https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 24 ஜனவரி, 2023

மணிவிழா - 56

 




ஶ்ரீ:



மணிவிழா - 56


24.01.2023






என் மீதான அவநம்பிக்கையால்வேளுக்குடிசொல்ல நினைத்ததை மீள மீள எனக்குள் எழுப்பிக் கொண்டே இருந்தேன். என்னிடம் அதற்கு பதில் தீர்மானமாக இப்போதுஇல்லைஎன்பதாக இருந்தது. ஆனால்எப்படி இல்லைஎன்பது குறித்து அவதானித்து அதை அளவுகோளாக பற்றி மெல்ல பிறவற்றை வரையறை செய்து அதன் வழியாக அதற்கான பதிலை உருவாக்கிக் கொள்வேன்.அது ஒருவகை முரணியக்கம் ஒன்றிலிருந்து இயந்து பெற இயலாததை முயங்கிப் பெற முயற்சிப்பது


பெரும் இயக்கங்களால் மட்டுமே சமூகத்தின் ஆளுமைகளை ஆர்வம் கொள்ள வைக்க முடிகிறது பின் உள்ளிழுத்துக் கொள்கிறது. அந்த இயக்கம் எந்த வடிவம் சார்ந்து செயலபட இருக்கிறது என்பதை பற்றி ஒரு குறைந்த பட்ச வரைபடத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டி இருக்கிறது . வேளுக்குடி ஒரு தீர்க்கமான தீவிரமான முகம். அவர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவில் கொண்டு வருவது திட்டம். அவரது உள்நுழைவிற்கு பிறகு ஒரு உரையாடல் நிகழு முடியுமானால் நிர்வாகத்தில் உள்ள பிற ஆளுமைகள் தங்கள் பங்கிற்கு அவற்றை மெருகேற்றுவார்கள் . அவர்களின் அரசியலை அதில் கொண்டு வராமலிருக்கவும் இயக்கத்தின் அந்த பிரம்மாண்டம் உதவும்.அதே சமயம் சமரசமின்றி நடத்தப்படும் போது மட்டுமே அதன் மீது பிறரின்  மரியாதை உருவாகும் அதே சமயம் அதன் கறார் தன்மை பிறரை தயங்க வைத்து விடலாம் என்பதால் அவை இரண்டிற்கும் மத்தியில் எப்போதும் நிற்பது என உறுதி எடுத்துக் கொண்டேன்


பல பெரும் ஆளுமைகளின் வரவும் அவர்கள் நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கும் உரையாடல்களும் விவாதங்களும் எனக்கு புதிய கருத்தியல்களை கண்டடைய உதவும். அவற்றை ஒட்டு மொத்தமாக உருவாக்கிக் கொள்ளவதில் எனக்குள்ள இயலாமையை புரிந்தே இந்த பயணம். அவை பிறருக்கென நடைபெறுவதில் இருந்து விலகி என்னை பயிற்றுவித்துக் கொள்ள , என்னை முழுமையாக உருவாக்கி கொடுக்கும் என நம்பினேன். ஆனால் இங்கு நம்பிக்கை சார்ந்து மட்டும் எதையும் உரையாட முடியாது. தர்க்க ரீதியில் அவற்றை முன்வைக்க உருவாக்கிக் கொள்ள தேவையான கருவிகள் அந்த நீண்ட பயணத்தில் கிடைக்கும் என்பது பற்றிய கனவில் இருந்தேன். அவற்றை அன்று எனது சொல்லில் தொடுக்க இயலாமை ஒரு பெரிய தடையாக உணர்ந்த நேரம்.ஆகவே அவருக்கு பதில் சொல்ல வேண்டாம் என முடிவு செய்திருந்தேன். விழா நிகழ்வுகள் அவருக்கு என்மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் என காத்திருந்தேன். இந்த சூழலில் என்னுடைய தன்னிலை விளக்கம் சரியாக இருக்காது


அன்று இரவு உணவிற்கு பிறகுவேளுக்குடிஸ்வாமி என்னை அழைக்க நான் சென்று அவரை சந்தித்தேன். அன்று மாலை நிகழ்ந்த விவாதம் எதை குறித்தும் பேச்சும் எழவில்லை என்பது ஆறுதளித்தது . அவரது பேசு முறையில் பெரிய மாறுதல் இருந்ததை உணரமுடிந்தது. நிகழ்வு குறித்து முழு திருப்தியை அவரது குரல் சொல்லிக் கொண்டிருந்தது. என்மீதிருந்த அவநம்பிக்கை விலகியிருந்தது. மிக உற்சாகமாக அடுத்த நிகழ இருப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நான் எனது கனவு இயக்கம் மற்றும் அதை நோக்கிய பயணம் குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அவருக்கு அவை ஆர்வமூட்டக் கூடியதாக இருந்திருக்க வேண்டும். வழக்கமாக சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களை சந்திக்கும் போது அங்கு பொது உரையாடல் என ஒன்று நிகழ்வதில்லை. உபன்யாச பொருளின் நீட்சி போல கருத்துக்கள் முன்வைக்கப்படும். அல்லது அவரை சந்திக்க வருபவர்கள் தங்கள்கல்வியைஅவரிடம் காட்ட அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். நான் அவரிடம் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவில் அவரை இணைப்பது எப்படி என்கிற கவலையில் இருந்தேன். ஆழ்மனம் அது மிக எளிதில் நிகழும் என்றது. எப்படி என்பது குறித்து என்னிடம் பதிலில்லை


ஆயிரமாவது ஆண்டை முன்வைத்து திட்ட நிகழ்வை ஒருங்கிணைப்பது மற்றும் அதை ஒட்டிய விவாதங்களை முன்னெடுத்திருக்கிறேன் . பல சர்சைகள் வடிவிலானவை கற்பனையை மட்டும் முன் வைப்பவை மேலும் படைப்பூக்க செயல்பாடுகள் என்கிற கலவையானவைகள். அவற்றை முன வைத்து பேசுவது எனக்கு ஒரு தெளிவை உருவாக்கிக் கொள்ள. அவருக்கு அவை வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். வழக்கமான உரையாடல்களில் இருந்து முற்றும் வேறுபட்டவை என்பதால் மிகுந்த உற்சாகத்துடன் அவர் உரையாடுவது அங்கு பேசப்படுவது  எனக்கு முற்றிலும் புதிய விஷயங்கள். அதுவே பின்னர் அவருடன் காத்திரமான உரையாடல்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தது. எந்த தயக்கமும் இல்லாமல் பேச அவரும் இடம் கொடுத்தார்


தீவிரமான உரையாடலுக்கு இடையே புதுவை தேசிகர் சபையினர் அவரை சந்திக்க வந்திருப்பதாக ரமேஷ் வந்து சொன்னார். அது நான் எதிர்பார்த்த நகர்வு. அவர்கள் உள் நுழையும் போது நான் அங்கிருப்பது எனக்கு சரியாக படாமையால் வேளுக்குடி ஸ்வாமியிடம் விடைபெற்று அறையை விட்டு வெளியே வந்தேன். வெளியே பெரும் கூட்டமாக அவர்களை பார்த்த போது திகைப்பு ஏற்பட்டது. வைணவ வடகலை பிராமனர்கள் கட்சமும் இடுப்பில் துண்டுமாக நின்று கொண்டிருப்பதை பார்த்து மனம் பல வித கணக்குகளை போட உற்சாகம் வடிந்த நிலையில் இருந்தேன். இதுவரை கொண்டு வந்ததை மேலே கொண்டு செல்வதில் உள்ள சவாலை அது சொன்னது. அங்கிருந்த முக்கியஸ்தர்களை பார்த்து வணங்கி அங்கிருந்து வெளிசென்றேன். யாரும் என்னிடம் உரையாட முயலவில்லை. அதை அவர்களின் விலகல் மனநிலையாக பார்த்தேன் 


காரில் வீடு திரும்பும் வரை பலவித எண்ணங்கள். இதுவரை ஜாலம் போல அனைவரையும் இணைத்து இயற்றிய வித்தை இப்போது கைவிட்டு போனது போல இருந்தது . ராமாநுஜர் ஆயாரமாவது ஆண்டு கமிட்டியின் செயல்பாடுகளை வரையறுப்பவர்களில் ஒருவராக வேளுக்குடி உருவாகி வருவார் என்கிற நம்பிக்கையில் அவர் உள்ளிருப்பது போன்ற பிம்பத்தை பேச்சின் வழியாக அவர்களிடம் உருவாக்கி இருந்தேன். அது பற்றி அவரிடம் யாராவது கேட்டால் நான் அதுவரை உருவாக்கி அனைவரையும் உள்ளிழுத்து கட்டியது சிதைந்து விழும்.

நான் சில சந்தர்பங்களை சில நிகழ்வுகளை வளைத்து கொண்டு செல்கிறேன். அதில் உண்மையில்லை என்கிற சந்தேகம் தேசிகர் சபை நிர்வாகி பார்த்சாரதிக்கு வந்திருக்க வேண்டும். ஆரம்பம் முதலாக அவருள் இருக்கும் அரசியலாளனை நான் அடையாளம் கண்டு கொண்டிருந்தேன். எனக்குள் இருப்பதை அவரும் உயத்தறிந்திருக்க வேண்டும். இதோ இங்கு அது உடைபடும் வாய்ப்புகளை பார்க்க முடிந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்