https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 ஜனவரி, 2023

மணிவிழா - 53

 


ஶ்ரீ:



20.01.2023









வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அன்றும் தனது வழக்காமான மாயத்தை மீண்டும் ஒருமுறை அந்த மேடையில் நிகழ்த்தி காட்டினார் .”நவ வித சம்பந்தம்என்கிற நூல்அஷ்டாதச ரகஸ்யங்கள்பதினெட்டு நூல்களை கொண்ட தொகுப்புகளில் ஒன்று. “பிள்ளை லோகாசிரியர்எழுதியது அதற்குமணவாள மாமுனிகள்விளக்கவுரை எழுதியிருக்கிறார். அது இறைவனுக்கும் உயிர்க்கும் உள்ளஒழிக்க ஒழியாதகாரணங்களை அடுக்கிறது. அதில் முதன்மையான ஒன்பது விதமான சம்பந்தங்களைஅஷ்டாக்சரம்என்கிறஓம்நமோநாராயணாயஎன்கிற மந்திரத்தை  சுட்டிக் கூறும் நூல். வைணவ கல்வி நூல்களில் பிரதானமாக அந்த தொகுப்பஉ நூல்களை கொள்வது வழக்கம். மிக சிக்கலான சம்ஸ்கிரத மொழியுடனான மணிப்பிரவாள நடை கொண்டது. அதை வாசிக்கவே நிறைய பயிற்சி தேவை. புரிந்து கொள்ள வேறு அடுக்குகளைக் கொண்ட பிறிதொரு மனநிலையில் நிற்க வேண்டும். அந்த நூலை அன்றுவேளுக்குடி ஸ்வாமிஉபன்யாச பேசு பொருளாக எடுத்துக் கொண்டார்.அதை அங்கு பேச அவர் நினைத்ததற்கு பின்னால் அவரது மன மலர்வை சொல்லுவதாக நினைக்கிறேன். மேடை அதில் நிகழ்ந்த துவக்கம் போன்றவை அவரை அந் மன நிலைக்கு செலுத்தியிருக்க வேண்டும். அதன் பிறகு தொடர்ந்து பல வருடங்கள் அவர் நிகத்திய உரைகளின் தலைப்பு எனக்கு முன்னமே அவரால் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் முதல் உரை தலைப்பு குறித்து அவரிடம் கேட்டதற்கு இறுதிவரை தலைப்பை தரவில்லை. ஆயிரமாவது ஆண்டு விழா குழுவை பற்றி அவருக்கு சொல்லப்பட்ட தகவல்கள் அதற்கு காரணமாக இருக்கலாம். மேடையில் அன்றும் அடுத்த மூன்று நாட்களுக்குமான அந்த தலைப்பை அறிவித்த போதுதான் அந்த விழிப்பை அடைந்தேன்


நவ்வித சம்பந்தம்சம்பிரதாய ஆர்வமுள்ளவர்கள் கூட அதில் சொல்லப்படுகிற வார்த்தை பிரயோகங்களை நினைவவில் கொள்வது சாத்தியமில்லை. எத்தனை குறிப்பெடுத்தாலும் நினைவில் நின்றவைகளை தொகுத்து கொள்வதை வைத்தே அந்த குறிப்பை புரிந்து கொள்ள இயலும். அதை முற்றிலும் அறியாத ஒரு கூட்டத்தில் அவர் முன் வைப்பது ஆரம்பத்தில் அதிர்வையும் திகைப்பையும் கொடுத்தது. நிகழ்வு ஓருங்கிணைப்பாளராக பதற்றம் உருவானது . உபன்யாச இறுதிவரை கூட்டம் அமர்ந்திருந்து அதை ரசிக்க வேண்டும் என்கிற பதைப்பு உந்தியது . அவர் பேச பேச அவர்கள் அதை் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டாலும் அப்போது நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.


கூட்டம் அசையாது செவி கூர்ந்து நிறைத்து இறுதி வரை அமர்ந்து கேட்டது. அந்த சொல் ஒழுக்கின் நேர்த்தி அனைவரையும் மயக்கியிருந்தது . அவரின் கரகர குரலில் தமிழை தெளிவான உச்சரிப்பு கொண்ட கூரிய சொல் முறை அந்த மாயத்தை நிகழ்த்தி இருந்தது. மேலதிகமாக அந்த தலைப்பு மிக செறிவான தேர்வு என்பதை பின்னர் உணர முடிந்தது.


அஷ்டாக்சரிமந்தரம் ஏறக்குறைய அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதை தெரியாத விஷயங்களில் கொண்டு இணைப்பது அனைவரையும் உள்ளிழுத்துக் கொண்டது . அது போன்ற சொற் பெருக்குகளை அடுக்கி பிரயோகிக்கும் முறை என்னை எப்போதும் திகைக்க வைப்பது். முதல் முறை அதை கேட்டபோது அந்த சொற்களும் அதன் பிரயோக வேகமும் அடுக்கும் என்னை திகைக்க வைத்தது . அதை அவரது தந்தையின் உபன்யாசம் பண்ருட்டி வைணவ மாநாட்டில் முதல் முறை கேட்ட போது ஏற்பட்டதுஅன்று அதை நிகழ்த்தியவர் வேளுக்குடி வரதாச்சாரியார். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை தந்தையுடன் வரமுடியாது என போராடித் தோற்று கடும் வெறுப்பில் அவருடன் சென்றேன். எனக்கு ஒன்பது வயது. வேளுக்குடி வரதாச்சாரியார் உபன்யாசத்தைகண்ணினுன் சிறுத்தாம்புஎன்கிற தலைப்பில் துவங்கிய போது அந்த அதிர்ச்சியை அடைந்தேன். ஒருவர் ஆற்றொழுக்கு போல பேச இயலுமா? இதில் சிந்திப்பது எங்கு நிகழ்கிறது பேசுவது எங்கிருந்து துவங்குகிறது என்பது பிறவி பேச்சு குறைபாடுடைய எனக்கு அன்று அது மிக ஆச்சர்யாமான அனுபவமாக இருந்தது. அவர் பேச்சில் மயங்கி நின்றிருந்தேன் . அந்த மாய சொல்கண்ணினுன் சிறுத்தாம்புதிரும்ப திரும்ப ஒரு நுண் சொல் போல பல காலமாக இன்றுவரையில் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்