https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 7 ஜனவரி, 2023

அடையாளமாதல் * விளையாட்டின் வெப்பம் *

 


ஶ்ரீ:



பதிவு : 657  / 847 / தேதி 07 ஜனவரி  2023



* விளையாட்டின் வெப்பம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 52 .







காலை முதல் தலைவரின் வீட்டு இரும்பு கிராதி கதவை பூட்டி யாரையும் உள்ள அனுமதிக்காதுகேரோபோல ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தோம். மாநில கட்சி முன்னணித் தலைவர்கள் தில்லி மேலிட முடிவை எதிர்க்கிறார்கள் என அவர்களை ஓரணியாகத் திரட்டி அதன் மூலம் நாராயணசாமி தனிமைபடுத்துவது என திட்டமிட்டேன். மரைக்காயர் எப்போதும் எதிர் தரப்பு என்பதால் அவர் இப்போதைய பிரச்சனை இல்லை. அவர் தனது இடத்திற்கான போட்டியில் துவக்க காலத்தில் இருந்து போராடிக் கொண்டிருப்பவர் ஆனால் நாராயணசாமியின் அரசியல் நுழைவு அப்படியானதல்ல . அவர் அரசியல் வாழ்க்கை சண்முகத்தின் தனிப்பட்ட கணக்கினால் நிகழ்ந்தது. அன்றைய சூழலில் நாராணசாமி போன்ற ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக நுழைவது அவர் கனவிலும் காண முடியாத ஒன்று. அது சண்முகத்தின் அரசியல் பிழையாக அப்போதே பார்க்கப்பட்டாலும் செய்நன்றியில் இருந்து வெளியேறும் உரிமை நாராயணசாமிக்கு இல்லை என்பது எப்போதைக்குமான அரசியல் கணக்காக இருந்தது. தலைவருக்கு அவர் முரண்பட்டதால் இன்று இது நிகழ்ந்திருக்கிறது. தலைவரை ஆதரித்து அனைத்து உப அமைப்புகள் தீர்மானம் கொண்டு வந்ததற்கு பின்னால் சண்முகம் இல்லை அது அந்தந்த அமைப்புகளின் சுதந்திர கருத்து. அதை ஒரு சான்றாக அவர் தில்லியில் உபயோகப்படுத்தியது அவரது அரசியல் பிழையாக மாறியது. என் போன்றவர்களை பற்றி எரிய செய்த விஷயம் ஜனநாயக ரீதியில் ஒட்டு மொத்த அமைப்பை நிராகரித்தது அன்று நாராயணசாமியின் குற்றமாக பார்க்கப்பட்டது. இதில் மரைக்காயரை சேர்க்க முடியாது அவர் எப்போதும் அனைத்திற்கும் எதிர் தரப்பு. நாராயணசாமி தன் கணக்கு தவிற பிற எதையும் கருத்தில் கொள்ளாதவர் என்பதால் அவர் அரசியல் அராஜகவாதியாக பார்க்கப்பட்டார் . தான் நினைத்ததை செய்ய அவர் கடைபிடிக்கும் பாணியால் அவருக்குநரிஎன பெயரால் அழைப்பவர்களும் உண்டு.


தலைவரை சந்திக்க விழைந்த யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது பல மூத்த தலைவர்களை எரிச்சலடையச் செய்தாலும். அது ஒரு தீவிர எதிர்ப்பு நிலை இந்த தேரத்தில் வேறு எந்த வகைகளில் அதை வெளிப்படுத்துவது என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை. சீட்டு யாருக்கு என ஒட்டு மொத்த அமைப்பின் சிபாரிசு வெற்று அரசியல் யுக்தி என மேலிடத்தை நம்ப வைத்தது நாராயணசாமி. அது அவருக்கும் எதிராகி மரைக்காயருக்கு சாதகமாக திரும்பியது


மரைக்காயர் ஒரு ஆச்சர்யமான ஆளுமை புதுவை அரசியலில் ஏறிய படிகளில் இறங்காமல் வெற்றியை மட்டுமே தொடர்ந்து அடைந்தவர். 1991 களில் விதிவிலக்காக சில பின்னடைவுகளை சந்தித்தை கணக்கில் எடுக்கவில்லை என்றால் அவரை போல வெற்றிகரமான அரசியல் வாழ்க்கை புதுவை அரசியலில் யாருக்கும் அமையவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு மிக சிக்கலானது. மற்ற மாநில கட்சிகளைப் போல தலைமைக்கு  நெருக்கமானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்ப்பட்டுக் கொண்டே இருந்தும் . தலைமையிடம் அதை கேட்கும் துணிவு மற்ற தலைவர்களுக்கு இருப்பதில்லை. அதே போல எந்த காரணத்தையும் சொல்லாமல் தூக்கி எறியப்படும் போதும் பிறர் ஆழ்ந்த மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுக்கிறார்கள். அது போன்ற ஒன்று காங்கிரஸில் இல்லை என சொல்ல மாட்டேன் ஆனால் பிற கட்சிகளை கணக்கில் அவ்வளவு எளிதில் நிகழ்வதில்லை. ஒவ்வொரு முடிவிற்கு பின்னாலும் ஒரு கருதுகோள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மரைக்காயர் தனது சிறுபான்மை கார்டை பயன்படுத்தி மிக வெற்றிகரமாக தன்னை இருத்திக் கொண்டவர். காங்கிரஸில் இரண்டு கார்டுகள் பலமானவை ஒன்று தாழ்த்தப்பட்டவர்கள் இரண்டு சிறுபான்மையினர். மரைக்காயர் அதை மிகத் திறமையாக வாழ்நாளெல்லாம் கையாண்டார். இம்முறை எந்தத் தேர்தலிலும் தோல்வியுறாதவர் என்கிற கருதுகோள் அவரை தெரிவு செய்ய வைத்தது


போராட்டம் மூன்று மணி நேரம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. சற்று தணியும் போது புதிதாக வந்து சேர்பவர்களால் மீளவும் கிளர்ந்து விடப்பட்டு அடுத்த சில மணிநேரம் அந்த உணர்வு கொந்தளிப்பு நீண்டது. அதன் ஒரு உச்சகட்ட சூழலில் நாராயணசாமியின் உள்நுழைவு துரதிஷ்டவசமானது. அவரை பார்த்ததும் கூட்டத்தின் வெறி ஏறி ஏறி வந்தது. அதுவரை இலக்கில்லாமல் இருந்த கூட்டத்திற்கு எதிரி கண்ணில் பட்டது போலாகி கூட்டம் உக்கிரமானது. இப்போது அதற்கான இலக்கு கிடைத்துவிட்தால் அதுவரை இருந்த அனைத்து நெறிகளும் காணாமலாயின . கைகளை அவரை நோக்கி நீட்டி வசவுகள் வரத் துவங்கின. ஒரு சிறு ஊக்கி போதும் மொத்த கூட்டத்தையும் வன்முறை களத்தை நோக்கி நாகர்த்த. எதிர்ப்பை இந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். சற்று திகைத்தவர் தன்னை திரட்டிக் கொள்ள காருக்கு அருகில் நின்று கொண்டார்என்னை பார்த்ததும் அருகில் அழைத்தார். நான் அவரிடம் சென்று சூழ்நிலை சரியில்லை இப்போது நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். கூட்டம் சற்று ஓய்ந்த பிறகு உங்களை அழைக்கிறேன். இப்போது தலைவரை சந்திப்பது சரியாக இருக்காது என்றேன் . அவர் என்னிடம் ஏளனமாகஇது போன்ற வெற்றுக் கூட்டத்தை இதைவிட மிகப் பெரிய அளவில் வட இந்தியாவில் சந்தித்திருக்கிறேன். இதை உடனே நீ கட்டுப்படுத்த வேண்டும் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு கட்சி முடிவிற்கு எதிராக நீ செயலபடுவது உன் எதிர் காலத்திற்கு நல்லதல்லஎன்றார். அவரது மிரட்டல் பாணி என்னை உக்கிரமாக்கியது. நான் அமைதியாக எந்த பதிலும் சொல்லாமல் நின்றேன். நான் சொன்னவற்றை புறக்கணித்து தலைவர் வீட்டிற்குள் நுழைய முயன்றார். அவரது செயல் எரிவதில் எண்ணை விட்டது போலானது. ஆரம்பத்தில் அவரை சூழ்ந்து ஓழிக கோஷம் ஓங்கி ஒலிக்க அவர் அதை கண்டுகொள்ளாமல் நுழைவாயிலை நோக்கி நடந்தார். கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்ததும் அதிர்வடைவதை பார்க்க முடிந்தது. கதவை திறக்கச் சொல்லி உரத்த குரல் எழுப்பி கூட்டத்தை மிரட்ட நினைத்தது எடுபடவில்லை என்பதுடன் அதற்கு எதிர்விணை எழத்துவங்கியது அவரை சுற்றி சூழந்த கூட்டம் கூடி கூடி வந்து அதுவரை அவரை சுற்றியிருந்த கூட்டத்தின் உள் வளைவு குறுகத் தொடங்கியது. நான் விபரீதமாக உணர்வதற்குள் யாரோ அவரை பிடித்து தள்ள தடுமாறி படிகளில் விழுந்தார்.எழ முயற்சித்தவரை யாரோ மீண்டும் தள்ள மறுபடியும் தடுமாறினார். அவர் எவ்வளவு முயன்றும் தலைவர் வீட்டிற்குள் நுழைய முடியவில்லை. கோபமாக வன்மமாகி அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார். நான் அந்த வட்டத்திற்கு வெளியே அவற்றை பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தேன். அவரது உதவிக்கு செல்ல வேண்டும் என தோன்றவில்லை. நான் இது போன்ற ஒரு அசம்பாவிதத்தை உத்தேசித்து சொன்னவற்றை அவர் மறுத்த விதம் எனக்குள் கடும் சினத்தை உருவாக்கி இருந்தது 


வில்லங்கம் நாராயணசாமிக்கு எதிராக எனது நண்பர்கள் சிலரை திசை திருப்பி நான் சுதாரிக்கும் முன்பாக அவர் மீது அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பல நூறு பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் பல தரப்பினர் இருந்தனர் அரசியலில் எதிரிகளை விட நண்பர்களே எல்லா சமயங்களிலும் ஆபத்தானவர்களாகி நமது ஊழை வேறுவிதம் கொண்டு சென்று விடுகிறார்கள் . அன்றும் அது தான் நடந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...