https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 14 ஜனவரி, 2023

மணிவிழா - 50

 





ஶ்ரீ:



14.01.2023





ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டியில் புதுவையை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் பலர் இணைந்துள்ள நிலையில் நிகழ இருப்பது அதற்கான துவக்க விழா அதில் வைணவ ஆச்சாரியனின் அவதார தினத்தை நினைவு கூறுவது. அது சம்பிரதாயமாக நிகழ வேண்டும் என விரும்பினோம். திருக்கோவிலூர் ஜீயர் ஸ்வாமிகள் குழுவில் உள்ள பலருக்கு ஆச்சாரியன் என்கிற அடிப்படையில் அதில் கலந்து கொள்கிறார். அதை நீங்கள் எப்படி ஆட்சேபிக்க முடியும். நம் வழிகள் வேறுவேறானவை ஒன்றை ஒன்று சமன் செய்ய இயலாது என்கிற போது இந்த கேள்வி ஏன் என தெரியவில்லை

நாம் எப்போதாவது இணைந்து ஏதாவது செய்திருக்கிறோமா. அல்லது இதுவரை நீங்கள் நடத்திய எந்த விழாவிற்கும் எங்களுக்கு பார்வையாளர் அழைப்பாவது உண்டாஆனால் நான் அனைவரும் இணைந்து செயல்பட இருக்கும் ஒரு புள்ளி பற்றி திட்டமிடுகிறேன். எதுவும் எங்கோ துவங்கியாக வேண்டும். அதன் பொருட்டு இதோ நாங்கள் துவங்கி இருக்கிறோம் வந்திணையுங்கள்என்றேன். “கலந்து கொள்ள மட்டுமின்றி நிர்வாகத்திலும் இணையுங்கள் என கேட்க வந்துள்ளேன்என்றேன். அடுத்ததாக அவர்களால் எனக்கு பொருளியல் ரீதியாக எந்த உதவியும் செய்ய இயலாது என்றும் அதற்கு காரணம் என எதையோ சொல்ல நான் அவரை இடை மறித்துநீங்கள் வந்திணைவது ஒன்றே போதுமானது அதுவே நீங்கள் எங்களுக்கு தரும் பெரும் கொடை அதற்கு பணம் என பெயரில்லை, ஆதரவுஎன்றேன். மேலதிகமாக தொடர்ந்து மறுப்பதால் எதும் நிகழாது என புரிந்திருக்க வேண்டும். அவர்கள் கமிட்டியில் உள்ளவர்களிடம் பேசி பிறகு சொல்வாதாக கூறினார்கள். அது ஒரு நல்ல துவக்கம் நிச்சயம் வந்திணைவார்கள் என அவதானித்தேனஅதற்கு சில நிபந்தனைகளை அவர்கள் முன்வைக்க விழைந்த போது அதை மெல்ல மறுத்துவிட்டேன் என்பதால் அவர்கள் நிதானிக்க சில காலம் தேவையாய் இருக்கலாம். நான் காத்திருக்க முடிவு செய்தேன்


நினைத்ததைப் போல இரண்டு நாள் கழித்து அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் தலைவர் வீட்டில் வந்து சந்திக்க முடியுமா என்றார்கள். நான் அன்று மாலை சென்று சந்தித்த போது அங்கு அவர்கள் அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற தொழிளாலர் துறை தலைவர் ராமாநுஜம் , தொழிலதிபர் பார்த்தசாரதி மற்றும் ஜட்ஜ் ராமபத்திரன் இன்னும் சிலரும் இருந்தனர். அந்த சிலரை நான் நன்கு அறிவேன். ஆனால் அவர்கள் என்னை முதல் முறையாக சந்திக்கிறார்கள் என்பதால் என்னைப் பற்றிய எந்த புரிதல் அவர்களுக்கு இருக்காது என தெரியும். ஒரு சமான்யனிடம் தங்களை வலுவாக முன்வைக்கும் வன்மையுடன் என்னை எதிர் கொள்வார்கள் என கணித்திருந்தேன். எனக்கும் அதுவே நல்ல துவக்கம். உள்ள சென்று அமர்ந்து கொண்ட போது நட்பார்ந்த புன்முறுவல் என ஏதுமின்றி ஒருவித கறார் தன்மையுடன் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நாங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக பேசியது குறித்து முழுமையாக சொல்லப்பட்டிருக்கவில்லை என்பது அவர்கள் என்னை பார்க்கும் முறையில் இருந்து புரிந்து கொண்டேன். மனம் அடுத்தடுத்த கணக்குகளை போட ஆரம்பித்தது.  


நான் இரண்டு நாட்களுக்கு முன்பாக சந்தித்து பேசிய முக்கியஸ்தர்கள் மூவர் விழா குழுவில் வந்திணைவது பற்றிய இறுதி முடிவு எடுத்துவிட்டிருக்கிறார்கள்.அதே சமயம் அவர்களுக்கு  குழுவின் உள்ளே எதிர்ப்பு எழாது இருக்க முக்கிய உறுப்பினர்களை நான் சமாதனப்படுத்த வேண்டும் என எதிர்பார்கிறார்கள் என புரிந்து கொண்டேன். அரசியலின் பாலபாடம் ஆனால் அது இங்கு முதல் பிழை. நான் என்னை இன்னும் இறுக்கமாக முன்வைக்க அதை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தேன். அதுவரை அவர்களிடம் காட்டாத கடுமையை இப்போது வெளிப்படுத்த வேண்டு சூழல் உருவானால் அதை விடுவதாக இல்லை.பேச்சு வார்தையில் அவர்களில் யாராவது வரம்பு மீறினால் அதே கறாருடன் எதிர் கொள்ள நான் தயராக இருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...