https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 23 ஜனவரி, 2023

மணிவிழா - 55

 




ஶ்ரீ:



23.01.2023.






இயல்பு பற்றி நினைத்து புரிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதற்கு அப்பால் எதிர் நோக்காத தருணத்தில் இருந்து வெளிப்படுவதை சேர்த்தே நாமும் பிறரும் . அரிய தருணங்களில் அது சட்டென மிக எளிதாக எழுந்து ஆட்கொண்டு அடுத்த செல்திசையை முடிவு செய்து பின் திகழ்ந்து முடியும்வரை உடனிருந்து பின் காணாமலாவதை அறிந்திருக்கிறேன். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த பாலன் நான் இயற்றாத ஒரு பிழைக்கு வலிந்து என் மீது குற்றம் சுமத்தி என்னை தனிமை படுத்திய போது அதற்கு கடும் எதிர் விணையாற்ற என்னுள் எழுந்த அந்த கட்டுக்கடங்காத சீற்றம் எனது இயல்பிற்கு மாறானது. அதுவரை நான் அறியாதது. ஒரு ரௌத்ரம் போல என்னில் வெளிப்பட்டது. அதுவும் என் இயல்பே என புதிதென அன்று அறிந்து கொண்டேன். பாலனுக்கு எதிரான அரசியலில் அவரை முற்றாக வீழ்த்திய பிறகே அந்த சீற்றம் அடங்கி பின் என்னைவிட்டு விலகியது . உணர்வுகள் ஒருவித நரம்பு செயல்பாட்டின் வழியாக உயிர் விழைவை உருவாக்கும் உடல் திரவம் அதைஅட்டினல்போல அன்று உணர்ந்தேன்.அந்த காலகட்டத்தில் கொண்டிருந்த விசை நான் முற்றும் அறியாதது. எதிர் நோக்காத நேரத்தில் என்னில் இருந்து வெளிப்பட்டு பாலனை உளவியல் ரீதியில் முற்றாக அழித்து பின் ஒரு போதும் அரசியலுக்கு முன் தருக்கிக் கொள்ள இயலாமல் செய்ததுஅவருக்கு அது ஒருவகையில் மரணத்திற்கு இணையானது


ஒரு செயல் தொடங்குவது பற்றிய ஊக்கம் பெற்ற பின் அதை உடனே துவங்கி விடுவதும் அது கொண்டிருக்கும் பல பிழை கூறுகளை பயண வழியில் எதிர்கொள்ளும் போது அந்த சிக்கல்களை திருத்தங்கள் மூலம் சரி செய்து கொண்டும் செல்வதனூடாக அதன் வெற்றியை கண்டடைவது மிகச் சிறந்தது என என் இயல்பு வழியாக புரிந்திருக்கிறேன். அந்த பயணத்தில் என் திட்டமிலுக்கும் வெளியில் உருவாகும் வாய்ப்பை ஒட்டியும் பின் அதை தொடர்ந்து வளர்சிதை மாற்றம் போல அது நிகழ்ந்து விடுகிறது . ஒரு குருட்டு கற்பனையாக பருப் பொருளுக்கு அப்பால் உள்ள கருத்து வெளியில் இருந்து கிடைக்கும் தூண்டுதலாக எனக்குள் ஆழ்படிமங்கள் வழியாக எழும் திட்டங்களாக அவற்றைப் பார்ப்பதுண்டு

பலருடன் முயங்கும் எந்த செயலையும் முழு திட்டமிடலுடன் துவங்க இயலாது என்றாலும் அதை அனைவருக்கும் பொதுவாக நேர்மையாக அணுகுவதன் வழியாக கிடைக்கும் புரிதலால் மிக சிறப்பாக செய்து முடிக்க முயற்சிப்பேன்


ஒரு செயல் மனதளவில் கருக் கொண்ட பிறகு என்னால் அதை கடந்து செல்ல இயலாது. அதன் மாபெரும் வெற்றியை மட்டுமின்றி தோல்வியையும் என மனதால் உணர்ந்த பிறகும் அது உருவாக்கும் நல் விளைவுகள் பொருட்டு வளர்த்துக் கொள்வதன் வழியாக அதை மிக நெருக்கமாக அணுகி பார்க்க முயல்வேன். அதன் செயல்பாடுகளின் மத்தியில் என்னை மீண்டும் மீண்டும் வரையறை செய்து கொள்வேன். அதன் வெற்றிக்கு அந்த அணுகுமுறை மிக அவசியம் என கருதுகிறேன் . என்னால் அதற்கு கொடுக்கூடிய சிறந்தவைகளை சுதர்மம் போல அதற்கு அளிக்க முயற்சிப்பேன்.


ஆன்மீகம் வழியாக தந்தை கையளித்துச் சென்றது எனது வாழ்கை பயணம் நெடுகிலும் கை கொடுத்தது என்றாலும்

அதன் பல கூறுகளான அனைத்து கலாச்சாரம் பண்பாடு அறம் என்பதை மையப்படுத்தியதாக இருந்ததுஅவற்றை வாழ்கை முறையாக்கிய போது அதன் செயல்பாட்டு முணையில் எழுந்த சமூக இடக்கரடக்கல் பலன்களால் மனவழுத்தங்கள் உருவாகி நிலைகுலையச் செய்தது. அனைத்தின் மீதும் நம்பிக்கை இழக்க வைக்கிறது. அதுவரை பற்றியிருந்தவைகளை மீள் பரிசீலனை செய்ய சொல்கிறது. ஆனால் அது மிக எளிய உலகியல் உளச்சிக்கல்யதார்த்தத்தில் அதற்கு பெரிய இடமில்லை. அதை கடந்து செல்ல ஆன்மீகம் கை கொடுக்க வேண்டும். தத்துவதார்த்தமாக மிக எளிதில் கடந்து செல்ல இயலுவதை கற்றிருக்கிறேன். தத்துவங்களை வாழ்கையில் போட்டு பார்க்க அவற்றின் சிறு கூறுகளாவது பயன்படுத்தி இருக்க வேண்டும். இங்கு தத்துவம் பேசாத யாரும் இல்லை. ஆனால் வாழ்கை எழுப்பக் கூடிய அத்தனை சிக்கலுக்கும் நம்பிக்கை இழப்பிற்கும் அவர்கள் தங்கள் தத்துவத்தில் இருந்து தங்களுக்கு அளித்துக் கொள்ள ஏதுமில்லை


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவக்கத்திற்கு முன்பாகவேளுக்குடி ஸ்வாமிகள்என்னிடம் கேட்ட கேள்விகள் எல்லாம் நேரடியானவை ஆழமானவை சீண்டுபவை ஆனால் நான் பதில் சொல்ல சில மணி நேரம் காத்திருக்க முடிவு செய்தேன். காரணம் அதற்கு நேரடி பதில் என்னிடம் இல்லை

அவர் கேட்டவற்றில் மிக முக்கியமானதாக நான் கருதியது பொருளியல் வெற்றியை குறிவைத்த பிறகு பிற கொள்கைகளை சமரசம் செய்ய வேண்டி வரும் என்பது. அடிப்படையில் நான் சமரசங்களுக்கு உட்படாதவன். களம் என்ன கேட்கிறதோ அதை நேர்மையாக செய்ய முயற்சிப்பவன். எனது செயல்பாடுகள் வழியாகவே நான் என் புரிதலை அடைகிறேன். அது எப்போதும் களத்தில் தான் நிகழ்கிறது. இப்போதும் அதைத்தான் நம்புகிறேன். படைப்பூக்கம் உச்சம் கொள்ளும் போது செயல்படுவதன் மூலமே எனது கற்றல் என் மீது கவிகிறது. அப்போதைய சூழலில் படைப்பூக்க உந்துதல் அந்த புரிதலின் அடிப்படையில் கனவு பெரியதாக இருந்தால் அதன் வழியும் பிரமாண்டமானதாக இருக்கும்


வேளுக்குடி ஸவாமிக்கு என்ன சந்தேகிக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது கேள்வியில் என் மீதான நம்பிக்கை இழப்பை உணர முடிந்தது. பெரிய விழாக்களை முன்வைத்து கருத்தியல் ரீதியாக அவற்றை முன்னெடுக்க முடியாது. அதில் எங்கோ ஒன்றை இழந்தே அதை அடைய முடியும் என்பது அவரது உள்ளார்ந்த அர்த்தமாக இருந்தது. அல்லது நான் அப்படி புரிந்து கொண்டேன். என் கனவுகள் வேறுவிதமானவையாக இருந்தன. ராமாநுஜரின் தரிசனம் ஆயிரம் ஆண்டை கடந்து இன்று என்னவாக பொருள்படுகிறது என்பதை மையப்படுத்தி அதற்கு தீர்வு சொல்லும் பெரிய அமைப்பை எதிர் நோக்கி இருந்தேன். அது பெரும் தேடலை அடிப்படையாக கொண்டது அவற்றை நோக்கிய பயணத்திற்கு தேவையான பிரமாண்டம் வழியாக மட்டுமே அடைய முயல்பவையாக அதுவரை பிற எவரும் முயற்சிக்காத ஒன்றாக அது இருந்தது என்பதால் அதுவரை சம்பிரதாயத்திற்கு உள் நின்று யாரும் முயற்சிக்காத ஒன்னறை துவங்கி இருக்கிறேன் என தெளிவாக அறிந்தருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்