https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 10 ஜனவரி, 2023

மணிவிழா - 46

 




ஶ்ரீ:



மணிவிழா - 46


10.01.2023









திட்டமிட்படி மாலை 6:30 மணிக்கு விழா துவங்க சில வினாடிகளே இருந்தன . வேளுக்குடி ஸ்வாமி தனது நேர மேலாண்மையை ஒரு நெறி போல நினைப்பவர். துவக்க விழா குறித்த பதட்டத்தை அது உருவாக்கினாலும் வேறு வகையில் விடுதலையை அளிக்கிறது. ஒரு விழா வெற்றி பெற்றதாக நினைக்க வைப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து . அதை மையப் படுத்திய விழாக்குழுவின் ஆதார கருதுகோளாக வைத்து அனைத்தும் பின்னிப்பட்டிருக்கின்றன என்றாலும் அது நிகழும் முணை வரை நிகழ இருப்பதை அவதானிக்க முடியாது என்பதால் மிகுந்த பதற்றம் கொள்ள வைப்பது. ஆனால் வேளுக்குடி போன்றவர்கள் கூடும் கூட்ட எண்ணிக்கையை கணக்கில் எடுப்பதில்லை. சொன்ன நேரத்தில் துவங்குவது. அது பத்து பேராக இருந்தாலும் எதுவும் குறைவுபட போவதில்லை என்கிற கொள்கை உடையவர். அப்படி நிகழாது என அவரது அனுபவங்கள் அவருக்கு சொல்லியிருக்க வேண்டும். பார்வையாளர்களை மூன்று வகைமையில் பிரிப்பேன். ஆரம்பமுதல் வந்திருந்து காத்திருப்பவர்கள். நேரம் கழிந்து உள்ளே வந்து கூடிய திரளால் கட்டுண்டு இறுதிவரை இருப்பவர்கள். அவசர ஜோலிக்கு மத்தியில் சிறிது நேரம் இருந்து இடத்தை காலி செய்பவர்கள். இவர்களை போன்றவர்கள் முதலில் வந்தமர்ந்து பாதியில் எழுந்து செல்பவர்கள். அங்கு உருவாகும் காலி இடங்களை கட்டுப்படுத்தி பின் பகுதியில் நின்றிருப்பவர்களை அதை நோக்கி ஆற்றுப் படுத்தும் குழுக்களும் காலணிகளை விட்டு செல்ல தனி இடத்தை காட்டுவதற்கும் தானாக அங்கு வந்தமையும்

மற்றும் தேவை படும் தண்ணீர் கேன்கள் கொண்டு வந்து வைக்க பள்ளி ஊழியர்களை ஏற்பாடு செய்திருந்தேன்


செய்ய வேண்டியவற்னை முழுமையாக செய்து முடித்து பின் அந்த முயற்சியின் பலனை முழுமுதல் இறையிடம் அளித்து விடும் பழக்கத்தை எனக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தது. இது போன்ற பெருஞ் செயல் என்பது மனித திரளை விராட வடிவமென உருவாக்கி அதிலிருந்து ஆற்றலை பெறுவது. அந்த பெரும் ஆற்றல் மணற் கிணறு போல. அதில் திரள்வது நீண்ட நாள் நீடிப்பதில்லை. அது நீடித்திருக்கும் காலம் தெரிந்திருக்க வேண்டும். அவற்றை சிறு சிறு திரள் கூட்ட செயல்பாடுகள் வழியாக தொடர்ந்து உத்வேகம் அளிப்பது. அது அந்த ஆற்றலை எளிதில் வடிந்து விடாது பார்த்துக் கொள்ளும்


தலைவர் சண்முகம் முன் முடிவு பற்றிய எண்ணமில்லாமல் எந்த சிறு கூட்டத்திலும் பேச தயங்குவதில்லை. ஒரு போதும் என்னிடம் என்ன இப்படி என கேட்டதில்லை. அதே உணர்வை இங்கும் அடைகிறேன்.செய்ய வேண்டியவைகளை சிறப்பாக செய்து முடித்தோம் இனி முடிவு களத்தில். அது என்ன வழங்குகிறதோ அதைப் பெற்று பின் அங்கிருந்து முன்னகர என்ன செய்ய வேண்டும் என திட்டமிடுதல் நல்லது என நினைக்கிறேன். ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவரா்கள் என திட்டமிட்டு நூறுக்கும் குறைவானர்கள் பங்கு பெற்றாலும் திட்டமிட்ட பேச்சை முழுமையாக நிறைவு செய்பவர் வேளுக்குடி ஸ்வாமி. எனவே பங்கேற்பாளர்கள் பற்றிய கவலையில் இருந்து விடுதலை அது


பள்ளி வளாகத்திற்கு பின் புறம் உள்ள விவேகானந்தா பள்ளி தாளாளர் செல்வகணபதி பாரம்பரிய வீட்டில் ஜீயர் மற்றும் வேளுக்குடி தங்க வைப்பட்டிருந்தனர். பின்புறம் வழியாக பள்ளி மைதாத்திற்கு வரும் பாதை இருந்தும் அதை தவிற்க சொல்லி இருந்தேன். முன் பக்கம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிரதான நுழைவாயில் வழியாக வரவேண்டும் என்றும் அதே சமயம் மேடைக்கு எதிரே மத்தியில் நடைபாதை வைத்து இரண்டு புறமும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த நடைபாதை வழியாக அழைத்து வராமல் பக்கவாட்டில் உள்ள வழியாக நேராக கொடிகம்பம் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் என சொல்லியிருந்தேன்


நுழைவாயில் இருந்து நாதஸ்வரம் மேளம் முழங்க மேடைக்கு அருகில் இருந்த கருடக் கொடிக் கம்பம் இருக்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர். துவக்கத்தை அறிவிக்கும் கருடக் கொடி ஏற்றப்பட்டது. திருக்கோவிலூர் ஜீயர் ஸ்வாமி ஏற்றினார். பின் அங்கிருந்து அருகில் இருக்கும் மேடை நோக்கி நகர்ந்தனர். சுற்றிலும் கட்டப்பட்டிருந்த ஒளி பெருக்கிகள் அளித்த அதீத வெளிச்சம் கண்களை திறக்க இயலாமல் செய்தது. சுருக்கிய கண்களுடன் கருடக் கொடி கயிற்றை ஜீயரிடம் கொடுத்தேன். உள்ளே பொதிந்து வைத்திருந்த மலர்கள் விழுந்து ஆசியளிக்க இருவரும் மேடையேறினர். முக்கிய ஆளுமைகள் அனைவரையும் முன்பே முதல் வரிசையில் அமர வைத்திருந்தேன். மேடை இருக்கை அமைப்பு அதன் நெறியை சொன்னதால் மேடையில் ஏற யாரும் முயற்சிக்கவில்லை. அது கொடுத்த முதல் ஒழுங்கு பின்னர் மூன்று நாட்களும் நீடித்திருந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக