ஆதரவு எனக்கில்லை என்றாகும்.நான் இயக்கத்தை முன்னெடுப்பவன். என் எண்ணத்தை மிக தெளிவாக முன்வைத்தாக வேண்டும். அது சிறப்பு அழைப்பாளருக்கு மரியாதை குறைவாக உணரப்பட்டால் அதை உடனடியாக தவிர்தாக வேண்டும். ஆனால் எனக்கான இடத்தை ஒரு போதும் இழக்க முடியாது


வேளுக்குடி ஸ்வாமி முன்வைத்த கேள்விகளுக்கு மிக தெளிவாக உறுதியாக பதில் சொல்லத் துவங்கினேன். “பொருளியல் பலமில்லாமல் எந்த முயற்சியையும் துவங்க முடியாது அதற்காக யாரிடமும் பணிந்து அதை செய்பவன் அல்ல. விழாவின் பிரமாண்டம் உணரப்பட வேண்டும் என்பதற்கான யுக்திகளை தவறாக நினைக்க வேண்டாம். சம்பிரதாயமான உரையை நிகழத்த கூடிய இடம் இது என அது நிறைவும் போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதில் எந்த சமரசமும் எனக்கில்லை. பொது சநாதன தர்மம் பற்றிய உரை இங்கு நிகழ வேண்டுமானால் அதற்கு ஸ்வாமி தேவையில்லை. அதை செய்ய வேறு சிலர் இருக்கிறார்கள். ராமாநுஜரின் பெயரில் துவங்கப்படும் அவரை ஆயிரம் ஆண்டு கடந்து என்னவாக பார்க்க வேண்டும் என்கிற மரபு நோக்கம் இருந்தாலும் அதில் நவீனத்தை இணைத்தே பார்க்க வேண்டும் என்பது நீங்கள் ஒவ்வொரு உபயண்யாசத்திலும் சொல்லி வருகிறீர்கள்

கடந்த மாதம் இதே லாஸ்பேட்டையில்மாதா அமிர்தானந்த மயி9 யின் நிகழ்வு நடந்தது. அது சொல்லாத மரபு பற்றி ஒன்றை நாம் இங்கு சொல்ல இருக்கிறோம். மேலதிகமாக இது எனது ஆச்சாரியன் தலைமை தாங்கி அமரும் மேடை என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். விழா துவங்க இன்னும் ஒரு மணி நேரமே இருப்பதால் சற்று ஒய்வெடுத்துக் கொண்டு நிகழ்விற்கு வருக. உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் அனைத்திற்கும் இன்று இரவு விரிவாக பதில் சொல்கிறேன் என சொன்ன போது ஒன்றும் சொல்லாமல் புன்னகையுடன் நான் சால்வை அணிவிக்க இடமளித்தார்


வேளுக்குடி ஸ்வாமி புதுவை வந்திறங்கி நில நிமிடத்தில் விழா நிகழும் இடத்திற்கு செல்லாமல் என்னை நோக்கிய கேள்விகள் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருந்தது. இதே கேள்வியை இன்று இரவு என்னிடம் கேட்டிருந்தால் இன்னும் தீவிரமாக பேசி இருப்பேன். முதல் முறையாக முக்கிய நிர்வாகிகள் வேளுக்குடி ஸ்வாமியை சந்திக்கிறார்கள். இந்த உரையாடல் அவர்களை ஒரு போதும் வேளுக்குடியுடன் நெருக்கமான உரையாடலை நிகழ்த் விடாது. இப்போது நான் பார்த் அவரது முகம் வேறு விதமானது. இன்னும் மென்மையான உரையாடலுக்கு உகந்த ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். விழா நிகழும் இடத்திற்கு செல்லமால் அவர் பேசியவை அனைத்தும். அங்கு இருக்கும் சூழல்பற்றி அவருக்கு சொன்னவர் பெருமாள் ராமாநுஜமாக இருக்க வேண்டும் என யூகித்தேன். பிரமாண்டமான மேடை அரசியல் மேடை போல பலரை அமரவைக்கும் திட்டம் எனக்கு இருப்பதாக அவருக்கு சொல்லியிருக்க வேண்டும். உபண்யாசம் என்கிற கருதுகோளை கடந்து ஏதோ அரசியல் மாநாடு போல நிகழ இருப்பதாகவும் சொல்லியிருக்க வேண்டும்.


அன்று நிகழ்ந்த அந்த சம்பவத்திற்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் சிலரை அமைப்பிற்குள் கொண்டு வருவதில் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டு இருந்தது. நிர்வாக பொறுப்பிற்கு வந்த சிலர் எதிலும் முணைப்பு காட்டாமலாயினர். ஆடிட்டர் கணேசன் வெளியேறியது அடுத்த நாள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு. முதல் கோணல்.அதன் பிறகு முயற்சிகள் ஒருங்கிணையவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...