https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 26 ஜனவரி, 2023

மணிவிழா - 58 * முன் செல்லும் உள்ளுணர்வு *

 




ஶ்ரீ:



26.01.2023


* முன் செல்லும் உள்ளுணர்வு *






துவக்க விழாவையொட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து உபன்யாச நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்ததுஅனைத்து ஏற்பாடுகளையும் உரியவர்களை கண்டடைந்து பொறுப்புகள் அவர்கள் வசம் விடப்பட்டதால் எனக்கு அன்றும் காலையில் நிகழ்வுகள் என பெரியதாக ஏதுமில்லை. விழாக் குழுவின் உறுப்பினர்கள் சிலரின் வீட்டிற்கு மரியாதை நிமித்தமாகவேளுக்குடி ஸ்வாமியைஅழைத்துச் செல்வதாக முதல் நாள் இரவு அவரிடம் சொல்லி இருந்தேன். “தேசிகர் சபைநிர்வாகிகள் சந்திப்பிற்கு பிறகு அவரிடம் மாற்றம் தெரிந்தால் என்ன செய்வது என்கிற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. அன்று இரவு என்னென்ன பேசப்பட்டன என்பதை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்பதும் தெரியவில்லை. நான் தகவல்களை விடாது பின் தொடர்ந்து செல்பவன் அல்ல. தகவல்கள் எப்போதும் நிலையழிதலை கொண்டு வருபவை. நமக்கான பாதை மிக குறுகளாக இருக்கும் போது அடுக்கடுக்காக வந்து சேரும் தகவல் குவியல்களால் ஆவது ஒன்றுமில்லை என்பது அரசியலில் நான் கற்றுக் கொண்ட பாடம்


தேசிகர் சபைநிர்வாகிகளில் பார்த்தசாரதி கூரிய அவதானிப்புகளை கொண்டவர். ஆரம்பம் முதலே ஆயிரமாவது ஆண்டு விழா குழுவை தொடங்கி இருப்பது அவர்கள் எதிர் நோக்காத ஒரு சந்தர்ப்பத்திலிருந்து. அதை அறிந்தே நான் அதை திட்டமிட்டிருந்தேன். அவர்கள் வாய்ப்பை தவறவிட்ட குற்ற உணர்வில் இருந்தனர். மேலும் நான் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவக்கம்வேளுக்குடி ஸ்வாமியின்எண்ணப்படி நிகழ்கிறது என்கிற புரிதலை அனைவரிடமும் உருவாக்கி இருந்தது அவர்களுக்கு அதிர்வை அளித்திருந்தது . நான் உருவாக்கிய புரிதல் உண்மைக்கும் எதார்த்ததிற்கும் அப்போது இடையே நின்று ஊடாடிக் கொண்டிருக்கிறது. அதை உண்மையாக்கும் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தேன். இரவு அது பற்றி பேசுவாதாக திட்டம். ஆனால் அன்று மாலை என்மீதான அதிருத்தியுற்றவராக பிறர் சொல்லைக் கொண்டு என்னை அவதானித்திருந்தது எனக்கு பின்னடைவை கொடுத்திருந்தது. அதை மட்டுமாவது அன்று இரவு உரையாடக் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் சரி செய்ய நினைத்திருந்தேன்


வேளுக்குடி ஸ்வாமிகள்மிக கூரிய செயல்பாடுகளை உடையவர். ஆன்மீகத் தளத்தில் உள்ளவர்களிடையே காணும் எந்த அசட்டுத்தனமும் இல்லாமல் அனைத்தையும் சம தூரத்தில் வைத்திருப்பவர். பெரும் நிர்வாகத்திற்கு தேவையான நிலைபாடுகளை கொண்டவர். உலகியலில் வெற்றி பெற்ற நிறுவனத்தில் பணியில் இருந்தது மற்றும் உயர் நிர்வாகப் பொறுப்பில் அங்கம் வகித்தது போன்றவை அவரை உருவாக்கிய கருவிகள். அதை கொண்டு யாரையும் மிக சரியாக கணிக்கும் வழக்கம் கொண்டவராக இருந்தார் . நிழலான திட்டங்களுடன் அவரை முன்வைத்தவர்களை மிக எளிதில் அடையாளப்படுத்திக் கொண்டு விடுவார். மனிதர்களை உள்ழாந்து புரிந்து தரம் பிரிக்கத் தெரிந்தவராக அவரை புரிந்திருந்தேன். அதனால் யாரையும் தேரடியாக முகம் நோக்கி விமர்சிக்க தயக்கமில்லாதவராக இருந்தார். இதுவே அவரை பிறர் அஞ்சும் மிகப் பெரிய ஆளுமையாக உருவாக்கி இருக்க வேண்டும்


புதுவைதேசிகர் சபையினர்நிச்சயம் அவரை தங்களது நிகழ்விற்காக அல்லது பிற ஆன்மீக அமைப்புகள் சார்பாகவேளுக்குடியைதொடர்பு கொண்ட குழுவில் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்துவேளுக்குடியின்அணுகுமறையை மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் அப்போது வாய்த்திருக்கலாம். உயன்யாச நிகழ்வின் போது பார்க்கும் மிக எளிய மனிதரல்ல அவர் என்பதை தனிப்பட்ட முறையில் சந்தித்த எவரும் அறிந்திருப்பார்கள். அது அவர்களைவேளுக்குடிமீது கசப்பு கொள்ள வைக்கும் விலகி நிற்க சொல்லும். அதிலிருந்து வேளுக்குடி ஸ்வாமி பற்றி அவர்கள் உருவாக்கிக் கொண்ட பிம்பத்திற்கு நான் முன்வைத்தவேளுக்குடிசற்றும் பொருந்தி வரவில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கக் கூடும். அல்லதுவேளுக்குடிபோன்ற ஒரு ஆளுமையை அசைக்கும் திறன் என் போன்ற எளிய ஒருங்கிணைப்பாளருக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதுடன் அதை எனது  ஒட்டு மொத்த ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு அமைப்பின் அரசியல் நகர்வாக எங்கோ அவர்கள் நிச்சயம் உள் உணர்ந்திருக்க வேண்டும். அதை ஒட்டிய எனது அரசியலையும் அறிந்து கொண்டிருப்பார்கள் . அதை உடைக்கவும் மாற்று ஏற்பாடுகளை அவர் திட்டமிடக்கூடும் என அஞ்சினேன்


வேளுக்குடி புதுவையில் தனக்கான அமைப்பு ஒன்று வேண்டும் என அவர் விருப்புவதாக நான் ஊகித்திருந்தேன். மொத்த விஷயத்தின் ஆரம்ப புள்ளி அதுநானும் அவரும் இது விஷயமாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும் என்னை திருகண்ணபுரத்தில் வைத்து சந்திக்க விரும்புவதை அவரது கிஞ்சித்காரம் அமைப்பின் புதுவை தன்னார்வளர் பரகாலன் என்னிடம் சொன்ன போது அதை ஆயிரமாவது ஆண்டு துவக்க விழாவாகவே வடிவமைக்கத் துவங்கி அதுபற்றி அவரிடம் மிக விரிவாக பேசி எனக்கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டேன். அவரை அந்த அமைப்பிற்குள் எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் உறுதியாக இருந்தது. நான் உருவகித்த அந்த பிரமாண்டம் அவர் இணைவதால் மட்டுமே உருப்பெரும்.


புதுவை ஆன்மீக அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அதில் தொடர்புள்ள அனைவருக்கும்வேளுக்குடிநட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர். அவரை பார்க்கவும் உபனயாசத்தை கேட்கவும் இங்கு பெரிய கூட்டமுண்டு. அவர்களை ஈர்க்க எனக்குவேளுக்குடி ஸ்வாமிதேவை என்பதால் அவரை வைத்துதான் மொத்த அமைப்பே பிண்ணப்பட்டிருந்தது. அவரை நிர்வகியாக கொண்ட குழு உருவாக இருப்பதாக நான் உருவாக்கிய பிம்பம் புதுவையில் உள்ள பிற அமைப்பை சேர்ந்தவர்களை ஈர்க்க நான் உபயோகப்படுத்திய யுக்தி அல்லது அரசியல் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். “வேளுக்குடிஆயிரமாவது ஆண்டு குழுவின் உள்நுழைவு உறுதிபடாத சொல்லாக அதுவரை நின்றிருந்தது . அது நாளை கெட்டிப்படலாம் என்கிற நம்பிக்கையே எனது செயலூக்கத்தின் அடிப்படை. அது நிகழ்வதற்கு முன்பாக இந்த சிக்கல் எழுந்து நின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்