ஶ்ரீ:
பதிவு : 658 / 848 / தேதி 10 ஜனவரி 2023
* பதவி தெரிவு இணைப்பு *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 53 .
தன் சொந்தக் காரணத்திற்காக வல்சராஜும் சண்முகமும் கூட என்னை முடகுகுவதில் குறியாக இருந்தனர். இருவருக்கும் வெவ்வேறு நிர்பந்தம் என்றாலும் எனது அகவயமான சோர்வினால் அவை என்னை தனியனாக இத்தனை காலம் கொண்டு நிறுத்தியிருந்தது . தனியொருவனாக கட்சி அமைப்பில் செயலாற்ற ஒன்றுமில்லை. தனியர்கள் உதிரிகள். அவர்கள் இட்ட வேலைகளை செய்பவர்கள். கட்சியில் அது போல நூற்றுக்கணக்காக அங்கங்கே தங்கள் சந்தர்ப்பத்திற்கு காத்து நின்று கொண்டிருக்கிறார்கள் . நான் அவர்களில் ஒருவனல்ல. என் இடம் நோக்கிய பயணத்திற்காக நான் காலத்திற்கு காத்திருந்தேன் . ஒரு சட்டமன்றத் தேர்தல் மூன்று பாராளுமன்றத் தேர்தலில் இருமறை வெற்றியும் மாநில கட்சி அரசியல் கள விளையாட்டில் அனைவரையும் களைத்து போட்டிருந்தது. அந்த சந்தர்பத்தில் பொதுவான ஒரு செயல்படு அமைப்பு முறையை உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்திருந்தேன் . இம்முறை எனக்கு அதில் சிடுக்குகள் என பெரிதாக ஏதும் இல்லை . கண்ணனுக்கும் பாலனுக்கும் தீராத சிக்கலாக அவர்களின் நனவு கனவு என இரண்டிலும் சவாலாக இருந்து கொண்டிருந்த சண்முகம் இன்று இதோ என் அருகே மௌனமாக இருக்கிறார். அவர்தான் எனக்கும் அகவயத்தில் சாதக,பாதகமாக. ஆனால் இன்று அது வேறுவிதமான சிக்கல். என் முயற்சிகளில் உருவாகும் பலன் தனக்கு சரியாக வராதவரை முடிந்தளவில் தடுப்பவராக சண்முகம் இருப்பார்.இளைஞர் காங்கிரஸ் அமைப்பு திறன்மிக்கதாக உருவானால் அது முதலில் எதிர்ப்பது தன்னை கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் மாநிலம் தழுவிய மூத்த தலைவர்களை. அது ஓயாத சிக்கலை தலைமைக்கு கொண்டு வரும். ஆகையால் தலைமை அது இளைஞர் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் பலம் மிக்க யாரும் வந்து அமர்ந்து விடாது பார்த்துக் கொண்டது. என் முன்னே உள்ள சவால் அதை எதிர் கொள்வது. கட்சி முற்றாக சோர்ந்து போயிருந்த சூழலை எனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடிவெடுத்தேன்.
அரசியல் புறவுலகில் நான் யாராலும் தடுக்கப்பட இயலாதவனாக தலைவருக்கு தோன்றியிருக்க வேண்டும். எனது வேகத்தை தடை செய்வதில் அதுவரை வெற்றி பெற்றிருந்தார். அல்லது என் வெற்றிக்கான வாய்ப்புகளையும் அதன் குறுக்குகளையும் அதனால் விளபவைகளை அவர் முன்னமே அவதானித்திருக்கலாம். எனக்கான தடைகளை உருவாக்குவதோ அல்லது உருவாகி வருவதை சரி செய்யாமல் இருப்பதோ அவர் அது வரை கையாண்ட அணுகுமுறை. அது முளைசீவி அடிக்கப்பட்ட தறியின் கயிறு என் கழுத்தில் கட்டப்பட்டு அது அனுமதிக்கும் எல்லைக்கு அப்பால் என்னால் செல்ல முடியாது என அவர் அறிந்திருக்கலாம். என் எல்லை என எதை நினைத்திருப்பார்?. நான் என்னை பிறர் மதிபிடலுக்கு எதிரானவான அறிந்திருக்கிறேன். பிறரால் வரையறை செய்யப்படுகிற போது எனது எல்லைகளை எனது போதாமையாக உருவகிக்கும் ஒவ்வொரு முறையும் அவற்றை மீறி கடந்தே என்னை புரிந்து கொண்டிருக்கிறேன்.நான் திட்டமிட்டு அப்படி நடந்து கொள்வதில்லை. ஒரு எல்லைக்குள் பிறர் என்னை குறுக்க நினைக்கும் போதெல்லாம் அதை நிராகரித்து எனது மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதன் வழியாக உருவாகிவரும் புது வாய்ப்புகள் என் இலக்குகளை எனக்கு காட்டிக் கொடுக்கின்றன. அதற்கு முன் அந்த எல்லை என்னை எந்த வகையிலாவது சீண்ட வேண்டும். சண்முகம் என்னிடம் உள்ள எதிர்ப்பு நிலை குறித்து அனுமானித்திருக்கலாம். என்னை சீண்டும் எதையும் அவர் செய்ததில்லை. தொகுதி அமைப்பை உருவாக்க சண்முகத்தின் அணுக்கர்களை நான் தொடர்பு கொண்ட போது கிடைத்தது ஒரு வித மறைமுக எள்ளல். சண்முகத்தின் எதிர் அணுயினரை நான் சென்று தொடவே இயலாது என அவர்கள் நினைத்த்தால் உருவானது. ஆச்சர்யமாக என்னை ஆரம்பத்தில் சரியாக எடுத்துக் கொண்டவர்கள் சண்முகம் எதிர்பாளர்கள் . துவக்கத்தில் சில தொகுதிகளின் நிர்வாகிகள் பட்டியலை உருவாக்க அவர்கள் உதவி இருந்தாலும் அவை முழுமை பெற இயலாமையால் கிடப்பில் போடப்பட்டன. சில காலம் கழித்து அவைகளை எடுத்துப் பார்த்தால் அதன் உறுப்பினர்களில் பலர் காணமலாகி இருப்பார்கள். அல்லது அவர்களின் தற்கால மேல் கீழ் அடுக்கு முழுமையாகவே மாறிவிட்டிருக்கும்.
அது ஒரு நீண்டகால வேறுவகை சிக்கலாக இருந்தது. புது லிஸ்ட்டில் விடுபட்டவர்கள் யாரென்று அவதானிக்கத் துவங்கினேன். கட்சி நிகழ்வில் அவர்களை சந்திக்க நேரும் போது புது லிஸ்ட்டில் அவர்கள் இடம் பெறாமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள முடிந்தது. மிக எளிய கணக்கு அது. அரசியலில் யாரும் நிலையாக அதன் படிகளில் இருப்பதில்லை அவர்கள் கீழே இறங்குவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பிரதானம் அவர்கள் மேலிட தலைவர்களின் கண்களுக்கு தெரிந்தவர்களாக இருக்க நேர்ந்தால் அவர் பின்னுக்கு இழுக்கப்பட்டு காணாமலாவார். இது தங்கள் தலைமை பண்பு மற்றும் தங்கள் இருப்பின் மீது சற்றும் நம்பிக்கையில்லாதவர்களின் செயல். ஆனால் வினோதம் என்ன காரணத்தினாலோ அவர்கள் கட்சி மேலிடத் தலைவர்களின் கண்களில் இருந்து மறைவதில்லை. இன்று கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் அப்படி அறிமுகம் செய்தவர்களால் கைவிடப்பட்டவர்கள்.
அவர்கள் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் அவர்கள போன்றவர்களை கொண்டு தொகுதி மற்றும் மாநில அமைப்புகளை உருவாக்க முனைந்தேன். அதன் உறுப்பினர்கள் ஏற்கனவே பல கட்சி நிகழ்வுகளுக்கு என்னுடன் பயணித்தவர்கள் இரு வருடமாக அவர்களை அந்தந்த இடத்தில் பொறுத்திப் பார்ப்பது வரு கனவு போல நீண்டிருந்தது. இப்போது அனைத்தையும் அதனதன் இடத்தில் சரியாகப் பொறுத்த வேண்டும். மனதிற்குளேயே இனி அதை தொகுத்துக் கொண்டிருக்க முடியாது. காலத்தால் அவை உருபெற்றன. இப்போது முதன்மை சிக்கல் தலைவர் சண்முகம் சரி என சொல்ல வேண்டும். அவரிடம் எனது பட்டியலை நீட்டிய போது அதன் ஒழுங்கு அவரை திகைக்க வைத்திருந்தது. மாநிலத்திற்கான முறையாக முழு மாவட்டம் மற்றும் தொகுதி அமைப்புகள்கள் அதன் தலைவர்கள் நிர்வாகிகள் என மிக நீண்டது சுமார் நானூறு பேர்களை விலாசம் மற்றும் அலைபேசி எண்களின் குவியலை வைத்து அவை எனக்கு எவ்வளவு காலம் எடுத்திருக்கும் என அவருக்க புரிந்திருக்க வேண்டும். இருந்தாலும் அவர் மூர்க்கமாய் மறுத்தார். கட்சியில் நிலவும் சமன்பாட்டை இது குலைத்துவிடும் என அஞ்சினார். காலம் அவருக்கு உகந்ததை மட்டும் செய்கிறதா என்ன?. இது என களம் நான் ஒருபோதும் அவர் என்மீது தனது அதிகாரத்தை செலுத்த இம்முறை விடப்போவதில்லை. எனது எந்த விளக்கத்தையும் அவர் செவி கொள்ளவில்லை. சொன்னதையே மீள மீள சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இம்முறை அழுத்தமான என கேள்விகளுக்கு அவரது பதில்கள் மிக பலவீனமாக இருந்தது. முன்னாள் அமைச்சர் அனந்தபாஸ்கரன் அங்கு அமர்ந்திருந்தது எனக்கு சாதகமான விஷயம். சண்முகத்திற்கு தொடர்ந்து பதில் சொல்லி அவரை பலவீனப்படுத்தியது எனக்கு சாதகமானது. இறுதியில் “ஒழி” என்கிற அரை மனத்து சொல்லோடு அதற்கு ஒப்புதல் கிடைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக