https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 13 ஜனவரி, 2023

மணிவிழா - 49

 



ஶ்ரீ:



மணிவிழா - 49


13.01.2023







நான் மிக கவனமாக என் சொற்களை எடுத்தேன். “இது நாம் அனைவரும் இணைந்து உருவாக்கிய அமைப்பல்ல. இதில் யாரை அழைக்க வேண்டும் வேண்டாம் என்கிற உரையாடல் எழுவதற்கு . இது நாங்கள் உருவாக்கி உங்களையும் அதில் இணைய அழைக்கிறோம். வட மற்றும் தென்கலை பற்றிய குறித்து நீண்ட காலமாக நிலவும் சிக்கலை தாண்டி உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். நான் கலைகளை பொருட்படுத்தாத புதிய தலைமுறையை சேர்ந்தவன். மரபில் ஆழ்ந்த நம்பிக்கையும் பெருமையும் கொண்டிருந்தாலும் எந்த முன் முடிவுடனும் எதையும் அணுகுவதில்லை. என் கற்றலை எப்போதும் களம் தீர்மானிக்கிறது. கற்றலுக்கு தேவையாகும் பொது புரிதலை அங்கிருந்து பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அதில் நடிப்போ பாவனையோ இல்லாமல் வைத்துக் கொண்டேன். பெரிய ஆளுமைகள் அதை மிக எளிதாக உணர்ந்து கொள்வார்கள்.அவர்கள் ஒரு முறை விலகினால் பின் ஒரு போதும் வந்திணைய மாட்டார்கள். பின் அதில் ஒன்று தொட்டு ஒன்றென பலர் வந்திணைவார்களுக்கு அது வேறு விதமான செய்தியை சொல்லுவதாகி விடும். ஒரு சிறு இடர் பேச்சு அனைத்தையும் தவறாக்கி விடும்


நீங்கள் நினைக்கும் கலை வேறுபாடுகளுக்கு இன்று தத்துவ தருக்க ரீதியில் என்ன பொருள் மற்றும் அதன் கோட்பாடுகளும் இன்று என்ன பெறுமதி என்பது விவாதத்திற்கு உரியது. பாகுபாடால் அவை இன்றளவும் நீடித்திருக்கின்றன அது அப்படியே நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் இன்றைய நவீன தலைமுறைகள் மத்தியில் அவை நீர்த்திருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள் . மரபான செயல்பாடுகளை உயர்த்தி பிடிக்க வேண்டிய தேவை சிலருக்கு இருக்கலாம் . அதற்கு பின்னால் உள்ள அரசியலை அறிந்தே இங்கு வந்திருக்கிறேன். நீங்களும் அதை அறிந்திருப்பீர்கள். இது மறுமலர்ச்சிக்கான காலம். அதில் கிளைத்து வளர்ந்து நிற்பவர்களுக்குள் வேளுக்குடி போன்றவர்கள் முக்கியமானவர்கள். தற்போது காணப்படுகிற எழுச்சி சில ஆண்டுகளில் வடிந்துவிடவும் கூடும்


இன்று இது ஐம்பது வயதை கடந்தவர்களுக்கானது. அவர்கள் தங்கள் தந்தை அல்லது குல வழக்கப்படி பிடித்து கொண்டு இங்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். அவர்களின் உடல் தகுதி நீண்ட நாட்களுக்கானதல்ல. மேலும் அவர்கள் தங்கள் சந்ததிகளுக்கு பெற்றதை சொல்லும் வாய்ப்பில்லை. எப்படி பார்த்தாலும் இன்னும் பத்து வருடத்தில் இது காலாவதியாகலாம். இருக்கும் சூழலில் வேளுக்குடி போன்றவர்களை வைத்து மீண்டும் ஒரு பெரும் செயலுக்கு அடிக்கல் இட முயல்கிறேன்


நீங்கள் என் தந்தை காலத்தில் இருந்து சம்பிரதாய செயல்பாட்டில் இருப்பவர். பல இயக்கங்களை ஆதரப்பவர். அனைவருக்கும் பொதுவாக உங்களை வைத்து கொள்வது தான் உங்களின் இயல்பாக இருக்க வேண்டும் என்பது என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு


என் தந்தைக்கு நண்பரான முன்னாள் தலைமை செயலாளரும் உங்களுக்கு குரு போன்றவருமான திரு.சாரி மற்றும் திரு.பரமதயாளன் பிள்ளை தீவிர வடகலை ஆதரவாளர்கள். வெறும் பேச்சில் நம்பிகையற்று செயலில் இறங்கியவர்கள். அப்படி போன்றவர்களின் முயற்சியால் உருவானது முத்தியால் பேட்டை ஹயகிரீவர் ஆலையம். அவர்களுக்கு  இடையேயான என் தந்தையின் ஆழ்ந்த நட்பு நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். என் வீட்டில் நேரம் போவது தெரியாமல் இரண்டு சம்பிரதாயங்களை குறித்து அவர்கள் தர்கித்திக் கொண்டாலும் அவர்களுக்கான நட்பு ஆழமாக இருந்தது


இன்று நிகழ இருப்பதாக நான் ஊகிக்கும் விசை கண்களுக்கு தென்படுகிறது தொடர்ந்து அது திகழாமல் போகலாம். ஆனால் நான் நினைக்கும் ஒன்றுக்கான உந்து விசை இங்கிருந்து கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். இருக்கும் சூழலின் விசை தொய்வடையும் முன்பாக அதை செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்


இன்று அது கை எட்டும் தூரத்தில் இருக்கிறது அதன் தேவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான். பொருளியல் ரீதியாக உங்களை சார்ந்து செயல்படும் இயக்கங்கள் இன்று தேம்பி நிற்கின்றன. அது உங்களை நிச்சயம் வருத்தும். உங்கள் அமைப்பில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் உங்களை போன்றவர்களின் எண்ணங்களை செயல்களாக மாற்றக் கூடியவர்கள் இன்று இல்லை. என்றாகிலும் ஒரு நாள் அனைத்து மரபான அமைப்புகளும் இதை எதிர் கொண்டே ஆகவேண்டும். புதுப்பித்தல் அதிலிருந்து விடுவிப்பது. ஆனால் அது எங்கு எப்படி என யாருக்கும் புரியவில்லை என்பதால் அது காலத்தின் வசமிருக்கிறது. வளர்சிதை மாற்றம் வழியாக தனக்கான பாதையை அது கண்டடையும் என உறுதியாக நம்புகிறேன். புதிய கருத்துக்களை அணுகும் வாய்ப்பை உருவாக்கினால் மட்டுமே அது எழுந்து வரும். நான் அதை நோக்கிய பயணத்தில் இருக்கிறேன்


இது ஒரு துவக்கம் மட்டுமே மரபான விஷயங்களை கடந்து நவீன மனங்களை நோக்கி நகராமல் போனால் எந்த அமைப்பும் தேங்கிவிடும். பின் அதில் புதிய எதுவும் இனி நிகழாது என என்னை விட உங்களுக்கு தெரியும். இருப்பதை எடுத்து கரை சேர்பதே பெரும் வேலை என்றாகிப் போகும். நிர்வாகத்திற்கு திறமை பொருளியல் பலம் மட்டும் போதுமானதல்ல காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொடுக்கும் வல்லமையும் தேவையாகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக