https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 25 ஜனவரி, 2023

அடையாளமாதல் * தொடர் முயற்சிகள் *

 




ஶ்ரீ:



பதிவு : 661  / 851 / தேதி 25 ஜனவரி  2023



* தொடர் முயற்சிகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 56.






அதுவரையிலான தனது முழு அரசியல் காலத்தை ஆட்சி அதிகாரத்தின் பொது புத்திக்கு பொருந்தாத அறமீறலுக்கு எதிர் நிலையாக தன்னை வைத்துக் கொண்டதால் கட்சி என்கிற அமைப்பை தன்னை சுற்றி இயங்குவதில் சண்முகம் வென்றிருந்தார். அரசின் மெத்தனம் மற்றும் நடைமுறை சட்டத்தால் உருவாகும் கருணையற்ற செயல்களால் மனம் வெதும்பி தலைவரிடம் முறையிடும் அனைவருக்கும் அவரின் ஒரே பதிலாகபதவியில் அமர்பவர்கள் கட்சியையும் மக்களையும் மறந்து விடுகிறார்கள்என்கிற கடும் குற்றச்சாட்டை அரசாங்கத்திற்கு எதிராக வைக்க அவர் தயங்குவதில்லை. “ஆட்சியாளர்கள் கட்சித் தலைமையை விரோதிக்கிறார்கள்என்கிற அங்கலாய்ப்புடன் அவரை அனுகுபவர்கள் விலகுவார்கள். சில அமைச்சர்களுக்கு எதிராக மிக கடுமையான விமர்சனத்தை அவர் வைத்ததுண்டு. அது அரசு அவர் சொல்லுவதை கேட்கவேண்டும் என்கிற நிர்பந்தத்தின் கொக்கி கொண்டிருக்கும் . அதை மிக ரசனையாக செய்வார். பல சமயம் பார்ப்பவரை வெறுப்புற வைத்துவிடும். தனக்கு முன்பாக வரும் சிக்கலில் அரசின் பார்வையை விளங்கிக் கொள்ளாமல் அவரால்நான் செய்து கொடுக்கிறேன்என பொறுப்பேற்க இயலாது அதே சமயம் தட்டிக் கழிக்கவும் முடியாது . தன்னை நாடி வருபவர்களுக்கு காமராஜரின் புகழ்மிக்க ஆறுதல் சொல்ஆகட்டும் பார்க்கலாம்என்பது போல சண்முகத்திடம் ஒரு சொல் இல்லை


ஆனால் விஷயம் தீவிரமாக இருந்தால் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வார். “வில்லங்கம்நுழைவது இங்கு. அவர் அதை தொடர்ந்து கவனித்து செய்யக் கூடியதை முயற்சிப்பார். எதிலும் மேலதிகமாக அவருக்கான கணக்குகள் உருவாகி இருக்கும். எல்லா செயல்களிலும் தனக்கான அரசியல் கணக்கில்லாதவர்கள் அரசியாலாளர்களே இல்லை. தலைவர் அளவில் இது அன்றாட செயல்களில்வில்லங்கம்தன்னிடம் ஒப்புவிக்கப் பட்ட அனைத்தை பற்றிய நடைமுறை தகவலுடன் தனது சொந்த அரசியல் பார்வையையும் முன் வைப்பார். அது பிறர் எளிதில் கடந்து செல்ல முடியாததாக இருக்கும் . ஒரு புள்ளியில் அதுவே சண்முகத்தின் முடிவாகவும் மாறி விடுவதை பார்த்திருக்கிறேன். அது மிக நுட்பமாண ஆடல். “வில்லங்கம்சொல்வதில் எந்த முடிவும் இருக்காது. அவை வெறும் தரவுகளாக சண்முகத்திற்கு சொல்லப்படும். அந்தத் தரவுகளை எந்த திசையில் கோர்த்தாலும் அது சென்று சேருமிடம் வில்லங்கத்தின் கணக்காக இருக்கும். விளைவாக எது நிகழ்ந்தாலும் அது சண்முகத்தின் கணக்காக வெளிப்படும். இதில் விந்தை அவரும் அப்படியே நினைப்பார்அதன் பின் அந்த முடிவிற்கு யார் முரண்பட்டாலும் அவர்கள் சண்முகத்தை விரோதித்துக் கொள்வதாக சூழ்நிலை அமைந்து விடும். ஒரு அரசு அதிகாரியான வில்லங்கத்திற்கு அரசியலில் பிறர் எதிர்க்க அஞ்சும் இடம் இப்படித்தான் உருவாகிவந்தது.


அதில் உள்ள அரசியலின் இரு நிலைகளை புரிந்து கொள்பவர்கள் அதை அவர்களின் அன்றாட விளையாட்டு என நகர்ந்து விடுவார்கள். சண்முகத்தின் நிர்பந்தம் ஒரு முணையில் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் தன்னை அறுக்க அதே கத்தி  ஒரு நாள் இங்கு வந்து காத்து நின்றிருக்கும் என ஊகித்திருப்பாரா?. நாராயணசாமி கையாண்டது சண்முகத்தின் அதே பழைய ஆயுதம். அதில் அவரின் சண்முகத்திற்கு எதிரானதை கவனப்படுத்தும் காழ்ப்பு மட்டுமே இருந்ததால் பிற எவரையும் விட சண்முகத்திற்கு எதிராக அது மிக கூர்மையாக விணையாற்றியது. பிறருக்கு அவர் சொன்ன அதேகட்சியரை மதிக்கவில்லைஎன்கிற ஒன்று சொல் அவருக்கு எதிராக வந்து நின்றபோதுகெட்ட வசவாகஉருவு எடுத்து அவரை தாக்கியது. நிகழ்ந்தவற்றிற்கு யாராலும் சமாதனம் சொல்ல முயலவில்லை . சண்முகத்திற்கு நெருக்கமான ஒவ்வொருவரும் அந்த காலகட்டித்திற்குள் எங்கோ ஒரு புள்ளியில் அவரின் அணுகுமுறையால் காயமடைந்து கசப்பு கொண்டிருந்தார்கள்.


அரசியலின் அடிப்படை குற்றச்சாட்டுகளால் ஆனது. அது எவர் முன்பாக வைக்கப்பட்டாலும் அவற்றில் எதுவும் ஏற்கப்படுவதில்லை என்பதால் மிகச் சரியான மறுப்பிற்கு கூட எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுகிறது . சண்முகத்தின் மறுப்பு யாரின் கவனத்தையும் கொள்ளவில்லை. மேலும் மேலும் அவதூறாக அது அவர் மீது கொட்டிக் கொண்டே இருந்தது.சண்முகத்திற்கு எதிராக சிக்கல்கள் அவர் முதல்வராக வந்தமர்ந்து கட்சி கைமாறிய ஒரே வாரத்தில் துவங்கிவிட்டது. நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக மிக துல்லிய தாக்குதலை துவங்கி இருந்தார். இந்த சூழலை மன்பே உத்தேசித்து கட்சி அமைப்பை முழுமையாக செயாலற்றும் வாய்ப்பை உருவாக்க அங்கிருந்து பின் மெல்ல எதார்த்தத்திற்கும் அதற்கான நுழைவாயிலுக்கும் வந்து சேர்ந்தேன். மிகுந்த சவாலான காலகட்டம். நாராயணசாமியின் கடும் தாக்குதல் அவரது அணுக்கர்கள் அவர் மீது கொண்ட அதிருப்தி சண்முகத்தின் பிடிவாதம் என எனக்கு ஆதரவளிக்கும் அனைத்தும் முடங்கின. இனி சட்டமன்றத்தின் வழியாக கட்சி விஷயங்களை மேற்கொள்ள விருப்பமின்றி  சட்டமன்றத்திற்கு செல்வதில்லை என்கிற முடிவிற்கு வந்தேன்


அதுவரை அங்கிருந்து கற்றவை கொண்டு மீண்டும் ஒரு சரியான முயற்சியால் கதவை திறந்து விடுபவை என நான் நினைத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைத்தேன் . நிதானம் மட்டுமே கட்சி அரசியலை அங்கே அங்கீகரிக்கும் கதவு திறக்கிறது என்பது அனுபவத்தில் இருந்து பெற்றது . அதை வென்றெடுக்க நான் திட்டமிட்ட நிகழ்வு மிகச் சரியாக நிகழ்ந்தாலும் காலம் அதற்கான வெற்றி வாய்ப்பைத் தரவில்லை. ஆட்சி மாற்றம்தான் என ஏறக்குறைய உறுதியான அந்த சூழலில் நிர்வாகிகள் அனைவரின் உளப் பதிவுகளை அளவிட ஒரு கூட்டம் ஒருங்கப்பட்டது. அதிகாலை 6:00 மணிக்கு ஒருங்கப்பட்ட கூட்டம் நிர்வாகிகளின் மனநிலையை கணிக்க கூட்டப்பட்டது. இரண்டு நிலைகளில் அந்த கூட்டம் மக முக்கியமானது.ஒன்று நாம் தாக்குதலில் இருக்கிறோம். கூட்டம் முழு அளவில் பங்கு கொண்டது உற்சாகத்தை கொடுத்தாலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் சவால் குறித்து யாருக்கும் எந்த புரிதலும் உருவாகவில்லை என்பதுடன் எனது நீண்ட கால பயிற்சியும் அதன் திட்டத்தால் தூரத்து பலன்களைப் பற்றி அதிருப்தி கவலையளிப்பதாக இருந்தது. முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட அரசு அதிகாரிகளை அழைத்து அவர்கள் சொல்லுவதை செய்து கொடுக்கும் படி சொல்ல முடியாது. அவர்கள் சொன்னவற்றிற்கு உள்ளே நம்மால் சரி செய்ய இயலாத சட்ட நடைமுறை சிக்கலை முன் வைத்து நம்மை முட்டாளாக்குவார்கள். இந்த சூழலில் ஆட்சி அதிகாரத்திற்கு பக்கத்தில் வந்த பிறகும் இந்து தொலைநோக்கு திட்டம் ஏன் ? என்கிற கேள்விக்கு என்னால் விளக்கமளிக்க முடியாது. ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்து உணர்ந்தவைகளை வார்த்தகளால் பிறருக்கு புரியவைத்து விட முடியும் என் நம்முவதைப் போன்ற மடமை பிறிதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...